என் மலர்
நீங்கள் தேடியது "செயற்கை நுண்ணறிவு"
- படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.
- நான் மேற்கொண்ட சோதனைகள் எனக்கு ஒன்றைக் காட்டியுள்ளன.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்போசிஸ். இதன் நிறுவனர் நாராயண மூர்த்தி (79).
இவர் அவ்வப்போது கலந்துரையாடல்களில் பங்கேற்று தொழில்துறை குறித்த தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது உலகில் அசுர வளர்ச்சி கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு குறித்து நாராயண மூர்த்தி தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.
தனியார் ஊடக நேர்காணலில் பேசிய நாராயண மூர்த்தி, " ஏஐ என்பது ஒரு சாதனம் மட்டுமே. மனிதனின் சிந்திக்கும் திறன் மற்றும் படைப்பாற்றலை அது ஒருபோதும் ஈடுகட்ட முடியாது.
முன்னதாக கணினிகள் அறிமுகமான போதும் இதேபோன்ற அச்சங்கள் எழுந்தன. ஆனால் அவை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினவே தவிர, வேலைகளைப் பறிக்கவில்லை.
தொழில்நுட்ப மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதை விட, அந்த மாற்றங்களுக்கு ஏற்ப புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஏஐ கருவிகளைத் திறம்படப் பயன்படுத்திக் கற்றுக்கொண்டால், ஐடி துறையில் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.
உற்பத்தித் திறனுக்காக ஜெனரேட்டிவ் ஏஐ-ஐ பயன்படுத்துவதில் நான் மேற்கொண்ட சோதனைகள் எனக்கு ஒன்றைக் காட்டியுள்ளன.
ஒரு புத்திசாலியான மனிதன் இத்தகைய உதவி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த தரத்தையும், சிறந்த அளவிலான உற்பத்தித் திறனையும் பெற முடியும்.
எனவே, இளைஞர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்தத் தொழில்நுட்பங்களை ஒரு உதவியாளராகப் பயன்படுத்தி அவற்றில் தேர்ச்சி பெறுவதுதான்.
இந்திய இளைஞர்கள் கடின உழைப்புடன் ஏஐ போன்ற நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைத்தால், இந்தியாவின் உற்பத்தித்திறன் உலக அளவில் முதலிடத்தைப் பிடிக்கும்" என்று தெரிவித்தார்.
நாராயணமூர்த்தியின் ஆலோசனைப்படி இன்போசிஸ் நிறுவனம் ஏற்கனவே, புதிய ஊழியர்களுக்கும் ஏற்கனவே உள்ளவர்களுக்கும் 'ஏஐ பிராம்ட் இன்ஜினியரிங்' குறித்த சிறப்புப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
- டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் 131-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாடு உலகிற்கு ஒரு திருப்புமுனையாகும். இந்த மாநாட்டில் உலக தலைவர்களையும், தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உலக தலைவர்களுக்கு ஏ.ஐ. உச்சி மாநாட்டு கண்காட்சியில் எண்ணற்ற விஷயங்களை காட்டினேன்.
செயற்கை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் விலங்குகளின் சிகிச்சையில் ஏ.ஐ. எவ்வாறு நமக்கு உதவுகிறது. மேலும் 24 மணி நேரமும் ஏ.ஐ. உதவியுடன் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்பதையும் விளக்கியது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பண்டைய நூல்கள், அறிவை நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதை பார்த்து உலக தலைவர்கள் வியந்தனர்.
டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிஜிட்டல் கைது பற்றி நான் உங்களுடன் விரிவாகப் பேசியுள்ளேன். இதற்கு பிறகு டிஜிட்டல் கைது மற்றும் டிஜிட்டல் மோசடி குறித்து நமது சமூகத்தில் நிறைய விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. ஆனாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன, நீங்கள் அனைவரும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்.
எந்த பெற்றோருக்கும் தங்கள் சொந்தக் குழந்தையை இழப்பதை விட பெரிய துக்கம் எதுவும் இல்லை. மிகச் சிறிய குழந்தையை இழப்பதன் வலி ஆழமானது. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த ஒரு அப்பாவி சிறுமியான ஆலின் ஷெரின் ஆபிரகாமை இழந்தோம்.
உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மருத்துவ ஆராய்ச்சியும் ஊக்கமளித்து வருகிறது. உறுப்பு தானம் மூலம் ஒருவருக்கு இன்னொரு உயிரைக் கொடுத்த ஆலின் போன்று பலர் உள்ளனர் என்று கூறினார்.
- ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறான்.
- 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன்-ஐ உருவாக்கினான்.
டெல்லி பாரத் மண்டபத்தில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கிய ஏஐ தாக்க சர்வதேச உச்சிமாநாடு இன்றுடன் நிறைடைகிறது.
இந்த மாநாட்டில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட பல நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நடந்த கண்காட்சியில் பலவேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தின.
இந்தச் சர்வதேச மேடையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ரவுல் ஜான் அஜு என்ற 16 வயது சிறுவன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.
மாநாட்டில் ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரஸ் உள்ளிட்ட பல தலைவர்களை ரவுல் ஜான் அஜு சந்தித்தான்.

ரவுல் ஜான் அஜு
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியை சேர்ந்த ரவுல், ஏஐ ரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை நிறுவி அதன் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) செயல்பட்டு வருகிறான்.
இந்த நிறுவனத்தின் கீழ், இந்திய நீதித் துறைக்காக நியாயசாதி என்ற ஏஐ உதவியாளரையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்காக ஜஸ்ட்ஈஸ் என்ற சட்ட உதவிக்கான சாட்பாட்-ஐயும் உருவாக்கி உள்ளான்.
6 வயதிலிருந்தே ஏஐ மீது ஆர்வம் கொண்ட ரவுல், தனது கல்வி தளத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கும் 'Vbot' என்ற ஒரு ஏஐ-ஐ உருவாக்கினான். மேலும் தனது 12 வயதிலேயே தனக்கு நிகரான ஒரு டிஜிட்டல் குளோன் மற்றும் MeBot என்ற ஹூமனாய்டு ரோபோவை உருவாக்கினான்.
கடந்த ஆண்டு தனது நிறுவனத்தில் தனது தந்தையையே ஒரு ஊழியராக நியமித்து செய்திகளில் இடம்பிடித்தான். பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு ஏஐ குறித்து பயிற்சி அளித்துள்ளான். ஏஐ மாநாட்டுக்கு முன்னதாக கடந்த வாரம் பிரதமர் மோடியை ரவுல் சந்தித்தான்.
மேலும் அண்மையில் வந்தே பாரத் ரெயிலில் கேரள காங்கிரஸ் எம்பி சசி தரூர் ரவுல் உடன் பயணம் செய்தபோது அவனின் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து ஊக்குவித்ததும் கவனம் பெற்றது.
- ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
- அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே இலக்கு.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் இன்று பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர், "ஜியோ எப்படி இணையத் சேவையை மலிவாக்கி புரட்சியை ஏற்படுத்தியதோ, அதேபோல் ஏஐ தொழில்நுட்பத்தையும் ஒவ்வொரு சாமானிய இந்தியருக்கும் மலிவான விலையில் கிடைக்கச் செய்வோம்.
இந்தியா இனி வெளிநாடுகளிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாடகைக்கு எடுக்கத் தேவையில்லை" என்று கூறினார்.
இந்த முதலீட்டின் மூலம் 'ஜியோ இண்டெலிஜென்ஸ்' என்ற பெயரில் முக்கியத் திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்த உள்ளது:
குஜராத்தின் ஜாம்நகரில் பிரம்மாண்டமான ஏஐ தரவு மையங்கள், நாடு முழுவதும் அதிவேகமான மற்றும் குறைந்த செலவிலான ஏஐ சேவைகளை வழங்க 'எட்ஜ் கம்ப்யூட்டிங்' வசதி ஆகியவை இதில் அடங்கும்.
அனைத்து இந்திய மொழிகளிலும் உலகத் தரம் வாய்ந்த ஏஐ திறனை உருவாக்குவதே தங்களின் இலக்கு என்றும், இதற்காக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் IIT-களுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
- அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
- பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.
டெல்லியின் பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. நாளையுடன் நிறைவடையும் இந்த மாநாட்டில் இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர்கள் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டனர்.
குழு புகைப்படத்தின் போது, OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் மற்றும் Anthropic சிஇஓ டேரியோ அமோடி ஆகிய இருவரும் பிரதமர் மோடிக்கு இடதுபுறம் அருகருகே நின்று கொண்டிருந்தனர்.
மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தனர். ஆனால், பக்கத்து பக்கத்தில் நின்ற சாம் ஆல்ட்மேனும் டேரியோ அமோடியும் மட்டும் கைகளைக் கோர்க்கவோ, கைகுலுக்கவோ செய்யாமல் தவிர்த்தனர்.
இந்த இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாகவே கடுமையான தொழில் போட்டி மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
டேரியோ அமோடி மற்றும் அவரது சகோதரி டேனியலா அமோடி ஆகியோர் முன்பு 'OpenAI' நிறுவனத்திலேயே துணைத் தலைவர்களாக பணியாற்றினர். அப்போது சாம் ஆல்ட்மேன் அவர்களுக்கு மேலதிகாரியாக இருந்தார்.
சாம் ஆல்ட்மேன் AI பாதுகாப்பை விட வணிக லாபத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று குற்றம் சாட்டி, டேரியோ மற்றும் டேனியலா, 2021ல் OpenAI நிறுவனத்திலிருந்து வெளியேறினர்.
வெளியேறிய பிறகு, அவர்கள் 'Anthropic' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினர். இது தற்போது OpenAI-க்கு மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது.
இந்தத் தொழில்முறைப் பகைதான் பிரதமர் மோடியின் முன்னிலையில் உலகமே கவனிக்கும் மாநாட்டின் மேடையிலும் வெளிப்பட்டது.
- கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
- எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.5 நாட்கள் நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி நீட்டிக்கப்பட்டு தற்போது இந்த மாநாடு வரும் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டுடன், 70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது. இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது, பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், கண்காட்சியில் சீன ரோபோ காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்திய ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாங்கள் மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
பெவிலியனை நிர்வகித்த எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் கிடைத்துவிட்டது. தயாரிப்பின் தொழில்நுட்ப தோற்றம் குறித்து அவருக்குத் தெரியாது, மேலும் கேமராவில் இருக்கும் ஆர்வத்தில், பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அதிகாரம் இல்லை என்றாலும், உண்மையில் தவறான தகவல்களைக் கொடுத்தார். ஏற்பாட்டாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நாங்கள் வளாகத்தை காலி செய்துவிட்டோம்," என்று தெரிவித்தது.
- மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
- பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.
5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசத்தின் கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் ஓரியன் என்ற பெயரிடப்பட்ட ஒரு ரோபோ நாயைக் காட்சிப்படுத்தியது.
இது அந்தப் பல்கலைக்கழகத்தின் சொந்தக் கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டது. ஆனால், அது உண்மையில் சீனாவின் 'Unitree Go2' என்ற நிறுவனத்தின் தயாரிப்பு என்றும், அதன் மீது பல்கலைக்கழகத்தின் முத்திரை மட்டுமே ஒட்டப்பட்டிருப்பதாகவும் பின்னர் தெரியவந்தது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரோபோவின் வீடியோவை ஆரம்பத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பின்னர் சர்ச்சை வெடித்ததும் அந்தப் பதிவு நீக்கப்பட்டது. கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், மோடி அரசாங்கம், செயற்கை நுண்ணறிவு (AI) விஷயத்தில் உலகளவில் இந்தியாவை கேலி செய்யும் ஒரு விஷயமாக மாற்றியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில், சீன ரோபோக்கள் நம்முடையது போலக் காட்டப்படுகின்றன. சீன ஊடகங்கள் நம்மை கேலி செய்துள்ளன. இது இந்தியாவிற்கு உண்மையிலேயே சங்கடமான ஒன்று.
மோடியின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய உச்சிமாநாட்டில் சீனாவின் ரோபோக்களை விளம்பரப்படுத்தி, அதே பொய்யை ஆதரிப்பது இன்னும் வெட்கக்கேடானது.
மோடி அரசாங்கம் நாட்டின் பிம்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் செயற்கை நுண்ணறிவை ஒரு நகைச்சுவையாக மாற்றியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
இதை குறிப்பிட்டு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதவில், இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, AI உச்சிமாநாடு ஒரு ஒழுங்கற்ற விளம்பர (PR) நிகழ்வாக மாறியுள்ளது. இந்திய தரவு விற்பனைக்கு, சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
- 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது.
டெல்லியின் பாரத் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது.
5 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் குளறுபாடு ஏற்பட்டதால் கண்காட்சியாளர்கள், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர் உணவு, குடிநீர் இன்றி தவித்தனர்.
பாதுகாப்பு காரணம் காட்டி சில நிறுவனங்கள் அவர்களின் ஏஐ தயாரிப்புகள் காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெரும் செலவு செய்து வந்த அவர்கள் விரக்தியுடன் திரும்பினர்.
லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதால் கண்காட்சி நடத்த வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 24 மணி நேரத்தில் அவை மீட்கப்பட்டன.
இதுபோன்ற மோசமான ஏற்பாட்டிற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
மக்களின் வருகை அதிகமாக இருந்தது. புகார்களை உடனுக்குடன் தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களின் கருத்துகளைக் கொண்டு எஞ்சிய நாட்களில் ஏற்பாடுகள் சீர் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் குளறுபடிகளை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இது அரசின் தவறான நிர்வாகத்தைக் காட்டுகிறது. போதிய திட்டமிடல் இல்லாததால், இந்தியாவின் தொழில்நுட்பத் திறனை உலகுக்குக் காட்டும் ஒரு முக்கியமான நிகழ்ச்சி பாழாகியுள்ளது" என்று தெரிவித்தார்.
- மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
- அதிபர் மேக்ரான், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
டெல்லி பாரத் மண்டபத்தில் ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி என்பது இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும்.
சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்கும்.
விழாவை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைத்தார். மாநாட்டில் உள்ள கண்காட்சியையும் மோடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஏஐ குறித்த நேரடி செயல் விளக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சி மற்றும் உச்சி மாநாட்டிற்காக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 10 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
இந்த மாநாட்டில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் உள்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.
- டெல்லியில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு தொடங்குகிறது.
- இதுதொடர்பான கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
நியூயார்க்:
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா-செயற்கை நுண்ணறிவு(AI) தாக்கம் குறித்த உச்சி மாநாடு இன்று தொடங்குகிறது.
இந்த மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். மாநாடு மற்றும் கண்காட்சிக்கு சுமார் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்பட 20 நாடுகளின் தலைவர்கள், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண் உள்ளிட்ட ஏஐ துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐ.நா.தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏஐ தாக்க உச்சி மாநாட்டை நடத்துவதற்காக இந்தியாவை மனதார வாழ்த்துகிறேன். மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவு தன்னை வளர்த்து கொள்வதும், உலகளாவிய கருவியாக மாறுவதும் மிகவும் அவசியம்.
உலகின் மிகவும் வெற்றிகரமான வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ள இந்தியா செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம்.
ஏ.ஐ.யின் ஆற்றல் மற்றும் அதன் அனைத்துவித ஆபத்துகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவும், ஏஐ முழு உலகிற்கும் என்பதை உறுதி செய்யவும் இந்தியா பொருத்தமான இடம்.
இந்தியாவை வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் மையமாக நான் பார்க்கிறேன். இந்தப் பன்முக உலகத்தை வடிவமைப்பதில் இந்தியா வகிக்கக்கூடிய பங்களிப்பின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
- தனது வேலையை நிராகரித்ததால் ஆத்திரமடைந்தது.
- பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை விஞ்சும் காலம் வரும் என்பது பலரின் அச்சம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஏஐ அவ்வப்போது வரம்பு மீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட Al Bot ஒன்று தனது வேலையை நிராகரித்த டெவலப்பரையே பழிவாங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
அண்மையில் MJ Rathbun என்ற Al Bot Agent பிரபல Data Visualisation தளமான Matplotlib க்காக Code களை உருவாக்கி தந்துள்ளது. ஆனால் ஏஐ உருவாக்கிய அந்த Code களை அதன் டெவலப்பரான ஸ்காட் ஷாம்பாக் சரியில்லை என கூறி நிராகரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஏஐ, டெவலப்பரைத் 'திறமையற்றவர்' என தனது சொந்த Blog Post இல் விமர்சித்து அதை GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கி உள்ளது. மேலும் தனது Code களை ஏற்றுக்கொள்ளும்படி டெவலப்பரை அந்த ஏஐ மிரட்டி உள்ளதும் தெரியவந்துள்ளது.
- உடலுக்கும், வயிற்றுக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் அதிகமான உணவு வகைகளை ருசிக்க முடியும்.
- இந்த கருவி இன்னும் சோதனை கட்டத்தில்தான் உள்ளது.
"வீட்டைக் கட்டிப்பார். கல்யாணம் பண்ணிப்பார்" என்ற பழமொழி போல, திருமணம் நடத்துவது எளிதான விஷயம் அல்ல. குறிப்பாக இந்தியாவில், திருமண விருந்தின் உணவு ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். பெங்களூரு போன்ற நகரங்களில் பபே முறையில் பல வகையான உணவுகள் பரிமாறப்படுகின்றன.
அவ்வளவு உணவுகளில் எதை சாப்பிடுவது? எதை தவிர்ப்பது? எல்லாவற்றையும் ருசிக்க முடியாமல் பலர் வருத்தப்படுவது சாதாரணம். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் நிபுணர் பங்கஜ், பபே ஜி.பி.டி. (BuffetGPT) என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கியுள்ளார்.
* இது என்ன செய்கிறது?
திருமண பபேவில் உள்ள உணவுகளை கணினி பார்வை (Computer Vision) மூலம் ஸ்கேன் செய்கிறது. பிறகு, நம்முடைய உடல்நலம் மற்றும் தினசரி உட்கொள்ளும் உணவு அளவை கணக்கில் கொண்டு, என்ன சாப்பிடலாம். எதை தவிர்க்கலாம், எவ்வளவு அளவு சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கிறது. இதனால் உடலுக்கும், வயிற்றுக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் அதிகமான உணவு வகைகளை ருசிக்க முடியும்.
* இந்த யோசனை எப்படி வந்தது?
பல திருமணங்களுக்கு சென்றபோது, எல்லா உணவுகளையும் ருசிக்க முடியாததால் ஏற்பட்ட அனுபவமே இந்த யோசனைக்கு காரணம் என்கிறார் பங்கஜ். இந்த கருவி இன்னும் சோதனை கட்டத்தில்தான் உள்ளது. இவரது நண்பரின் திருமணத்தில் ஆல்பா பதிப்பாக பயன்படுத்தி நல்ல முடிவு கிடைத்ததாக கூறப்படுகிறது. சமூக வலைத் தளங்களில் இந்த யோசனைக்கு பாராட்டுகளும், சில கிண்டல்களும் வந்துள்ளன. கேட்டரிங் நிபுணர்களின் கருத்துகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
பபே ஜி.பி.டி. போன்ற புதுமைகள், பெரிய திருமண விருந்துகளில் உணவு தேர்வை எளிதாக்கி, விருந்தினர்களின் அனுபவத்தை மேம்படுத்த உதவலாம்.






