என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத பழைய சப்வே ரெயில் நிலையத்தில் பதவியேற்றார்.
    • டிரம்ப் இவரை 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்' என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் தெரிவித்தார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவரான 34 வயது ஜோஹ்ரான் மம்தானி அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க்கின் மேயராக இன்று பதவியேற்றார்.

    நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.

    புத்தாண்டு நாளான இன்று அதிகாலை (அமெரிக்க நேரப்படி), நியூயார்க் சிட்டி ஹால் கட்டிடத்திற்கு அடியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க பழைய சப்வே ரெயில் நிலையத்தில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.

    இந்தப் பதவியேற்பு விழாவின் போது அவர் அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருக்குர்ஆன் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

    நியூயார்க் மாநில அட்டர்னி ஜெனரல் லெட்டிட்டியா ஜேம்ஸ் இவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    "இது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" என்று பதவியேற்ற பிறகு மம்தானி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மம்தானி நியூயார்க் மேயராகப் பணியாற்றுவார்.

    தேர்தலின்போது டிரம்ப் இவரை 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்' என்றும் இவருக்கு வாக்களித்தால் நியூ யார்க் நகருக்கான நிதியை நிறுத்துவேன் எனவும் மக்களை மிரட்டி இருந்தார்.

    ஆனால் டிரம்ப் உடைய மிரட்டலை புறக்கணித்து நியூ யார்க் மக்கள் மம்தானியை தங்கள் தலைவராக தேர்வு செய்தனர். 

    • பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
    • இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் ஆயுத மோதல் ஏற்படும் என்று அமெரிக்க சிந்தனைக் குழு ஒன்று கணித்துள்ளது. கவுன்சில் ஆன் பாரின் ரிலேஷன்ஸ் அமைப்பு அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அதிகரித்த பயங்கரவாதச் செயல்பாடு காரணமாக 2026-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மீண்டும் தலைதூக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களால் 2026-ல் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுத மோதல் ஏற்படுவதற்கு மிதமான வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

    • தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர்.
    • இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.

    இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.

    சுற்றுலாவை முடித்து காரில் திரும்பியபோது மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த ராணி, புவனாவின் உடல்களை விரைந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
    • பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட அந்நாடு தடை விதித்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சிக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

    இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் அவாமி லீக் கட்சியினர் பங்குகொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஷேக் ஹசீனா கட்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக்குழு உறுப்பினர்கள் வங்கதேச பிரதமர் முகமது யூனுசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அதில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் தங்களுக்கு தேவையான அரசை அமைக்க வங்கதேச மக்களுக்கு உரிமை உள்ளது. அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.
    • கம்ப்யூட்டர் அடிப்படையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும்.

    அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை இந்தியர்கள் அதிகளவில் பெற்று பணியாற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில் எச்-1பி விசாவுக்கு கட்டுப்பாடுகளை விதித்தார். எச்1-பி விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.89 லட்சம்) கட்டணமாக வசூ லிக்கப்படும் என்று டிரம்ப் நிா்வாகம் அறிவித்தது.

    மேலும் விசா விண்ணப்பதாரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை ஆய்வு செய்வது போன்ற தீவிர கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்தநிலையில் எச்-1பி விசா நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச்-1பி விசா வழங்கப்படுகிறது.

    அந்த எண்ணிக்கையை தாண்டி அதிக விண்ணப்பம் வரும்போது குலுக்கல் முறை கடைபிடிக்கப்படும். கம்ப்யூட்டர் அடிப்படையிலான குலுக்கல் முறையில் விசா ஒதுக்கப்படும்.

    இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் குலுக்கல் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிக சம்பளம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை கூறியதாவது:-

    எச்-1பி குலுக்கல் முறை ரத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி முதல் அமலுக்கு வரும். தற்போதைய குலுக்கல் முறையில் பல முறைகேடுகள் நடக்கின்றன. பல நிறுவனங்கள் தகுதியற்ற வா்களைக் குறைந்த சம்பளத்தில் பணியமா்த்த இந்த முறையைத் தவறாகப் பயன்படுத்துகின்றன.

    புதிய முறையினால் போட்டித்தன்மை அதிகரிப்பதோடு, திறமையானவா்களுக்கு மட்டுமே விசா கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தது. மேலும் , இதுதொடா்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும் போது, அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்துக்கு வெளிநாட்டுப் பணியாளா்களைப் பணியமா்த்துவதன்மூலம், அமெரிக்கக் குடிமக்களின் வேலை வாய்ப்பும், ஊதிய உயா்வும் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்தது.
    • உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நியூயார்க்:

    அமெரிக்காவில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கண்காணிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சீனாவில் இருந்து இறக்குமதியாகும் டிரோன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் எனவே அதற்கு தடைவிதிக்க வேண்டும் என புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து நாட்டின் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் சீன டிரோன்களுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், தரவு பாதுகாப்பு கவலைகளை சீரமைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.
    • இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம்

    இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    Operation Hawkeye என்ற பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "கொலைக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகவும் கடுமையான பழிவாங்கல்" என்று விவரித்தார்.

    மேலும், "ISIS சிரியாவில் துணிச்சலான அமெரிக்க தேசபக்தர்களைக் கொன்றது, அவர்களின் புனித ஆன்மாக்களை இந்த வாரம் மிகவும் மரியாதைக்குரிய விழாவுடன் அமெரிக்க மண்ணுக்கு வரவேற்றேன்.

    நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, ISIS இன் கோட்டையாக இருக்கும் சிரியா மீது நாங்கள் ஒரு சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடங்குகிறோம்.

    சிரியாவிற்கு மீண்டும் மகத்துவத்தை கொண்டு வர கடுமையாக உழைத்த ஒரு மனிதரின் தலைமையிலான சிரிய அரசாங்கத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

    அமெரிக்காவைத் தாக்கும் அனைத்து பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் நாட்டைத் தாக்கினால் அல்லது அச்சுறுத்தினால், நாங்கள் இதுவரை கண்டிராத வலிமையான தாக்குதலை நடத்துவோம் என்று இதன் மூலம் நான் எச்சரிக்கிறேன்" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறினார். 

    • ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடா நோக்கி விமானம் புறப்பட்டது.
    • சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர்.

    ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விமான நிலையத்திற்கே திரும்பியது.

    அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரன்வேயைத் தாண்டிச் சென்று ஆண்டனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்தது.
    • இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

    சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நேற்று இந்தத் தாக்குதலை நடத்தியது.

    இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ராணுவம் தெரிவித்தது.

    சமீபகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமை காட்டி வரும் நிலையில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட படகுகள் இதேபோல் தாக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அவை போதைப்பொருள் படகுகள் இல்லை என்றும் இந்தத் தாக்குதல்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் விமர்சனம் எழுந்தது.

    ஆனால், சர்வதேச சட்டங்களின்படியே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பென்டகன் விளக்கம் அளித்துள்ளது. 

    • கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை டிரம்ப் ஜூனியர் திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.

    டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார்.

    இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு அறிவித்தனர். அத்துடன் இவர்களின் 12 ஆண்டு மணவாழ்க்கை முடிவுக்கு வந்தது.

    டொனால்ட் டிரம்ப் ஜூனியர் - பெட்டினா ஆண்டர்சன் என்ற பெண்ணை கடந்தாண்டு முதல் காதலித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் வெள்ளை மாளிகையில் திருமண நிச்சதார்தம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

    பல்கலைக்கழகத்தில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும் அவர் கருப்பு நிற உடை அணிந்து இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தாயகமாக வெனிசுலா உள்ளது.
    • கடந்த 2022-ம் ஆண்டு ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்ல அமெரிக்கா தடை விதித்தது.

    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் தாயகமாக வெனிசுலா உள்ளது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கரீபியன் கடற்பகுதி வழியாக அவ்வப்போது ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்லப்படுகிறது. இதன்மூலம் அங்குள்ள பயங்கரவாதிகள் வருவாய் ஈட்ட உதவுவதாக வெனிசுலா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்ல அமெரிக்கா தடை விதித்தது. அதனை மீறி வெனிசுலாவில் இருந்து ஈரானுக்கு கச்சா எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதனை அமெரிக்க கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    இந்தநிலையில் கச்சா எண்ணெய் கடத்தலுக்கு உதவிய வெனிசுலா அரசுக்கு சொந்தமான கப்பல் நிறுவனம் மற்றும் 6 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

    ×