என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் பந்தயம்"

    • அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
    • விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது.

    இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.

    பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால் அதன்மீது அஜித்தின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்தது. காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்நிலையில் கார் பந்தயத்தின்போது அஜித் குமாரின் காருக்குள் இருந்த கேமராவில் பதிவான அதிர்ச்சியூட்டும் விபத்துக்காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

    • அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார்.
    • அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார்.

    கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கார் ரேஸில் ஆர்வம் காட்டத் தொடங்கிய அஜித், Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship போன்ற பந்தயங்களில் பங்கேற்றார்.

    2003-ல், அவர் MRF Racing Series-ல் பங்கேற்று, தனது முதல் பந்தய அனுபவத்தைப் பெற்றார்.

    2010-ல், அஜித் குமார் FIA Formula Two Championship பந்தயத்தில் பங்கேற்றார். சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரான இதில், அவர் பல ஐரோப்பிய பந்தயங்களில் போட்டியிட்டார்.

    கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கிள் தீவிரம் காட்டி வரும் அஜித், பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகையை சூடி வருகிறார்.

    இதற்கிடைய, அஜித் தனது சொந்த பந்தய அணியான Ajith Kumar Racing ஐ உருவாக்கினார். இந்த அணி மூலம் அவர் பந்தயங்களில் பங்கேற்றதோடு, இளம் பந்தய வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் AjithKumarRacing என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் தொடர்புடைய பிற உள்ளடக்கங்கள் பகிரப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்த சேனல் மூலம் அஜித் குமார் தனது ரேசிங் ஆர்வத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அஜித் குமாரின் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரங்களில் 17 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

    அஜித் குமாரின்  அதிகாரப்பூர்வ யூடியூட் சேனலுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

    • அயர்டன் சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தய வீரர் ஆவார்.
    • பார்முலா 1 வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியான "குட் பேட் அக்லி" படம் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகராக இருக்கும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. இந்தாண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. மேலும், இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

    அதனை தொடர்ந்து, ஐரோப்பாவில் ஜிடி-4 கார் பந்தயம் நடைபெற்று வரும் நிலையில் அதில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற பார்முலா 1 கார் பந்தய வீரரான அயர்டன் சென்னா சிலையின் காலில் நடிகர் அஜித் குமார் முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அயர்டன் சென்னா பிரேசில் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பார்முலா 1 கார்பந்தய வீரர் ஆவார். இவர் 1988, 1990, 1991 ஆண்டுகளில் மெக்லாரன் அணிக்காக பார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வென்றார். பார்முலா 1 வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

    இவர் 1994 மே 1 அன்று சான் மரினோ கிராண்ட் ப்ரீயில் (இமோலா) வில்லியம்ஸ் அணிக்காகப் பந்தயத்தில் ஈடுபட்டபோது, தாம்புரெல்லோ வளைவில் விபத்துக்குள்ளாகி (34 வயது) உயிரிழந்தார். இவரது மரணம் பார்முலா 1 பாதுகாப்பு விதிகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

    சென்னாவின் ஆர்வம், திறமை, மற்றும் மனிதாபிமான செயல்கள் (குறிப்பாக பிரேசிலில் ஏழைகளுக்கு உதவியது) அவரை உலகளவில் புகழ்பெறச் செய்தன. அவரது நினைவாக பிரேசிலில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக "சென்னா நிறுவனம்" இயங்குகிறது.

    • டார்க் சர்க்யூட்டில் கார் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜித் பந்தயத்தில் பங்கேற்றார்.
    • இந்த விபத்தில் நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    டயர் வெடித்ததை அடுத்து அவரது கார் பந்தய டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டது.

    டயர் மாற்றப்பட்ட பிறகு மீண்டும் அஜித் போட்டியில் தொடர்ந்து பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், டார்க் சர்க்யூட்டில் கார் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் நடிகர் அஜித் பந்தயத்தில் பங்கேற்றார்.

    இந்த விபத்தில் நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சமீப காலமாக அஜித் சர்வதேச கார் பந்தயங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
    • சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார், சினிமாவை தொடர்ந்து கார் பந்தயத்திலும் கலக்கி வருகிறார்.

    அதன்படி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.

    அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது.

    இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

    • இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
    • இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    'பார்முலா 1' கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலிய கிராண்ட் பிரீ மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது.

    இதில் மெக்லரன் அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லாண்டோ நோரிஸ் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 42.06 நிமிடங்களில் கடந்தார்.

    நெதர்லாந்தை சேர்ந்த வெர்ஸ்டாப்பர்ன் (ரெட்புல்) 2-வது இடத்தையும், இங்கிலாந்து வீரர் ஜார்ஜ் ரஸ்சல் (மெர்சிடஸ்) 3-வது இடத் தையும் பிடித்தார்.

    பார்முலா 1' கார் பந்தயத்தின் 2-வது சுற்று சீனா கிராண்ட் பிரீ வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

    • அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
    • மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    * கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?

    * மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?

    * கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

    * அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது

    * மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    * கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.

    * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?

    * சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.

    * பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
    • சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

    இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.

    இந்திய ரேசிங் திருவிழா 2024 போட்டிகள் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த கார் பந்தய திருவிழா இந்தியன் ரேசிங் லீக் (ஐஆர்எல்) மற்றும் பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் (எஃப் 4 ஐசி) ஆகிய இரண்டு சாம்பியன்ஷிப்களை உள்ளடக்கியதாகும்.

    இந்த போட்டியில் கொல்கத்தா ராயல் டைகர்ஸ் எனும் அணி அறிமுகமாகிறது. இந்த அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியுடன் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கோவா, கொச்சி, அகமதாபாத் என மொத்தம் 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

    இந்திய பந்தய விழா, ரேசிங் புரமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கியது. இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார்ஸ்போர்ட் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
    • சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர்-வண்டலூர் இடையே 62 கி.மீட்டர் தூரத்திற்கு 400 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரேஸ், அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வாகன ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே கார் பந்தயம் நடந்த வீடியோ காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி கொடிகளுடன் 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சீறிப்பாய்கின்றன.

     காரின் மேல் பகுதியை திறந்து காருக்குள் நின்றபடி வாலிபர்கள் தங்களது செல் போன்களில் கார் பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.

    இந்த வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
    • கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, முத்திரைக் கட்டண உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, வாகனக் கட்டண உயர்வு, கட்டிட அனுமதிக் கட்டண உயர்வு என பல்வேறு இன்னல்களுக்கு தமிழக மக்கள் ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயத்தை நடத்தப் போவதாக தி.மு.க. அரசு அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்."

    "தமிழ்நாட்டினுடைய கடன் 8 லட்சத்து 33 ஆயிரத்து 362 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறை 1 லட்சத்து 8 ஆயிரத்து 690 கோடி ரூபாயாகவும், வருவாய்ப் பற்றாக்குறை 49,279 கோடி ரூபாயாகவும் இருக்கின்ற நிலையில், இந்தக் கார் பந்தயத்தை நடத்த வேண்டியது அவசியம் தானா என்பதை தி.மு.க. அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்."

    "சென்னையில் கார் பந்தயம் நடத்தப்படுவதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனவே, இந்தக் கார் பந்தயம் திட்டத்தை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்," என்று கூறி உள்ளார்.

    • F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
    • சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

    சென்னை:

    சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

    F4 கார் பந்தயத்தை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

    சனிக்கிழமை காலையில் கார் பந்தயத்தை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

    சனிக்கிழமை மதியத்திற்கு மேல் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும், இரவு 10.30 மணிவரை கார் பந்தய போட்டிகள் நடைபெறும்.

    போக்குவரத்துக்கு எந்தவிட இடையூறும் ஏற்படாத வகையில் கார் பந்தயம் நடத்தப்படும் என்று கூறினார்.

    ×