search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "election"

  • வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.
  • தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

  அவரது வெற்றி, தோல்விகளை கணித்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக பல கோடி ரூபாய் பந்தயம் கட்டினர்.

  இது ஒருபுறம் இருக்க பிதாபுரம் தொகுதியின் ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர் முத்ரகடா பத்மநாபம் என்பவர் தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்றால் என்னுடைய பெயரை மாற்றிக் கொள்வேன் என சவால் விட்டார்.

  தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்று துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் முத்தரகடா பத்மநாபம் தன்னுடைய பெயரை முத்ர கடா பத்மநாப ரெட்டி என மாற்றிக் கொண்டார். இந்த பெயரை அரசிதழ் மூலமாக மாற்றியதை அவர் உறுதி செய்தார்.

  இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

  • பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
  • பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதனால் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கில் காங்கிரசை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தால் வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார் ராகுல்.

  நேற்று அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் வயநாட்டில் மறு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதுநாள்வரை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகள் குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செய்லகளை சரமாரியாக கேள்வி எழுப்புபவராக அறியப்படுகிறார்.

  மக்களவைத் தேர்தலில் அவரின் சூறாவளிப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவானந்தபுர எம்.பியுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து மனம் திறந்துள்ளார்.

   

  இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராகுல் காந்தி ரேபரேலியை தேர்வுசெய்தது காங்கிரசுக்கு அவசியமான நகர்வு. அவர் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து விரும்பினேன். அதேசமயம் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார்.

  தற்போது பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சரத்தின்போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், இது குடும்ப அரசியல் என்று கூறி வரும் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள 15 எம்.பிக்கள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார்.
  • நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

  தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் இயக்கத்தில் வெளியான பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதி இயக்கிய தனி ஒருவன் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

  கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான காட் ஃபாதர் திரைப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். இப்படம் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். காட் ஃபாதர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  அதைத்தொடர்ந்து இயக்குநர் மோகன் ராஜா சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. மேலும் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது. சிரஞ்சீவியின் சகோதரர், நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது ஜன சேனா கட்சி மூலம் களம் கண்டார்.

  தேர்தலில் அவரது ஜன சேனா கட்சி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இதையடுத்து ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வராக பவன் கல்யாணும் பதவியேற்றனர். இவர்களுடன் அமைச்சர்கள் பதவியேற்பும் நடைபெற்றது.

  இதுகுறித்து இயக்குநர் மோகன் ராஜா வாழ்த்து கூறி அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் "பவன் கல்யான் காரு மற்றும் சிரஞ்சீவி காரு- க்கும் இடையே இருக்கும் பந்தத்தை காண நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். எதிர்கால நோக்கம் கொண்ட தலைவர். எதிர்காலம் நல்ல நபரின் கைகளில் தான் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

  விரைவில் மோகன் ராஜா இயக்கவிருக்கும் சிரஞ்சீவி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
  • சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது...

  கோவை தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் தேர்தல் பணி ஆற்றும் திமுகவினருக்கு பிரியாணி வழங்குவதாக கோவை தொகுதியின் பொறுப்பாளரும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா வாக்குறுதி அளித்திருந்தார்.

  கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை வீழ்த்தி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.

  அதன் அடிப்படையில் கோவையில் தேர்தல் பணி ஆற்றிய திமுகவினரின் முகவரிக்கு இன்று ஆன்லைனில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

  அதை தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்து அமைச்சருக்கு திமுகவினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

  • “திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்” என்பதையும் நிரூபித்து விட்டார்.
  • காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.

  சென்னை:

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

  வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி, வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத, மறுக்க முடியாத, மகத்தான வெற்றியாக தமிழ்நாடு-புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவைத்து, "இந்த நாற்பது-இனியவை நாற்பது" என்பதை உணர்த்தி, பிரகடனப்படுத்தியதற்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

  அவரது கடும் உழைப்பும், திட்டமிட்ட மதியூக வியூகமும் தந்த வெற்றிக்கனிகள் இவை. கலைஞர் தம் நூற்றாண்டு நிறைவில் இந்த இனிய நாற்பதைக் கொண்டு முதலமைச்சரும் கூட்டணியினரும் கட்டிய இந்த வெற்றி மாலையைக் கலைஞரின் தோளுக்குச் சூட்டிடும் அவரது முயற்சியின் மூலம், மீண்டும் "இது பெரியார் மண்தான்" என்பதையும், "திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்" என்பதையும் நிரூபித்து விட்டார்,

  அவரே அதன் வெற்றிக்கும் அடித்தளமிட்டார். அந்த வெற்றித் திருமகனாருக்குத் தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்!

  காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.

  காங்கிரசும், இளந்தலைவர் ராகுல் காந்தியின் இடையறாத பிரசாரச் சுனாமியும் இந்தியா, கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரசாரமும் முகிலைக் கிழித்து எறிந்து புதிய விடியலுக்கு வித்திட்டிருக்கின்றன!

  இதற்குக் காரணமான வாக்காளர்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்!

  சர்வாதிகார வெறிக்கு அணை போடப்பட்டுள்ளது; அந்த அணை முழுமையாவதற்கு முழுக் கவனமும் அரசியல் வியூகமும் தேவை! அதற்கும் தமிழ்நாடும் அதன் மதியூகியான நமது தி.மு.க. தலைவரும் கலங்கரை வெளிச்சமாக என்றும் இருப்பார் என்பது உறுதி!

  ஜனநாயகத்தின்-அரசியல் சட்டத்தின் தலை தப்பியுள்ளது.

  இவ்வாறு கி.வீரமணி கூறி உள்ளார்.

  • தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
  • நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.

  சேலம்:

  சேலம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. , அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 27 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 13 லட்சத்து 6 ஆயிரத்து 457 பேர் வாக்களித்தனர்.

  கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது.

  இதில் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி 5 லட்சத்து 66 ஆயிரத்து 85 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

  அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ் 4 லட்சத்து 95 ஆயிரத்து 728 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 894 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமார் 76 ஆயிரத்து 207 வாக்குகளும் பெற்றனர்.

  இதில் நோட்டவுக்கு 14 ஆயிரத்து 894 பேர் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.

  அரியலூர்:

  சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 1,03,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனி மேரி ஸ்வர்ணா வெற்றி சான்றிதழை, தொல். திருமாவளவனிடம் வழங்கினார்.

  பின்னர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  இந்திய அளவில் 400 இடங்களை வெல்வோம் என்று கூறிய மோடி தலைமையிலான அரசு தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இது சங்பரிவார் அமைப்பிற்கும், பொது மக்களுக்கும் இடையே நடைபெற்ற போர். இந்த போரில் மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது சங்பரிவார் அமைப்புக்கும் மோடிக்கும் பின்னடைவு.

  இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஷின்டே தலைமையிலான சிவசேனா கட்சி உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு ஆதரவு வழங்கி, காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க உதவ வேண்டுமென்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

  மேலும் தற்பொழுது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 2 இடங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தார் போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாகியுள்ளது.

  ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., ஆகியவை அங்கீகாரத்தை இழந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுமக்களின் ஆதரவுடன் மாநில அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்வாக வாக்களித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  கடந்த 2 முறை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்ததால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியை விட வேற எந்த வளர்ச்சி திட்டங்களையும் என்னால் செய்ய முடியவில்லை.

  தற்பொழுது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால், ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற முறையில் என்னால் முடிந்த வளர்ச்சிப் பணிகளை பாராளுமன்ற தொகுதிக்கும், தமிழகத்திற்கும் செய்வேன். தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருப்பேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், எம்.எல்.ஏ.க்கள் கா.சொ.க.கண்ணன், சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

  • கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும்.
  • கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது.

  புதுச்சேரி:

  புதுச்சேரியில் 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 15 இடங்களில் போட்டியிட்டு, லாஸ்பேட்டை, மாகி ஆகிய 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

  கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கும். ஆனால் கடந்த தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் இழந்தது. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க. 6 தொகுதியில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்தது.

  இதனால் காங்கிரஸ், தி.மு.க. இடையே யார் பெரியவர்? என்ற மோதல் கூட அவ்வப்போதுநிகழ்ந்து வந்தது. இது புதுச்சேரி காங்கிரசாரிடையே மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

  இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் சிட்டிங் எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன் படுத்திக்கொண்டது. கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரசிலிருந்து பலரும் வெளியேறி பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரசுக்கு சென்றனர். இந்த அணியின் வெற்றிக்கும் உதவியாக இருந்தனர்.

  ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் காங்கிசுக்கு வாக்களித்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரி காங்கிரசின் கோட்டை என்பதை வைத்திலிங்கத்தின் வெற்றி நிரூபித்துள்ளது.

  • பா.ஜனதாவின் ஹாட்ரிக் கனவை காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் கலைத்துவிட்டார்.
  • பனஸ்கந்தா தொகுதியில் பால்த்துறை அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

  காந்திநகர்:

  குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளில் 25 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

  பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் 30 ஆயிரத்து 406 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவர் 6 லட்சத்து 71 ஆயிரத்து 883 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ரேகாபென் ஹிதேஷ்பாய் சவுதாரி 6 லட்சத்து 41 ஆயிரத்து 477 வாக்குகள் பெற்றார்.

  இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் இதற்கு முன் 2009 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 11 தொகுதிகளை கைப்பற்றியது.

  கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இங்கு தொடர்ந்து 3-வது முறையாக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா தீவிரம் காட்டியது.

  ஆனால் பா.ஜனதாவின் ஹாட்ரிக் கனவை காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் கலைத்துவிட்டார்.

  பனஸ்கந்தா தொகுதியில் கணிசமான செல்வாக்கைக் கொண்ட தாகோர் சமூகத்தை சேர்ந்த ஜெனிபன் தாகோருக்கு அதிக ஆதரவு இருந்தது. மேலும் அவரது வெற்றியில் உள்ளூர் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.

  அவருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக ரூ.50 லட்சத்தை நன்கொடையாக மக்கள் வழங்கினர். பனஸ்கந்தா தொகுதியில் எந்த அரசியல் கட்சியும் தாகோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் களமிறக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த சமூகத்தை சேர்ந்த வரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்து ஜெனிபனுக்கு டிக்கெட் கொடுத்தது.

  பனஸ்கந்தா தொகுதியில் பால்த்துறை அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பா.ஜனதா வேட்பாளர் ரேகாபெனின் தாத்தா கல்பபாய் படேல், பனாஸ் பால் பண்ணையின் நிறுவனர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.