என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Car"
- கார் ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகனம் (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
- லாரி ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகனம் (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் வைத்திருக்கும் நபர்கள் 7,500 கிலோ எடைக்கு மிகாமல் இருக்கக்கூடிய போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கார் உள்ளிட்ட 4 சக்கர வானங்களை ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும். அதே சமயம் லாரி போன்ற பெரிய கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகன (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
இலகுரக மோட்டார் வாகன லைசன்ஸ் (LMV) பெற்றவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், விபத்து காப்பீட்டு வழங்குவதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆகவே LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடை வரையுள்ள போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை அடுத்து, விபத்து தொடர்பான இன்சூரன்ஸ் வழக்குகளில் காப்பீடு செலுத்துபவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்று காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டின.
- இந்த மாடலுக்கு சலுகைகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது.
- தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் கணிசமாக குறைந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிக பிரபலமான தார் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே அதிக தட்டுப்பாடு கொண்டிருக்கிறது. மஹிந்திரா நிறுவனத்தின் மற்ற மாடல்களுக்கும் அவ்வப்போது சலுகைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாடலுக்கு சலுகைகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது.
இந்த நிலை தார் ராக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து சற்று மாறியிருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில், மஹிந்திரா தார் மாடலுக்கு தற்போது ரூ. 3 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. மஹிந்திரா தார் எர்த் எடிஷன் மாடலுக்கு அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சலுகைகள் தவிர மஹிந்திரா தார் மாடலுக்கான காத்திருப்பு காலம் கணிசமான காலம் குறைந்துள்ளது. தார் ராக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, தார் மாடல் சந்தையில் எளிதாக கிடைப்பதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் மஹிந்திரா தார் மாடலின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 4X4 மாடலின் விலை ரூ. 17 லட்சத்து 06 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ வைரலானது.
- இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சண்டிகரில் ஓடும் காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கருப்பு நிற ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் இருந்து பட்டாசு வெடித்த வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சண்டிகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சண்டிகர் உட்பட வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த பின்பு காற்றின் தரம் மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
चंडीगढ़ का ये वायरल वीडियो सेक्टर 22 इनर मार्केट रोड का है. दिवाली से पहले का है वीडियो, जांच में जुटी पुलिस.#Chandigarh #ViralVideo pic.twitter.com/fnQMbr1dpP
— AajTak (@aajtak) November 2, 2024
- இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து கார் விற்பனை மந்தநிலையைக் கண்டதாகவும் அதனால் கார்களின் இருப்பு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
- 10 முதல் 25 லட்சம் வரையிலான விலையில் கார்களின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியை ஒட்டி கார் விற்பனை இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது, 79 ஆயிரம் கோடி ரூபாய் அளிவலான 7.90 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் ஷோ-ரூமில் தேங்கி கிடக்கின்றன.
மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் போன்ற முன்னணி உற்பத்தியாளர்கள், நிசான் மற்றும் சிட்ரோயன் போன்ற பிற நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய டீலர்கள் விற்பனையாகாத வாகனங்களை வைத்துள்ளனர்.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தரவுகளின்படி, குறைந்த விற்பனையின் மத்தியில் வாகன உற்பத்தியாளர்கள் கார்களை தீவிரமாக அனுப்பியதால் இது 18.81% குறைந்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து கார் விற்பனை மந்தநிலையைக் கண்டதாகவும் அதனால் கார்களின் இருப்பு அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.
10 முதல் 25 லட்சம் வரையிலான விலையில் கார்களின் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது முக்கியமானது, ஏனெனில் தொற்றுநோய்க்குப் பிறகு இந்த பிரிவு விற்பனை வளர்ச்சியின் முதன்மை இயக்கியாக இருந்தது.
கார் வாங்க நினைப்பவர்கள் அதனை தள்ளிப்போடுவதற்கு தீவிர வானிலை முறைகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. மந்தநிலைக்கு மற்றொரு காரணம், மாருதி சுசுகி ஃப்ரான்க்ஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Tata Curvv போன்ற புதிய மாடல்களுக்கான தேவை.
- இந்த பிரிவு சரிவை சந்தித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
- டாப் எண்ட் மாடல்களுக்கான பிரிவு வளர்ச்சி அடைய போவதில்லை.
இந்திய சந்தையில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் கார் மாடல்கள் விற்பனை சரிந்து வருவது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா கவலை தெரிவித்துள்ளார். நிலையற்ற எரிபொருள் விலை, என்ட்ரி லெவல் மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ, வேகன்ஆர் போன்ற கார்களின் விற்பனை குறைந்து வருகிறது.
ரூ. 10 லட்சத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் மாடல்களுக்கான சந்தை வளர்ச்சி பெறவேயில்லை. தொடர்ச்சியாக இந்த பிரிவு சரிவை சந்தித்து வருவது வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று ஆர்.சி. பார்கவா இரண்டாம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சார்ந்த கருத்தரங்கில் பேசும் போது தெரிவித்தார். இரண்டாவது காலாண்டில் மட்டும் மாருதி சுசுகியின் லாபம் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.
என்ட்ரி லெவல் பிரிவு வளர்ச்சியை சந்திக்காத வரை, டாப் எண்ட் மாடல்களுக்கான பிரிவு வளர்ச்சி அடைய போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவல்களில், உள்நாட்டில் மினி கார்களின் விற்பனை 15.5 சதவீதம் சரிவடைந்து 66 ஆயிரம் யூனிட்களாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இதே காலக்கட்டத்தில் 78 ஆயிரத்து 170 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 சதவீத விற்பனையை ரெனால்ட் க்விட் மாடல் பிடித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்து 81 ஆயிரத்து 143 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
- ஹோண்டா நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுக்கும்.
- கார்களை திரும்ப பெறப்படும் பணிகள் நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ், சிட்டி, BR-V, ஜாஸ், WR-V மற்றும் ப்ரியோ மாடல்களை சேர்த்து சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிக கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. திரும்ப பெறப்படும் கார்களின் ஃபியூவல் பம்ப்-இல் கோளாறு இருப்பதாகவும், அதனை ஹோண்டா நிறுவனம் இலவசமாக சரி செய்து கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கார்களை திரும்ப பெறப்படும் பணிகள் நவம்பர் 5 ஆம் தேதி துவங்குகிறது. பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தி வருவோரை, ஹோண்டா விற்பனை மையங்கள் தொடர்பு கொண்டு, பிரச்சினை குறித்த தகவல்களை வழங்கும். இதோடு, அக்கார்டு, அமேஸ், ப்ரியோ, BR-V, சிட்டி, சிவிக், ஜாஸ் மற்றும் WR-V மாடல்களின் பழைய யூனிட்களும் அடங்கும்.
பிரச்சினைகள் அல்லது சந்தேகம் உள்ள வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள ஹோண்டா விற்பனை மையங்களுக்கு நேரடியாக சென்றோ அல்லது, ஹோண்டா வலைதளத்தில் வாகன அடையாள எண்ணை பதிவிட்டோ கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர கடந்த ஜூன் 2017 முதல் அக்டோபர் 2023 வரையிலான காலக்கட்டத்தில் ஃபியூவல் பம்ப்களை ஹோண்டா விற்பனை மையத்தில் இருந்து வாங்கியிருந்தால், அவர்களும் வாகனத்தை சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
- முழுமையாக மாற்றப்பட்டு, சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
நிசான் நிறுவனம் முற்றிலும் புதிய பேட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார் 2026 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்களாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பேட்ரோல் மாடல் முழுமையாக மாற்றப்பட்டு, சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக இந்த மாடல் இடது-கை ஸ்டீரிங் பயன்படுத்தும் சந்தைகளிலும் மட்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது. சற்று தாமதமாகவே வலது-கை ஸ்டீரிங் பயன்படுத்தும் நாடுகளில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
2025 ஆண்டு முதல் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ரெனால்ட்-நிசான் திட்டம் கொண்டுள்ளன. அந்த வகையில், இந்திய சந்தையில் பேட்ரோல் மாடலை கொண்டுவருவது இந்தியாவில் நிசான் பிரான்டை சிறப்பாக நிலைநிறுத்த உதவியாக இருக்கும். ரக்கட், பாடி-ஆன்-ஃபிரேம் ரக பேட்ரோல் மாடல் எஸ்.யு.வி. பிரிவில் உறுதியான மாடலாக இருக்கிறது.
புதிய பேட்ரோல் மாடல் சர்வதேச சந்தையில் தற்போது இருவித பெட்ரோல் வி6 எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒன்று 3.8 லிட்டர் NA பெட்ரோல் யூனிட் மற்றொன்று டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 3.5 லிட்டர் யூனிட் ஆகும். இரு வெர்ஷன்களில் ஒன்று இந்தியா கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.
- இந்த காரில் AMG பெர்ஃபார்மன்ஸ் 4மேடிக் வழங்கப்படுகிறது.
- முதல் முறையாக லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய AMG G 63 எஸ்.யு.வி. மாடலின் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய பென்ஸ் எஸ்.யு.வி.-இன் விலை ரூ. 3.6 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய AMG G 63 முதற்கட்ட பேட்ச்-இல் 120-க்கும் அதிக யூனிட்களை வாங்க ஏற்கனவே பயனர்கள் முன்பதிவு செய்துள்ளனர். புதிய G 63 மாடலில் பை-டர்போ 4.0 லிட்டர் V8 எஞ்சின், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் மற்றும் AMG பெர்ஃபார்மன்ஸ் 4மேடிக் வழங்கப்படுகிறது.
இத்துடன் AMG பெர்ஃபார்மன்ஸ் பேக்கஜின் கீழ் ரேஸ் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் முதல் முறையாக லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
புதிய AMG G 63 மாடல் 29 வெளிப்புற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இருக்கை மேற்கவர்களில் 31 ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிநவீன MBUX NTG7 மென்பொருள் உள்ளது.
மேலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்கள், பர்மெஸ்டர் பிரான்டின் 18 ஸ்பீக்கர்கள் மற்றும் 3டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ADAS, 360 டிகிரி கேமரா, ஆக்மென்டெட் ரியாலிட்டி சார்ந்த நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
- குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர்
- இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் குளத்தை ஒட்டிய வயல்வெளிக்கு அருகில் கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சியெடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த நபர் பிரேக் போட சொல்லியுள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலா ஆக்சிலேட்டரை அந்த நபர் அழுத்தியுள்ளார்.
இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் விழுந்துள்ளது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பற்றியுள்ளனர்.
இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும், குளம் ஆழமாக இல்லாததாலும் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
A car plunged into the Bathukamma Kunta lake in #Jangaon on Friday evening. A man suddenly accelerated and lost control of the steering, while practicing #driving near the lake, causing the car to plunge into the tank.A local quickly rushed to the scene and rescued 2… pic.twitter.com/J5cTHFHmak
— Surya Reddy (@jsuryareddy) October 19, 2024
- வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
- இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக மெதுவாக ஒரு கார் திரும்பியுள்ளது. அப்போது அவ்வழியே வேகமாக ஒரு பைக் ஒன்று செல்கிறது. அதன் பின்னால் வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து பைக்கில் வந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் பைக்கில் பயணம் செய்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து அக்டோபர் 11 அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹூக்ளியில் உள்ள போல்பார் ராஜ்காட் சந்திப்பில் நடந்துள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையிலான ரேஸ் போட்டியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால் காருக்குள் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
A group of bikes were riding together at midnight, and two of them seemed to be racing. Unfortunately, one bike collided with a vehicle, catching fire instantly. #roadsafety #safetyfirst #rushlane pic.twitter.com/JsdfzuLiX2
— RushLane (@rushlane) October 14, 2024
- வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
- மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
சென்ற வருடம் பெய்த கனமழையால் கார்கள் கடுமையாக சேதமானதால் இந்த முறை கார்களை பாதுகாக்க வாகன ஓட்டிகள் இவ்வாறு செய்து வருகின்றனர்.
மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
- மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
- உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அஜ்மீர் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் தீப்பிடித்தது தெரிந்தவுடன் ஓட்டுநர் ஜிதேந்திர ஜாங்கிட் உடனடியாக காரை நிறுத்தி வெளியேறினார்.
மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இல்லாத கார் முன்னாள் இருந்து பொதுமக்களை நோக்கி சாலையில் தானாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதனை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். பின்னர் கார் அங்கிருந்த டிவைடரில் மோதி நின்றது.
உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
@gharkekalesh pic.twitter.com/VVuBFH8xFU
— Arhant Shelby (@Arhantt_pvt) October 13, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்