என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பராசக்தி"

    • பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.
    • பராசக்தி டிரெய்லர் யூடியூபில் விரைவாக 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ந்தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.

    டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, 'என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

    பராசக்தி டிரெய்லர் யூடியூபில் விரைவாக 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    இந்நிலையில் பராசக்தி படத்திற்கு கன்னட திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பராசக்தி டிரெய்லர் அற்புதமாக இருக்கிறது.

    சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாமுரளி, சுதாகொங்கரா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • பராசக்தி படம் ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.
    • நேற்று பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியானது

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது. அதே சமயம் நேற்று பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

    அந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "எதே ஜெயம் ரவியா, வில்லன் கேரக்டரா? ஒத்துக்கிட்டாரா? என்று ரஜினி போலவே பேசியது இணையத்தில் வைரலானது.

    கூலி இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, "எதே நாகர்ஜுனாவா, வில்லன் கேரக்டரா? ஒத்துக்கிட்டாரா? என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பராசக்தி படம் ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.
    • நேற்று பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியானது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.

    இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.

    டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, 'என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், பராசக்தி டிரெய்லர் யூடியூபில் விரைவாக 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு தனது சமுக வலைதளப்பாக்கத்தில் அறிவித்துள்ளது.

    • நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது
    • ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. அதர்வா, ஜெயம்ரவி, ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது. 

    இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. டிரெய்லரில், டெல்லிதான் இந்தியாவா?, எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது, 'என் செந்தமிழை காக்க பெரும்சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. 



    • பராசக்தி படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், "ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது அண்ணன் - தம்பி பொங்கல் தான்" என்று தெரிவித்தார்.

    இதையடுத்து பேசிய ரவி மோகன், "பராசக்தி சுயமரியாதையை காப்பாற்றும் படம். நானும் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களை பற்றிதான் கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன், சுயமரியாதையை மட்டும் யாரும் இழக்காதீர்கள்" என்று தெரிவித்தார்.

    • பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு தடைவிதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும்
    • அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ள படம் 'பராசக்தி'. இப்படம் முதலில் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், பின் ஜன.10க்கு மாற்றப்பட்டது. இதனிடையே தனது 'செம்மொழி' என்ற கதையை திருடி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, வெளியீட்டிற்கு தடைவிதிக்க கோரி இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அதில், தன் கதையை பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தபோது, தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்ததாக கூறியிருந்தார். மேலும் தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

    இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதொடர்பாக இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகியோர் ஜன.2ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. 

    அப்போது இணை இயக்குநர் ராஜேந்திரன் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என 'பராசக்தி' தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு தடைவிதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும் என்ற வாதத்தையும் முன்வைத்தது. 

    இதனைக்கேட்ட நீதிபதி பட வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் முந்தைய உத்தரவின்படி அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால், அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார். 

    • ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.
    • எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் ‘பராசக்தி' படக்குழு உள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்த 'பராசக்தி' படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் சிக்கலை கடந்து வந்திருக்கும் 'பராசக்தி' படத்துக்கு இந்த முறை சிவாஜி ரசிகர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'பராசக்தி' படத்தின் பெயரை மீண்டும் அதேபெயரில் எடுக்கவேண்டாம் என்று ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் ரசிகர்களின் வேண்டுகோளை படக்குழுவினர் புறந்தள்ளினார்கள்.

    இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தீ பரவட்டும் என்று சிவாஜியிடம் இருந்து சிவகார்த்திகேயன் தீப்பந்தம் பெறுவது போல ஒரு போஸ்டர் தயாரித்து, அதை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து 'பராசக்தி' படத்துக்கு விளம்பரம் செய்துள்ளார்கள். சிவாஜிகணேசன் வாரிசுகளாக பிரபு, அவரைத்தொடர்ந்து விக்ரம் பிரபு இருக்கையில், அவரது வாரிசு என்ற ரீதியில் இப்படி விளம்பரம் தேடிக்கொள்ள யார் அனுமதி கொடுத்தது? எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்ற நிலையில் 'பராசக்தி' படக்குழு உள்ளது. 'பராசக்தி' பெயரை அபகரித்ததோடு, சிவாஜி புகைப்படத்தை வணிக நோக்கம் மற்றும் சுயலாபத்துக்காக பயன்படுத்துவதை அவரது ஆன்மா மன்னிக்காது'', என்று குறிப்பிட்டுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
    • இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.

    இந்நிலையில், புத்தாண்டையொட்டி வடபழனி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    • ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ளது என வழக்கு நடந்து வருகிறது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'.

    இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வேர்ல்ட் ஆப் பராசக்தி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    11 நிமிடங்கள் விரிவாக ஓடும் இந்த இந்த வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. முன்னதாக இதே தலைப்பில் படக்குழு வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி ஒன்றையும் நடத்தியிருந்தது. 

    இதற்கிடையே இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் ‘பராசக்தி’.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது "செம்மொழி" என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து வரும் ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனால் 'பராசக்தி' திரைப்படம் குறிப்பிட்ட நாளில் திரையரங்குகளில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
    • பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதனிடையே , World of Parasakthi கண்காட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், வருகிற 25ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கண்காட்சி 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்ட்டுள்ள இந்த கண்காட்சியை பகல் 12 மணி - இரவு 10 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
    • இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே இந்த படம் 'சென்சார் போர்டு' ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. படத்தில் சில காட்சிகளுக்கு 'சென்சார் போர்டு' எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை படக்குழுவினர் ஏற்க தயாராக இல்லை என்பதால் படம் தற்போது மறு தணிக்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

    ×