search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Man"

    • வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த மாணவர் சரத்பாபு புல்லுரு உள்பட 2 பேரை மைக்கேல் டிவைன் சுமித் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இந்த வழக்கு விசாரணை முடிவில் டிவைன் சுமித்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மெக்அலெஸ்ட ரில் உள்ள ஒக்லஹோமா மாநில சிறைச்சாலையில் டிவைன் சுமித்துக்கு ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சுட்டுக்கொல்லப் போவதாக மிரட்டிய நபருக்கு 37 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. #USman #threateningTrump #killTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்ட். தவறான வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக நெப்ரஸ்கா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த வழக்கு தோல்வியில் முடிந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த ஜெர்ராட், நெப்ரஸ்கா நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11-ம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் போவதாக தொடர்ந்து மிரட்டினார். மேலும், நீதிமன்ற குமாஸ்தா மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் கொல்லப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.


    இதைதொடர்ந்து, அவரை மோப்பம் பிடித்து கைது செய்த போலீசார், அரிசோனா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஸ்டீவன் பி லோகன், குற்றவாளி ஜெர்ராட் ஹன்ட்டர் ஸ்கிம்ட்-டுக்கு 37 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    விடுதலைக்கு பின்னர் அவரை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பில் வைத்திருக்குமாறும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். #USman #threateningTrump #killTrump
    டேட்டிங் ஆப் மூலமாக பல பெண்களை கவர்ந்து அவர்களை உணவகத்துக்கு அழைத்து அங்கு சாப்பிட்ட பின்னர், பில் கொடுக்காமல் தப்பித்துச் செல்லும் நபர் போலீசில் சிக்கி தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தை சேர்ந்த 45 வயதான பால் கோன்ஸாலெஸ் என்ற நபர் டேட்டிங் ஆப்ஸ் மூலமாக பெண்களை பேசி மயக்கி பின்னர் அவர்களுக்கு விருந்து தருவதாக கூறி, ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார். நன்றாக சாப்பிட்ட பின்னர் அந்த பெண்ணை தனியாக கழட்டிவிட்டு அங்கிருந்து தப்பிக்கும் வழக்கத்தை பால் கொண்டுள்ளார்.

    சுமார் 8 பெண்களை இவ்வாறு பால் ஏமாற்றியுள்ளார். இந்திய மதிப்பில் சுமார் 67 ஆயிரம் வரை இது போல நூதனமாக ஏமாற்றிய அவரை ஓட்டல் கேமராக்கள் மூலமாக போலீசார் பிடித்தனர். தற்போது கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கில் பால் தண்டிக்கப்பட்டால் அவருக்கு 13 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. 
    அமெரிக்காவில் தனது முன்னாள் காதலி வேறு நபருடன் இருந்ததால் ஆத்திரமடைந்து அவர் முகத்தில் பிஸ்கட் வீசி தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
    நியூயார்க்:

    அமெரிக்காவின் டென்னீஸ் மாநிலத்தில் உள்ள கிழக்கு நாஸ்வெய்ல் பகுதியை சேர்ந்தவர் ஜெப்ரே தோமெர்லின். சாலையில் நடந்து செல்லும் போது தனது முன்னாள் காதலி வேறொரு நபருடன் காரில் செல்வதை பார்த்து ஆத்திரம் கொண்டுள்ளார்.

    இதனையடுத்து தன் கையில் இருந்து பிஸ்கட் பாக்கெட் கொண்டு காதலியின் முகத்தில் எறிந்து தனது ஆத்திரத்தினை தீர்த்துக் கொண்டுள்ளார். மேலும் காரில் இருந்தபடியே தனது முன்னாள் காதலியையும், அவருடன் இருந்து புதிய நபரையும் ஜெப்ரே திட்டி தீர்த்துள்ளார்.

    இச்சம்பவத்தின் போது சம்பவயிடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் ஜெப்ரேவை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் ஒழுக்ககேடாக செயல்பட்டதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    அமெரிக்காவில் 2014ம் ஆண்டு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என என கோர்ட்டு அறிவித்தது
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தெற்கு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் பிரவிண் வர்க்கீஸ். இந்திய வம்சாவளி மாணவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாயம் ஆனார். 5 நாட்களுக்கு பின்னர் அவர் விபத்தில் மரணம் அடைந்து விட்டதாக கார்பன்டேல் பகுதி போலீசார் அறிவித்தனர்.

    19 வயதான பிரவிண் மரணம், விபத்தினால் நிகழ்ந்தது அல்ல என்று அவரது குடும்பத்தினர் கருதினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் டாக்டர்களை கொண்டு நடத்திய பிரேத பரிசோதனையின் முடிவு, கார்பன்டேல் பகுதி போலீசார் ஏற்பாட்டில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து முரண்பட்டது.

    இதையடுத்து வர்க்கீஸ் குடும்பத்தினர், கார்பன்டேல் பகுதி போலீஸ் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன்பின்னர் இந்த வழக்கில் 19 வயதான கயேஜ் பெதுனே என்ற அமெரிக்கர் சிக்கினார்.

    இல்லினாய்சை சேர்ந்த இவர், பிரவிண் வர்க்கீசை சம்பவத்தன்று (2014-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந் தேதி) இரவு ஒரு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அப்போது கொகைன் போதைப்பொருள் வாங்க பிரவிண் வர்க்கீஸ் விரும்பி உள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே பணத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அதில் பிரவீண் வர்க்கீசை பெதுனே சரமாரியாக தாக்கி உள்ளார். அதில் அவர் உயிரிழந்தார்.

    இப்போது பெதுனே மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம்.

    4 ஆண்டுகளுக்கு பிறகு தங்களது மகன்சாவில் நீதி கிடைத்து உள்ளதில் பிரவிண் வர்க்கீசின் தாயார் லவ்லி வர்க்கீஸ் நிம்மதி அடைந்து உள்ளார். 
    ×