என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை வழக்கு"

    • கொலையை செய்த அவரின் 22 வயது மனைவி சுனிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
    • திருமணத்திற்கு அடுத்த நாளிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

    ஜார்க்கண்டின் கர்வா மாவட்டத்தில் திருமணமான 36வது நாளில் ஒரு பெண் தனது கணவரை உணவில் விஷம் வைத்து கொன்றார்.

    இறந்தவர் பஹோகுந்தர் கிராமத்தைச் சேர்ந்த புத்தநாத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    இந்தக் கொலையை செய்த அவரின் 22 வயது மனைவி சுனிதா கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்தப் பெண் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    புத்தநாத் சிங் தாய், தனது மகன் மருமகளால் கொலை செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    திருமணத்திற்கு அடுத்த நாளிலிருந்தே பிரச்சனைகள் தொடங்கியதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

    அந்தப் பெண் தனது உறவினர்களிடம் புத்தநாத்தை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அவர்கள் ஒன்றாக வாழ முடியாது என்றும் கூறியிருக்கிறார்.

    இருப்பினும், எந்தப் பிரச்சினையும் இல்லாதது போல், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் சுனிதாவை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பினர் என்று கூறப்படுகிறது.

    • ஷீத்தல் நீரில் மூழ்கியதாக சுனில் நாடகமாடியுள்ளார்.
    • திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

    அரியானாவில் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலின் பிரபலமுமான ஷீத்தல் சவுத்ரி கொலை வழக்கில் அவரது காதலன் சுனில் கைது செய்யப்பட்டார்.

    நேற்று (ஜூன் 16, 2025) சோனிபட் அருகே கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இருந்த உடலில் பல கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.

    முன்னதாக, தனது கார் கால்வாயில் விழுந்ததாகவும், ஷீத்தல் நீரில் மூழ்கியதாகவும் சுனில் நாடகமாடியுள்ளார். ஆனால், விசாரணையில் இந்த நாடகம் அம்பலமானது. இறுதியில் சுனில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    சுனிலுடன் காரில் சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஷீத்தலை சுனில் அடித்து, கத்தியால் குத்தி, பின்னர் காரை ஷீத்தலின் உடலுடன் கால்வாயில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சுனில் திருமணமானவர் என்பதால், அவரது திருமண ப்ரோபோசலை ஷீத்தல் நிராகரித்தது கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    • கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.
    • அவரது சகோதரி நேஹா கடத்தல் புகார் அளித்தார்.

    அரியானாவின் சோனிபட் அருகே அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நாட்டுப்புற ஹரியான்வி இசைக்கலைஞரும் மாடலுமான இருந்து வந்த ஷீத்தல் என்ற இளம் பெண் கொடூரமாக கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் 14 அன்று படப்பிடிப்புக்காக அஹார் கிராமத்திற்குச் சென்ற ஷீத்தல் வீடு திரும்பாததால், அவரது சகோதரி நேஹா கடத்தல் புகார் அளித்தார்.

    போலீசார் மேற்கொண்ட தேடுதலில், காண்டா கிராமத்திற்கு அருகிலுள்ள கால்வாயில் ஷீத்தலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், குற்றவாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொலையின் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    • அந்த நபர் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கிராமப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
    • கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது ஆறு பேர், தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.

    ஒடிசாவில், நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த 60 வயது நபரை, பெண்கள் குழு ஒன்று கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஜூன் 3 ஆம் தேதி இரவு, பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினர், பாலியல் தொல்லை கொடுத்த நபரை அவரது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்து, பின்னர் உடலை எரித்துள்ளனர்.

    அந்த நபர் கடந்த நான்கு ஆண்டுகளாக பல கிராமப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது ஆறு பேர், தாங்களும் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.

    இதுபோன்ற தொடர்ச்சியான சம்பவங்களுக்கு முடிவுகட்டவே இந்த கொடூர முடிவை எடுத்ததாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டெடுத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு முன் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கொலை செய்யப்பட்டவர் ஹரிணி (33), இரண்டு குழந்தைகளின் தாய்.
    • யஷாஸ் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு, கத்தியுடன் வந்துள்ளார்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பெங்களூரில் பயங்கரம்: ஓட்டல் அறையில் காதலியை 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.டி ஊழியர்

    அறையில், ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தச் சம்பவம் கெங்கேரி பகுதியில் உள்ள பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்படி, கொலை செய்யப்பட்டவர் ஹரிணி (33), இரண்டு குழந்தைகளின் தாய். கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹரிணி, கெங்கேரியைச் சேர்ந்த தனது காதலனான யஷாஸ் (25) என்ற ஐடி ஊழியருடன் OYO வில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

    வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த யஷாஸ், ஹரிணியை கத்தியால் தொடர்ச்சியாக 17 முறை குத்தியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    குடும்ப அழுத்தம் காரணமாக ஹரிணியஷாஸுக்கும் இருந்த தொடர்பை முடித்துக் கொள்ள முயன்றபோது, யஷாஸ் அவளைக் கொலை செய்துள்ளார். யஷாஸ் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு, கத்தியுடன் வந்துள்ளார்.

    கொலைக்குப் பிறகு தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட யஷாஸ், வீட்டுக்கு திரும்பி, போலீசுக்குத் தகவல் அளித்தார். பின் போலீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை விசாரணைக்கு பின்  போலீசார் கைது செய்தனர்.

    இந்தச் சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

    • அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
    • ராஜினாமா முடிவை ஒரு வாரம் ஒத்திவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா கொலுத்தமஜ்லு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அப்துல்ரகீம் என்கிற இம்தியாஸ் (32).

    இவர் இந்த பகுதியில் உள்ள ஜூம்மா மசூதி செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவியது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், இந்த கொலை வழக்கு விசாரணையை அரசு தவறாக கையாண்டதாகவும், மங்களூரு, உடுப்பி, சிவமொக்கா மாவட்டங்களில் தொடர்ச்சியான பழிவாங்கும் கொலைகளை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் அரசு இந்த கொலை வழக்குகளை கையாண்ட விதத்தை கண்டித்து மங்களூரு ஷாதி மஹாலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

    அப்போது தட்சிண கன்னட கொலை வழக்கை சரியாக விசாரிக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கன்னட காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.எஸ்.முகம்மது மற்றும் தட்சிண கன்னட சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சாகுல் அமீது ஆகியார் அறிவித்தனர்.

    அவர்களை தொடர்ந்து 8 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல முஸ்லிம் மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட 200 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்தனர்.

    மேலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாங்கள் கட்சி அலுவலகத்துக்கு திரும்ப செல்லமாட்டோம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் எழுத்து பூர்வ ராஜினாமா கடிதம் கொடுக்கபடவில்லை. இதற்கிடையே ராஜினாமா முடிவை ஒரு வாரம் ஒத்திவைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • 2001-ல் கொலை செய்யப்பட்ட நிலையில் வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
    • கடந்த 5 மாதங்களுக்கு முன் தூசி தட்டி மீண்டும் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கை தூசி தட்டி, விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹருண் அலி முஷ்டாகின் அலி சயத் (வயது 43) என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வந்துள்ளார். இவரது ஆட்டோ ரிக்ஷாவில் மொஹரம் அலி முகமது இப்ராஹிம் அலி (56) என்பவர் சவாரி செய்துள்ளார். அப்போது கட்டண தகராறு ஏற்பட ஹருண் அலி, மொஹரம் அலியை குத்திக் கொலை செய்துள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவு ஆனார். சில நாட்கள் கழித்து போலீசார் வழக்கை கிடப்பில் போட்டனர்.

    இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இந்த வழக்கை தூசி தட்டி மீண்டு விசாரணைக்கு போலீசார் எடுத்துக் கொண்டனர். உயிரிழந்தவர்களின் சொந்தக்காரர்கள் மற்றும் பழைய சாட்சிகளை மீண்டும் சந்தத்து ஆதாரங்களை திரட்டினர்.

    அதனடிப்பைடையில் மொஹரன் அலி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் மொஹரம் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மொஹரம் அலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    • 1982 ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தால் லக்கானும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    • மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, சக குற்றவாளிகள் மூவர் இறந்துவிட்டனர்.

    கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட 104 வயது முதியவர், 43 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

    விடுவிக்கப்பட்டவர் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கவுரே கிராமத்தைச் சேர்ந்த லகான்.

    சிறைச்சாலை பதிவுகளின்படி, லகான் 1921 இல் பிறந்தார். 1977 ஆம் ஆண்டு இரு குழுக்கள் இடையே நடந்த மோதலின் போது பிரபு சரோஜ் என்ற நபரைக் கொன்ற வழக்கில் மேலும் மூவருடன் லகான் கைது செய்யப்பட்டார்.

    1982 ஆம் ஆண்டில், பிரயாக்ராஜ் பிரிவு நீதிமன்றத்தால் லக்கானும் மேலும் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, நான்கு குற்றவாளிகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    இருப்பினும், மேல்முறையீட்டு செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, சக குற்றவாளிகளில் மூவர் இறந்துவிட்டனர்.

    நீண்ட சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணையை முடித்து, மே 2 அன்று லகான் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி அவரை விடுவித்தது.

    குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட லகான், கடந்த செவ்வாய்க்கிழமை சிறையில் இருந்து விடுதலையாகி தனது மகள் வீட்டிற்குச் சென்றார். 

    • ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
    • விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ரயில் பாலம் அருகே சூட்கேசில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூருவின் புறநகரில் உள்ள பழைய சந்தாபுரா ரயில்வே பாலம் அருகே உள்ளூர்வாசிகளால் சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அது ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    உடலுடன் எந்த அடையாள ஆவணமும் கிடைக்கவில்லை. அவரின் பெயர், வயது மற்றும் அவர் எங்கிருந்து வந்தார் போன்ற விவரங்களைக் கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பெங்களூரு போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.

    மார்ச் மாதத்தில் இதேபோன்ற ஒரு வழக்கில், பெங்களூருவின் ஹுலிமாவுவில் உள்ள ஒரு வீட்டில், 32 வயதுடைய கௌரி அனில் சம்பேகர் என்ற பெண்ணின் உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரை கொலை செய்த கணவர் ராகேஷ் சம்பேகர் புனேவில் கைது செய்யப்பட்டார். 

    • பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, தீபக் கண்டேல் என்ற மற்றொரு இந்தியர் திடீரென அவரை கத்தியால் தாக்கினார்
    • எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ இல்லை என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவுபடுத்தின.

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். டெக்சாஸின் ஆஸ்டின் நகரில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மற்றொரு இந்தியரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இறந்தவர் அக்ஷய் குப்தா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சுகாதார தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் அக்ஷய் குப்தா, மே 14 ஆம் தேதி ஆஸ்டினில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

    பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது, தீபக் கண்டேல் என்ற மற்றொரு இந்தியர் திடீரென அவரை கத்தியால் தாக்கினார். தாக்குதலில் பலத்த காயமடைந்த அக்ஷய் குப்தா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அக்ஷய் குப்தாவிற்கும் குற்றம் சாட்டப்பட்ட தீபக் கண்டேலுக்கும் இடையே எந்த மோதலோ அல்லது வாக்குவாதமோ இல்லை என்பதை சிசிடிவி காட்சிகள் தெளிவுபடுத்தின. காட்சிகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட கண்டேல் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போலீஸ் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட தீபக் கண்டேல் கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. போலீசாரின் விசாரணையில், அக்ஷய் குப்தா தனது மாமாவைப் போலவே இருப்பதாகவும், அதனால்தான் அவரைக் குத்திக் கொன்றதாகவும் கண்டேல் தெரிவித்தார்.  

    • பாதிரியார் போல் மாறுவேடமிட்டு ஆசிரமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தார்.
    • அவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன.

    'டாக்டர் டெத்' என்று அழைக்கப்படும் சீரியல் கில்லர் கொலையாளி பெரும் தேடலுக்கு பின் பிடிபட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 67 வயதான தேவேந்தர் சர்மா ஆவார். அவரை ராஜஸ்தானின் தௌசாவில் டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    திகார் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவர் ஆகஸ்ட் 2023 இல் பரோலில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் தலைமறைவான அவர் பாதிரியார் போல் மாறுவேடமிட்டு ஒரு ஆசிரமத்தில் ஒளிந்து வாழ்ந்து வந்தார்.

    உண்மையில் தேவேந்தர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். 1998 மற்றும் 2004 க்கு இடையில் சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடிகளை அரங்கேற்றினார். பல மாநிலங்களில் செயல்படும் மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் உதவியுடன் 125 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நடத்தினார்.

    2002 மற்றும் 2004 க்கு இடையில் பல டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களை அவர் கொடூரமாக கொலை செய்தார். ஓட்டுநர்களை பயணங்களுக்கு அழைத்து செல்லும் வழியில் அவர்களை கொலை செய்தார். அவர்களின் பிரித்து வாகனங்கள் விற்கப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் முதலைகள் நிறைந்த ஹசாரா கால்வாயில் பலியானவர்களின் உடல்கள் வீசப்பட்டன.

    அவர் மீது கொலை, கடத்தல், கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. அவர் பல கொலை வழக்குகளில் தண்டனை பெற்றவர். டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் ஏழு வெவ்வேறு வழக்குகளில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. குருகிராம் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனையும் விதித்துள்ளது. 

    • சாந்தா குரூஸ் ஓட்டல் அறையில் சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.
    • தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார்.

    மும்பையை சேர்ந்த வினோத் குமார் என்ற 34 வயது நபர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

    சந்தியா ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற மற்ற ஆண்களுடன் பேசுவதும் வினோத் குமாருக்கு துண்டாக பிடிக்கவில்லை.

    இதனால் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த வினோத் கடந்த 2019 அக்டோபரில் சாந்தா குரூசில் ஒரு ஓட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.

    ஆனால் தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது, மற்றவர்களிடம் பேசுவது ஆகிவற்றால் வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததை சாட்சியங்கள் வெளிப்படுத்தின.

    இந்நிலையில் நேற்று விசாரணை நிறைவில் வினோத்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    ×