என் மலர்
நீங்கள் தேடியது "stabbing"
- அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியரை குத்திக்கொன்ற வழக்கில் வாலிபருக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை வழங்கியது.
- ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.
சிவகங்கை
சிவகங்கை அரசு மருத்துவமனையில் தற்காலிக மருந்தாளுநராக பணிபுரிந்தவர் தமிழ் செல்வன். இவருக்கும், ஒக்கூர் அண்ணா நகரை சேர்ந்த அருண்குமாரின் தாயாருக்கும் தகாத உறவு இருந்தது.
கடந்த 10.4.2019-ந் தேதி இது குறித்து மருத்துவமனையில் பணியில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் அருண்குமார் கேட்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை ஒருங்கினைந்த வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தீர்ப்பு கூறப்பட்டது.
அருண்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்படவே அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி சாய் பிரியா உத்தரவிட்டார்.
- வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
- ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார மன்னயார் தெருவில் உள்ள கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது.
இதே தெருவை சேர்ந்த சுகுமார் மனைவி திருச்செல்வி (வயது 35) என்பவரது வீட்டிற்கு உறவினரான திருச்சியை சேர்ந்த மணவாளன் என்பவர் கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த சிவா (30), பிராங்கிளின் (31) ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த மணவாளன் இங்கிருந்து மது அருந்தாதீர்கள் என அவர்களை தட்டி கேட்டார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மணவாளன் நடந்த விவரங்களை திருச்செல்வியிடம் கூறினார்.
இதையடுத்து திருச்செல்வி, மணவாளன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் நடந்த சம்பவங்கள் குறித்து தட்டி கேட்டனர்.
இதில் சிவா ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.
மேலும் அவரது ஆதரவாளர்கள் செல்வராஜ், திருக்குமரன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த திருச்செல்வி உள்பட 4 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.
பிராங்க்ளினிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
- இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொன்மலர்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது தாய் ஜெயலட்சுமிக்கும் இடையே நேற்று குடும்பத் தகராறு ஏற்பட்டு உள்ளது.
அப்போது பாலச்சந்தர், அவரது தாய் ஜெயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிரபு (42) என்பவர், பாலச்சந்தரை தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலச்சந்தர், பிரபுவை கத்தியால் குத்தி உள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்த
வர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாலச்சந்தரை தடுத்து, காயமடைந்த பிரபுவை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் இந்திராணி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பிரபுவை கத்தியால் குத்திய பாலச்சந்தரை கைது செய்தனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
- சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளிக்கு கத்திகுத்து.
- பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல் சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி அடுத்த மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்ரமணி ( வயது 60).
பிரகாஷ் (57). நண்பர்களான இவர்கள் இருவரும் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மூட்டை
தூக்கும் கூலித் தொழிலாளர்க ளாக வேலை செய்து வருகின்ற னர்.
இந்த நிலையில் வேலை முடிந்து இருவரும் நேற்று இரவு தாதகாப்பட்டி சண்முக நகர் சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த வந்தனர். தொடர்ந்து இருவரும் மது அருந்தி விட்டு பேசி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுப்ரமணி பிரகாஷை தகாத வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் இருந்த குவாட்டர் பாட்டிலை உடைத்து சுப்ரமணியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் குடல்
சரிந்து சுப்ரமணி மயங்கி விழுந்தார். இதனால் பதற்ற மடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அருகில் இருந்த வர்கள் படுகாயமடைந்த சுப்ர
மணியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சரவணன் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
- கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு சுரேஷ் தப்பி ஓடி விட்டார்.
திருச்செந்தூர்:
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பாக்கிய ரதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34). இவர் கடந்த மூன்று மாதங்களாக திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள பைரவர் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
இதே கோவிலில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மேட்டூரை சேர்ந்த சுரேஷ்(45) ஓராண்டாக சமையல் வேலை செய்து வருவதாகவும், இவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவில் நிர்வாகம் வேலையை விட்டு நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கும்பகோணத்தை சேர்ந்த வெங்கடேஷை (56) புசாரி சரவணனுக்கு உதவியாக இருந்து வேலை செய்ய வேலைக்கு சேர்த்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், வெங்கடேசிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று காலையில் கோவில் வளாகத்தில் வெங்கடேஷ் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுரேஷ் மீண்டும் வெங்கடேசிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் சுரேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெங்கடேஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
படுகாயம் அடைந்த வெங்கடேஷை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் திருவாக்வுண்டனூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
- கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
சேலம்:
சேலம் திரு வாக்வுண்ட னூர் புத்தர் தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 36). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு சரண்யா ( 27) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு வந்து செல்லும் பூபதியின் நண்பர் அம்மாப்பேட்டையை சேர்ந்த கண்ணன் ( 32) என்பவர் சரண்யாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, கண்ணனை அடித்து உைதத்து கத்தியால் குத்தினார். அப்போது கண்ணன் தப்பி ஓடும்போது சாலையில் எதிரே வந்த வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூபதி கூறியதாவது-
கண்ணன் தனது மனைவியை அழைத்துச் சென்றதால் 2 குழந்தைகளும் தினமும் அம்மா எங்கே என்று கேட்டு அழுது அடம் பிடித்தனர்.சிறிய குழந்தைகளான அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கலங்கினேன்.அதனால் கண்ணனுக்கு போன் செய்து திருவாக்கவுண்டனூர் பகுதிக்கு அழைத்து இருவரும் மது அருந்தினோம். பின்னர் எனது செல்போனில் இருந்த குழந்தைகளின் படத்தை கண்ணனிடம் காண்பித்து குழந்தைகள் அம்மா இல்லாமல் அழுகிறார்கள்.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விடும் . எனவே எனது மனைவி சரண்யாவை எனது வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி கண்ணனின் காலில் விழுந்து கேட்டேன். ஆனால் கண்ணன் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் எனது மனைவியும் கண்ணனும் நெருக்கமாக உள்ள படத்தை காட்டி, மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான், கண்ணனை தாக்கினேன். இவ்வாறு பூபதி கூறினார். கைது செய்யப்பட்ட பூபதியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
- குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.
- அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பெராந்தார் காடு பகுதி யில் வசிப்பவர்கள் அழகன்
(வயது 58), கபீர் (48),
பெம்மன்கவுடா (40). இவர்கள்
குமாரபாளையத்தில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த மாதம் 3-ம் தேதி இரவு, பெம்மன்கவுடா அதிகம் மது குடித்து விட்டு, மற்ற இருவரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரும் நிறுவனத்திற்கு சென்று தூங்கி விட்டு, மறுநாள் காலை அறைக்கு வந்து கதவை தட்ட, பெம்மன்கவுடா, இவர்களை தகாத வார்த்தையால் திட்டி கதவை திறந்துள்ளார்.
அங்கு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடப்பதை கண்டு, இப்படி செய்யலாமா? என்று அழகன், கேட்க அவரை தாக்கி பெம்மன்கவுடா கத்தியால் குத்தினார். இதனால் பயந்து கபீர் வெளியே வந்து சத்தம் போட, பெம்மன்கவுடா அங்கிருந்து தப்பி ஓடினார்.
பலத்த காயமடைந்த அழகன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் பெம்மன்கவு டாவை கைது செய்தனர்.
- மதுரை அருகே டிரைவர்-வாலிபருக்கு கத்திகுத்து விழுந்தது.
- இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்திரா நகர் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் சுகுமாரன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று நேதாஜி தெருவில் ஒரு பெட்டிக்கடை முன்பாக தனது ஆட்டோவை நிறுத்தினார்.
அப்போது அங்கு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த நவநீதன் மகன் சதீஷ்குமார் (24), ஜெயஹிந்த்புரம் என்.எஸ்.கே தெரு மாரிமுத்து மகன் மணிகண்டன் என்ற எம்டன் மணி (25), நேதாஜி தெரு பாண்டி மகன் பாலமுருகன் (19) மற்றும் 16 வயதுடைய சிறுவன் ஆகியோர் சுகுமாரனை வேறொரு இடத்தில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிறுவன் உள்பட 4 பேரும் சுகுமாரனை ஆபாசமாக பேசி கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார், மணிகண்டன், பாலமுருகன், 16 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
ஆரப்பாளையம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி மகன் நவீன் பாண்டி (21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விக்கி (20),வீரபிரபு (20), சரண்குமார் (20) ஆகிய 4 பேர் மேலப்பொன்னகரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வளர்மதி (54) மகனை மது குடிக்க அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.
இதில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நவீன்பாண்டி உள்பட 4 பேரும் வளர்மதியின் மகனை கேலி கிண்டல் செய்து கத்தியால் குத்தினர்.
இந்த சம்பவம் குறித்து வளர்மதி கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன் பாண்டி , விக்கி, வீரபிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது.
- சசியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார்.
குனியமுத்தூர்
கோவை சுண்டாக்காமுத்தூரை சேர்ந்தவர் சசி (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவரை மிரட்டி குனியமுத்தூரை சேர்ந்த பூவேந்திரன் என்பவர் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்ததாக தெரிகிறது. மேலும் திரும்ப ஒப்படைப்பதற்கு ரூ. 10 ஆயிரம் பணம் தர வேண்டும் என கேட்டார்.
இதனை சசி தனது நண்பரான வாட்டர் கேன் சப்ளையர் மாரிமுத்து(35) என்பவரிடம் தெரிவித்து, அவரிடம் ரூ. 10 ஆயிரம் வாங்கி பூவேந்திரனிடம் கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்று கொண்ட அவர் சசியின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார். இது குறித்து அவர்களுக்கிடையே முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாரிமுத்து, அவரது நண்பர்களான டிரைவர்கள் குனியமுத்தூர் ஆதி சக்தி நகரை சேர்ந்த சேகர்(31), திருநகரை சேர்ந்த சுஜித்(33) ஆகியோருடன் குனியமுத்தூர் சிறுவாணி ரோட்டில் உள்ள ஒரு தாபாவில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது பூவேந்திரன் தனது நண்பர்கள் 3 பேருடன் அங்கு வந்தார். அப்போது மீண்டும், மாரிமுத்து தரப்புக்கும், பூவேந்திரன் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பூவேந்திரன் உட்பட 4 பேர் கும்பல் மாரிமுத்துவை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு தலை, தோள்பட்டையில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அவர் மீதான தாக்குதலை, சேகர் மற்றும் சுஜித் தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் சேகர் மற்றும் சுஜித்தையும் கத்தியால் குத்தினர். பின்னர் 4 பேரும் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
கத்திக்குத்தில் மாரிமுத்து, சேகர், சுஜித் ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் 3 பேரும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் பூவேந்திரன்(34) உட்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
- தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மேலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 33) இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த செந்தில் (27) இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்னதாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்திலுக்கு முத்துவிற்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது. இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் செந்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து செந்திலை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த காடம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது