என் மலர்
நீங்கள் தேடியது "Viral Video"
- காரை பின்னால் கொண்டு வருவதற்கு இடையூறாக கேட் இருக்கிறது.
- வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டி பதிவிட்டனர்.
அமெரிக்காவில் உள்ள உட்டா நகரில் ரெயில்வே கேட் வழியாக வாகனங்கள் சாதாரணமாக சென்று வந்தன. சம்பவத்தன்று ரெயில் பாதையில் வாகனங்கள் கடந்து சென்று கொண்டிருந்தன. அப்போது ரெயில் வந்த நிலையில், அவ்வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது என கேட் போடப்பட்டது.
இதை கவனிக்காமல் கார் டிரைவர் ஒருவர் ரெயில்வே கேட்டுக்குள் சென்றுவிட்டார். இதனால் அவரது கார் கேட்டுக்குள் சிக்கிய நிலையில், டிரைவர் அதில் இருந்து காரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். ஆனால் காரை பின்னால் கொண்டு வருவதற்கு இடையூறாக கேட் இருக்கிறது.
இந்நிலையில் ஹாரன் ஒலித்தபடியே ரெயில் வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த கார் டிரைவர் விரைவாக செயல்பட்டு காரில் இருந்து கீழே இறங்கி ஓடினார். பின்னர் அந்த தடத்தில் வேகமாக சென்ற ரெயில் கார் மீது மோதியது. இதில் கார் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. துரித நேரத்தில் இறங்கி ஓடியதால் டிரைவர் சாமர்த்தியமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவங்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டி பதிவிட்டனர்.
- புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர்.
- விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.
சீனாவில் உள்ள மிருக காட்சி சாலை ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டிகளுக்கு புலிகள் போலவும், பாண்டா கரடிகள் போலவும் பெயிண்ட் அடிக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வந்தன.
இந்நிலையில் தற்போது அங்கு ஷான்டான் மாகாணத்தில் உள்ள ஒரு பொழுது போக்கு பூங்காவில் கழுதைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போல தோற்றமளிக்கும் வகையில் மாற்றி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பூங்கா ஊழியர்கள் கூறுகையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், அவர்களை ஈர்க்கும் வகையிலும் இவ்வாறு கழுதைகள் மீது ஓவியங்கள் வரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கடும் பனிப்பொழிவு காரணமாக விலங்குகள் பாதிக்கப்படாத வகையில் இவ்வாறு வர்ணம் பூசப்பட்டதாக கூறப்படுகிறது.
புகைப்படங்கள் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டனர். விலங்குகளுக்கு இவ்வாறு பெயிண்ட் அடிப்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர். சில பயனர்கள், வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பதிவிட்டனர்.
- AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயிலில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
- டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் கட்டணம் செலுத்தாமல் நிலையத்தின் வெளியேறும் AFC (தானியங்கி கட்டண வசூல்) வாயில் கதவில் ஏறி குதிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மெட்ரோ நிலையத்தின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம்(DMRC) விளக்கம் அளித்துள்ளது.
அதன் விளக்கத்தில், இந்த வீடியோ பிப்ரவரி 13 அன்று ஜமா மசூதி மெட்ரோ நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டது.
பிப்ரவரி 13 ஆம் தேதி மாலையில், ஜமா மசூதி மெட்ரோ நிலையத்தில் பயணிகளின் கூட்டம் திடீரென அதிகரித்ததால் சிலர் வெளியேறும் வாயிலில் குதித்து கடக்க முயன்றனர்.
Jama Masjid Metro Station in Delhi ?pic.twitter.com/p3MhHqo9an
— राहुल (@rahulpassi) February 15, 2025
இதனால் அங்கு பயணிகளிடையே தற்காலிகமான சலசலப்பு நிலவியது. அவர்களை சமாளிக்க பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் போதுமான அளவு இருந்தனர்.
நிலைமை ஒருபோதும் கட்டுப்பாட்டை மீறவில்லை. வாயில்களில் திடீரென ஏற்பட்ட நெரிசல் காரணமாக சில பயணிகளின் தற்காலிக எதிர்வினையே இது. விரைவில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார்.
- வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
அண்டை நாடான பூடான் நாட்டின் பணமான குல்ட்ரம் மதிப்பும் நம் நாட்டு ரூபாயின் மதிப்பும் ஒரே மதிப்பு கொண்டதாக உள்ளது. டெல்லியை சேர்ந்தவர் அர்பாஸ்கான். வௌியூர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இணைய தளத்தில் இவரை 5 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அர்பாஸ்கான் அண்டை நாடான பூடானுக்கு சுற்றி பார்க்க சென்றார். அப்போது நம் நாட்டில் உள்ள பெட்ரோல் பங்க்குகளை நிர்வகிக்கும் பாரத் மற்றும் இன்டேன் நிறுவனங்களின் பங்க்குகள் இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து அங்கு விற்கப்படும் பெட்ரோல் விலை குறித்து அறிய ஆர்வம் கொண்டார்.
பெட்ரோல் வினியோகிக்கப்படும் எந்திரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விலையை அவர் சரிபார்த்தார். அப்போது அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 63.92 என தெரிந்துள்ளது. இந்தியாவில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100 ரூபாய்க்கு விற்கப்படுவதை காட்டிலும் பூடானில் 37 ரூபாய்வரை குறைவாக விற்கப்படுவதை அவர் சுட்டிகாட்டினார். இந்த வீடியோ 2 நாளில் 63 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை கண்டித்து பதிவிட்டனர்.
- எதிர்மறையான கருத்துக்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.
இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மாடியில் உயரத்தில் நின்று மற்றொரு கையால் வீடியோ பதிவு செய்வது போன்ற ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியது. வர்ஷா யதுவன்ஷி தன்வா என்ற பயனர் பதிவிட்ட இந்த வீடியோவில், நான் உலகை ஆராய்ந்து என் அன்புக்குரிய அம்மாவுடன் வைட்டமின் டி எடுத்துக்கொள்ளும் துணிச்சலான பையன் என்று தலைப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இளம்பெண் ஒரு மாடியின் விளிம்பில் அமர்ந்திருக்கிறார். அவரது மடியில் அமர்ந்திருக்கும் கைக்குழந்தையை ஒரு கையால் பிடித்துள்ளார்.
மற்றொரு கையால் வீடியோ பதிவு செய்கிறார். அந்த வீடியோவில் மாடிக்கும், கீழே உள்ள சாலைக்கும் இடையில் உள்ள குறிப்பிடத்தக்க உயரத்தை காட்டுவது போன்று காட்சி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணின் செயலை கண்டித்து பதிவிட்டனர். ஒரு பயனர், தயவு செய்து இதுபோன்ற ஆபத்தான வீடியோக்களை உருவாக்க வேண்டாம் என பதிவிட்டார். மற்றொரு பயனர், இந்த மாதிரியான முட்டாள் தனத்தை செய்யாதீர்கள் என பதிவிட்டார்.
இதுபோன்று பயனர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்ட நிலையில் அந்த பெண் மற்றொரு வீடியோவை பதிவிட்டார். அதில், தயவு செய்து வீடியோவை சரியாக பார்த்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை என்றால் எனக்கு கவலை இல்லை. எனது குழந்தையை எப்படி வளர்ப்பது என்று எனக்கு தெரியும். எதிர்மறையான கருத்துக்களை பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று கூறியிருந்தார்.
- வீடியோ 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் சில வீடியோக்கள் நகைச்சுவையாக இருக்கும். அந்த வகையில் தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில் மணமகன் ஒருவர் சாலையில் ஓடி செல்லும் காட்சிகள் உள்ளது. அவர் திருமணத்திற்கு சென்ற கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளது. இதனால் வெகுநேரமாகியும் கார் அங்கிருந்து நகர முடியாத நிலை காணப்பட்டது.
திருமணத்திற்கான நேரமும் நெருங்கிய நிலையில் மாப்பிள்ளை வேறு வழியில்லாமல் திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக சாலையில் இறங்கி ஓடியுள்ளார். இதனை அவருக்கு பின்னால் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோ 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
ஒரு பயனர், நான் இந்த நபர் மாப்பிள்ளை உடையில் ஏதோ திருடி செல்கிறாரோ அல்லது ஏதேனும் சம்பவத்தில் சிக்கி கொண்டாரோ என நினைத்தேன். அதன் பிறகு தான் அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது தெரியவந்தது என பதிவிட்டார். மற்றொரு பயனர், திருமணத்திற்காகவா இவ்வாறு வேகமாக செல்கிறார். திருமணத்திற்கு பிறகு அவரால் எங்கும் ஓட முடியாது என கேலியாக பதிவிட்டார்.
- வீடியோ எடுத்து காதலர் தின சப்பாத்தி என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டார்.
- வீடியோ இதுவரை சுமார் 70 லட்சம் பேரின் பார்வையை பெற்று வைரலாகியது.
உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போது காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி தங்களது அன்பை வெளிப்படுத்துவர். இந்த பரிசுகள் அவர்களது உறவை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் அமையும். இந்த பரிசுகளில் காதலின் சின்னமாக கருதப்படும் இதயத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
ஒரு பெண் தனது கணவருக்கு சப்பாத்தி சுட்டு கொடுத்தார். அதனை எப்போதும் போல செய்யாமல் சற்று வித்தியாசமாக தனது காதலர் தின பரிசாக வழங்கி உள்ளார். ஆனால் அந்த சப்பாத்தியின் நடுவே இதயம் போல சிறுதுண்டுகள் இருந்தன. மேலும் அதனை வீடியோ எடுத்து காதலர் தின சப்பாத்தி என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டார்.
இந்த வீடியோ இதுவரை சுமார் 70 லட்சம் பேரின் பார்வையை பெற்று வைரலாகியது.
- ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
- அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
பொதுவாக ஆடம்பர பொருட்கள் மீது சாமானியர்களுக்கு அலாதி ஆசை உண்டு. ஆனால் அவற்றின் அதிக விலை காரணமாக அந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறுவது இல்லை. இதற்கு விதிவிலக்காக சிலர் தங்களது புத்திசாலித்தனம் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
அதேசமயம் அவர்களது தனித்துவமான அந்த செயல் மற்றவர்களையும் ஈர்க்கிறது. அந்தவகையில் பாகிஸ்தானின் சாலையில் சென்ற ஒரு சொகுசு கார் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதாவது சிவப்பு நிறமுள்ள அந்த காரின் பின்புறத்தை பார்க்கும் எவரும் அதனை விலையுயர்ந்த கார் என்றே நினைப்பார்கள். ஆனால் அதன் முன்புறமோ மோட்டார் சைக்கிள் மூலம் பொருத்தப்பட்டு அந்த கார் இயங்கியது.
இதனை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அந்த நபரின் புத்திசாலித்தனத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
- சம்பவம் ஷெல்டன் மெக்பார்லேன் தனது ஹெல்மெட்டில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
- வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் பயிற்சியாளரை பாராட்டி பதிவிட்டனர்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். 'ஸ்கை- டைவிங்' சாகசங்களில் ஈடுபடும் இவர் 4 ஆயிரம் அடி உயரத்தில் 'ஸ்கை- டைவிங்' சாகசம் செய்து காற்றில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பாதியிலேயே வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையை நோக்கி சென்றார்.
இதை அவரது பயிற்சியாளரான ஷெல்டன் மெக்பார்லேன் என்பவர் கவனித்தார். உடனடியாக அவர் பாராசூட் ரிப் கார்டை பிடித்து இழுத்து கிறிஸ்டோபர் ஜோன்சை மீண்டும் சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். இதன் பயனாக கிறிஸ்டோபரை காப்பாற்ற முடிந்தது. இந்த சம்பவம் ஷெல்டன் மெக்பார்லேன் தனது ஹெல்மெட்டில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் பயிற்சியாளரை பாராட்டி பதிவிட்டனர்.
- மனதை தொடும் வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் பாசம், அன்பு என்பது வெறும் சொல்லாகவே உள்ளதாக பெரும்பாலானோர் உணர்கின்றனர். ஒருவர் காட்டும் பாசத்தை புறந்தள்ளும் சம்பவங்களே இன்றைய சமூகத்தில் அதிகமாக நடைபெறுவதாக பலர் வேதனையில் உள்ளனர். ஆறறிவு மனிதர்கள் தான் இப்படி... ஐந்தறிவு உள்ள விலங்குகள் அப்படி இல்லை என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் உணர்த்தியுள்ளன. அப்படி தற்போது பகிரப்படும் வீடியோ தான் பார்ப்பவர்களை உணர்ச்சியில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
27 வினாடிகளே ஓடும் வீடியோவில் யானை ஒன்று மருத்துவமனை வாசலில் நிற்கிறது. பிறகு, அறையின் உயரம் குறைவாக உள்ளதை உணர்ந்த யானையானது மெதுவாக குனிந்து அடிமேல் அடி வைத்து ஊர்ந்து தன்னை வளர்த்த முதியவரிடம் சென்று அதன் தும்பிக்கையை நீட்டி அவர் மீது போர்த்தியிருக்கும் துணியை விலக்குகிறது. அதன்பின் அங்கு இருக்கும் பெண் ஒருவர் யானையின் தும்பிக்கையை தூக்கி முதியவரின் கையோடு இணைக்கிறார்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த மனதை தொடும் வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டது. மேலும் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர் 'இது அன்பின் தூய்மையான வடிவம்... விலங்குகள் தங்களைப் பராமரித்தவர்களை ஒருபோதும் மறக்காது' என்றும் மற்றொருவர் "காதலுக்கு எல்லைகள் இல்லை என்பதற்கு இந்த வீடியோ சான்றாகும். இதுதான் மிகவும் அழகான, மனதைத் தொடும் காட்சி" என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
Elephant brought to hospital to say goodbye to his terminally ill caretaker. ?? pic.twitter.com/TKSNS6vy88
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) February 6, 2025
- யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது.
- யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
யானையும்- ஜே.சி.பி. எந்திரமும் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.
மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி மாவட்டம் டாம்டிம் பகுதியில் ஒரு காட்டு யானை உணவு தேடி ஊர்ப்புறத்துக்கு வந்துவிட்டது. இதையடுத்து கிராம மக்கள் யானையை துரத்த ஆரம்பித்தனர். கம்பு- குச்சிகளுடன் கூச்சல் போட்டால் மட்டும் யானையை விரட்ட முடியாது என நினைத்த ஒருவர், ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் யானையை விரட்ட முயற்சிக்கிறார்.
அப்போது யானை ஆத்திரம் அடைந்து ஜே.சி.பி. எந்திரத்துடன் மோதுகிறது. தன் பலத்தால் ஜே.சி.பி.யை அந்தரத்திற்கு உயர்த்துகிறது. இருந்த போதிலும் ஜே.சி.பி. டிரைவர், எந்திரத்தின் பின்பக்க தோண்டும் பகுதியை தரையில் பதித்து ஜே.சி.பி.யை கவிழ்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டு யானையுடன் சாதுரியமாக மோதுகிறார். யானை மிரண்டு ஓடியபோதும் அதை துரத்துகிறார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் விவாதத்தை தூண்டியது. 'வனவிலங்கை இப்படி துன்புறுத்துவதா?' என்று பலரும் கண்டன பதிவுகளை வெளியிட்டனர். போலீசார் விசாரணை நடத்தி ஜே.சி.பி. டிரைவரை கைது செய்து உள்ளனர்.
In India they fight Elephants with JCB Diggers pic.twitter.com/G7HxcZCJJo
— Concerned Citizen (@BGatesIsaPyscho) February 5, 2025
- காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர்.
- வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் தங்கள் பிறந்தநாளை வித்தியாசமாகவும், விமர்சையாகவும் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அன்ஷூ சவுகான் என்ற பயனர் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், இளைஞர்கள் தெருநாய்க்கு பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய காட்சிகள் உள்ளது. அதில், இளைஞர்கள் ஒரு காரில் தெருநாய் ஒன்றுக்கு மலர் மாலைகள் அணிவித்து கொண்டு வருகின்றனர். பின்னர் காரின் பேனட் மீது நாயை அமர வைத்து அதன் முன்பு கேக் வைத்து வெட்டுகின்றனர். அந்த காரை பின்தொடர்ந்து மற்றொரு காரில் ஆரவாரம் செய்து வந்த வாலிபர்களும் அவர்களுடன் சேர்ந்து தெருநாயின் பிறந்தநாளை பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடுகின்றனர்.
மேலும் தெருநாய் மீது மலர்களையும் தூவுகின்றனர். வீடியோ முடிவில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளை மக்கள் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி 1.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் மற்றும் கருத்துக்களை பெற்றது. ஒரு பயனர், இது பார்க்க அழகாக இருக்கிறது. ஆனால் கேக்குகள் மற்றும் இனிப்புகள் நாய்களுக்கு நல்லதல்ல. தயவு செய்து கவனமாக இருங்கள் என பதிவிட்டிருந்தார்.