என் மலர்
கள்ளக்குறிச்சி
- ஒயர் திருடிக் கொண்டிருந்த குமாரை மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
- நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த சந்திரமூலசமுத்திரம் கிராமத்தில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மின் ஒயர்களை அதே ஊரைச் சேர்ந்த குமார் (வயது 38) என்பவர் திருடிக் கொண்டிருந்தபோது அந்த கிராம மக்கள் பிடித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி இவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
- மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்பு ணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசே கரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், டிட்கோ அறக்கட்டளை தலைவர் சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
இந்த திட்டம் பட்டியலின மற்றும் பழங்குடியின தொழிலாளர்களை தொழிலதி பராக ஆக்குவதற்கும், பயன்பெறுவதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்து வதற்காகவும், புதிய தொழில் முனைவோராக உருவாக்கு வதற்காகவும் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர். குறிப்பாக கல்வராயன் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் 90 சதவிதம் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் இத்தி ட்டதை அறிந்து செயல்ப டவேண்டும். அரசின் இந்த திட்டத்தை முழுமையாக அறிந்து முழு ஈடுபாட்டுடனும், முழு முயற்சியுடனும் செயல்ப டவேண்டும். படித்த இளை ஞர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கு வதற்கு மிகச்சிறந்த ஒன்றாகும். மேலும், அனைத்து வங்கி அலுவலர்களும் புதிதாக தொழில் தொடங்க இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டியாகவும், தொழிலில் உள்ள நுணுக்க ங்களையும் பற்றி பயனாளி களுக்கு தெளிவு படுத்தியும், அவர்களுக்கு தேவையான அறிவுறைகளை வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கிட வேண்டும். மேலும், நடப்பு நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட த்தின்கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.106.05 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.37.13 லட்சம் அரசு மானியத்துடன் கூடிய விண்ணப்பங்கள் வங்கி களுக்கு பரிந்துரை செய்யப்ப ட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதனைதொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டில் அரசு திட்டங்களில் சிறப்பாக கடன் வழங்கிய வங்கி மேலாள ர்களுக்கு பாராட்டு கேடய ங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். கருத்தரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள், சங்கத் தலைவர் பிர்மதேவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) கதிர்சங்கர், மாவட்ட தாட்கோ மேலாளர் அனந்த மோகன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட தொழில் மைய உதவி ப்பொறியாளர் சிவநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் வங்கி மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.
- நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
- சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியைபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- அரிகிருஷ்ணன் உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
- அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 40). உளுந்தூர்பேட்டை வனத்துறையில் இரவு காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ஹரிகிருஷ்ணன் நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு சென்றார். ஹரிகிருஷ்ணன் மனைவி மற்றும் மகள் இருவரும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கவிதாவின் கழுத்தில் இருந்த ஏழு பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதில் திடுக்கெட்டு எழுந்த கவிதா திருடன் திருடன் என்று கூச்சலிட்டு தாலிச் சங்கிலியை இழுத்தார். இதில் பாதி தாலிசங்கிலியுடன் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றான். இது குறித்து ஹரிகிருஷ் ணன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். வனத்துறை அதிகாரியின் வீட்டில் செயின் பறிப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு மே 31, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
- முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலை செய்தி குறிப்பு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம் வணிகவியல் மற்றும் இளநிலை அறிவியல் பிரிவில்பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. இயற்பியல்,பி.எஸ்.சி. கணினி அறிவியல்,பி.எஸ்.சி. கணிதம் ஆகிய 7 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு வருகின்ற 31- ந்தேதி, ஜூன் 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
இதில் 31- ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள், .என்.சி.சி., என்.எஸ்.எஸ், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 2- ந்தேதி (வியா ழக்கிழமை) வேதியியல் துறை, கணிணித் துறை. கணிதத் துறை, இயற்பியல் துறைக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில் 2- ந்தேதி அனைத்து கலைப்பிரிவு தமிழ் ஆங்கிலம் வணிகவிய ல்போன்ற பாடப்பி ரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
தமிழக அரசின் இட ஒது க்கீட்டின் விதிமுறைகளின் படி மாணவர் சேர்க்கை நடைபெறும். கல்லூரி கல்விக் கட்டணம் ரூபாய் 2500(தோராயமாக) செலுத்த வேண்டும். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப படிவத்தை நகல், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், தேசிய வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் நகல், 4 வண்ண புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். மேலும் அனைத்து சான்றிதழ்களும் 2 செட் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வரவேண்டும். கலந்தாய்வுக்கு அலைபேசி . மின் அஞ்சல் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்தவ ர்களுக்கு மட்டும் கனியாமூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மல்லாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற்றது.
- வளர்ச்சிப் பணிகளை திட்ட இயக்குனர் செல்வராணி ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் மல்லாபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற்றது. மேலும் இந்த திட்டத்தில் 15-வது நிதிக்குழு மல்லாபுரம் பள்ளி கட்டிடம் தடுப்பு சுவர், வடிக்கால் வாய்க்கால் சிமெண்ட் சாலைகள், மயானத்தில் சுற்றுசுவர் சிறு பாலம் பணிகள், ஓடையில் 8 தடுப்பணை பணிகள், குளம் தானியக்களம், நடுநிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெறும் சமையல் கூடம் பழுது நீக்கம் செய்தல் போன்ற பணிகளை திட்ட இயக்குனர் செல்வராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வகணேஷ், செல்வதுரை, ஒன்றிய பொறியாளர் ஹரிகிருஷ்ணன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் நேரு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன், துணைத் தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன், தொழில் நுட்ப உதவியாளர் நாராயணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட இயக்குனர் செல்வராணி அனைவரிடமும் பணி முன்னேற்றம் குறித்து அறிவுரை வழங்கி, பணிகளை சிறப்பாக செய்யுமாறு கூறினார்.
- கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.
- விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் விக்னேஷ் (வயது 19) கூலி வேலை செய்துவந்தார். கடந்த 21-ந் தேதி வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி எங்கேயும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில்விக்னேஷ் தாய் செல்வி புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காணாமல் போன விக்னேசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் பொட்டியம் சுடுகாட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக கச்சிராயபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் பார்த்தபோது இவர் காணாமல் போன விக்னேஷ் என்பது தெரியவந்தது . இது குறித்து கொலையா? அல்லது விக்னேஷ் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அவ்வகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
- கள்ளசாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர்.
- போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ள சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முழு வதும் உள்ள போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வந்த மணி மகன் ராமச்ச ந்திரன் (வயது 38) என்பவ ரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும், தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கீதா (34), ராஜா இவரது மனைவி சத்யா( 30 )ஆகியோரிடம் இருந்து 40 லிட்டர் சாராயமும், பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பால கிருஷ்ணன் வயது 34 என்பவரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும் நாககு ப்பம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சின்னதுரை (வயது 34) என்பவரிடமிருந்து 10 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்து 5பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
- போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் 171 மலை கிராமங்களும் 75 ஆயிரத்திற்கு மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி சேலம் தர்மபுரி திருவண்ணா மலை கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களை இணை க்கும் ஒரு அடர்ந்த வனப்பகு தியாக உள்ளது. மலையில் உள்ள நீர்ஓடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு மாவட்ட ங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பாக்கியது.
இந்த நிலையில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது அதன் எதிரொ லியாக கல்வராய ன்மலையில் சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையிலான மதுவிலக்கு போலீசார் முகாமிட்டு கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி மலை அடிவாரம் பகுதி வழியாக கள்ளச்ச ராயம் கடத்தி வருவது தடுக்கும் விதமாக கல்வராயன்மலையில் உள்ள 4 புறங்களிலும் குறிப்பாக மூலக்காடு லக்கிநாயக்கன்பட்டி மாயம்பாடி துருர் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடிகளை சென்னை வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்து கள்ளச்சா ராயத்தை கடத்தி வருவதை தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
- ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார்.
- போலீசார் செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் 2 ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரிக்கு முககவசம் அணிந்து மர்ம நபர் ஒருவர் வந்தார். அப்போது அந்த நபர் பணியில் இருந்த 2 நர்சிடம் நன்கொடை கேட்பது போல் நடித்து, கவனத்தை திசை திருப்பி, அவர்கள் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை திருடி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.