search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lenovo Z6 Pro"

    லெனோவோ நிறுவனத்தின் புதிய இசட்6 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #LenovoZ6Pro



    லெனோவோ நிறுவனம் தனது இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. பீஜிங் நகரில் நடைபெறும் விழாவில் லெனோவோ தனது ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

    அறிமுக தேதியுடன் ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படத்தையும் லெனோவோ வெளியிட்டிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போன் நாட்ச்-லெஸ் வடிவமைப்பு மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஹைப்பர் வீடியோ மற்று்ம மேக்ரோ ஷூட்டிங் வசதி வழங்கப்படுகிறது. 



    முன்னதாக லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரியான சாங் செங் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா சென்சார், மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பு கொண்டிருக்கும் புகைப்படங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்ததுது.

    இதுதவிர இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 3சி சான்றிதழின் படி லெனோவோ இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிகிறது.
    லெனோவோ நிறுவனத்தின் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகி வருகிறது. #LenovoZ6Pro



    லெனோவோ நிறுவனம் தனது இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. லெனோவோ நிறுவன தலைமை செயல் அதிகாரியான சாங் செங் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார். 

    டீசர் புகைப்படங்களின் படி புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் பெரிய கேமரா சென்சார், மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் வடிவமைப்பு கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனில் ஹைப்பர் வீடியோ அம்சம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



    எனினும், இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 3சி சான்றிதழின் படி லெனோவோ இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
    ×