என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய மாணவர்"

    • மாணவரின் உடலை தாயகம் எடுத்து வர அனைத்து உதவியும் செய்து தரப்படும்.
    • மாணவர் சாகேத் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    கர்நாடகாவை சேர்ந்த சாகேத் சீனிவாசய்யா(வயது 22). சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த இவர் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார்.

    பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரி மூலக்கூறு பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து வந்தார்.

    இதற்கிடையே மாணவர் சாகேத் கடந்த 9-ந்தேதி திடீரென்று மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள ஒரு பூங்காவில் சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் மடிக்கணினி அடங்கிய பை கண்டெடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மாணவர் சாகேத்தை தேடும் பணியை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் மாணவர் சாகேத் சீனிவாசய்யா பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். அவரது உடலை போலீசார் மீட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியது.

    இதுதொடர்பாக துணை தூதரகம் கூறும்போது, இந்த மிகவும் கடினமான நேரத்தில் மாணவர் சாகேத் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மாணவரின் உடலை தாயகம் எடுத்து வர அனைத்து உதவியும் செய்து தரப்படும். அதற்கான நடவடிக்கைகளில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தது.

    மாணவர் சாகேத் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவரது மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    மாணவர் சாகேத், சென்னை ஐ.ஐ.டியில் வேதியியல் பொறியியலில் இளங்கலை தொழில்நுட்ப படிப்பை முடித்தார். இங்கு அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை படித்தார்.

    பின்னர் அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தயாரிப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார். அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பு மாணவர் சாகேத் படித்து கொண்டே அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்தார்.

    தான் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஆர்வமாக உள்ளேன் என்று இணைய பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் அவர் அமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

    • கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா.
    • கலிபோர்னியாவின் பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.

    வாஷிங்டன்:

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). சென்னை ஐஐடியில் இளங்கலை படிப்பை முடித்த இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெர்க்லே பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஸ்ரீனிவாசய்யாவை காணவில்லை என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பார்க் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு வாசலில் அவரது பாஸ்போர்ட், மடிக்கணினி, அவரது பை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது.

    கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் மாயமானது குறித்து இந்திய துணை தூதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    • உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.
    • பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார்.

    ரஷியாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் சிங் சவுத்ரி 2023 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க ரஷியா சென்றார்.

    ரஷியாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் கடந்த 19ம் தேதி பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு, அவர் மீண்டும் விடுதிக்கு வரவில்லை.

     இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் அஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    அஜித்தின் உடல் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டது. அஜித் இறந்தது குறித்து இந்திய தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடாத நிலையில் நேற்று அஜித்தின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலத்தை விற்று அஜித்தை ரஷியாவுக்கு படிக்க அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    அஜித்தின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அஜித் சவுத்ரியின் மரணத்திற்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மாணவரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    • துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
    • துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

    துபாய்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 18). இவர் துபாயில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் துபாய் சர்வதேச கல்வி நகரில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைஷ்ணவ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டல்லாஸ் மாகாணத்தில் எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்தார்.
    • பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார்.

    வாஷிங்டன்:

    தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர் போலே (27). பல் மருத்துவத்தில் அறுவை சிகிச்சை படிப்பை முடித்து விட்டு, மேல் படிப்புக்காக 2023-ம் ஆண்டு அமெரிக்கா சென்றார். முதுநிலை படிப்பில் சேர்ந்து படித்து வந்த அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதனை முடித்துள்ளார்.

    நிரந்தர வேலை தேடி வந்த அவர், அது கிடைக்கும் வரை அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் உள்ள எரிவாயு நிலையம் ஒன்றில் பகுதி நேர பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    இதற்கிடையே, பணியில் இருந்த அவரை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இச்சம்பவம் தெலுங்கானாவில் உள்ள அவருடைய பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, சந்திரசேகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன், அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசு சார்பில் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என உறுதி கூறினார்.

    இந்நிலையில், இந்திய மாணவர் படுகொலைக்கு இரங்கல் தெரிவித்த ஹூஸ்டன் இந்திய தூதரகம், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்தது.

    • உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த இந்திய மாணவர் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டார்.
    • இந்திய மாணவர் குற்றவாளியை போல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், ஓர் இந்திய மாணவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ஜூன் 7 அன்று, குணால் ஜெயின் என்ற இந்திய அமெரிக்க தொழிலதிபர், இந்த கொடூர சம்பவத்தை தனது செல்போன் கேமராவில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

    உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த மாணவர், கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார். கண்ணீர் விட்டு அழுத போதும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோ வைரலாக நிலையில் , வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பரவலான கவலை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி, இந்திய அரசாங்கம் உடனடியாக பதிலளித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோருகின்றனர்.

    இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் பதிவில், "அமெரிக்கா தனது நாட்டிற்கு சட்டப்பூர்வ பயணிகளை தொடர்ந்து வரவேற்கிறது. இருப்பினும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது, சகித்துக்கொள்ளவும் மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளது.

    அமெரிக்காவின் நெவார்க் நகரில் இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டு கிடக்கும் வீடியோ வைரலான நிலையில் அமெரிக்க தூதரகத்தின் இந்த எக்ஸ் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி நூற்றுக்கணக்கான இந்தியர்களை கை மற்றும் கால் விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங்.
    • வாடகைக்கு வேறு வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் டிராபாசி பகுதியை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தேவேந்தர் சிங். இவரது மகள் வன்ஷிகா (வயது 21).

    கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் கனடா சென்ற வன்ஷிகா ஒட்டாவாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார்.

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி மாலை வன்ஷிகா தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து வெளியே சென்றார். வாடகைக்கு வேறு  வீடு பார்க்க செல்வதாக அங்கு தங்கியிருந்த சக மாணவிகளிடம் கூறிவிட்டு வன்ஷிகா சென்றுள்ளார்.

    இரவு நீண்ட நேரமாகியும் வன்ஷிகா வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து, மாயமான வன்ஷிகாவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களாக தேடப்பட்டு வந்த வன்ஷிகா நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    வன்ஷிகாவின் உடல் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு அருகே கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளது. வன்ஷிகாவை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரிஷி அதுல் ராஜ் போபட் ஆய்வு மாணவராக படித்து வந்தார்.
    • இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அதன் அர்த்தத்தையும் இந்திய மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் தெரிவித்தார்.

    லண்டன்:

    இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் (வயது 27).

    லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரிஷி அதுல் ராஜ் போபட் ஆய்வு மாணவராக படித்து வந்தார். மேலும் சமஸ்கிருத மொழியில் காணப்படும் பல்வேறு புதிர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.

    அப்போது 2500 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் கூறப்பட்ட இலக்கண புதிர் குறித்து படித்தார். அந்த புதிர் சமபலம் கொண்ட இரண்டு விதிகளை பற்றியது. இதில் எந்த விதி வெற்றி பெறும் என்பதில் குழப்பம் நிலவி வந்தது. இந்த புதிருக்கு விடை கண்டுபிடிக்க இந்திய மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் முயற்சி மேற்கொண்டார்.

    தொடக்கத்தில் அவருக்கு எந்த முடிவும் கிட்டவில்லை. என்றாலும் முயற்சியை கைவிடாத அவர் தொடர்ந்து புதிருக்கு விடை கண்டுபிடிக்க முயன்றார்.

    சமீபத்தில் அவர் அந்த புதிருக்கு விடை கண்டுபிடித்தார். இலக்கணப்படி சரியான சொற்களை உருவாக்கியதன் மூலம் அதன் அர்த்தத்தையும் அவர் தெரிவித்தார்.

    இதன் மூலம் அவர் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய புதிருக்கு விளக்கம் கண்டுபிடித்து அறிஞர்களின் குழப்பத்திற்கு முடிவு கட்டியதாக ரிஷி அதுல் ராஜ் போபட்டின் ஆசிரியர் தெரிவித்தார்.

    • பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
    • இதில் இந்திய மாணவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர்.

    மணிலா:

    பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அவருடன் விமானத்தின் பயிற்சியாளரும் உடன் இருந்துள்ளார்.

    துகுகேராவ் விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் விமானம் விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது.

    விபத்துக்கு உள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விமானத்தில் பயணம் செய்த அன்ஷும் ராஜ்குமார் மற்றும் அவருடைய பயிற்சியாளர் இருவருமே பலியாகினர். இருவரது உடல்களையும் மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார். இதுகுறித்து நீல் ஆச்சாரியாவின் தாய் கவுரி ஆச்சார்யா, எக்ஸ் வலைதளத்தில் கூறும்போது, எனது மகன் நீல் ஆச்சார்யா மாயமாகி உள்ளார்.

    அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட உபெர் டிரைவர் பார்த்துள்ளார். எனது மகனை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.

    இந்த நிலையில் மாயமான மாணவர் நீல் ஆச்சார்யா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் அவரது உடல் கிடந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    • தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    சிகாகோ:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லங்கார் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சையத் மசாஹிர் அலி. இவர் அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்று தான் வசிக்கும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததால், சையத் மசாஹிர் அலி தனது வீட்டுக்கு வேகமாக ஓடினார்.

    உடனே அவரை அக்கும்பல் விரட்டி சென்று பிடித்தது. பின்னர் இந்திய மாணவரை கொடூரமாக அக்கும்பல் தாக்கி அடித்து உதைத்தது. மாணவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் சையத் மசாஹிர் அலிக்கு நெற்றி, மூக்கு, வாயில் ரத்தம் வழிந்தது. அவர் ரத்தம் வழிந்தபடியே வீடியோவில் பேசினார். அதில் அவர் கூறும்போது, "நான் உணவு வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பிய போது 4 பேர் என்னை துரத்தி வந்தனர். என் வீடு அருகே நான் தவறி விழுந்தேன். அவர்கள் என்னை சரமாரியாக தாக்கினார்கள். எனக்கு உதவி செய்யுங்கள்" என்றார்.

    இச்சம்பவம் குறித்து சையத் மசாஹிர் அலியின் மனைவி பாத்திமா ரிஸ்வி, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அமெரிக்காவில் எனது கணவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுகிறேன். அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது 3 குழந்தைகளுடன் நான் அமெரிக்காவுக்கு சென்று கணவரை பார்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

    தாக்குதலுக்குள்ளான இந்திய மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து 4 இந்திய மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்திய மாணவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    • வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ×