என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sreeleela"
- சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா.
- புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா.
படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
தெலுங்கு திரை உலகில் மட்டும் இன்றி தமிழ் திரை உலகிலும் இந்த பாடல் ஹிட் பாடலாக அமைந்தது.
இதையடுத்து புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ராஷ்மிகா மந்தனா ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் முதல் பாகத்தில் இடம்பெற்ற ஊ... சொல்றியா மாமா என்ற பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் போல் புஷ்பா 2 படத்திலும் ஒரு பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்த பாடலுக்கு தெலுங்கு திரை உலகில் குண்டூர் காரம் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்துவரும் ஸ்ரீ லீலா நடனமாட இருக்கிறார்.
ஏற்கனவே புஷ்பா 2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் ஸ்ரீ லீலா படத்தின் பாடலுக்கு நடனமாட இருப்பது மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது.
- சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி 'புறநானூறு' படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கும் என கூறப்பட்டது.
கால்ஷீட் தொடர்பாக ஏற்பட்ட நெருக்கடியில் சுதா கொங்கரா உடன் 'புறநானூறு' படத்தில் நடிகர் சூர்யா இணைவது கேள்விக்குறியானது. இந்த நிலையில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை புறநானூறு படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவெடுத்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வருகிறது.
இப்படத்தின் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் ஏற்கனவெ வெளிவந்தது. இந்நிலையில் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்ரீலீலா தமிழில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் படமாக இருந்துவிட கூடாது என்பதால் நிராகரித்து விட்டார்
- எதிர்காலத்தை மனதில் கொண்டு அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் நடிக்கின்றனர்
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்
மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.
அதைத்தொடர்ந்து திரிஷாவுக்கு பதில் தெலுங்கில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பல படங்களில் நடித்து வரும் இளம் நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
ஸ்ரீலீலா தமிழில் தனது முதல் படம் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் படமாக இருந்துவிட கூடாது என்பதால் அந்த வாய்ப்பை தற்போது நிராகரித்து விட்டார் என்கிற தகவல் தற்போது வெளியானது.
நடன திறமை கொண்ட ஸ்ரீலீலா விஜயுடன் இணைந்து நடனம் ஆடும்போது தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பு கிடைக்கும் என தெரிந்தும் எதிர்காலத்தை மனதில் கொண்டு அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார்.
- இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்கிறார். மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், பிரேம்ஜி, பார்வதி நாயர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார் GOAT படத்தில் நடிகர் விஜய் கதாநாயகன், வில்லன் உள்ளிட்ட இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
கோட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் கதைக்கும் மாஸ்கோவுக்கும் சம்பந்தம் இருப்பதால் தான் ரஷ்யாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்
மேலும் இப்படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் திரிஷாவுக்கு பதில் தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாவை ஒரு பாடலுக்கு விஜயுடன் நடனமாட வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அந்த நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
'கோட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை யொட்டி திரையரங்குகளில் 'ரிலீஸ்' ஆக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.
- அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. சமீப காலமாக ஏராளமான படங்கள் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவுடன் ஸ்ரீலீலா இணைந்து நடித்த குண்டூர் காரம் என்ற படம் 2 மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றியை பெற்றது.
படத்தில் மகேஷ்பாபுவுடன் 'குர்ச்சி மடத்த பெட்டி' என்ற பாடலுக்கு ஸ்ரீலீலா ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா மற்றும் சதீஷ் ஆகியோர் தனியார் கல்லூரியின் கல்சுரல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். அடுத்ததாக ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றனர்.
அவர்கள் இருவரையும் நோக்கி ரசிகர்கள் குர்ச்சி மடத்த பெட்டி பாடலுக்கு இணைந்து நடனம் ஆடும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையொட்டி அந்த பாடலுக்கு சில நிமிடங்கள் இணைந்து நடனம் ஆடினர். அப்போது ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயனுக்கு நடன ஸ்டெப்களை கற்றுக் கொடுத்தார். கல்லூரி மாணவர்களின் வேண்டுதலுக்கு இணங்க மாணவர்களுக்காக கல்லூரி முதல்வரிடம் விடுமுறை கேட்டார். கல்லூரி மாணவர்களின் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.