என் மலர்
நீங்கள் தேடியது "அஜித் குமார்"
திரையுலகின் உச்ச நட்சத்திரம், ரேசர் என பன்முகத்தன்மை கொண்டவர் அஜித் குமார். திரைத்துறை கடந்து, தற்போது கார் ரேசிங்கில் பங்கேற்று வருகிறார். துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் தொடரில் பங்கேற்றுள்ள ரேசர் அஜித் குமாரை திரைப்பிரபலங்கள் நேரில் சந்தித்து கார் ரேசிங்கில் பங்கேற்று வருவதற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில், நடிகை மஞ்சு வாரியர் ரேசர் அஜித் குமாரை துபாயில் சந்தித்துள்ளார். கார் பந்தயக் களத்தில் அஜித் குமாரை சந்தித்தது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ``AK சார், உள்ளத்தில் எரியும் ஆர்வத்தை எப்படி தேடிப் பின்தொடர வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. மேலும், உங்கள் ரேசிங் பிட்டில் எங்களை அன்புடன் வரவேற்று, நேரில் த்ரில்லிங் ரேசை பார்க்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றி. அது ஒரு அருமையான அனுபவம்,'' என குறிப்பிட்டுள்ளார்.
- புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் தொடருக்காக ரேசர் அஜித் குமார் துபாயில் இருக்கிறார். அஜித் குமாரின் ரேசிங்கை நேரில் காணவும், அவரை வாழ்த்தவும், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் துபாய் சென்று வருகின்றனர். இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார்.

ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், அஜித் குமாரை சந்தித்தது, பந்தய களத்தில் கிடைத்த அனுபவம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "ரீடேக் இல்லை. ஸ்டன்ட் டபுள்ஸ் இல்லை. ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன் இல்லை. உண்மையான வேகம், அபாயம் மற்றும் அர்ப்பணிப்பு. யாஸ் மெரினா சர்்க்யூட்டில் நம்ம அண்ணனை நேரில் பார்ப்பது உண்மயில் மெய்சிலிர்க்கும் அனுபவம், அது கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இது சினிமா இல்லை, இதுதான் அஜித் குமார்," என குறிப்பிட்டுள்ளார்.
- புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- அஜித் குமார் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் அஜித் குமார். நடிப்பு ஒருபக்கம், ரேசிங் ஒருபக்கம் என பம்பரமாக சுழன்று வருகிறார். அந்த வகையில், தற்போது துபாயில் நடைபெறும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். ரேசிங் ஒருபக்கம், ரசிகர்கள் ஒருபக்கம் என சமூக வலைத்தளங்களில் அஜித் குமார் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
அடிக்கடி ரேசர் அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன் என துபாயில் தமிழ் நடிகர்கள் அஜித் குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்களது சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில், இயக்குநர் வெங்கட் பிரபு, ரேசர் அஜித் குமாரை சந்தித்துள்ளார். ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்தபடி அஜித் குமாரை சந்தித்த வெங்கட் பிரபு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் குமார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
- கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
- அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் அஜித் குமார். நடிப்பு மட்டுமின்றி கார் ரேசிங்கிலும் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ள போதிலும், கிடைக்கும் நேரத்தில் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கார் ரேசிங்கை மட்டுமின்றி நடிகர் அஜித் குமாரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர். இந்த நிலையில், செய்தியாளருக்கு சமீபத்தில் பேட்டியளித்த அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆதரவு குறித்த கேள்விக்கு பதலளித்த அஜித் குமார், "இது எனக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியத்தை விட்டு வெளியே வரும்போது, அவர் அப்படிச் செய்யலாமா, கூடாதா என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன. ஆம், நானும் அதை எதிர்கொள்கிறேன்."
"மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி. சர்கியூட் ஆஃப் ஸ்பா-வில் என்னை ஆதரிக்க சுமார் 9000 ரசிகர்களும், நர்பர்கிங்கில் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது."
"உண்மையாகச் சொல்லப்போனால், நான் இதை எனக்காகச் செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு. என்னால் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுநராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்," என்றார்.
- நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன்.
- அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் "அரசன்" திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்து இருந்தார். சிலம்பரசன் - அஜித் குமார் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் சிலம்பரசன் துபாயில் வைத்து நடிகர் அஜித் குமாரை சந்தித்தது பற்றி மனம் திறந்துள்ளார்.
இது குறித்து பேசிய சிலம்பரசன், "நான் ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்காக துபாய் சென்றிருந்தேன். அஜித் குமாரின் பந்தயப் பயிற்சி செய்யும் இடம் வழியிலேயே இருந்தது. நான் அவரை நீண்ட நாட்களாக சந்திக்க திட்டமிட்டிருந்தேன், இப்போது சரியான வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில், பந்தயத்தின் போது அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. அதனால், நான் வரலாமா என்று அவரிடம் கேட்டேன். AK வரச் சம்மதித்து என்னை சந்தித்தார். என்னை சந்தித்த பிறகு AK மிகவும் மகிழ்ச்சியடைந்தார், மேலும் தனது பந்தயம் குறித்து மிக விரிவாக பகிர்ந்துகொண்டார். நானும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்," என தெரிவித்தார்.
- அடுத்த ஆண்டில் அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
- கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

இதற்கு முன்னதாக மலேசியாவில் நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. இந்த நிலையில், கார் ரேஸில் அஜித் பங்கேற்ற கார் பாதியில் பழுதாகி நின்றது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கார் பழுதாகி நின்றது தொடர்பாக நடிகர் அஜித்திடம் கேட்கப்பட்டதற்கு, கவலைப்பட ஒன்றுமில்லை. பந்தயம் என்றால் அதுதான். ஆம், அது சோர்வடையச் செய்கிறது. ஆனால் எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும் என்றார்.
- அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா.
- அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார்.
நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர் சிறுத்தை சிவா. விவேகம் படம் மட்டும் சொதப்பியது.
தொடர்ந்து சூர்யாவை வைத்து சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா படமும் பிளாப் ஆனது. இதன்பின் புதிய படங்களை இயக்காமல் இருந்த சிவா பொதுவெளியில் அதிகம் காணப்படவில்லை.
இந்நிலையில் மலேசியாவில் கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அஜித் குமாருடன் சிறுத்தை சிவா கடந்த சில நாட்களாக நேரம் செலவிட்டு வருகிறார். அங்கு அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவுடன் சிறுத்தை சிவா இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இதனால் சிறுத்தை சிவா அஜித்துக்கு கதை சொல்ல அங்கு சென்றுள்ளதாகவும், இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் ஊகங்கள் எழுந்துள்ளது.
அஜித்தின் ரேஸிங் வாழ்க்கை பற்றி ஆவணப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல்கல் வெளியாகி வந்த நிலையில் அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி வெற்றிக்கு பிறகு அஜித் அடுத்ததாக மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.
- இந்த நேர்காணல் இணையத்தில் வைரலானது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார்தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
அண்மையில் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். இந்த நேர்காணல் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், அஜித்தை நேர்காணல் செய்த அனுபமா சோப்ரா அந்த நேர்காணல் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மற்றொரு நேர்காணலின் இடையே அஜித்தின் நேர்காணல் குறித்து பேசிய அனுபமா சோப்ரா, "துபாயில் அஜித்திடம் நேர்காணல் எடுத்தேன். அவர் அங்கு தனியாக வந்தார். ஆனால், என்னுடன் ஒப்பனையாளர் இருந்தார். அஜித் மேக்கப் செய்து கொள்ளவே இல்லை. அவர் ஒரு சூப்பர்ஸ்டார், அவரது செயல் எனக்கு அது சங்கடமாக இருந்தது. மேலும் மற்றவர்களுக்கு அவர் அறை கதவை திறந்துவிடுகிறார். அவரின் எளிமையை கண்டு நான் கூச்சப்பட்டேன்" என்று தெரிவித்தார்.
- குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித்குமார் கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
- அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், SRO மோட்டார் ஸ்போர்ட் குழுமம், அஜித்குமாருக்கு 'GENTLEMAN DRIVER OF THE YEAR 2025' விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இத்தாலியின் வெனிஸ் நகரில் நடந்த விருது விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற அஜித்குமார் விருதினை பெற்றுக்கொண்டார்.
- தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் மைதிலி போட்டியிட்டார்.
- 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் மைதிலி வெற்றி பெற்றார்.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜக 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல போஜ்புரி நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் எம்எல்ஏவாக உருவெடுத்துள்ளார்.
கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் எம்எல்ஏவாகவும் ஆகி கவனம் பெற்று வருகிறார். 84,915 வாக்குகள் பெற்ற இவர் எதிர்த்து போட்டியிட்ட மகாபந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வினோத் மிஸ்ராவை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில், எம்எல்ஏ மைதிலி தாகூர், தமிழில் பாடிய "கண்ணான கண்ணே' பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது
- சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தில் அஜித் உடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடந்திருந்தார்.
நடிகர் சூரி, அஜித் குமரருடன் நேரில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது" என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக சூரி நடிப்பில் மாமன் படம் வெளியாகி இருந்தது. அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி வெளியாகி இருந்தது. முன்னதாக சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் படத்தில் அஜித் உடன் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடந்திருந்தார்.
இந்நிலையில் இந்த திடீர் சந்திப்பு பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. அஜித் அடுத்ததாக குட் பேட் அக்லி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் சூரி நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- அஜித் குமார் ரேஸிங் அணி இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி
- எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்நிலையில், 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னர் ஆக ரிலையன்ஸ் குழுமத்தின் 'கெம்பா' குளிர்பான நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.
இந்த ஒப்பந்த அறிவிப்பில்"இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணிகளில் ஒன்றான அஜித் குமார் ரேஸிங் அணி", என ரிலையன்ஸ் குழுமம் குறிப்பிட்டுள்ளது.






