என் மலர்
நீங்கள் தேடியது "கணவன்-மனைவி"
- வீட்டின் முற்றத்தில் இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
- அவனது சிரிப்பால் இந்த வீடு இறைவனின் ஆசிபெற்ற இடமாக இருந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜஞ்ச்கீர் சம்பா மாவட்டத்தில் தார்தேயி என்ற கிராமம் உள்ளது.
48 வயது கட்டிடத் தொழிலாளியான கிருஷ்ண பட்டேல் அனைத்து மனைவி ரமா பாய் மற்றும் 21 வயதான ஒரே மகன் ஆதித்யா பட்டேல் உடன் இங்கு வசித்து வந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஆதித்யா துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
மகனின் மறைவுக்குப் பிறகு அந்தத் தம்பதியினர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, கிருஷ்ண பட்டேல் - ரமா பாய் தம்பதியினர் தங்கள் வீட்டின் முற்றத்தில் இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர்கள் நான்கு பக்கக் கடிதத்தையும், ஒரு வீடியோ செய்தியையும் விட்டுச் சென்றுள்ளனர்.
அதில், "எங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரமும், உலகமுமாக இருந்தவன் ஆதித்யா. அவன் ஒரு நல்ல மகன் மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பனும் கூட.
அவனது சிரிப்பால் இந்த வீடு இறைவனின் ஆசிபெற்ற இடமாக இருந்தது. ஆனால், அந்த விபத்திற்குப் பிறகு இந்த வீடு நிசப்தமாகி விட்டது. அவன் எங்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டான். அவனில்லாமல் எங்களால் வாழ முடியவில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
தமபதியின் தற்கொலையால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காவல்துறையினர் சம்பவம் க்ருய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 42 வயதான மத்திய அரசு ஊழியர் உடன் பணிபுரியும் 54 வயது பெண்ணை காதலித்தார்.
- அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
மத்தியப் பிரதேசத்தை சேர்த்த 42 வயதான மத்திய அரசு ஊழியர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தில் இருந்து வந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கணவர் தன்னுடன் பணிபுரியும் 54 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், இதனால் குடும்பத்தை அவர் கண்டுகொள்வதில்லை என்றும் மனைவி போபால் குடும்ப நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் மூன்று பேரையும் அழைத்து ஆலோசனைகளை வழங்கியது. ஆனால், கணவர் தனது காதலியுடன்தான் வாழ்வேன் என்று கூறிவிட்டார். எனவே நீதிமன்றம் தம்பதிக்கு விவாகரத்து அளித்தது.
ஆனால் மனைவி தனது கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு பதிலாக தனது கணவரை விட்டுக்கொடுக்க ரூ.1.5 கோடி இழப்பீடு வேண்டும் என்று அப்பெண்ணிடம் கோரினார். அப்பெண்ணும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார்.
கணவன் மனைவி மற்றும் காதலிக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு வீடு, மற்றும் ரூ.27 லட்சம் என மொத்தம் ரூ.1.5 கோடியை காதலி வழங்க உள்ளார்.
- அவர்கள் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
- மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் யாதவ் (33). இவர் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் பின் ஜோதிக்கும் ஜிதேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பணப் பிரச்சினை காரணமாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
ஜனவரி 26 அன்று ஏற்பட்ட தகராறின் போது, ஜோதி தனது பெற்றோர் மற்றும் சகோதரரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அவர்கள் ஜிதேந்திரனின் கை கால்களைப் பிடித்துக் கொள்ள, ஜோதி ஆவேசத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
ஜிதேந்திரன் இறந்தவுடன், இது தற்கொலை என்று நம்ப வைப்பதற்காக, ஒரு மஃப்லரைப் பயன்படுத்தி அவரது உடலை ஜன்னல் கம்பியில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி நாடகமாடியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நடத்திய விசாரணையில் ஜோதி உண்மையை ஒப்புக்கொண்டார். ஜோதி மற்றும் அவரது பெற்றோரைக் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜோதியின் சகோதரர் தீபக்கைத் தேடி வருகின்றனர்.
- கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை.
- அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் தாவநகரே மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 2 மாதங்களுக்கு முன் ஹரிஷ் (30) என்பவரை மணந்தார்.
கடந்த 23 ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி வீடு திரும்பவில்லை. புகாரின் பேரின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரஸ்வதி தனது காதலன் சிவகுமாருடன் சென்றது தெரியவந்தது.
இதை அறிந்ததும், கணவர் ஹரிஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். ஹரிஷின் மரணச் செய்தியைத் தாங்க முடியாமல், அவர்களுக்கு திருமண ஏற்பாடு செய்த ருத்ரேஷும் (36) தற்கொலை செய்து கொண்டார். ருத்ரேஷ் சரஸ்வதியின் தாய்மாமன்.
காவல்துறை விசாரணையில், சரஸ்வதிக்கு திருமணத்திற்கு முன்பே ஒரு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. சரஸ்வதி மற்றும் அவரது காதலனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
- விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.
- அவர்களில் ஒருவர் 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்தனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், லாரன்ஸ்வில் பகுதியில் நடந்த குடும்பத் தகராறில், இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் தனது மனைவி மீமூ டோக்ரா (43) மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தவர் 51 வயதான விஜய் குமார்.
கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு வைத்தும் இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, உறவினர்களான கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் வீட்டில் விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.
அவர்களில் ஒரு குழந்தை 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்து விஜய் குமாரை கைது செய்தனர். குழந்தைகள் மூவரும் காயமின்றி தப்பினர்.
அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளது.
- தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
- திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரது காதலன் முகேஷ் ஜா என்பவரைப் போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் ஜாவும் அனிதாவும் ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், சில காலத்திலேயே அனிதா அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
அனிதா தன்னை விட்டுச் சென்றதைத் துரோகமாகக் கருதிய முகேஷ், அனிதாவைப் பழிவாங்கத் திட்டமிட்டார்.
தங்களது திருமண நாள் வந்த ஜனவரி 4-ம் தேதியன்று அனிதாவைக் கொல்ல முடிவெடுத்தார்.
அன்று இரவு ஆட்டோ ஓட்டிச் சென்ற அனிதாவை வழிமறித்த முகேஷ், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். தலைமறைவான முகேஷை, நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்தனர்.
அவர் போலீசாரைச் சுட முயன்றபோது, தற்காப்பிற்காகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முகேஷின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
- உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல் விசாரித்தார்.
கருக்கலைப்புக்கு பெண்ணின் விருப்பமும் சம்மதமும் மட்டுமே போதுமானது என்றும் கணவனின் சம்மதமம் தேவையில்லை எனவும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பஞ்சாப்பைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனது 16 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது கணவருடனான உறவு சரியில்லை என்றும், அவர் பிரிந்து வாழ்வதாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுவீர் செகல், "1971-ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் , கருக்கலைப்புக்கு கணவனின் சம்மதம் தேவை என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
தனது கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கலைக்க வேண்டுமா என்று தீர்மானிக்க திருமணமான பெண்ணே மிகச்சிறந்த நீதிபதி. அவருடைய விருப்பம் மற்றும் சம்மதம் மட்டுமே சட்டப்படி செல்லுபடியாகும்" என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண் கருக்கலைப்பு செய்து கொள்ளும் அளவுக்கு உடல் ரீதியாகத் தகுதியுடன் இருக்கிறார் என்று மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு கருக்கலைப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.
- தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் மறைக்கப்பட்டன.
கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் மீது வரதட்சணை கொடுமை புகார் சுமத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தாவர் சந்த் கெலாட் உடைய பேரன் தேவேந்திர கெலாட் கடந்த 2018 இல் திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார்.
திவ்யா அளித்த புகாரில், தனது மாமனார் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் வரதட்சணை கோரியதாகவும், தன்னை மீண்டும் மீண்டும் உடல் மற்றும் மனரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ளார். பணம் கொண்டுவரவில்லை என்றால் உணவு கிடையாது என கூறி சித்திரவதை செய்ததாக கூறியுள்ளார்.
கடந்த 2025, ஜனவரி 26 அன்று மதுபோதையில் இருந்த தனது கணவர் தன்னைத் தாக்கி, வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டதாகவும், இதனால் தனது முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் தோள்பட்டையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் திவ்யா கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்பே, தனது கணவரின் மது மற்றும் போதைப்பொருள் பழக்கம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் உள்ளிட்ட பல முக்கியமான தகவல்கள் தன்னிடம் மறைக்கப்பட்டதாக திவ்யா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகளை பார்க்க விடாமல் தன்னை தடுப்பதாகவும் திவ்யா குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் மத்திய பிரதேச போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ஜிதேந்திரா கெலாட், "யாராலும் எவர் மீதும் குற்றச்சாட்டுகளை வைக்க முடியும்" என்று கூறி, விரைவில் உண்மைகளை தெளிவுபடுத்துவதாக தெரிவித்தார்.
- ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார்.
- கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
2014 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஷிஷ் மற்றும் பாரதி தீட்சித் இருவரும் அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தனது கணவர் ஆஷிஷ் துன்புறுத்துவதாக பாரதி தீட்சித் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமீப காலமாக துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். பல குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம், ஆஷிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கடத்திச் சென்று பல மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
புகாரை ஏற்று ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
- அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அபியா பானு (25 வயது). இவரது கணவர் சயது முசவீர் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
மூத்த மகள் பாத்திமா பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் பானு மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கணவன்-மனைவி இடையேயும் இதுதொடர்பாக சச்சரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தாய் பானு, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.
- தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவன் வீட்டு மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜான்சியில் ராணிப்பூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த தீஜா (26 வயது) 2022 ஆம் ஆண்டு முகேஷ் அஹிர்வாரை திருணம் செய்தார்.
திருமணத்திற்குப் பிறகு ஒரு வருடம் எல்லாம் நன்றாக இருந்தாலும், அதன் பிறகு முகேஷின் நடத்தை மாறியது.
அவர் வீட்டை விட்டு அதிகம் விலகி இருந்த முகேஷ் செல்லும்போதெல்லாம் தீஜாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்த வரிசையில் நீண்ட நாள் கழித்து நேற்று முன் தினம், முகேஷ் வீட்டிற்கு வந்து தீஜாவை தாக்கி, கட்டாய உடலுறவு கொண்டுள்ளார்.
நேற்று, மீண்டும் உடலுறவு கொள்ள முயன்றபோது தீஜா கடுமையாக எதிர்வினை ஆற்றினார். இதனால் கோபமடைந்த முகேஷ் தீஜாவை அவர்கள் வசிக்கும் இரண்டு மாடி கட்டிட வீட்டின் மாடிக்கு மாடிக்கு தூக்கிச் சென்று அங்கிருந்து கீழே போட்டுள்ளார்.
தீஜாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர் தெரிவித்தனர்.
கணவர் மீது தீஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
- என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.
- பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கரோலினாவின் பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியை சந்திரபிரபா சிங் (44) தனது கணவர் அரவிந்த் சிங் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 12 அன்று, வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்திரபிரபா தனது கணவர் அரவிந்த் சிங்கைக் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு அரவிந்த் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார் சந்திரபிரபாவை கைது செய்தனர். போலீசாரிடம் சந்திரபிரபா கூறுகையில், "காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.
அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் கையில் கத்தியுடன் திரும்பியபோது, தற்செயலாக என் கணவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது" என்று கூறினார்.
இருப்பினும், அரவிந்த் சிங் தனது மனைவி வேண்டுமென்றே தன்னை குத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது சந்திரபிரபா ஜாமீனில் வெளிவந்துள்ளார். பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.






