என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.
    • புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ வாட்ச் S என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டைலிஷ் வட்ட-வடிவ டயல், மிகமெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது. இது வெறும் 8.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கிறது. இதன் எடை சுமார் 35 கிராம் ஆகும்.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய 16-சேனல் ஆப்டிகல் பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் 8-சேனல் ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய ஒப்போ வாட்ச் S மாடலில் ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் கேஸ், சிறந்த இருப்பிட துல்லியத்திற்கான இரட்டை அதிர்வெண் GPS மற்றும் கொழுப்பை எரிக்கும் பகுப்பாய்வை வழங்கும் AI ஸ்போர்ட்ஸ் பயிற்சியாளரையும் கொண்டுள்ளது.

    கூடுதலாக, இது ECG, இதயத் துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன், மணிக்கட்டு வெப்பநிலை, தூக்கம் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட 13 இன்டிகேட்டர்களை அளவிடும் வசதியை வழங்குகிறது.



    புதிய ஒப்போ வாட்ச் S மாடல் வைப்ரன்ட் கிரீன், ரிதமிக் சில்வர் மற்றும் ரேசிங் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ வாட்ச் S சில்வர் மற்றும் பிளாக் வேரியண்ட்கள் CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ. 16,030) என்றும் டூயல்-டோன் கிரீன் வேரியண்ட் CNY 1,499 (இந்திய மதிப்பில் ரூ. 18,498) என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • அண்மையில் நாடு தழுவிய அளவில் BSNL நிறுவனத்தில்'4G' சேவை தொடங்கபட்டது.
    • தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம் அண்மையில் நாடு தழுவிய அளவில் '4G' சேவையை தொடங்கியது.

    இதனையடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினர். இந்நிலையில், தீபாவளியொட்டி சிறப்பு சலுகை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

    அதன்படி ரூ.1 செலுத்தி புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கினால், தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால் ப்ளானை பெறலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    முதல் ஒரு மாதத்திற்கு இந்த ப்ளான் செல்லுபடியாகும் என்றும் நவம்பர் 15 வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.
    • சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.

    ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.

    இந்தியாவை சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவை பெரும் வெற்றி பெற்றிருப்பது பெருமையான தருணம் ஆகும். பெர்ப்ளெக்சிட்டி சாதாரண சாட்பாட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Cha), மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக இருக்கிறது.

    மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏஐ செயலியின் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் இதன் வெற்றியை எடுத்துக்காட்டுகின்றன.

    தீபாவளி சீசனில் பெர்ப்ளெக்சிட்டியின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.

    • இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
    • பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    18 வயதிற்குட்பட்ட சிறார்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சங்கள் எழுந்தன.

    இந்நிலையில், திரைப்படங்களுக்கு PG-13 ரேட்டிங் இருப்பது போல், இன்ஸ்டாகிராமிலும் புதிய நடைமுறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

    இதன்மூலம் அபாயகரமான மற்றும் பெரியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் உள்ளடக்கங்களை இனி 18 வயதுக்குக் குறைவானவர்களால் பார்க்க முடியாது. அதன்படி பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டை காட்சிகள் அல்லாத வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பெற்றோரின் அனுமதியின்றி இன்ஸ்டாகிராமில் இதற்கான வசதிகளை மாற்ற முடியாது

    இந்த கட்டுப்பாடுகளை விரும்பும் பெற்றோருக்கு, இன்ஸ்டாகிராமில் Limited Content என்ற வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. சிறார்கள் தங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் எனக் கூறினாலும் அதனை கண்டறிய அதற்கான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் விரைவில் இந்த நடைமுறை அறிமுகமாகிறது

    • புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது.
    • ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.

    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X300 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ ஸ்மார்ட்வாட்ச் அலுமினிய அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் GT2 என அழைக்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 2.5D வளைந்த 2.07-இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் சதுரங்க டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ப்ளூடூத், இசிம் (eSIM) ஆப்ஷன்களில் வருகிறது.

    விவோ வாட்ச் GT2 மாடல் ப்ளூ ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் படிப்புகளுடன் 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது. இந்த வாட்ச் பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இத்துடன் பொருந்தக்கூடிய வாட்ச் டயல்கள் உள்ளன.

    மேலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது. இசிம் பயன்படுத்தும் பட்சத்தில், இது 8 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.

    விலை விவரங்கள்:

    புதிய விவோ வாட்ச் GT2 புளூ, ஸ்பேஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் வண்ணங்களில் வருகிறது. இதன் ப்ளூடூத் வேரியண்ட் விலை CNY 499 (இந்திய மதிப்பில் ரூ. 6,220) ஆகவும், இசிம் வேரியண்ட் விலை CNY 699 (இந்திய மதிப்பில் ரூ. 8,710) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு மின்னஞ்சல்கள் வருகின்றன
    • அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

    வரிப் திரும்பப் பெறுதல் அல்லது இ-பான் கார்டை பதிவிறக்கம் செய்யுமாறு வரும் போலியான மின்னஞ்சல்கள் மற்றும் இணையதளங்கள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருமான வரித் துறை ஒருபோதும் மின்னஞ்சல் மூலம் உங்களின் PIN, கடவுச்சொற்கள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட ரகசியத் தகவல்களைக் கோராது.

    இந்த மோசடி மின்னஞ்சல்கள், அதிகாரப்பூர்வ இணையதளம் போல இருக்கும் போலி இணையதளங்களுக்கு உங்களை அழைத்துச் சென்று, உங்களின் நிதித் தகவல்களைத் திருடும் Phishing மோசடியின் ஒரு பகுதியாகும்.

    சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் அல்லது இணைப்புகளைத் திறக்க வேண்டாம்.

    எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, புதுப்பிக்கப்பட்ட ஆன்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும்.

    இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை webmanager@incometax.gov.in மற்றும் incident@cert-in.org.in ஆகிய முகவரிகளுக்கு அனுப்பிவிட்டு, உடனடியாக அந்த மின்னஞ்சலை நீக்கிவிடுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தியுள்ளது.  

    • 164 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளையும், போன் அழைப்புகளை ஏற்று பேசவும், மறுக்கவும் உதவும்.
    • இந்த கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், எதிரில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்யலாம்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவான ஸ்மார்ட் கண் கண்ணாடிகள் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட் கிளாஸ் மாடல் சாட் ஜிபிடியில் இயங்கக்கூடியது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி மூலம் உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைந்து, பல்வேறு பணிகளை செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    குறிப்பாக, 164 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் பணிகளையும், போன் அழைப்புகளை ஏற்று பேசவும், மறுக்கவும் உதவும். கூடுதலாக, இந்த கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதால், எதிரில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்யலாம். அதேபோல நம் அருகில் பேசுபவர்களின் உரையைகூட வாய்ஸ் ரெக்கார்டிங் முறையில், குரல் ஒலியை ஆங்கில வார்த்தைகளாகவும் மாற்றி, ஸ்மார்ட்போனில் பதிவு செய்ய முடியும்.

    இவ்வளவு வசதிகளுடன், கண்களை பாதிக்காத வகையில் UV பாதுகாப்பு, Blue Light பாதுகாப்பு போன்ற கண் ஆரோக்கிய விஷயங்களை கொண்டுள்ளது. 200 மணிநேரம் இயங்கும் இந்த ஏ.ஐ. ஸ்மார்ட் கண் கண்ணாடியின் விலை ரூ.8,079 ஆகும். இந்த ஸ்மார்ட் ஏஐ கண் கண்ணாடி தண்ணீரிலும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    • புதிய மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் பெயருக்கு ஏற்றார்போல் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்டிரீம் பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் 395 PPI வழங்கப்பட்டு இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் G06 பவர் ஸ்மார்ட்போன் மலிவு விலை ஸ்மார்ட்போன்கள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 50MP கேமரா, 7000mAh பேட்டரி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை 1 டிபி வரை நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 6.88 இன்ச் HD+ ஸ்கிரீன், 450 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.

    புதிய மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் பெயருக்கு ஏற்றார்போல் 7000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G81 எக்ஸ்டிரீம் பிராசஸர் மற்றும் கிராபிக்ஸ் 395 PPI வழங்கப்பட்டு இருக்கிறது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.

    இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.

    பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்

    இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. 

    • இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம்.
    • அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்.

    இந்தியாவின் அரசு தொலைதொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. கடந்த மாத இறுதியில் நாடு முழுவதுமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணையவசதியை பெறுவதற்கான 4ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் அடுத்த எட்டு மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் டவர்களும் 5ஜி-யாக மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், "இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி செல்போன் டவர்கள் அனைத்தும் 5ஜி-யாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும்" என்றார்.

    • இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது.
    • நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.

    வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல புதுமையான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில், பயனர்களுக்கு அமேசான் பிரைமை வழங்கும் சில திட்டங்களும் உள்ளன. இந்த இரண்டு திட்டங்களும் ரூ.696 மற்றும் ரூ.996 விலையில் கிடைக்கின்றன. பயனர்களுக்கு அமேசான் பிரைம் சந்தா வழங்கும் இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன.

    இரு ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகின்றன. இந்த டேட்டா 28 நாட்களுக்கு 300 ஜிபி என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகளை தொடர்ந்து பாரப்போம்.

    வோடபோன் ஐடியா நான்-ஸ்டாப் ஹீரோ திட்டங்கள்:

    வோடபோன் ஐடியா ரூ.696 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.

    இந்த திட்டத்தில் 56 நாட்களுக்கான அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் HD (720p) தரத்தில் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். மேலும் அமேசான் தளத்தில் ஒரு நாள் இலவச டெலிவரி சேவைகளை பெறலாம். 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர், நாடு முழுக்க பல நகரங்களில் இந்தத் திட்டத்தின் மூலம் 5ஜி டேட்டா கனெக்டிவிட்டி பெற முடியும்.

    வோடபோன் ஐடியா ரூ.996 திட்டம் அன்லிமிட்டெட் இன்கமிங், தினமும் 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிட்டெட் டேட்டா (300 ஜிபி/28 நாட்கள்) ஆகியவற்றுடன் பயனர்களுக்கு வருகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா வழங்கப்படுகிறது.

    • விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில், ஆப்களில் தனித்தனி ஆகும்.
    • Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது.

    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் விளம்பரங்களை தவிர்க்க சந்தா முறையை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

    முதலில் இங்கிலாந்தில் அடுத்த சில வாரங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா அறிவித்துள்ளது.

    சமீபத்திய இங்கிலாந்து ஒழுங்குமுறை வழிகாட்டுதலுக்கு இணைங்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

    விளம்பரங்கள் இல்லாத சந்தாவின் விலை இணையத்தில் மாதம் £2.99 மற்றும் iOS மற்றும் Android ஆப்களில் பயன்படுத்துவோருக்கு மாதம் £3.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் Account Center இல் சேர்க்கப்படும் ஒவ்வொரு கூடுதல் கணக்கிற்கும் இணையத்தில் £2 , iOS/Android-இல் £3 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.

    இதன் மூலம் Account Center இல் இணைக்கப்பட்ட அனைத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளிலும் விளம்பரங்கள் தோன்றாது. இந்த நடைமுறை வருங்காலங்களில் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    ×