என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா"

    • அதிபர் டிரம்ப் 60 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • காசா அமைதிக் குழுவிற்கு அமெரிக்க அதிபர் தலைமை வகிப்பார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முயற்சியால் காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ளார். இந்தக் குழுவில் இடம் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், காசா அமைதிக்கான குழுவில் இடம்பெறுமாறு இந்தியாவுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

    துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி குழுவில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

    • 124 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
    • முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் இருந்தன. இந்நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

    தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் 11 ரன்களில் ரோகித் சர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், 3 ரன்னில் ஷ்ரேயஸ் அய்யர், 1 ரன்னில் கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 71 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 



    ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிலையாக நின்று விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு அவருடன் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. விராட் கோலி 51 பந்தில் அரைசதம் அடிக்க, நிதிஷ் ரெட்டி 52 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து நிதிஷும் அவுட்டாக, அடுத்து வந்த ஜடேஜாவும் அவுட்டானார். இதனால் இந்திய அணி எளிதில் தோல்வியை தழுவும் என அனைவரும் நினைத்தநிலையில், ஹர்ஷித் ராணா ஆட்டத்தை மாற்றினார். 

    சரிவைசென்ற அணியை கோலி-ராணா இணை மீட்டது. கோலி சதம் விளாசினார். ஹர்ஷித் ராணா அரைசதம் கடந்தார். ஆனால் ஃபுல் டாசில் 52 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து குல்தீப் யாதவ் களமிறங்கினார். மறுபக்கம் 124 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து அர்ஷ்தீப் சிங் களமிறங்க, மறுபக்கம் ரன் அவுட் ஆனார் குல்தீப். இதனால் இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றிப் பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஜகரி ஃபோக்ஸ், கிறிஸ் கிளார்க் தலா 3 விக்கெட்டுகளையும், ஜேடன் லெனாக்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் முதல்முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.

    • நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது.
    • 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துநிலையில் இரண்டு அணிகளும் தலா 1 புள்ளிகளை பெற்று சமனில் உள்ளன. இந்நிலையில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களின்முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 137 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 106 ரன்களும் அடித்து அதிக ரன்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

    தொடர்ந்து 338 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்து வருகிறது. 11 ரன்களில் ரோஹித் ஷர்மா, 23 ரன்களில் கேப்டன் கில், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்தியா. மறுபக்கம் கோலி அவுட் ஆகாமல் விளையாடி வரும் நிலையில் அவருக்கு துணையாக நிதிஷ் குமார் களமிறங்கினார். ஆனால் 53 ரன்கள் குவித்து நன்றாக விளையாடி வந்த நிதிஷ் குமாரும் அவுட் ஆகினார். ஆனால் விராட் கோலி அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். தற்போது ஜடேஜா களமிறங்கியுள்ளார்.

    இந்த இணையாவது அணியை தொடர்ந்து வெற்றிப் பக்கத்திற்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

     

    • இந்தியாவில் AI ஆராய்ச்சிக்கான செலவு அமெரிக்காவை விட மிகவும் குறைவு.
    • இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் களமாக உள்ளது.

    OpenAI-ன் ChatGPT போன்ற தளங்கள் அமெரிக்காவிற்குள் இருந்தே இயங்கும் போது, அமெரிக்கப் பயனர்கள் இந்தியாவில் உள்ள AI சேவைகளுக்காக ஏன் 'பணம் செலுத்துகிறார்கள்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கேள்வி எழுப்பியுள்ளார்.

    "Real America Voice" நிகழ்ச்சியில் முன்னாள் வெள்ளை மாளிகை தலைமை உத்தி வகுப்பாளர் ஸ்டீவ் பேனனுடன் நடத்திய நேர்காணலில் பேசிய நவரோ, AI தளங்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு அங்கிருந்தே இயக்கப்படுகின்றன, ஆனால் அவை இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பயனர்களுக்குச் சேவை செய்கின்றன என்று வாதிட்டார்.

    அதாவது அமெரிக்காவின் வரிப்பணமும் முதலீடுகளும் அமெரிக்காவிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வர்த்தகம் சார்ந்த தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய அவர், "அமெரிக்கர்கள் ஏன் இந்தியாவில் இருக்கும் AI-க்காகப் பணம் செலுத்த வேண்டும்? ChatGPT அமெரிக்க மண்ணில் இயங்குகிறது, அமெரிக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, ஆனால் இந்தியா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளில் உள்ள பெரும் பயனர்களுக்குச் சேவை செய்கிறது. எனவே, இதுவும் கவனிக்கப்பட வேண்டிய (தீர்வு காணப்பட வேண்டிய) மற்றொரு பிரச்சனையாகும்," என்று நவரோ கூறினார். 

    பீட்டர் நவரோவின் இந்த விமர்சனத்திற்கு இந்திய தரப்பில் வலுவான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது இந்தியாவில் AI ஆராய்ச்சிக்கான செலவு அமெரிக்காவை விட மிகவும் குறைவு. மேலும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியப் பொறியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தரும் களமாக உள்ளது. இதனாலேயே பெரும்பாலான ஏஐ நிறுவனங்கள் இந்தியாவை குறிவைக்கின்றன. 

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    ஜார்ஜியா:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 49 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேச அணி சார்பில் அல் பஹத் 5 விக்கெட்டும், இக்பால் எமான், ஹக்கிம் தமிம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை மீண்டும் குறுக்கிட்டதால் வங்கதேச அணி 29 ஓவரில் 165 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.

    ஹக்கிம் தமிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ரிபாத் பெக் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்கதேச அணி 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டும், கிலான் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை விஹான் மல்கோத்ரா வென்றார்.

    • அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
    • இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7- ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாடும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் வீரர்களை தேர்வு செய்யவில்லை.

    இதற்கிடையே அந்த அணியில் உள்ள பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் அதில் ஆகிய 4 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விசா நிராகரிக்கப்பட்ட தகவலை அலிகான் காெணாலி செய்தியில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எங்களால் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதனால் அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்காவை தவிர இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடு களிலும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
    • இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.

    கடந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இந்தாண்டு பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், 2026ம் ஆண்டின் BRICS அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள இந்தியா, புதிய லோகோ மற்றும் பிரத்தியேக இணையதளத்தை அறிமுகம் செய்தது.

    தாமரை வடிவிலான இந்த லோகோ இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், 2016ல் வெளியிடப்பட்ட பழைய லோகோவை போலவே புதிய லோகோ அச்சு பிசகாமல் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    • சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
    • நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.

    போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

    இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

    போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் விராட் கோலி
    • நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.

    போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

    இந்திய தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களும், சுப்மன் கில் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் 49 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமிசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2வது போட்டி நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. 

    • வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
    • வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் முடங்கியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை மீட்டெடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் என டிரம்ப் அரசு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    • ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.
    • புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

    இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதற்காக ஒரு அமைதி திட்டத்தை உருவாக்கி உள்ள டிரம்ப், அதுகுறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் பேச ஸ்டீவ் விட்காப், தனது மருமகன் ஜேர்டு குஸ்னர் ஆகியோரை சிறப்பு தூதர்களாக நியமித்து உள்ளார்.

    ஒருபுறம் அமைதி திட்டத்தை முன்வைத்து வரும் டிரம்ப், மறுபுறம் போரை நிறுத்த மறுக்கும் ரஷியாவை வழிக்கு கொண்டு வர மறைமுக அழுத்தமும் கொடுத்து வருகிறார்.

    இதில் முக்கியமாக, உக்ரைனுடன் போரிட ரஷியாவிடம் பணம் இல்லாவிட்டால் போர் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். எனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.

    இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தாருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.

    ரஷியா பொருளாதார தடை மசோதா எனப்படும் இந்த மசோதாவுக்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து லிண்ட்சே கிரஹாம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    7-ந் தேதி, ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தோம். அதைத்தொடர்ந்து, ரஷிய பொருளாதார தடை மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டினார்.

    அந்த மசோதா மீது மற்றொரு செனட் உறுப்பினர் புளுமெந்தார் உள்ளிட்டோருடன் நான் பல மாதங்களாக பணியாற்றினேன்.

    ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும். அதற்கு ஜனாதிபதி டிரம்ப் சம்மட்டி அடியாக அந்த நாடுகள் மீது அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.

    இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    இந்த நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவுக்கு பணம் கிடைக்கிறது. எனவே, போரை நிறுத்துவதற்காக இம்மசோதா கொண்டுவரப்படுகிறது.

    அடுத்த வார தொடக்கத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

    அமைதியை ஏற்படுத்த உக்ரைன் சலுகை அளிக்கிறது. ஆனால், ரஷிய அதிபர் புதின் நிறைய பேசுகிறார். அப்பாவிகளை கொன்று வருகிறார். எனவே, புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா தன்னிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். அதனால், வரியை குறைக்கும்படி டிரம்பிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே டிரம்ப் விதித்த 25 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 500 சதவீத வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10-க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் சமீப காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாணவர் இயக்க தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறையில் இந்துக்களை குறிவைத்து தாக்கினர்.

    இதில் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார். அதன்பின், ராஜ்பாரி பகுதியைச் சேர்ந்த அம்ரித் மண்டல், மைமன்சிங் பகுதியைச் சேர்ந்த பிஜேந்திர பிஸ்வாஸ், கெர்பங்கா பகுதியைச் சேர்ந்த கோகோன் தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.

    இதனால் அதிருப்தி அடைந்த வங்கதேசம் டி 20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியாவுக்கு வர முடியாது என அறிவித்தது.

    இதற்கிடையே, வங்கதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதற்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான பதற்றம் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா, அகர்தலா ஆகிய தூதரக அலுவலகங்களில் விசா சேவையை நிறுத்தி வைப்பதாக வங்கதேச அரசு அறிவித்தது.

    இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், பாதுகாப்பு பிரச்சனையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தகம், வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு தடையில்லை என தெரிவித்தார்.

    ×