என் மலர்

    நீங்கள் தேடியது "Sai pallavi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.


    பின்னர் 'மாரி 2', 'என்.ஜி.கே', 'கார்க்கி' என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, 'கார்த்திகேயா', 'கார்த்திகேயா 2' போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


    இதனை நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். சாய் பல்லவி இதற்கு முன்பு நாக சைதன்யாவுடன் 'லவ் ஸ்டோரி' என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரங்கூன் படத்தை இயக்கியவர் ராஜ்குமார் பெரியசாமி.
    • இவர் தற்போது 'எஸ்கே21' படத்தை இயக்கி வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்.கே.21

    இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதால் அது தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு, அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதாகவும் இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது.


    ராஜ்குமார் பெரியசாமி பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதளத்தில் கேமராவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் 'எஸ்கே21' படப்பிடிப்பு தொடங்கியதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்காலிகமாக 'எஸ்கே21' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    எஸ்கே21

    எஸ்கே21

    இந்நிலையில் 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாக படக்குழு வெளியிட்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மடோன் அஷ்வின் இயக்கி வரும் மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.


    ராஜ்குமார் பெரியசாமி - கமல் - சிவகார்த்திகேயன்

    ராஜ்குமார் பெரியசாமி - கமல் - சிவகார்த்திகேயன்


    இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் சிவார்த்திகேயன் படத்திற்கு முதல் முறையாக ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி
    • இவர் மீ டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

    'மீ டூ' இயக்கம் ஒரு காலத்தில் சினிமா துறையை உலுக்கி எடுத்தது. பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகைகள் போர்க்கொடி தூக்கியதும் 'மீ டூ' இயக்கம் தொடங்கியது. அதன்பிறகு நடிகர்கள், இயக்குனர்களால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான நடிகைகள் பலர் வெளியே வந்து துணிச்சலாக மீ டூவில் புகார் தெரிவித்தார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள திரையுலகிலும் 'மீ டூ' இயக்கம் பரவி பரபரப்பானது. பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீ டூவில் சிக்கினர்.

     

    சாய் பல்லவி

    சாய் பல்லவி


    இந்நிலையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சாய் பல்லவியிடம் மீ டூ குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சாய் பல்லவி கூறும்போது. "பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமன்றி, வாய்மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். அதுவும் மீ டூவில்தான் வரும்'' என்றார். சாய் பல்லவி இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடிகை சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘கார்கி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இவர் தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த 'கார்கி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


    குடும்பத்தினருடன் சாய் பல்லவி

    இவர் தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி கோத்தகிரியில் அமைந்துள்ள படுகர் இனத்தின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றுள்ளார். அங்கு, குடும்பத்தினருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
    • இதில் சாய் பல்லவி நடித்த இரண்டு படங்களுக்காக இவருக்கு விருது கிடைத்தது.

    இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளியான படம் "ஷியாம் சிங்க ராய்".மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    ஷ்யாம் சிங்க ராய் - சாய் பல்லவி

    ஷ்யாம் சிங்க ராய் - சாய் பல்லவி

    இந்நிலையில், 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ஷ்யாம் சிங்க ராய் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர் விருதும், லவ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதும் சாய் பல்லவிக்கு கிடைத்தது. இதனை பெற்றுக் கொண்ட சாய் பல்லவி இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    சாய் பல்லவியின் பதிவு

    சாய் பல்லவியின் பதிவு

     

    அதில், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரே வருடத்தின் இரண்டு படங்களுக்கும் விருது கிடைத்தது பாராட்டப்பட வேண்டும்! அபரிமிதமான அன்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் மற்றும் இதுபோன்ற அழகான பாத்திரங்கள் எனக்கு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன். படக்குழு மற்றும் அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் புஷ்பா 2 திரைப்படம் தயாராகி வருகிறது.
    • புஷ்பா 2 படத்தில் பழங்குடி பெண்ணாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவிக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தில் சாய்பல்லவியின் நடிப்புக்கு பாராட்டுகளும் குவிந்தன.

     

    புஷ்பா-2

    புஷ்பா-2

    இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடி இன பெண் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சாய் பல்லவி நடித்த முந்தைய படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளதால் அவரிடம் பழங்குடி பெண்ணாக நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    சாய் பல்லவி

    சாய் பல்லவி

    புஷ்பா படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தொடங்கி உள்ளனர். புஷ்பா-2 படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
    • இவர் நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கா ராய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்". நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார்.


    ஷியாம் சிங்கா ராய்

    மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கிரித்தி ஷெட்டி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    ஷியாம் சிங்கா ராய்

    இந்நிலையில் "ஷியாம் சிங்கா ராய்" திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கார்கி.
    • கார்கி திரைப்படம் ஜூலை 15- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்திருந்த திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார்.

     

    கார்கி

    கார்கி

    'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கியிருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி 'கார்கி' திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo