என் மலர்tooltip icon

    இது புதுசு

    • இந்த மாடல் டொயோட்டா வெல்ஃபயர், லெக்சஸ் LM மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    • புதிய V-Class மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய V-Class மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆடம்பர எம்.பி.வி. மாடல் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சந்தையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது. முற்றிலும் புதிய V-Class மாடலின் ஆரம்ப விலை ரூ. 1.4 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் டொயோட்டா வெல்ஃபயர் மற்றும் லெக்சஸ் LM மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய V-Class மாடல் நான்கு மற்றும் ஆறு இருக்கைகள் என இருவித இருக்கை தேர்வுகளுடன் கிடைக்கிறது. இந்த மாடல் பின்புற இருக்கைகள் அதிக சவுகரியத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த காரில் உள்ள லவுஞ்ச் இருக்கைகளில் ரிக்லைன், மசாஜ், வென்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிகளுடன் வருகிறது.

    ஆறு இருக்கைகள் கொண்ட மாடலில் மூன்றாம் வரிசை இருக்கைகளிலும் ெவன்டிலேஷன் வசதி வழங்கப்படுகிறது. இவைதவிர இந்த காரில் 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 64-நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், 2 இன்டீரியர் தீம்கள் மற்றும் இரட்டை 12.3 இன்ச் ஸ்கிரீன்கள் வழங்கப்படுகின்றன.

    பாதுகாப்பிற்கு முற்றிலும் புதிய V-Class மாடலில் ஏழு ஏர்பேக், 360-டிகிரி கேமரா, லெவல் 2 ADAS சூட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எம்.பி.வி. மாடல் அளவில் 5.3 மீட்டர்கள் நீளமும், 3.4 மீட்டரில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் 18-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.-கள், பவர்டு ஸ்லைடிங் கதவுகள் மற்றும் ஸ்ப்லிட் டெயில் கேட் வழங்கப்பட்டுள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் V-Class மாடல் ராக் க்ரிஸ்டல் வைட், அப்சிடியன் பிளாக், சோடலைட் புளூ, ஆல்பைன் கிரே மற்றும் ஹை-டெக் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. புதிய V-Class மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் உள்ள V300 பெட்ரோல் யூனிட் 248 ஹெச்.பி. பவர், V300d டீசல் யூனிட் 233 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.

    • மென்மையான Torque வழங்கும் திறன் கொண்டது nova Crysta.
    • மூன்றும் ஒருங்கே அமைந்த இது நகர்ப்புறவாசிகளின் ஆஸ்தான மாடலாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தது.

    ஒரு காலத்தில் கார் வாங்குவதே பெரிய விஷயமாக இருந்து வந்த நிலையில் இப்போது என்ன கார் வாங்குவது என்ற அளவிற்கு ஆட்டோமொபைல் சந்தை இந்தியாவில் வளர்ந்துள்ளது.

    அதேபோல பணக்காரர்களே கார் வைத்திருப்பார்கள் என்ற நிலை மாறி இன்று நடுத்தர வர்க்கத்தினரும் கார் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எனவே நிறுவனங்கள் புதிய புதிய மாடல்களை அடிக்கொருமுறை அறிமுகம் செய்து வருகிறது. இவற்றில் பல இருந்த இடம் தெரியாமல் இருந்தாலும் சில கார் மாடல்கள் மக்கள் மத்தியில் அதிகம் வெளித்தெரியும்.

    அந்த வகையில் ஜப்பான் நிறுவனமான Toyota உடைய MPV-ஆன nova Crysta- மாடல் கார் இந்திய சந்தையில் பிரசித்தம்.

    நீண்ட பயணங்களிலும் நகரப் போக்குவரத்திலும் மென்மையான Torque வழங்கும் திறன் கொண்டது nova Crysta. சக்தி, நம்பகத்தன்மை, இட வசதி ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இந்த மாடல் நகர்ப்புறவாசிகளின் ஆஸ்தான மாடலாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்தது.


    இந்நிலையில் மக்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக nova Crysta-வின் விற்பனை அடுத்த ஆண்டில் இருந்து, அதாவது 2027 இல் இருந்து நிறுத்தப்படுவதாக Toyota நிறுவனம் அறிவித்துள்ளது.

    பெட்ரோல், ஐபிரிட் MPV-ஆன Innova Hycross-ன் விற்பனையை அதிகரிக்கவும், CO2 உமிழ்வு அடிப்படையில் Corporate Averag Fuel Economy எனப்படும் CAFE 3 விதிமுறைகளின்படி டீசல் எஞ்சி சில பின்னடைவுகளை சந்திப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • புதிதாக வரவிருக்கும் 125cc மோட்டார்சைக்கிள் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
    • அனைத்து பிரிவுகளிலும், 125cc மோட்டார்சைக்கிள் பிரிவு நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

    இந்த ஆண்டு இந்தியாவில் ஒரு புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பஜாஜ் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

    புதிதாக வரவிருக்கும் 125cc மோட்டார்சைக்கிள் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இது ஒரு ஆக்ரோஷமான விலைக் குறியீட்டைக் கொண்டிருக்கும். இருப்பினும், இந்த மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்த பைக் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும்.

    தற்போதைய நிலவரப்படி, பல்சர் 125க்கும் பல்சர் NS125க்கும் இடையே ஒரு நல்ல விலை இடைவெளி உள்ளது. எனவே பஜாஜ் இந்த புதிய 125cc மோட்டார்சைக்கிள் மூலம் அந்த இடைவெளியை சரிசெய்ய விரும்புகிறது.

    அனைத்து பிரிவுகளிலும், 125cc மோட்டார்சைக்கிள் பிரிவு நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக, பல வாகன உற்பத்தியாளர்கள் புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில், ஹோண்டா CB 125 ஹார்னெட் மாடலை அறிமுகப்படுத்தியது. ஹீரோ நிறுவனம் கிளாமர் X 125 மாடலை அறிமுகப்படுத்தியது. இரண்டும் 125cc பிரீமியம் பிரிவில் மோதுகின்றன.

    • டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற மாடலை விற்பனை செய்கிறது.
    • 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி உள்ளது.

    உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மாஸ்க்கின் மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்திய சந்தையில் தனது செயல்பாடுகளை வேகமாக விரிவுபடுத்தி வருகிறது.

    மும்பையில் தனது முதல் ஷோரூமைத் திறந்த ஒரு மாதத்திற்குள், தற்போது தேசிய தலைநகர் டெல்லியில் தனது இரண்டாவது ஷோரூமைத் திறக்க உள்ளது.

    இந்த புதிய ஷோரூம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி டெல்லியின் ஏரோசிட்டியில் உள்ள விலையுயர்ந்த வேர்ல்ட்மார்க் 3 வளாகத்தில் திறக்கப்பட உள்ளது.

    தற்போது, டெஸ்லா இந்தியாவில் 'மாடல் Y' என்ற ஒரே ஒரு மாடலை மட்டுமே விற்பனை செய்கிறது.இதன் ஷோரூம் விலை ரூ. 59.89 லட்சத்தில் தொடங்குகிறது.

    இந்த கார் 500 கி.மீ வரை பயணிக்க கூடிய 60 kWh பேட்டரி மற்றும் 622 கி.மீ வரை பயணிக்க கூடிய 75 kWh பேட்டரி என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.   

    • ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது.
    • மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    எலான் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் பெரும் தொகையை அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு புளோரிடாவின் கீ லார்கோவில் ஜார்ஜ் மெக்கீ என்ற நபர் தனது டெஸ்லா காரை ஓட்டிச் சென்று அதிநவீன ஆட்டோபைலட் அம்சத்தைப் பயன்படுத்தினார்.

    இது டெஸ்லா வழங்கிய தானியங்கி ஓட்டுநர் அமைப்பு. வழியில், ஜார்ஜின் மொபைல் போன் காரில் கீழே விழுந்தது. கார் ஆட்டோபைலட்டில் இருப்பதாக நினைத்து, ஜார்ஜ் குனிந்து தொலைபேசியை எடுக்க முயன்றார்.

    இருப்பினும், அந்த நேரத்தில், கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் மோதி, இரண்டு பேர் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில், 22 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது நண்பர் படுகாயமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர்.

    நீண்ட விசாரணைக்குப் பிறகு, சமீபத்தில் புளோரிடா நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது.

    இந்த விபத்துக்கான இழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் 329 மில்லியன் டாலர்களை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், விபத்துக்கு ஆட்டோபைலட் அமைப்பும் ஒரு காரணியாக இருப்பதைக் கண்டறிந்த நீதிமன்றம், டெஸ்லா நிறுவனம் தன் பங்குக்கு 242 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,996 கோடி) வழங்க உத்தரவிட்டது. மீதமுள்ள தொகையை வாகனத்தின் ஓட்டுநர் செலுத்த வேண்டும்.

    இருப்பினும், புளோரிடா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெஸ்லா மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளது.  

    • சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார்.
    • எனவே மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம்.

    சினிமாவை தவிர்த்து கார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் அயர்டன் சென்னா என்ற பிரபல பார்முலா 1 கார் ரேசரை தனது ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார்

    இப்போது அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ரேஸ் காரை அஜித் வாங்கியுள்ளார்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த MCLAREN Automotive என்ற நிறுவனம் இந்த ரேஸ் காரை தயாரித்து வருகிறது.

    ரேசுக்கு தேவையான ஸ்பெஷல் எடிசன் இந்த காரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம்.

    இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி என்று கூறப்படுகிறது. அந்த கார் முன்பு அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 

    • வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும்.
    • மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும்.

    லம்போர்கினி இந்தியா நிறுவனம், நாட்டில் புதிய உயர் செயல்திறன் கொண்ட பிளக்-இன் ஹைப்ரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பெயர் லம்போர்கினி டெமராரியோ. இந்த காரின் ஷோரூம் விலை ரூ.6 கோடியில் இருந்து தொடங்குகிறது.

    லம்போர்கினி டெமராரியோ மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைந்து செயல்படும் 4.0 லிட்டர் இரட்டை-டர்போ V8 எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மொத்த பிரேக் ஹார்ஸ்பவர் 907 bhp ஆகும். இந்த காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 343 கி.மீ என்று நிறுவனம் கூறுகிறது.

    இது மட்டுமல்லாமல், இந்த கார் வெறும் 2.7 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டும். இந்த ஹைப்ரிட் சிஸ்டம் 3.8 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

    இதை 7 kW AC சார்ஜரைப் பயன்படுத்தி 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கைப் பயன்படுத்தி பயணத்தின்போதும் பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.

    இது முன்புறத்தில் 20 அங்குல டயர்களையும் பின்புறத்தில் 21 அங்குல டயர்களையும் பெறுகிறது.

    காரில் 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 8.4 அங்குல செங்குத்து இன்ஃபோடெயின்மென்ட் திரை மற்றும் 9.1 அங்குல கோ-டிரைவர் டிஸ்ப்ளேவும் உள்ளன. இந்த காரில் சிட்டி, ஸ்ட்ராடா, ஸ்போர்ட் மற்றும் கோர்சா போன்ற 13 டிரைவிங் மோடுகளும் உள்ளன. 

    • இந்த டாடா காரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
    • ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை மே 21 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

    டாடா அல்ட்ரோஸ் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இது ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரின் வடிவமைப்பு, குறிப்பாக பாரம்பரிய அல்ட்ரோஸ் கார்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும். மேலும், சில சிறப்பு அம்சங்கள் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறது. சமீபத்தில், இந்த டாடா காரின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

    இந்த காரின் முன்பக்க தோற்றம் மிகவும் நேர்த்தியானது. டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற தோற்றமுடைய இந்த கார், வெளியிடப்பட்டால் அந்த கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த காரின் கிரில் மற்றும் பம்பர் இதற்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.

    மேலும், டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.   

    பட்ஜெட் விலையில் வரும் டாடாவின் இந்த புதிய அல்ட்ரோஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின்களைப் பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றில் அதிக மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மேம்பட்ட ADAS அமைப்பு இந்த காரின் சிறப்பு அம்சமாகும். மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக டாடா அல்ட்ரோஸ் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

    • நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம் உடன் வருகிறது.
    • கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

     இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது.

    ஆரம்ப நிலை மாடலான, கிராஸ் ( £4,994), கிராஸ் பெர்பார்மன்ஸ் (£7,471), கிராஸ் பெர்பார்மன்ஸ் EXC மற்றும் பிரீமியம் மாடலான ஸ்போர்ட் ( £8309) விலையுடன் முறையே அறிமுகமாகியுள்ளன.

    4 கிராஸ் மாடல்களும் மிகவும் ஒத்தவையாகவே உள்ளன. அனைத்தும் ஒரே மாதிரியான ஷிமானோ (SHIMANO) EP801 மோட்டாரைக் கொண்டுள்ளன. 62lb அடி முறுக்குவிசை, நீண்ட தூர பயணத்திற்கான கார்பன்-ஃபைபர் பிரேம், 12-ஸ்பீட் கியர்ஷிஃப்ட், சைக்கிளின் முன்னாள் மற்றும் பின்னால் சூப்பர்-ப்ரைட் விளக்குகள் மற்றும் இலகுரக கார்பன் வீல் செட்கள் இடம்பெற்றுள்ளன.

    கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. கிராஸ் பெர்பார்மென்ஸ் மாடலில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் பெரிய அளவுகளில் 630Wh ஷிமானோ பேட்டரி இடம்பெற்றுள்ளது

    பிரீமியம் மாடலான ஸ்போர்ட் வேரியண்டில் கிராஸ் பெர்பார்மென்ஸ் அம்சங்களுடன் சேர்ந்து, 21.6 கிலோகிராமே எடை கொண்ட அல்ட்ரா-லைட் கார்பன் பிரேம் இடம்பெற்றுள்ளது.

    இந்த பிரீமியம் ஸ்போர்ட் வேரியண்டில் உள்ள அதிக முறுக்கு-எதிர்ப்பு கார்பன் ஹேண்டில்பார்கள் மற்றும் 120 மில்லிமீட்டர் டிராவலுடன் கூடிய சூப்பர் ஃபேன்ஸி சஸ்பென்ஷன் ஃபோர்க் உள்ளது. பயணிக்கும்போது கை மற்றும் கால் வலியை குறைக்கும் வடிவமைப்புடன் ஸ்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. 

    • உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி குழந்தைகளை தள்ளிச் செல்லும் வண்டியான Stroller-களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    லிமிட்டட் எடிசனாக உருவாகியுள்ள உலகளவில் வெறும் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • டெயில்கேட்-இல் "எலெக்ட்ரிக்" பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிரெட்டா எலெக்ட்ரிக் கார் மாடலை ஜனவரி 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த கார் 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடல் விவரங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி புதிய கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலில் பிளாக்டு-அவுட் கிரில், சார்ஜிங் போர்ட், இருபுறமும் மாற்றப்பட்ட பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் ORVMகள், ஏரோ இன்செர்ட்களை கொண்ட முற்றிலும் புதிய 17 இன்ச் அலாய் வீல்கள், எல்.இ.டி. லைட் பார்கள், டெயில்கேட்-இல் "எலெக்ட்ரிக்" பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    உள்புறத்தில் 2025 ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலில் பானரோமிக் சன்ரூஃப், இரட்டை 10.25 இன்ச் ஸ்கிரீன்கள், ADAS சூட், V2L தொழில்நுட்பம், முற்றிலும் புதிய சென்டர் கன்சோல், டிரைவ் மோட்களுக்கு சுழலும் டயல், 360 டிகிரி ேமரா, ஷிஃப்ட் பை வயர் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கீ உள்ளது.

    அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா எலெக்ட்ரிக் மாடலில் 51.4 கிலோவாட் ஹவர் மற்றும் 42 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இவை முறையே 473 கிலோமீட்டர்கள் மற்றும் 390 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இந்த காரை டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு 58 நிமிடங்களில் 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றிட முடியும்.

    சுவரில் பொருத்தப்பட்ட 11 கிலோவாட் ஹோம் சார்ஜர் கொண்டு 10-இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற நான்கு மணி நேரங்கள் ஆகும். வெளியிடப்பட்டதும், இந்த எலெக்ட்ரிக் கார் எம்.ஜி. ZS EV, டாடா கர்வ் EV, மாருதி இ-விட்டாரா மற்றும் மஹிந்திரா BE6 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • புதிய கியா சைரோஸ் மாடல் எட்டுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த கார் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    கியா இந்தியா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சைரோஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய பி-எஸ்யுவி மாடல் சொனெட் மற்றும் செல்டோஸ் மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. புதிய கியா சைரோஸ் மாடலுக்கான முன்பதிவுகள் ஜனவரி 3ம் தேதி துவங்குகிறது.

    புதிய கியா சைரோஸ் மாடல்: HTK, HTK (O), HTK+, HTX, HTX+ மற்றும் HTX+ (O) என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் கிளேசியர் வைட் பியல், ஸ்பார்க்லிங் சில்வர், கிராவிட்டி கிரே, இன்டென்ஸ் ரெட், இம்பீரியல் புளூ, பீவ்டெர் ஆலிவ், அரோரா பிளாக் பியல் மற்றும் ஃபிராஸ்ட் புளூ என எட்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கியா சைரோஸ் மாடலில் இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள், வென்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், புதிய ஸ்டீரிங் வீல், லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா, முன்புற இருக்கைக்கு ரிக்ளைன் வசதி மற்றும் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மெக்கானிக்கல் அடிப்படையில் கியா சைரோஸ் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு மாடல்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பெட்ரோல் எஞ்சினுடன் 7 ஸ்பீடு DCT மற்றும் டீசல் எஞ்சினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. 

    ×