என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது.
- நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
ஐபோன் உற்பத்தி செய்யும் ஆப்பிள் நிறுவனம், கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், தற்போது, தனது விற்பனை பிரிவில் பணியாற்றும் டஜன் கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. நேரடி விற்பனையில் ஈடுபடாமல், மூன்றாம் தரப்பு மூலம் விற்பனையில் ஈடுபட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக ஊழியர்கள் சந்தேகிக்கிறார்கள்.
அதை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், அதிகமான வாடிக்கையாளர்களை எட்ட அதுவே சிறந்த வழி என்று தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட ஊழியர்கள், ஆப்பிள் நிறுவனத்தில் வேறு பிரிவில் விண்ணப்பிக்கவோ அல்லது வெளியேறவோ ஜனவரி 20-ந் தேதி கடைசிநாள் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர் நிறுவனத்தின் 20 முதல் 30 ஆண்டுகள் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
- இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.
கடந்த மாதம் இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் அறிவித்த மிகப்பெரிய பணிநீக்கங்கள் குறித்த முக்கிய விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
நிறுவனம் சுமார் 14,000 கார்ப்பரேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த நிலையில், இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது மென்பொருள் பொறியாளர்கள்தான் என்று தெரிவித்துள்ளது.
அதாவது, 14,000பேரில் 10 இல் 4 பேர் (சுமார் 1800 க்கும் அதிகமான) பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. மென்பொருள் மேம்பாட்டு பொறியாளர்கள் குறிப்பாக பாதிக்கப்பட்டனர்.
பொறியாளர்களைத் தவிர, கேமிங், விளம்பரங்கள் மற்றும் பரிசோதனைத் துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த பணிநீக்கங்கள் அமேசானின் 31 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரியதாகும்.
பணிநீக்கங்களுக்கு பின்னால் உள்ள முக்கிய காரணம் பொருளாதாரம் அல்லது செயற்கை நுண்ணறிவு அல்ல என்று அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜெஸ்ஸி கூறினார்.
இது நிறுவனத்தின் கலாச்சாரத்துடன் தொடர்புடைய மாற்றம் என்று அவர் தெரிவித்தார். நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் ஆக மாற்றுவது, தேவையற்ற துறைகளைக் குறைப்பது மற்றும் வேகமாக வேலை செய்வது எங்கள் நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை, 231 தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1,13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
- சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான தகவல்கள் கிடைக்கும்.
- பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் இருந்தால் போதும் நாட்டின் எந்த பகுதிக்கும் யாரிடமும் வழி கேட்காமல் சென்று விடலாம். அந்த அளவிற்கு பிரபல வழிகாட்டி சேவை தளமாக கூகுள் மேப்ஸ் உள்ளது. தனது செயலில் புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் இணைத்துள்ளது. கூகுள் ஏ.ஐ.யான ஜெமினியுடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும், மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கூகுள் மேப்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள் குறித்தான தகவல்கள் கிடைக்கும். விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும். இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்காக, மேப்ஸ் புதிய அவதார் வசதியையும் வழங்குகிறது. பயண மேலாண்மையை எளிதாக்கும் வகையில், கூகுல் வாலட் இணைப்பும் வழங்கப்படுகிறது.
கூகுள் மேப்ஸ் மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் வாங்கும் வசதி உள்ளிட்டவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.
- பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
- எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான்.
கூகுள் உடைய தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ உடைய புழக்கம் அதிகரித்து வருகிறது.
அண்மையில் பிசிசிக்கு அவர் அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு பிழைகளை செய்ய வாய்ப்புள்ளது. எனவே அவை சொல்லும் அனைத்தையும் கண்ணை மூடித்தனமாகக் நம்பிவிடக் கூடாது. பயனர்கள் அவற்றை மேலும் ஒரு தகவல் ஆதாரமாகக் கருத வேண்டும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் முழு பலன்களையும் மக்கள் பெற வேண்டுமானால், ஏஐ தரும் தகவல்களுடன் மற்ற நம்பகமான தகவல் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து பேசிய அவர், இந்த ஏஐ முதலீட்டு குமிழி வெடித்தால் எந்தவொரு நிறுவனமும் தப்ப முடியாது, எங்களுக்கும் சேர்த்துதான். இணையதளம் அறிமுகமானபோது அதில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன. அதன் தாக்கம் ஆழமானது. அது போல தான் ஏஐ துறையும்" என்று தெரிவித்தார்.
மேலும் ஏஐ அடிப்படையிலான சூப்பர் சிப்களை தாங்கள் உருவாக்கி வருவதாகவும், ஓபன் ஏஐ உடைய சாட்ஜிபிடி போட்டியை எதிர்கொள்ள ஆல்பாபெட் தனது முதலீடுகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
- கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
- இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கை வெளியிட்டுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளம்,சாட் ஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் உலகமெங்கும் பல இடங்களில் முடங்கின.
இவை, இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேர் சேவையின் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கையின்படி, இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் முடக்கம் குறித்த புகார்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சர்வர் இணைப்பு தோல்விகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.
இந்த கோளாறை உறுதி செய்துள்ள கிளவுட்பிளேர் நிறுவனம் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
- அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.
- டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ. உள்ளன. இந்தநிலையில் அடுத்த மாதமான டிசம்பாில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்தாண்டு ஜூலையில் விலை உயர்த்தப்பட்டிருந்தநிலையில் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த காரணம்: 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமல்படுத்தப்படும் தேதி: டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு குறித்து கவலை தெரிவித்த நிலையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும்.
- அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
- ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு காரணமாக கூறப்படுகிறது.
உலகெங்கிலும் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 218 நிறுவனங்கள் 1,12,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.
அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.
- மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் நிபுணர்களை அதிநவீன கருவிகளை பயன்படுத்தி நிபுணத்துவம் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஜெமினி ஏஐ ப்ரோ திட்டம் பிரீமியம் அம்சங்களின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூகுளுடன் இணைந்து நம்ப முடியாத சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்களுக்கு 18 மாதங்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் கூகுள் ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை பயன்படுத்த முடியும். இந்திய இளைஞர்களை ஏஐ சார்ந்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, கூகுளின் மிகவும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சேவைகளை இலவசமாக அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
18 மாத காலத்தில் தோராயமாக ரூ. 35,100 மதிப்புள்ள ஜெமினி ஏஐ ப்ரோ சேவை, ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட பயனர் தளத்திற்கு (18 முதல் 25 ஆண்டுகள் வரை) விரிவுபடுத்தப்பட்டு பின்னர் நாடு தழுவிய அளவில் விரிவடையும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனம் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் இணைந்து ஒரு வருட இலவச பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ சந்தாவை வழங்கிய நிலையில், தற்போது ஜியோ இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சலுகை விவரங்கள்
சலுகை - 18 மாத கூகிள் ஜெமினி AI ப்ரோ திட்டம் — இலவசம்
தொடக்க தேதி - 30 அக்டோபர் 2025
இலக்கு - 18 முதல் 25 வயதுடைய ஜியோ பயனர்கள்
தேவை - ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஜியோவின் அன்லிமிடெட் 5G திட்டங்களில் வாடிக்கையாளர்கள் (ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு)
சலுகையை பெறுவது எப்படி?
மைஜியோ செயலி வழியாக (முகப்புப் பக்கத்தின் மேலே உள்ள "இப்போது உரிமை கோருங்கள்" என்ற பேனரைப் பாருங்கள்)
இந்த சலுகை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளம் நிபுணர்களை அதிநவீன கருவிகளை பயன்படுத்தி நிபுணத்துவம் பெறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெமினி ஏஐ ப்ரோ திட்டம் பிரீமியம் அம்சங்களின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.
ஜெமினி 2.5 ப்ரோ: சிக்கலான பகுத்தறிவு, குறியீட்டு முறை மற்றும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான ஏஐ மாடலை அணுகுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற முடியும்.
கிளவுட் ஸ்டோரேஜ்: கூகுள் புகைப்படங்கள், கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயில் முழுவதும் 2TB வரை ஒருங்கிணைந்த கிளவுட் ஸ்டோரேஜை அனுபவிக்கலாம்.

மேம்பட்ட ஏஐ உள்ளடக்க உருவாக்கம்: ஊடகங்களை உருவாக்குவதற்கு சக்திவாய்ந்த மாடல்களைப் பயன்படுத்துங்கள். இதில் Veo 3.1, Nano Banana போன்ற மாடல்களைப் பயன்படுத்தி ஏஐ வீடியோ, புகைப்படங்கள் உருவாக்கலாம்.
கூகுள் பணியிடத்தில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன்: ஜிமெயில், டாக்ஸ் மற்றும் விட்ஸ் போன்ற பிரபலமான கூகுள் பயன்பாடுகளுடன் ஜெமினியை நேரடியாக ஒருங்கிணைத்து, மின்னஞ்சல்களை வரைதல், ஆவணங்களைச் சுருக்குதல் மற்றும் வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்குதல் ஆகியவற்றில் உடனடி உதவியை வழங்குவதை அனுபவிக்க முடியும்.
ஏஐ கிரெடிட்: வளம் மிகுந்த பணிகளுக்குப் பயன்படுத்த மாதாந்திர 1,000 ஏஐ கிரெடிட்களைப் பெறலாம்.
- அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக இருக்கும் OpenAI, இந்திய பயனர்களுக்கு மிகப்பெரிய சலுகையை அறிவித்துள்ளது.
இந்தியாவின் அதன் மேம்பட்ட பிரீமியம் சந்தா திட்டமான 'ChatGPT Go' ஐ ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
நவம்பர் 4 முதல் தொடங்கும் சிறப்பு விளம்பர காலத்தில் பதிவு செய்யும் அனைத்து பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ChatGPT Go என்றால் என்ன?
ChatGPT Go என்பது சமீபத்தில் OpenAI ஆல் தொடங்கப்பட்ட பிரீமியம் சந்தா திட்டமாகும். இதன் மூலம், ChatGPT இன் அதிநவீன GPT-5 மாடலின் அடிப்படையில் பயனர்கள் சேவைகளைப் பெறலாம்.
இதில் அதிக செய்தி அனுப்பும் வரம்பு, சிறந்த பட உருவாக்கம், அதிக கோப்புகள் மற்றும் படங்களை பதிவேற்றும் வசதி மற்றும் உரையாடல்களை நீண்ட நேரம் சாட்பாட் நினைவில் வைத்திருக்கும் வசதி போன்ற மேம்பட்ட அம்சங்கள் அடங்கும்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் இந்த சாந்தா திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 4 முதல் இது இலவசமாக வழங்கப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.
- ChatGPT-யுடன் தீவிர உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள்.
- 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனிதர்களுக்கு இடையிலான தொடர்பு முன்னெப்போதும் இல்லாத அளவு எளிமையாகி உள்ளது.அதேசமயம் முன்னெப்போதும் இல்லாத அளவு நவீன யுக மனிதர்கள் தனிமைப்பட்டு போயிருக்கின்றனர்.
மேலும் இளைய தலைமுறையினரிடையே மனத்திடம் குறைந்து சிறிய விஷ்யங்களுக்கே தற்கொலை வரை செல்லும் போக்கும் அதிகரித்துள்ளது.
இதை மெய்ப்பிக்கும் விதமான முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான OpenAI ஒரு அதிர்ச்சியூட்டும் தரவுகளை வெளியிட்டுள்ளது.
அதன் Chatbot சேவையான ChatGPT-ஐ பயன்படுத்தும் ஒரு மில்லியனுக்கும் (10 லட்சத்திற்கும்) அதிகமான பயனர்கள் ஒவ்வொரு வாரமும் தற்கொலை எண்ணங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தரவு, மக்கள் மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் AI-ஐ சார்ந்து இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

OpenAI மதிப்பீடுகளின்படி, ChatGPT-ஐ தற்போது வாரத்திற்கு 800 மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர். அந்த பயனர்களில் 0.15 சதவீதம் பேர் ஒவ்வொரு வாரமும் தற்கொலை உரையாடல்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் அதிகப்படியான பயனர்கள் ChatGPT-யுடன் தீவிர உணர்ச்சிப் பிணைப்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள். மில்லியன் கணக்கான பயனர்களிடம் மனநலக் கோளாறுகளின் அறிகுறிகள் காணப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்கொலை எண்ணங்கள் மற்றும் மன நல பிரச்சனைகள் குறித்து ChatGPT பதிலளிக்கும் விதத்தை மேம்படுத்த 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.
ChatGPT இன் புதுப்பிக்கப்பட்ட GPT-5 மாடல் இதுபோன்ற உணர்திறன் வாய்ந்த தலைப்புகளில் மிகவும் சிறப்பாக செயல்படுவதாக OpenAI தெரிவித்துள்ளது.
தற்கொலை தொடர்பான உரையாடல்களில் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவதில் பழைய மாடல் 77 சதவீதம் வெற்றி பெற்றிருந்தாலும், புதிய மாடல் 91 சதவீத துல்லியத்துடன் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஆம்ப்ளிபையர், எச்.டி. ஆடியோ என ஒலி தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- டேப்லெட் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
லெனோவா நிறுவனம் குரோம்புக் சீரிசில் முற்றிலும் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. டூயட் டேப்லெட் என அழைக்கப்படும் புதிய டேப்லெட் மீடியாடெக் கோம்பேனியோ 838 பிராசஸரில் இயங்குகிறது. இதில் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இத்துடன் கூகுள் ஒன் கிளவ்டு ஸ்டோரேஜ் மூலம் 100 ஜிபி வரை இலவச ஸ்டோரேஜ் பெறலாம். புகைப்படங்கள் எடுக்க முன்பக்கம் 5MP கேமராவும், பின்பக்கம் 8MP கேமராவும் உள்ளன. கூகுள் குரோம்புக் உடன் ஜெமினி சேவையும் இடம் பெற்றுள்ளது.
மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ஆம்ப்ளிபையர், எச்.டி. ஆடியோ என ஒலி தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் முழு சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
அளவீடுகளில் இது 21.81 செ.மீ. நீளத்தில் 1920x1200 பிக்சலுடன் 21.05 மி.மீ. தடிமன் கொண்ட திரை, 400 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5.3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட்டின் எடை 1.1 கிலோ கிராம் ஆகும். இந்திய சந்தையில் இந்த டேப்லெட் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் பயன்படுத்தலாம்
- விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.
இதில் சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கூகுள் குரோமுக்கு போட்டியாக ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி அட்லஸ் வெப் பிரவுசர் களம் இறங்கியுள்ளது.
தற்போது, அட்லஸ் வெப் பிரவுசர் ஆப்பிள் MacOS பயனர்கள் இதை பயன்படுத்தக்கூடிய நிலையில், விரைவில் Windows, iOS மற்றும் Android இயங்குதளங்களிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் குரோமைப் போலவே இதுவும் Chromium based பிரவுசர் என்பதால், கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூகுளுக்கு சுமார் $150 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






