என் மலர்
நீங்கள் தேடியது "ரிலையன்ஸ்"
- ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.
- ரஷிய கச்சா எண்ணெயை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பிறநாடுகள் மீதான வரி விதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு, ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். மேலும் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி என்று டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், ரஷியாவின் கச்சா எண்ணெய் பயன்பாட்டை நிறுவத்துவதாக பிரபல தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அதன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையத்தில் ரஷிய கச்சா எண்ணெயை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தொழில்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
- அஜித் குமார் ரேஸிங் அணி இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி
- எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
இந்த ஒப்பந்த அறிவிப்பில்"இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேஸிங் அணி", என ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்டுள்ளது.
- இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
- இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இது உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய டிரம்ப், "இந்தியா இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்கப் போவதில்லை. இந்த செயல்முறையை உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் அது விரைவில் முடிவடையும். ஏற்கனவே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிறுத்திவிட்டனர். அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சுமார் 38 சதவீத எண்ணையை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை படிப்படியாக குறைக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ள நிலையில், எண்ணெய் வாங்கும் திட்டத்தை இந்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது
- அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அசோக் குமார் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசோக் பால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI- (Solar Energy Corporation of India) சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அசோக் பாலுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் திங்கள்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக என விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் குழு அமைத்தது.
- சிறப்பு விசாரணைக் குழு உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வந்தாரா விலங்கு மீட்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சி மையத்திற்கு முறைகேடாக இந்தியா மற்றும் வெளிநாட்டு விலங்குகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக யானைகள் கொண்டு வரப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை (SIT) அமைத்தது.
இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் விதிகளை பின்பற்றியே வெளிநாடுகளில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணையில், "வந்தாரா சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்கிறது. அதைக் கெடுக்காதீர்கள், முழு அறிக்கையை விரிவாகப் பார்க்கலாம்" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக ஆனந்த் அம்பானி தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி தற்போது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் தலைவராகவும், மகள் இஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த இருவரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன குழுவில் நிர்வாகமற்ற இயக்குநர்களாகவும் உள்ளனர்.
- ஜியோபுக் லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப் உள்ளிட்ட சேவைகள் உள்ளன.
ரிலையன்ஸ் ரிடெயில் நிறுவனம் தனது ஜியோபுக் லேப்டாப் 2023 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஜியோபுக் மாடல் ஸ்டைலிஷ் மேட் பினிஷ் செய்யப்பட்டு, மிக மெல்லிய தோற்றத்தில், 990 கிராம் எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப்பில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த லேப்டாப் 11.6 இன்ச் ஆன்டி-கிளேர் HD ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்கிரீன் எக்ஸ்டென்ஷன் வசதி, வயர்லெஸ் ப்ரின்டிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சாட்பாட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்டிஇ, டூயல் பேன்ட் வைபை, பில்ட்-இன் USB/HDMI போர்ட்கள், HD வெப்கேமரா மற்றும் எட்டு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்கப்படுகிறது.

ஜியோபுக் லேப்டாப்-இல் ஜியோ ஒஎஸ், ஜியோ டிவி ஆப், ஜியோ-பியான் கோடிங், ஜியோ கிளவுட் கேம்ஸ்-இன் கீழ் ஏராளமான கேம்கள், ஒரு வருடத்திற்கான 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ், டிஜிபாக்ஸ் மற்றும் குயிக்ஹீல் பேரன்டல் கன்ட்ரோல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
ஜியோபுக் அம்சங்கள்:
11.6 இன்ச், 1366x768 பிக்சல், ஆன்டி கிளேர் HD டிஸ்ப்ளே
மீடியாடெக் 2.0 GHz ஆக்டா கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஜியோ ஒஎஸ்
2MP HD வெப் கேமரா
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
இன்பினிட்டி கீபோர்டு
ப்ளூடூத், 4ஜி, டூயல் பேன்ட் வைபை
I/O, USB, HDMI மற்றும் ஆடியோ போர்ட்கள்
ஜியோ-பியான் கோடிங், ஜியோகிளவுட் கேம்ஸ், ஜியோ டிவி ஆப்
4000 எம்ஏஹெச் பேட்டரி
8 மணி நேரத்திற்கு பேக்கப்
இந்திய சந்தையில் ஜியோபுக் மாடலின் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விற்பனை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர், அமேசான் வலைதளம் உள்ளிட்ட தளங்களில் நடைபெறுகிறது.
- 7 வருடங்களுக்கு முன்பு ஒரு உறுதியளித்து அதனை செய்து காட்டினோம்
- இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், தொழில்துறைக்கும் இது பயன்படும்
இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவன குழுமம் ரிலையன்ஸ்.
இந்நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 2016 செப்டம்பரில் தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய சேவை மற்றும் அழைப்பு வசதியை இலவசமாக கொடுத்தது. குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டாலும், பிறகு அதனை நீட்டித்து கொண்டே சென்றது.
அதிரடியாக ஜியோவின் சேவை கட்டணங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததால், பல புதிய சந்தாதாரர்களும் இதில் இணைந்தனர். இதன் காரணமாக பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவை கட்டணத்தை குறைத்து தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், உலகெங்கும் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்க வைக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இது பற்றிய அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திர பொது கூட்டத்தில் அவர் வெளியிட்டார். அப்போது முகேஷ் அம்பானி கூறியதாவது..,
"களைப்பே இல்லாத இந்தியாவின் சக்தியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. முழுக்க முழுக்க தன்னம்பிக்கையால் தூண்டப்பட்ட ஒரு புதிய இந்தியா இது. புதுமைகளுக்கும், வளர்ச்சிக்கும், தேச முன்னேற்றத்திற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய போட்டி திறன் வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. இதனை இந்தியாவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்."
"இதன்படி, 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக்கான கணினி திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்தும். 7 வருடங்களுக்கு முன்பு, அனைவருக்கும் இணைய சேவை தருகிறோம் என நாங்கள் வாக்களித்தோம். அதனை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறோம். இன்று உங்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம். எல்லோருக்கும், எங்கேயும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடைக்க செய்வோம் என உறுதியளிக்கிறோம். இந்தியாவிற்கு ஏற்ற செயல் வடிவங்களில் செயற்கை நுண்ணறிவு கட்டமைக்கப்படும்."
"இது இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், வர்த்தகங்களுக்கும், தொழில்துறைக்கும் பயன்படும் வகையில் அமையும். இதற்கான எல்லா தகவல்களும், தரவுகளும், திறனும், திறமை வாய்ந்த வல்லுனர்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை," என்று அவர் தெரிவித்தார்.
4ஜி சேவையில் புரட்சி செய்தது போல், செயற்கை நுண்ணறிவிலும் ஜியோ கால்பதிக்க போவதால் சந்தாதாரர்கள் மட்டுமின்றி அனைவரும் உற்சாகத்துடன் ரிலையன்ஸ்-இன் அடுத்தக் கட்ட நகர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
- இந்தியாவில் எங்களிடம் சிறந்த துப்பாக்கி சுடும் நபர் உள்ளனர்
- பணம் தராவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என இ-மெயில் மூலம் மிரட்டல்
ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறார். இவருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 27-ந்தேதி சதாப் கான் என பெயரிட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.
அதில் எங்களுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்காவிடில் உங்களை கொலை செய்வோம். இந்தியாவில் சிறந்த துப்பாக்கி சுடும் நபர்கள் உள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வருடம் பீகாரில் இருந்து அம்பானி மற்றும் அவரது குடும்ப நபர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய நபரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
- முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது.
- தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.
மும்பை:
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.
அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானிக்கு நேற்று மீண்டும் 2-வது முறையாக இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. வெள்ளிக்கிழமை மிரட்டிய அதே நபர்தான் மீண்டும் மிரட்டல் விடுத்திருந்தார்.
நேற்று 2-வது தடவை அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன்.
நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இ.மெயில் எங்கிருந்து வந்திருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மும்பை போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டும் கொலை மிரட்டல் வந்தது.
அந்த மிரட்டலை விடுத்த பீகாரை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த தடவை அம்பானியை மிரட்டியது யார்? என்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
- முகேஷ் அம்பானிக்கு இ.மெயில் மூலம் தொடர் கொலை மிரட்டல் வந்தது.
- அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்காவை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை:
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானிக்கு சில தினங்களுக்கு முன் மர்ம நபர் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார்.
அவர் அந்த இ.மெயிலில், "எனக்கு ரூ.20 கோடி பணம் தர வேண்டும். தவறினால் சுட்டு கொல்லப்படுவீர்கள். என்னிடம் நன்கு குறிபார்த்து சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
இதுகுறித்து தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மும்பை கம்தேவி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, முகேஷ் அம்பானிக்கு மீண்டும் இ.மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. அவர் விடுத்த கொலை மிரட்டலில், "நான் ரூ.20 கோடிதான் கேட்டேன். ஆனால் எனக்கு நீங்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளேன். நீங்கள் எனக்கு இனி ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்தும் முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மும்பை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மும்பை போலீசாரும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த தெலுங்கானாவைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தொடர்ந்து 5 முறை அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.
- கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது.
- 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் பங்கேற்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தாவில் சர்வதேச வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு நிறுவன பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மேற்கு வங்காள மாநிலத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் சுமார் 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாநிலத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.20,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலை புதுப்பிக்கும் ஒரு லட்சிய திட்டத்தை எடுத்துள்ளது. பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரிய கட்டமைப்புகள் உள்பட முழு கோவில் வளாகத்தையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.






