சாய் பல்லவி செய்ய வேண்டிய ரோல்..!- ‘மா இன்டி பங்காரம்’ படம் குறித்த ரகசியத்தை உடைத்த சமந்தா

நான் இந்த படத்தை தேர்ந்தெடுக்கவில்லை. படம்தான் என்னை தேர்ந்தெடுத்தது.
சாய் பல்லவி செய்ய வேண்டிய ரோல்..!- ‘மா இன்டி பங்காரம்’ படம் குறித்த ரகசியத்தை உடைத்த சமந்தா
Published on

நடிகை சமந்தா நடிப்பில் ‘மா இன்டி பங்காரம்’ படம் வருகிற 19-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து சமந்தா சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது தனது திரை வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் அளித்த பதில்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கே: உங்களை வெறுப்பவர்கள் குறித்து ஒரே வார்த்தையில் நீங்கள் கூறுவது?

ப: (புன்னகைத்தபடி) என்னை யாராவது வெறுக்கிறார்களா? வெறுப்பார்களா? யாருயா வெறுப்பார்கள்? என நகைச்சுவையுடன் சமந்தா பதில் அளித்தார்.

தொடர்ந்து சமந்தா கூறும்போது,‘மா இன்டி பங்காரம்’ படத்தில் எனக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி. அவர் பிசியாக இருந்ததால் இந்த படம் எனக்கு வந்தது.

நான் இந்த படத்தை தேர்ந்தெடுக்கவில்லை. படம்தான் என்னை தேர்ந்தெடுத்தது. படக்குழுவினர் எனக்காக கதையை மாற்றி அமைத்தார்கள்.

வரும் காலத்தில் பல நடிகைகள் பெண்களை மையமாக கொண்டு வரும் படங்களை அதிகமாக தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com