என் மலர்
நீங்கள் தேடியது "tiruchendur"
- குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
- தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் யூனியன் சேர்மன் செல்வி வடமலைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். உதவி ஆய்வாளர் லிங்க கனி, தொழிலாளர் நல ஆய்வாளர், தன்னார்வலர்கள், மகளிர் திட்ட பணியாளர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கையேட்டினை யூனியன் சேர்மனிடம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் செல்வி பிளாரன்ஸ் வழங்கினார்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில் என்.சி.சி. யூனிட்டில் இருந்து சுபேதார் பிரகாஷ், ஹவில்தார் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. தேசிய மாணவர் படையின் தரைப்படை அதிகாரி சிவமுருகன் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் கணேசன், நெல்சன் துரை ஆகியோர் கலந்து கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகாசன பயிற்சிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கே.ஏ.மேல்நிலைப்பள்ளி, எல்.கே.மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.டி.டி.ஏ. மேல்நிலை ப்பள்ளிகளை சேர்ந்த 185 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி லெப்டினன் கர்னல் சுனில் உத்தம் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் என்.சி.சி. யூனிட்டில் இருந்து சுபேதார் பிரகாஷ், ஹவில்தார் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரிகள் மணி, அரிச்சந்திரன், சேக் பீர்முகம்மது காமீல், சத்யன் மற்றும் ஐசக் கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த ஞானமுத்து மனைவி பஞ்சவர்ணம் (வயது35). இவருக்கு சொந்தமாக 10 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை காலையில் மேய்ச்சலுக்கு விட்டால் மாலையில் அவைகள் வீடு திரும்பி விடுமாம்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் 2 மாடுகள் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து மறுநாள் ஆலந்தலை காட்டுப் பகுதியில் தேடி பார்த்தபோது இரண்டு மாடுகள் இறந்து கிடந்தது. இதன் அருகில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் இறந்தது தெரியவந்தது.
இது குறித்து பஞ்சவர்ணம் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறையின் செயலாளர் இரா.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்- அமைச்சர், “திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும். இதற்கான பணி 2018-2019-ம் ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைப்பதற்காக உரிய இடத்தை தேர்வு செய்து அறிக்கை அனுப்பும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடப்பட்டது.
இந்த மணிமண்டபம் அமைப்பதற்கான வரைபடத்துடன் கூடிய 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான திட்ட மதிப்பீட்டை மாவட்ட கலெக் டரின் மேலொப்பத்துடன் அனுப்புமாறும், முதல்- அமைச்சரின் ஒப்புதல் பெற ஏதுவாக, 5 மாதிரி வரைபடங்களையும் அனுப்பிவைக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையின் முதன்மை தலைமைப் பொறியாளரிடம் (கட்டிடங்கள்) கேட்கப்பட்டது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக திருச்செந்தூர் வட்டம் வீரபாண்டியன்பட்டணம் 0.93.0 ஏர்ஸ் நிலத்தில், 60 செண்ட் நிலத்தை தேர்வு செய்து அந்த இடத்துக் கான புலத்தணிக்கை அறிக்கையை 24.3.2018 அன்று அரசுக்கு மாவட்ட கலெக்டர் அனுப்பிவைத்தார்.

அரசின் கவனமான பரிசீலனைக்கு பிறகு, முதல்-அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், மாவட்ட கலெக்டரின் அறிக்கை மற்றும் முதன்மை தலைமைப் பொறியாளரின் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், மேற்கூறப்பட்ட இடத்தில் 342.22 சதுர மீட்டரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க ஒரு கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.
மணிமண்டபம் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடுகளில் அரசின் முன் அனுமதியின்றி எந்த வித மாற்றங்களும் மேற்கொள்ளக்கூடாது என்றும், பணிகள் நிறைவடைந்த பிறகு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனருக்கு முழுமையான பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பி வைக்கும்படியும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்) அறிவுறுத்தப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டதும், அதற்கான இடம் தேடும் பணியில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #SivanthiAditanar
குலசேகரப்பட்டினம் அண்ணா சிலை பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது80). இவர் திருச்செந்தூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பணியில் இருந்த இவருக்கு அவரது மனைவி பொன்னம்மாள் சாப்பாடு கொண்டு வந்தார்.
அதனை வாங்கி கொண்டு நடந்து வந்த அவர் மீது திருச்செந்தூரில் இருந்து குலசேகரப்பட்டனம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பேச்சிமுத்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
தூத்துக்குடி, மே. 27-
தூத்துக்குடி மாவட்ட அனைத்து பரதர் மீனவர் கூட்டமைப்பு கூட்டம் தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் ஆலய வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். அமைதியாக போராடிய அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், துப்பாக்கி சூட்டையும் வன்மையாக கண்டிக்கிறோம். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மற்றும் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.கடந்த 22-ந் தேதி நடந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கலவரத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நஷ்டஈடும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான அரசு பணியும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணமும், மேல் சிகிச்சையும் அரசு சார்பில் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகரத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும். தூத்துக்குடி நகர் பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு, வீடு புகுந்து அத்துமீறி அப்பாவி இளைஞர்களை போலீசார் கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கூட்டமைப்பு தலைவர் டெப்பா சந்திரன் கூறுகையில், ‘துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வீரபாண்டியன்பட்டினத்தில் இருந்து திருச்செந்தூர் வரை மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம்’ என்றார். *** தூத்துக்குடி, மே. 27-
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூட்டப்புளியைச் சேர்ந்த பாதிரியார் லியோ ஜெயசீலன் (வயது 70) என்பவர் காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து அவர் கூறியதாவது:-
நான் கடந்த 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்களோடு கலந்து கொண்டு அந்த ஆலைக்கு எதிராக மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டேன். மில்லர்புரம் பகுதியில் எனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மக்களோடு நடந்து சென்றேன்.
கலெக்டர் அலுவலகத்தில் சென்றபோது போலீசார் தடியடி நடத்துவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி விட்டனர். இது மிகவும் துயரமானது. நான் துப்பாக்கியால் சுடப்பட்ட போது, மக்கள் நன்மைக்காக போராடுகிறோம். இப்படி துப்பாக்கியால் சுடுகிறார்களே! என்று வேதனை அடைந்தேன். காயம் அடைந்த என்னை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த ஸ்டெர்லைட் ஆலை மக்களை விட்டு அகன்று செல்ல வேண்டும். ஆலை மூடப்பட வேண்டும். இந்த அரசு தங்களின் பதவிகளை தக்க வைப்பதற்காக இதுபோன்ற பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அரசு ஆதரவு இருப்பதால், இந்த ஆலையை நடத்தியே தீருவேன் என்று ஆலை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். விவசாயத்தை அழித்து, 13 பேர் சாவுக்கு காரணமான இந்த ஆலையை நாங்கள் நடத்த விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். * * * ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பாதிரியார் லியோ ஜெயசீலன்.
முருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விசாக தினத்துக்கு முந்தைய நாளான 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.
விசாக திருநாளான 28-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.
வைகாசி விசாக திருவிழாவின் மறுநாளான 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபடுவார்கள்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
10 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் 144 தடை உத்தரவை மேலும் நீட்டித்து இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கை பராமரித்திட இன்று (23-ந்தேதி) 1 மணி முதல் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi #BanSterlite