என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jeep"

    • குட்டி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்.
    • பார்பி காரை சாலையில் ஓட்டிய நபரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    கனடாவில் மதுபோதையில் குழந்தைகள் ஓட்டும் குட்டி ஜீப்பை பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பார்பி ஜீப்பை சாலையில் ஓட்டி வந்த லின்கோயின் என்பவரை போலீசாரை சாலையில் வைத்தே கைது செய்தனர்.

    பார்பி காரை சாலையில் ஓட்டிய நபரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • கேரளாவில் பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் கல்லட்டுபாராவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஆற்றில் சிக்கி கொண்டது.

    ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப்பில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.

    • புதிய ஜீப் செரோக்கி ஸ்டெல்லாண்டிஸின் STLA லார்ஜ் கட்டமைப்பால் உருவாக்கப்படும்.
    • பேட்டரியில் இயங்கும் செரோக்கி, தற்போதுள்ள வேகனீர் S-ஐப் போன்ற இன்டீரியரை கொண்டிருக்கும்.

    2023 ஆம் ஆண்டின் இறுதியில், ஐந்தாம் தலைமுறை செரோக்கி ஜீப் வரிசையை விட்டு வெளியேறியது. இதனால் காம்பஸ் மற்றும் கிராண்ட் செரோக்கி இடையே ஒரு இடைவெளி நிரப்பப்பட்டது. அந்த நேரத்தில், இந்த SUV 10 ஆண்டுகள் உற்பத்தியில் இருந்தது. சுமார் மூன்று ஆண்டுகள் குறுகிய கால இடைவெளிக்குப் பிறகு, SUV மீண்டும் உற்பத்தி வரிசையில் இறங்கத் தயாராக உள்ளது. இந்த நிறுவனம் புதிய படங்களுடன் SUVயை வெளியிட்டுள்ளது. மேலும் அதன் முந்தைய மாடலின் ஸ்டைலை கைவிட்டு, பாக்ஸி டிசைனுடன் இன்னும் கடினமான SUV போல தோற்றமளிக்கும் வகையில் வழங்குகிறது. இது பவர்டிரெயினில் முக்கிய மாற்றங்களின் வாக்குறுதியுடன் வருகிறது.

    ஜீப் நிறுவனத்தின் சமீபத்திய வடிவமைப்பை பின்பற்றி, ஜீப் செரோக்கி புதிய மாடல், வேகனீர் S மற்றும் காம்பஸ் சமீபத்திய மாடலை நினைவூட்டும் சில கூறுகளைக் கொண்டுள்ளது. இது முந்தைய தலைமுறைகளில் காணப்பட்டதைப் போன்ற வடிவத்துடன் சிக்னேச்சர் 7-ஸ்லாட் கிரில் வடிவத்தில் காணப்படுகிறது. பின்புறம் தெரியவில்லை என்றாலும், இது காம்பஸைப் போன்ற ஒரு வடிவத்தைப் பின்பற்றக்கூடும்.

    புதிய ஜீப் செரோக்கி ஸ்டெல்லாண்டிஸின் STLA லார்ஜ் கட்டமைப்பால் உருவாக்கப்படும். இந்த மாடல் பல பவர்டிரெய்ன் விருப்பங்களைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஒரு ஹைப்ரிட், ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு முழு எலெக்ட்ரிக் பதிப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. இந்த SUV பிராண்டின் 3.0-லிட்டர் டூயல் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட இன்லைன்-சிக்ஸ் எஞ்சினை கொண்டிருக்கும். இது 510 hp பவர் வழங்கும்.



    பேட்டரியில் இயங்கும் செரோக்கி, தற்போதுள்ள வேகனீர் S-ஐப் போன்ற இன்டீரியரை கொண்டிருக்கும். இதில் 100 கிலோவாட்-மணிநேர பேட்டரி மற்றும் 600 HP பவர் மற்றும் 617 டார்க்கை உருவாக்கும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    புதிய ஜீப் செரோக்கி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும். இருப்பினும், இது 2026 இல் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் இந்திய வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லை.

    • ஜீப் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய ஜீப் ஃபுல்-சைஸ் எஸ்யுவி மாடல் இந்திய ஆலையிலேயே அசெம்பில் செய்யப்பட இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் 2022 கிராண்ட் செரோக்கி மாடலை நவம்பர் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவில் ஜீப் அசெம்பில் செய்யும் நான்காவது மாடல் ஆகும். முன்னதாக ஜீப் காம்பஸ், மெரிடியன் மற்றும் ராங்ளர் போன்ற மாடல்களை ஜீப் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலை ஜீப் நிறுவனத்தின் வலதுபுற டிரைவ் யூனிட்களுக்கான உற்பத்தி மையமாக மாறுகிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த என்ஜின் செயல்திறன் பற்றி ஜீப் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

    இது மட்டுமின்றி புதியகாரில் குவாட்ரா-டிராக் 4x4 சிஸ்டம்- ஆட்டோ, ஸ்போர்ட், ஸ்னோ மற்றும் மட்/சேண்ட் என நான்கு டிரைவ் மோட்கள் வழங்கப்பட இருக்கிறது. டிசைனை பொருத்தவரை புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 7 ஸ்லாட் கிரில், எல்இடி டிஆர்எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், 2-பீஸ் எல்இடி டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப், ஷார்க் ஃபின் ஆண்டெனா மற்றும் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறத்தில் ADAS அம்சங்கள், 10.1 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், பவர்டு முன்புற இருக்கைகள், ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் டோன் இண்டீரியர் தீம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

    • இந்திய சந்தையில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட இருக்கிறது.
    • இதில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

    ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய கிராண்ட் செரோக்கி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிராண்ட் செரோக்கி மாடலின் விலை ரூ. 77 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    புதிய 2022 ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் குவாட்ரா டிராக் ஐ 4x4 சிஸ்டம் மற்றும் ஸ்போர்ட், ஆட்டோ, ஸ்னோ மற்றும் சேண்ட்/மட் என நான்கு வித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபேம்டு 7 ஸ்லாட் கிரில், டூயல் எல்இடி டிஆர்எல், புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், பின்புற பம்ப்பரில் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    உள்புறத்தில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் டோன் இண்டீரியர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, பவர்டு முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவு வாகனங்களில் முதல் முறையாக 10.25 இன்ச் பேசன்ஜர் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு 110 மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் ஆக்டிவ் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், எட்டு ஏர்பேக், 360 டிகிரி சரவுண்ட் வியூ, டிரௌசி டிரைவர் டிடெக்‌ஷன், 3-பாயிண்ட் சீட் பெல்ட், அனைத்து பயணிகளுக்கும் occupant டிடெக்‌ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்தியாவுக்கு சிகேடி முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் வலதுபுற டிரைவ் யூனிட்கள் பூனேவை அடுத்த ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    • ஜீப் நிறுவனத்தின் புதிய கிளப் எடிஷன் கார் அதன் பேஸ் வேரியண்டை விட குறைந்த விலை கொண்டிருக்கிறது.
    • கிளப் எடிஷன் காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எஸ்யுவி காம்பஸ் மாடலின் புதிய கிளப் எடிஷன் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. இத்துடன் மெரிடியன் காரின் கிளப் எடிஷனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு எஸ்யுவி மாடல்களும் அதன் எண்ட்ரி லெவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    இவை குறைந்த எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் விலை ரூ. 20 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காம்பஸ் ஸ்போர்ட் டீசல் மேனுவல் வேரியண்டை விட ரூ. 10 ஆயிரம் விலை குறைவு ஆகும். எனினும், இதன் என்ஜின் அம்சங்கள் மற்றும் டியூனிங்கில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    காஸ்மடிக் மாற்றங்களை பொருத்தவரை டூயல் டோன் ரூஃப், பொனெட்டில் புதிய கிராஃபிக், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி ரிஃப்லெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 8.4 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, பார்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டில் உள்ள அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடல் குறுகிய காலக்கட்டத்திற்கு அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    • புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் விலை ரூ. 27 லட்சத்து 75 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்பெஷல் எடிஷன் ஜீப் மெரிடியன் மாடல் லிமிடெட் 4x2 மேனுவல் வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய கிளப் எடிஷன் மெரிடியன் எஸ்யுவி விலை அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் குறைவு ஆகும். கிளப் எடிஷன் மாடலில் காஸ்மடிக் மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. லிமிடெட் வேரியண்டில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் புதிய கிளப் எடிஷன் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி டூயல்-டோன் பெயிண்ட், சைடு-ரெயில்-மவுண்ட் செய்யப்பட்ட ரூஃப் ரேக் உள்ளிட்டவை கிளப் எடிஷன் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்-பீஸ் சைடு ஸ்டெப், காண்டிராஸ்ட் பிளாக் நிற டீகல்கள், டெயில்கேட்டில் "Club Edition" பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. இவைதவிர காரின் கேபின் பகுதியில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் மெரிடியன் மாடலின் கேபின் பகுதியில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆல்பைன் ஸ்டீரியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மெரிடியன் கிளப் எடிஷனில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

    புதிய ஜீப் மெரிடியன் கிளப் எடிஷன் மாடலிலும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஜீப் நிறுவனம் அட்வென்ச்சர் அஸ்யுர்டு ப்ரோகிராம் திட்டத்தை நாடு முழுக்க அறிவித்தது.
    • ஜீப் மெரிடியன் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களின் விற்பனை சமீபத்தில் நிறுத்தம்.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மற்றும் மெரிடியன் எஸ்யுவி மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. காம்பஸ் மாடல் விலை ரூ. 43 ஆயிரமும், மெரிடியன் எஸ்யுவி விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரமும் அதிகரித்து இருக்கிறது.

    ஜீப் மெரிடியன் X வேரியன்ட் விலை ரூ. 42 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. என்ட்ரி லெவல் (O) 4x2 AT வேரியன்ட் விலை ரூ. 45 ஆயிரமும், லிமிடெட் (O) 4x2 AT மற்றும் லிமிடெட் பிளஸ் 4x2 AT மாடல்களின் விலை முறையே ரூ. 47 ஆயிரம் மற்றும் ரூ. 48 ஆயிரம் உயர்த்தப்பட்டது.

    டாப் என்ட் லிமிடெட் (O) 4x4 AT மற்றும் லிமிடெட் பிளஸ் 4x4 AT மாடல்களின் விலை ரூ. 51 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. மெரிடியன் அப்லேன்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     

    சமீபத்தில் தான் ஜீப் நிறுவனம் அட்வென்ச்சர் அஸ்யுர்டு ப்ரோகிராம் திட்டத்தை நாடு முழுக்க அறிவித்தது. இதற்காக ALD ஆட்டோமோடிவ் உடன் ஜீப் கூட்டணி அமைத்தது. இதில் நிச்சயிக்கப்பட்ட பைபேக், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, வருடாந்திர பராமரிப்பு, ரோடுசைடு அசிஸ்டன்ஸ், காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்த பலன்கள் ஜீப் காம்பஸ் மற்றும் ஜீப் மெரிடியன் மாடல்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர ஜீப் மெரிடியன் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியன்ட்களின் விற்பனையை ஜீப் நிறுவனம் நிறுத்தியது.

    • ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உள்ளது.
    • காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 23 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் 2WD வெர்ஷனில் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் 9 ஸ்பீடு யூனிட் உள்ளது. இதே யூனிட் தான் 4WD AT மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    ஜீப் காம்பஸ் 2WD ஆட்டோமேடிக் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.8 நொடிகளில் எட்டிவிடும். அந்த வகையில், இந்த பிரிவில் அதிவேக மாடல் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இத்துடன் பிளாக் ஷார்க் பேக்கேஜ் காரின் வெளிப்புறம் 18-இன்ச் பிளாக்டு-அவுட் வீல்கள், கிளாஸ் பிளாக் கிரில் மற்றும் பிளாக் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    காரின் உள்புறம் ஆல் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் இன்சர்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் லிட்டருக்கு 16.2 கிலோமீட்டர்கள் வரையிலான மேலைஜ் வழங்கும் என்று ARAI சான்று பெற்று இருக்கிறது.

    • காம்பஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சிறப்பு பலன்கள் அறிவிப்பு.
    • ஜீப் காரை மிகக் குறைந்த மாத தவணையில் வாங்கிட முடியும்.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது எஸ்.யு.வி. மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்ற பலன்களை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் காம்பஸ், மெரிடியன், ராங்ளர் மற்றும் கிராண்ட் செரோக்கி போன்ற மாடல்களை ஜீப் இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், காம்பஸ் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான சிறப்பு பலன்கள் வழங்கப்படுகிறது.

    மெரிடியன் ஓவர்லேண்ட் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஜீப் காம்பஸ் 4x4 மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 65 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் லாயல்டி போனஸ் உள்ளிட்டவை அடங்கும். இந்த காரை மாதம் ரூ. 19 ஆயிரத்து 999 தவணையில் வாங்கிட முடியும்.

     


    ஜீப் மெரிடியன் ஓவர்லேண்ட் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரூ. 25 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த மாதத்தில் ஜீப் மாடல்களை வாங்குவோருக்கு ரூ. 11 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், ஜீப் வேவ் எக்ஸ்குலூசிவ் ஓனர்ஷிப் திட்டத்திற்கான சந்தா வழங்கப்படுகிறது.

    ஜீப் காம்பஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரமும், மெரிடியன் மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான சலுகையும், கிராண்ட் செரோக்கி மாடலுக்கு ரூ. 11 லட்சத்து 85 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் இந்த மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. 

    • இந்த கார் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.
    • முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என தகவல்.

    அடுத்த தலைமுறை ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த மாடல் J4U எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.

    ஜீப் பிரான்டின் தாய் நிறுவனமான ஸ்டெலான்டிஸ் STLA M பிளாட்ஃபார்ம்-ஐ தழுவி புதிய காம்பஸ் மாடல் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் ஐ.சி. என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என பலவிதங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் முழுமையான எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்ட STLA மீடியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் மாடலை கருத்தில் கொண்டே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதில் பெட்ரோல், டீசல் பவர்டிரெயின் ஆப்ஷன்களுக்கு ஏற்ற வகையிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. இது முன்புறம் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    இந்த காரில் அதிகபட்சம் 98 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் இதன் பெர்ஃபார்மன்ஸ் பேக் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என WLTP சான்று பெற்று இருக்கிறது.

    • புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
    • 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது குர்கா 5-டோர் எஸ்.யு.வி. மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. போர்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி.-க்களில் ஒன்றாக குர்கா மாடல் விளங்குகிறது. முன்னதாக இந்த மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், போர்ஸ் குர்கா 5 கதவுகள் கொண்ட மாடல் இந்திய சந்தையில் 2023 அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய குர்கா 5-டோர் வேரியண்ட் அதன் தற்போதைய 3-டோர் வேரியண்டை விட புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    புதிய குர்கா மாடலின் கேபின் லே-அவுட் மாற்றமின்றி 3-டோர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. குர்கா 5-டோர் மாடல் இரண்டடுக்கு இருக்கைகளுடன் ஐந்து இருக்கைகள் மற்றும் மூன்றடுக்கு இருக்கைகளுடன் ஆறு இருக்கைகள் மற்றும் ஏழு பேர் அமரும் வகையில் கேப்டன் இருக்கை போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    போர்ஸ் குர்கா 5-டோர் மாடலில் மெர்சிடிஸ் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே போன்ற செட்டப் குர்கா 3-டோர் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை இந்த மாடல் தற்போதைய 3-டோர் வெர்ஷனை விட ரூ. 1.5 லட்சம் வரை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    ×