என் மலர்
விளையாட்டு
- பீகார் அணியில் சூர்யவன்ஷி, சகிபுல் கனி சதம் விளாசினர்.
- ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் சதம் விளாசினார்.
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதன் 'எலைட்' வகைப்பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் 3 இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தின் மூலம் அதிவேக சதம் அடித்து பல சாதனைகளை குவித்து வருகின்றனர். பிளேட் வகைப்பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியை சேர்ந்த இளம் வீரர் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் அவர் இடம் பிடித்தார்.
இதே போட்டியில் பீகார் அணியின் கேப்டன் சகிபுல் கனி 32 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் வைபவ் சாதனையை சகிபுல் முறியடித்தார்.
எலைட் வகைப்பிரிவில் கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 33 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ஒரு இந்தியரின் வேகமான லிஸ்ட் ஏ சதங்கள்:
32 பந்துகள்: சகிபுல் கனி (பீகார்)
33 பந்துகள்: இஷான் கிஷன் (ஜார்க்கண்ட்)
35 பந்துகள்: அன்மோல்பிரீத் சிங் (பஞ்சாப்)
36 பந்துகள்: வைபவ் சூர்யவன்ஷி (பீகார்)
40 பந்துகள்: யூசுப் பதான் (பரோடா)
41 பந்துகள்: உர்வில் படேல் (குஜராத்)
42 பந்துகள்: அபிஷேக் சர்மா (பஞ்சாப்)
முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர்கள்:-
29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்
32 பந்துகள்: சகிபுல் கனி
33 பந்துகள்: இஷான் கிஷன்
35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்
36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்
36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி
- விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பீகார்- அருணாச்சல பிரதேசம் அணி விளையாடி வருகிறது.
- முதல் பேட்டிங் செய்த பீகார் அணியில் 3 பேர் சதம் விளாசினர்
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற பீகார் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணியில் சூர்யவன்ஷி 190, சகிபுல் கனி 128, ஆயுஷ் லோஹருகா 116, பியூஷ் சிங் 77 ரன்கள் விளாசியுள்ளனர்.
இதனால் பீகார் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 574 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 50 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை பீகார் அணி படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அணி 506 ரன்களை குவித்தது. அதுவே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது. இன்று அந்த வரலாற்று சாதனையை பீகார் அணி முறியடித்துள்ளது.
- ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி தொடங்குகிறது.
- 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி விட்டது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பேட்டர்களில் ஒல்லி போப்-க்கு பதிலாக பெத்தேல் அணியில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் பந்து வீச்சாளர்களில் காயம் காரணமாக ஆர்ச்சர் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கஸ் அட்கின்சன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து ஆடும் லெவன்:-
க்ராலி, பென் டக்கெட், பெத்தேல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், கார்ஸ், ஜோஸ் டங்.
- சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் விளாசினார்.
- லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 'பிளேட்' வகைப்பிரிவில் இன்று பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடினார்.
எப்போதும் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் 36 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இரட்டை சதத்தை தவறவிட்டாலும் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
சதம் அடித்ததன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர்கள்:-
வைபவ் சூர்யவன்ஷி - 14 ஆண்டுகள் 272 நாட்கள் (2025)
ஜஹூர் இலாஹி - 15 ஆண்டுகள் 209 நாட்கள் (1986)
ரியாஸ் ஹாசன் - 16 ஆண்டுகள் 9 நாட்கள் (2018)
மேலும் 36 பந்தில் சதம் விளாசியதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்துள்ளார். முதல் இடத்தில் அன்மோல்ப்ரீத் சிங் 35 பந்தில் அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிராக கடந்த 2024-ம் ஆண்டில் அடித்திருந்தார்.
இந்தியர்களின் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதத்தின் பட்டியல்:
35 - அன்மோல்ப்ரீத் சிங், பஞ்சாப் vs அருணாச்சல பிரதேசம், 2024
36 - வைபவ் சூரியவன்ஷி, பீகார் vs அருணாச்சல பிரதேசம், இன்று
40 - யூசுப் பதான், பரோடா vs மகாராஷ்டிரா, 2010
41 - உர்வில் படேல், குஜராத் vs அருணாச்சல பிரதேசம், 2023
42 - அபிஷேக் சர்மா, பஞ்சாப் vs மத்திய பிரதேசம், 2021
ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37 பந்துகளில் ஷாஹித் அப்ரிடி சதம் அடித்திருந்தார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம்
29 பந்துகள் - ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க்
31 பந்துகள் - ஏபி டி வில்லியர்ஸ்
35 பந்துகள் - அன்மோல்பிரீத் சிங்
36 பந்துகள் - கோரி ஆண்டர்சன்
36 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி
37 பந்துகள் - ஷாஹித் அப்ரிடி
குறைந்த பந்தில் அதிவேக 150 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர்கள்:-
59 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs அருணாச்சல பிரதேசம் (2025)
64 பந்துகள் - ஏபி டிவில்லியர்ஸ் vs மேற்கிந்திய தீவுகள் (2015)
65 பந்துகள் - ஜோஸ் பட்லர் vs நெதர்லாந்து (2022)
- வைபவ் சூர்யவன்ஷி 84 பந்தில் 190 ரன்கள் விளாசியுள்ளார்.
- இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.
33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
'பிளேட்' வகைப்பிரிவில் நாகாலாந்து, பீகார், மிசோரம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்றன. அவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு எலைட் வகைப் பிரிவுக்கு ஏற்றம் பெறும். எலைட் பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்படும் அணி அடுத்த ஆண்டு பிளேட் வகைப்பிரிவுக்கு தரம் இறக்கப்படும்.
இந்நிலையில் இந்த பிரிவில் பீகார் - அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பீகார் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்று தொடக்க வீரராக விளையாடி வருகிறார்.
இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த வைபவ், இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 190 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 10 ரன்னில் தனது இரட்டை சதத்தை வைபவ் தவறவிட்டார். அவர் 84 பந்தில் 190 ரன்கள் விளாசினார். இதில் 16 பவுண்டரிகளும் 15 சிக்சர்களும் அடங்கும்.
இதற்கு முன்பு u19 ஆசிய கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் 171 ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் தொடருக்கு பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- டி20 அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி முடிவடைகிறது. அதனை தொடர்ந்து டி20 தொடர் ஜனவரி 21-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கு பிரேஸ்வெல் கேப்டனாகவும் டி20 அணிக்கு மிட்செல் சான்ட்னர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருநாள் போட்டி:
பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், கான்வே, ஃபௌல்க்ஸ், மிட்ச் ஹே, ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
டி20 போட்டி:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பிரேஸ்வெல், சாப்மேன், கான்வே, டஃபி, ஃபௌல்க்ஸ், மேட் ஹென்றி, ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், நீசம், பிலிப்ஸ், ரச்சின், டிம் ராபின்சன், சோதி
- கம்போடியா அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- பிரியந்தனா ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
பாலி:
இந்தோனேசியா, கம்போடியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி பாலி நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற கம்போடியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தோனேசிய அணி 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கம்போடியா அணி 15 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
16 வது ஓவரை கெடே பிரியந்தனா வீசினார். அந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். 4 வது பந்தில் விக்கெட் வீழ்த்தவில்லை. 5வது மற்றும் 6வது பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தோனேசியா அணியை வெற்றி பெற செய்தார்.
கெடே பிரியந்தனா ஒரு ஓவரில் ஒரு ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை கெடே பிரியந்தனா படைத்தார்.
ஏற்கனவே, நட்சத்திர பந்துவீச்சாளர்களான மலிங்கா , ரஷீத் கான் ஆகியோர் ஒரு ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தியிருந்த நிலையில், கெடே பிரியந்தனா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
- ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா.
- டெல்லியில் பிரதமர் மோடியை நீரஜ் சோப்ரா, அவரது மனைவி ஆகியோர் சந்தித்தனர்.
புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் (கவுரவ) ஆகவும் உள்ளார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை நீரஜ் சோபரா, தனது குடும்பத்துடன் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை லோக் கல்யாண் மார்க்கில் நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியை கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, 129 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 34 பந்தில் 69 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
- புகை பிடித்தல் பழக்கம் இல்லாத போதிலும் நுரையீரல் புற்றுநோயால் காலமானார்.
- அவர் நினைவாக அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ். இவர் தலைசிறந்த இடது கை பேட்ஸ்மேன்களில் ஒருவர். இவரது மனைவி ரூத். இவர் நுரையீரல் புற்று நோய் பாதிப்பால் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு 46 வயது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் மனைவி இறந்து 7 ஆண்டுகள் கழித்த நிலையில், தற்போது ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அண்டோனியா லின்னேயஸ்-பீட் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றுள்ளது. இதனை ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
மனைவி மறைந்த பின்னர் அவர் நினைவாக புகைப் பிடிக்காமல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ரூத் ஸ்ட்ராஸ் பவுன்டேசன் என்ற அறக்கட்டளையை தொடங்கினார்.
- இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.
- இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் அறிவிக்கப்பட்டார். டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மெக் லானிங் ஏலத்தில் UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்ட நிலையில், டெல்லியால் தக்கவைக்கப்பட்ட ஜெமிமா கேப்டனாக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜெமிமா,
"டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய பெருமை. அணியை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்த உரிமையாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையை வென்றது, இப்போது, WPL-இன் முதல் சீசனிலிருந்தே என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கும் இந்த அணியில் இந்த அற்புதமான வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது என, இது எனக்கும், என் குடும்பத்திற்கும் உண்மையிலேயே ஒரு கனவு ஆண்டாக அமைந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த அணி எனது குடும்பம். பழைய வீரர்களை மிஸ் செய்வேன். அதே நேரத்தில் பழக்கமான முகங்கள் மற்றும் புதிய வீரர்களுடன் புதிய நினைவுகளை உருவாக்குவதில் நான் உற்சாகமாக இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இதுவரை விளையாடிய 27 போட்டிகளில் 139.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 507 ரன்கள் குவித்துள்ளார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். மேலும் முதல் மூன்று சீசன்களிலும் அணியின் துணைத்தலைவராக ஜெமிமா செயல்பட்டார்.
- ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
- தீப்தி சர்மா தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. சிறந்த வீராங்கனைகள், அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கான டி20 கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளது.
இவர் தரவரிசைக்கான 737 புள்ளிகளை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை சுதர்லேண்டு 736 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
பாகிஸ்தான் வீராங்கனை சதியா இக்பால் 732 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை ரேணுகா சிங் தாகூர் 3 இடங்களை சரிந்து 14-வது இடத்தில் உள்ளார். ராதா யாதவ் 15-வது இடத்தில் உள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஜெர்மையா ரோட்ரிக்ஸ் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா 1 இடம் பின்தங்கி 10-வது இடத்தில் உள்ளார்.
ஹர்மன்ப்ரீத் கவுர் 15-வது இடத்தில் உள்ளார்.






