என் மலர்
நீங்கள் தேடியது "Lenovo"
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது.
- 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.
லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் முன்னதாக 2024 சர்வதேச நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லெனோவோ டேப் M11 மாடல் 7.15mm அளவில், 465 கிராம் எடையில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 11 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, 1920x1200 WUXGA ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டி.யு.வி. ரெயின்லாந்து மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் HD சான்று பெற்றுள்ளது. இந்த டேப்லெட் மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், மாலி G52 GPU, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
லெனோவோ டேப் M11 அம்சங்கள்:
11 இன்ச் 1920x1200 WUXGA டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர்
மாலி G52 GPU
8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
13MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13
குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி
3.5mm ஆடியோ ஜாக், வைபை, ப்ளூடூத் 5.1
7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி
15 வாட் சார்ஜிங் வசதி
லெனோவோ டேப் பென் மற்றும் கீபோர்டு சப்போர்ட்
லெனோவோவின் புதிய டேப் M11 மாடல் சீஃபார்ம் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் நடைபெறுகிறது.
- இத்தகைய வசதி கொண்ட முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றது.
- டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
லெனோவோ நிறுவனம் தனது புதிய தின்க்பேட் லேப்டாப் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய கான்செப்ட் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சம் அதில் உள்ள டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே (Transparent Display) ஆகும். இத்தகைய வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் முதல் லேப்டாப் இது என்ற பெருமையை புதிய லெனோவோ தின்க்பேட் பெற்று இருக்கிறது.
புதிய தின்க்பேட் கான்செப்ட்-இல் 17.3 இன்ச் அளவில் மைக்ரோ எல்.இ.டி. டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ப்ளே பார்டர்லெஸ் டிசைன் மற்றும் கண்ணாடி போன்று அதன் பின்புறம் இருப்பவற்றை பார்க்க செய்கிறது. இத்துடன் டிரான்ஸ்பேரன்ட் கீபோர்டு பகுதி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதில் மைக்ரோ எல்.இ.டி. தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இதனால் நிறங்கள் உண்மைக்கு நிகராகவும், அதிகளவு அடர்த்தியாகவும் பிரதிபலிக்கிறது. இந்த டிஸ்ப்ளே 1000 நிட் பிரைட்னஸ் கொண்டிருப்பதால், நேரடி சூரிய வெளிச்சத்திலும் காட்சிகளை சீராக பார்க்க செய்கிறது.
டெக் வொர்ல்டு 2023 நிகழ்வை ஒட்டி, லெனோவோ மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் அடாப்டிவ் டிஸ்ப்ளே கான்செப்ட்-ஐ காட்சிப்படுத்தின. இந்த கான்செப்ட்-ஐ பயனர் தேவைகளுக்கு ஏற்ப பல வடிவங்களில் மடித்துக் கொள்ளலாம். புதிய தின்க்புக் டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே லேப்டாப் கான்செப்ட் எப்போது உற்பத்தி நிலையை அடையும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் லேப்டாப் மாடல்கள் பல்வேறு வெர்ஷன்களில் கிடைக்கிறது.
- லெனோவோ LOQ சீரிஸ் கேமிங் லேப்டாப்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய LOQ கேமிங் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய லேப்டாப்களில் அதிகபட்சம் 16 ஜிபி வரையிலான DDR5 ரேம், 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13th Gen இன்டெல் கோர் அல்லது ஏஎம்டி ரைசன் 7000 சீரிஸ் பிராசஸர், NVIDIA ஜிஃபோர்ஸ் RTX4060 லேப்டாப் GPU வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் லெனோவோ நிறுவனம் யோகாபுக் 9i மாடலை அறிமுகம் செய்து, லீஜியன் ப்ரோ சீரிஸ் மாடல்களை 13th Gen மற்றும் ஏஎம்டி ரைசன் 7000 சீரிஸ் பிராசஸர்களுடன் அப்டேட் செய்தது.
லெனோவோ LOQ கேமிங் லேப்டாப் அம்சங்கள்:
15.6 இன்ச் WQHD 2560x1440 பிக்சல் IPS டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட்
13th Gen இன்டெல் கோர் i7 பிராசஸர்
Nvidia ஜிஃபோர்ஸ் RTX4050 அல்லது Nvidia ஜிஃபோர்ஸ் RTX4060 GPU
12th Gen இன்டெல் கோர் i5 பிராசஸர்
Nvidia ஜிஃபோர்ஸ் RTX4050, RTX4060 அல்லது RTX3050 GPU
ஏஎம்டி ரைசன் 7 ஆக்டா கோர் பிராசஸர்
Nvidia ஜிஃபோர்ஸ் RTX3050 அல்லது RTX4050 GPU
8 ஜிபி DDR5 ரேம், 512 ஜிபி PCIe NVMe SSD
Nvidia G-Sync
60 வாட் ஹவர் பேட்டரி
சூப்பர் ரேபிட் சார்ஜ் சப்போர்ட்
4-ஜோன் RGB பேக்லிட் கீபோர்டு
வின்டோஸ் 11 ஹோம்
2x2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
FHD 1080 பிக்சல் வெப்கேமரா
லெனோவோ கேமிங் கீபோர்டு
ப்ளூடூத் 5.1
விலை மற்றும் விற்பனை விவரம்:
லெனோவோ LOQ சீரிஸ் லேப்டாப்களின் விலை ரூ. 78 ஆயிரத்து 990 என்று துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லெனோவோ LOQ லேப்டாப்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதுதவிர லெனோவோ வலைதளம், தேர்வு செய்யப்பட்ட ரிடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வருகிறது.
- லெனோவோ நிறுவனம் தனது யோகாபுக் 9i மாடலை முதன்முதலில் 2023 CES-இல் அறிவித்தது.
- புதிய யோகாபுக் 9i மாடலில் டூயல் டச் ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோ இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய யோகாபுக் 9i மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா 2023-இல் அறிவிக்கப்பட்ட யோகாபுக் 9i மாடல் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய லெனோவோ யோகாபுக் 9i மாடலில் இன்டெல் இவோ பிளாட்ஃபார்ம், புதிய தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் இரண்டு 13.3 இன்ச் 2.8K OLED பியூர்சைட் டிஸ்ப்ளே, டால்பி விஷன் HDR சப்போர்ட் உள்ளது. இதில் உள்ள டூயல் ஸ்கிரீன் தொழில்நுட்பம் லேப்டாப், டேப்லெட் மற்றும் டென்ட் மோட் என தேவைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. மெல்லிய டிசைன் கொண்டிருப்பதால், இந்த லேப்டாப் எங்கும் பயன்படுத்தலாம்.
லெனோவோ யோகாபுக் 9i அம்சங்கள்:
2x 13.3-இன்ச் 2.8K OLED டச் ஸ்கிரீன், 400 நிட்ஸ் பிரைட்னஸ்
13th Gen இன்டெல் கோர் i7-1355U பிராசஸர்
இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ்
16 ஜிபி LPDDR5X ரேம்
1 டிபி PCIe Gen 4 SSD
வின்டோஸ் 11 / வின்டோஸ் 11 ப்ரோ
2x2 வாட் + 2x1 வாட் போவர்ஸ்&வில்கின்ஸ் ஸ்பீக்கர்
டால்பி அட்மோஸ் சப்போர்ட்
FHD IR+ RGB வெப்கேமரா
பேஸ் பென் 4.0, ஃபோலியோ ஸ்டான்ட், ப்ளூடூத் கீபோர்டு
3x USB C போர்ட்கள், ப்ளூடூத் 5.2, வைபை 6E
80 வாட் ஹவர் பேட்டரி
விலை மற்றும் முன்பதிவு விவரங்கள்:
லெனோவோ யோகாபுக் 9i மாடல் டைடல் டியல் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடலின் முன்பதிவு லெனோவோ வலைதளம் மற்றும் ஸ்டோர்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
- லெனோவோ நிறுவனத்தின் டேப் M10 5ஜி மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.
- லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இரண்டு விதமான மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப் M10 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 13MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் உள்ளது.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன், டேப் பென் பிளஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 7700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் லெனோவோ டேப் M10 5ஜி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கான வீடியோ ஸ்டிரீமிங் வழங்குகிறது.
லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்:
10.61 இன்ச் LCD ஸ்கிரீன், 1200x2000 பிக்சல் ரெசல்யூஷன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
4 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம்
6 ஜிபி ரேம், 128 ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ்
13MP செல்ஃபி கேமரா
8MP பிரைமரி கேமரா
7700 எம்ஏஹெச் பேட்டரி
ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
3.5mm ஆடியோ ஜாக்
டூயல் ஸ்பீக்கர்கள்
டால்பி அட்மோஸ்
மைக்ரோபோன்
டேப் பென் பிளஸ் சப்போர்ட்
இந்திய சந்தையில் லெனோவோ டேப் M10 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 24 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 26 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- லெனோவோ டேப் M10 5ஜி மாடலில் முக அங்கீகார வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- புதிய லெனோவோ டேப் M10 மாடலில் 7700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப் M10 5ஜி மாடலில் 10.61 இன்ச் 2K ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. மாறாக முக அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 7700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கு வீடியோ ஸ்டிரீமிங் பேக்கப் வழங்குகிறது.
லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்:
10.61 இன்ச் 2000x1200 பிக்சல் 2K எல்சிடி ஸ்கிரீன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619 GPU
4ஜிபி, 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
13MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா, ToF சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன்
5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி 2.0 டைப் சி
7700 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லெனோவோ டேப் M10 5ஜி டேப்லெட் அபைஸ் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- லெனோவோ நிறுவனத்தின் புது லேப்டாப் மாடல் நான்கு விதங்களில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.
- இதில் 14 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோ இந்தியா நிறுவனம் யோகா 9i, 2-இன்-1 லேப்டாப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. யோகா சிரிசில் அறிமுகமாகி இருக்கும் புது 2-இன்-1 லேப்டாப் 13th Gen இண்டெல் கோர் பிராசஸர் மற்றும் இண்டெல் இவோ சான்று பெற்று இருக்கிறது.
புதிய லெனோவோ யோகா 9i மாடலை- லேப்டாப், ஸ்டாண்ட், டெண்ட் அல்லது டேப்லெட் என நான்கு விதமாக பயன்படுத்த முடியும். இதில் 14-இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 4K ரெசல்யூஷன் வசதி, டால்பி விஷன் சான்று வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் லெனோவோ பிரெசிஷன் பென் 2 வழங்கப்படுகிறது. இதில் உள்ள 13th Gen இண்டெல் கோர் i7-1360P பிராசஸர், 16 ஜிபி LPDDR5 5 ரேம், 1 டிபி M.2 எஸ்எஸ்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 2MP ஹைப்ரிட் FHD/ இன்ஃப்ராரெட் கேமரா, ஸ்மார்ட் ஃபேஷியல் ரெகோக்னிஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 75 வாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் பத்து மணி நேரத்திற்கு பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.
லெனோவோ யோகா 9i அம்சங்கள்:
14 இன்ச் 4K 3840x2400 பிக்சல் / 2.8K 2880x1080 பிக்சல் OLED 60Hz டச் ஸ்கிரீன்
13th Gen இண்டெல் கோர் i7 1360P பிராசஸர்
இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ்
அதிகபட்சம் 16 ஜிபி LPDDR5 ரேம்
2x யுஎஸ்பி சி தண்டர்போல்ட் 4
1x யுஎஸ்பி ஏ ஜென் 3.2
1x யுஎஸ்பி சி ஜென் 2
ஹெட்போன் ஜாக்
கிளாஸ் டச்பேட்
2MP FHD+ IR ஹைப்ரிட் கேமரா
4x போவர்ஸ் & வில்கின்ஸ் ஸ்பீக்கர்
டால்பி அட்மோஸ் வசதி
லெனோவோ பிரெசிஷன் 2
வைபை 6E, ப்ளூடூத் 5.2
75 வாட் ஹவர் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லெனோவோ யோகா 9i 2-இன்-1 லேப்டாப்கள் ஸ்டாம் கிரே மற்றும் ஓட்மீல் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 74 ஆயித்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை லெனோவோ, க்ரோமா மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. ஜனவரி 29 ஆம் தேதி முதல் அமேசான் தளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- லெனோவோ நிறுவனத்தின் புது டேப்லெட் 5ஜி கனெக்டிவிட்டி, குவாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
- இந்த டேப்லெட் 7700 எம்ஏஹெச் பேட்டரி, 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
லெனோவோ டேப் P11 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் P11 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை விட புது மாடலில் அதநவீன ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோ டேப் P11 5ஜி மாடலில் 11 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உள்ளிட்ட சாதனங்களுக்கான சப்போர்ட் கொண்டுள்ளது. இது டூயல் டோன் பேக் பேனல், ஒற்றை கேமரா சென்சார் உள்ளது.
ஆடியோவை பொருத்தவரை லெனோவோ டேப் P11 5ஜி மாடல் குவாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சவுண்ட் டியுனிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புது டேப் P11 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அட்ரினோ 619 GPU, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த டேப்லெட் 7700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட், 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய லெனோவோ டேப் P11 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் ஸ்டாம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை லெனோவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.
- லெனோவோ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய லெனோவோ K சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆகி இருக்கிறது.
லெனோவா நிறுவனம் பட்ஜெட் பிரிவில் இரண்டு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. புதிய லெனோவோ K14 மற்றும் லெனோவோ K14 நோட் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு புது ஸ்மார்ட்போன்களும் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மட்டுமின்றி படங்களும் வெளியாகி உள்ளது.
அதன்படி லெனோவோ K14 நோட் மாடலில் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2400x1080 பிகர்சல் ஸ்கிரீன், பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா, 4 ஜிபி ரேம், MT6769 பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 12 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு மாலி G-52 2EEMC2 GPU கொண்ட மீடியாடெக் ஹீலியோ G70 சிப்செட் தான் MT6769 என குறிப்பிடப்படுகிறது. புதிய லெனோவோ K14 நோட் மாடல் ஆண்ட்ராய்டு 11 கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கொண்டிருக்கிறது.
லெனோவோ K14 மாடலில் V வடிவ நாட்ச், ஸ்கிரீனை சுற்றி தடிமனான எட்ஜ்கள் உள்ளன. இதன் ஸ்கிரீன் HD+ 1200x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர், 12 நானோமீட்டர் பிராசஸர், மாலி G57 MP1 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் சற்றே பழைய அம்சங்கள் கொண்டிருக்கும் நிலையில், இவற்றின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
- லெனோவோ நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கும் புது ஸ்மார்ட் கண்ணாடி பில்ட் இன் டிஸ்ப்ளே மற்றும் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.
- இந்த ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ்-இல் உள்ள டிஸ்ப்ளே 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் கொண்டுள்ளது.
லெனோவோ நிறுவனம் கிளாசஸ் T1 ஆக்மெண்டெட் ரியாலிட்டி கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஏஆர் கிளாஸ் இரு கண்களிலும் மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்கள் உள்ளன. இதில் உள்ள டிஸ்ப்ளே 1920x1080 பிக்சல் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதன் பிரைட்னஸ் அளவுகள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது.
மேலும் அதிக தரமுள்ள ஹின்ஜ்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டெம்பில் ஆர்ம்கள், நோஸ் பேட்கள் உள்ளன. இத்துடன் பயனர்களின் சவுகரியத்திற்கு ஏற்ப மூன்று வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நோஸ் பேட்கள் வழங்கப்படுகின்றன. இதில் உள்ள இன்பில்ட் ஸ்பீக்கர்கள் பொழுதுபோக்கு தரவுகளை பார்க்கவும் வழி செய்கிறது. இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் மாடல்களுடன் இணைந்து செயல்பட ஏதுவாக ரெடி ஃபார் எனும் அம்சம் கொண்டிருக்கிறது.
லெனோவோ கிளாசஸ் T1 ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்டிருக்கிறது. இதை ஸ்மார்ட்போன் அல்லது கணினியுடன் இணைத்து பயன்படுத்தலாம். யுஎஸ்பி டைப் சி கேபிள் கொண்டு பயனர்கள் இதனை ஆண்ட்ராய்டு சாதனத்துடன் இணைத்து கொள்ளலாம். ஐபோன் பயனர்கள் ஹெச்டிஎம்ஐ டு கிளாசஸ் அடாப்டர் பயன்படுத்த வேண்டும்.
முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் ஏஆர் கிளாஸ் அங்கு லெனோலோ யோகா கிளாசஸ் என அழைக்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் இந்த ஏஆர் கிளாஸ் விற்பனை அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. விற்பனை நெருங்கும் போது இதன் விலை அறிவிக்கப்படும்.