என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
- இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
- 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் மட்டும் ஜியோ சேவைகள் இயங்குவதாக கூறப்படும் நிலையில், மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.
நெட்வொர்க் கோளாறு தவிர்த்து மைஜியோ செயலி கூட இயங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
- நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது.
- இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நார்டு சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டூயல் கனெக்ஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் கூகுள் ஃபாஸ்ட் பேர், 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர், பாஸ்வேவ் 2.0 போன்ற வசதிகள் உள்ளன. பெபிள் வடிவம் கொண்டுள்ள புதிய இயர்பட்ஸ் செவ்வக வடிவிலான கேஸ் மற்றும் கிளாஸி ஃபினிஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் டச் கண்ட்ரோல் வசதி, IP55 தர சான்று வழங்கப்பட்டு உள்ளது.
நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது. குறைந்த எடை காரணமாக இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 43 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. ANC பயன்படுத்தாத போது, இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
இதில் உள்ள ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் (கேஸ்+ ANC ஆஃப்) பயன்படுத்தலாம். புதிய நார்டு பட்ஸ் 3 மாடல் டியுவி ரெயின்லாந்து பேட்டரி ஹெல்த் சான்று பெற்ற உலகின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும்.
புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 3 மாடல் ஹார்மோனிக் கிரே மற்றும் மெலோடிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ் வலைதளம், செயலி மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற உள்ளது. விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.
- ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
- இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அறிமுகத்தோடு புதிய ஐபோன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்குவதற்கான முன்பதிவுகள் குறைவாகவே இருந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் ப்ரோ சீரிஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் என்ற கணிப்பில் அதிவேக டெலிவரி மற்றும் அதிக யூனிட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஐபோன 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதிக யூனிட்கள் முன்பதிவாகி உள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் ஒருவார காலத்தில் ஐபோன் 16 வாங்க 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
பிளஸ் மாடல்களை வாங்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 16 சதவீதம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.7 சதவீதம் குறைவு ஆகும்.
- ஸ்மார்ட்போன் 3 Ram மற்றும் சேமிப்பக உள்ளமைப்புகளை கொண்டுள்ளது.
- ஸ்மார்ட்போனின் விலையை குறைக்கும் ரூ. 2000 கூப்பனையும் நிறுவனம் வழங்குகிறது.
ரியல்மி P2 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரியல்மி P2 ப்ரோ 5G அம்சங்கள்
ஸ்மார்ட்போன் Snapdragon 7s Gen 2 SoC மற்றும் 80W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,200mAh பேட்டரியுடன் கிடைக்கிறது.
இது 6.7 இன்ச் முழு-HD+ 3D வளைந்த AMOLED ஸ்கிரீன், 50-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3 Ram மற்றும் சேமிப்பக உள்ளமைப்புகளை கொண்டுள்ளது.
இந்தியாவில் Realme P2 Pro 5G 8 GB + 128GB யின் விலை ரூ.21,999, 12 GB + 256 GB மற்றும் 12 GB + 512 GB விலை முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 27,999.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்மார்ட்போனின் விலையை குறைக்கும் ரூ. 2000 கூப்பனையும் நிறுவனம் வழங்குகிறது. ரியல்மி P2 ப்ரோ 5G ஆரம்பகால விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடங்கிறது.
இது ஈகிள் கிரே (Eagle Grey) மற்றும் கிளி பச்சை (Parrot Green) வண்ணங்களில் வழங்கப்படுகிறது.
- இந்த டேப்லெட் 8300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த டேப்லெட் இருவித நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட்- ரியல்மி பேட் 2 லைட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
மீடியாடெக் ஹீலியோ G99 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மெல்லிய டிசைன் மற்றும் வீகன் லெதர் ஃபினிஷ் கொண்ட புது ரியல்மி டேப் 8300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 15 வாட் சூப்பர்வூக் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்-இல் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே, நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புது ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி M சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது ஸ்மார்ட்போன் கேலக்ஸி M05 என அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M05 மாடலில் 6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், ARM மாலி-G52 GPU, அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ கோர் 6 ஓஎஸ் கொண்ட புது சாம்சங் ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், எல்இடி ஃபிளாஷ் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி M05 மாடலில் 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
விலையை பொருத்தவரை புதிய கேலக்ஸி M05 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மின்ட் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் வலைதளங்கள், தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.
- ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
- கட்டமைப்பில் உள்ள குறைபாடு காரணமாக ஆண்ட்ராய்டு இந்த தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு என எச்சரிக்கை.
ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரகால பதில் குழு (Indian Computer Emergency Response Team) உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயனாளர்களின் முக்கியமான தகவல்களை பெறுவதற்கு இந்த தாக்குதலை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. கட்டமைப்பு, சிஸ்டம், கூகுள் ப்ளே சிஸ்டம் அப்டேட்ஸ் ஆகியவற்றில் உள்ள குறைபாடு காரணமாக இந்த தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் பொருத்தமான அப்டேட்ஸ்களை புதுப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
கிடைக்கும் பாதுகாப்பு அப்டேட்ஸ்களை இன்ஸ்டால் செய்ய அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. உங்களுக்கு இந்த பாதுகாப்பு அப்டேட்ஸ் கிடைக்கவில்லை என்றால், பயனர்கள் நம்பிக்கையில்லா செயலிகள், தெரியாத இணையதளம், சந்தேகத்திற்குரிய லிங்க்ஸ் ஆகிவற்றைய தவிர்க்க ஆலோசனை வழங்கியுள்ளது. அப்டேட்ஸ் செய்துவிட்டால் பயனர்கள் அவர்களுடைய சாதனங்களை கடுமையான பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
- இந்த மொபைல் போன் குவால்காம் பிராசஸர், கை ஓஎஸ் 2.5.3 கொண்டிருக்கிறது.
- இந்த மொபைல் போன் 2000 எம்ஏஹெச் பே்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலை அறிமுகம் செய்தது. இது 4ஜி பீச்சர் போன் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை ஜியோபோன் பிரைமா 2 மாடலில் 2.4 இன்ச் கர்வ்டு ஸ்கிரீன், குவால்காம் பிராசஸர், கை ஓஎஸ் 2.5.3 ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க பிரைமரி கேமரா, செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் அசிஸ்டண்ட் வசதி, ஃபேஸ்புக் மற்றும் யூடியூப், ஜியோசாவன், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் ஜியோபே மூலம் யுபிஐ வசதி வழங்கப்படுகிறது.
ஜியோபோன் பிரைமா 2 மாடலில் எல்இடி டார்ச், ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் ஜியோ சிம் கார்டு சப்போர்ட் மட்டுமே கொண்டிருக்கிறது. மேலும், இதனை 23 மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் 2000 எம்ஏஹெச் பே்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
இந்திய சந்தையில் ஜியோபோன் பிரைமா 2 மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் லூக்ஸ் புளூ நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
- உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது.
- ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.
மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டைப் போலவே, புதிய தலைமுறை ஐபோன்களில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன.
ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் சிறப்பு அம்சங்கள்
* 6.1 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16.
* 6.7 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 பிளஸ்,
* ஏ18 ப்ராசஸர் இதில் இடம்பெற்றுள்ளது,
* ஐஓஎஸ் 18 இயங்குதளம்.
* 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.
* 12 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.
* 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா.
* டைப்-சி சார்ஜிங் போர்ட்.
* ஐபோன் 16 (128ஜிபி) ரூ.79,900.
* ஐபோன் 16 பிளஸ் (128ஜிபி) ரூ.89,900.
பயனர்கள் சில டாஸ்குகளை எளிதில் மேற்கொள்ளும் வகையில் ஆக்ஷன் பட்டன் இதில் இடம்பெற்றுள்ளது
அதேபோல கேமரா கன்ட்ரோல் பட்டனும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்
• ஏ18 புரோ சிப்
• 6.3 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ.
• 6.9 இன்ச் திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 புரோ மேக்ஸ்.
• 48 மெகாபிக்சல் பிரதான கேமரா.
• 48 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வொய்ட் கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.
• 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா.
• கேமரா கன்ட்ரோல் பட்டன் புரோ மாடல் போன்களிலும் இடம்பெற்றுள்ளது.
• ஐபோன் 16 புரோ போனின் ஆரம்ப விலை ரூ.1,19,900.
• ஐபோன் 16 புரோ மேக்ஸ் போனின் ஆரம்ப விலை ரூ.1,44,900.
வரும் 13-ம் தேதி முதல் புதிய ஐபோன் 16 வரிசை போன்களை முன்பதிவு செய்யலாம். 20-ம் தேதி முதல் பயனர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Welcome to the new era of iPhone!
— Tim Cook (@tim_cook) September 9, 2024
Built for Apple Intelligence, the iPhone 16 lineup delivers a powerful, personal, and private experience right at your fingertips. And with the new Camera Control, you'll never miss a moment. pic.twitter.com/zBsx9xOBl1
- இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 கொண்டுள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய நார்சோ 70 டர்போ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், டிமென்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் கொண்டிருக்கிறது.
மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 14 ஜிபி விர்ச்சுவல் ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள GT மோட், பல்வேறு முன்னணி கேம்களில் 90fps கேமிங் சப்போர்ட் வழங்குகிறது. இத்துடன் IP65 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படுகிறது.
புதிய நார்சோ 70 டர்போ ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திடும்.
ரியல்மி நார்சோ 70 டர்போ 5ஜி மாடல் டர்போ எல்லோ, டர்போ கிரீன் மற்றும் டர்போ பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை செப்டம்பர் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
- உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.
- அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.
சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் எக்ஸ் [ட்விட்டர்] தளம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சற்று நேரத்திற்கு முடங்கியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனை டவுன்-டிடெக்டர் என்ற இணையதளம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலக அளவில் முன்னணி வலைதளங்களை தொடர்ச்சியாகக் கண்காணித்து வரும் டிரெக்கிங் வலைதளமே டவுன்-டிடெக்டர்.
திடீரென எக்ஸ் தளம் வேலை செய்யாமல் முடங்கிப்போக என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதற்கிடையே எக்ஸ் தளத்தில் என்ன பிரச்சனை என்ற குழப்பம் பலரிடையே ஏற்பட்டது. இதுகுறித்து எக்ஸ் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க நேரப்படி காலை 11.01 மணியளவில் இந்த முடக்கம் ஆனது ஏற்பட்டது.
- ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது.
- அந்த நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி அன்று குளோடைம் நிகழ்வில் உலகளாவிய சந்தைகளில் ஐபோன் 16 தொடரை ஆப்பிள் அறிமுகப்படுத்துகிறது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 வரிசை போன்கள் உள்பட ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்பாட் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது, இந்தியாவில் ஐபோன் 16 128 ஜிபி: விலை ரூ. 79,900
ஐபோன் 16 256 ஜிபி : விலை ரூ. 89,900,
ஐபோன் 16 512 ஜிபி 1,09,000 ரூபாய் ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்