என் மலர்
அழகுக் குறிப்புகள்
- இளமையான தோற்றத்தை தருகிறது.
- முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும்.
பீட்ரூட்டில் உள்ள லிகோபேன் மற்றும் ஸ்காலீன் தோல் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த்தொற்றையும் குணப்படுத்துகிறது. முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் `சி'யானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். இந்த பீட்ருட் நைட் கிரீம் முகத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பித்து முகத்திற்கு பொலிவூட்டுகிறது.
தேவையான பொருட்கள்
பீட்ரூட்
கற்றாழை ஜெல்
தேன்
கிளிசரின்
தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி, மிக்சியில் தண்ணீர் மற்றும் பீட்ரூட்டை சேர்த்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தேன், கிளிசரின், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். கலக்கும் போதே கொஞ்சம் கெட்டியாகி வரும். இதை சின்ன டப்பாவில் ஊற்றி வைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முகத்திற்கு தடவி வந்தால் முகம் வெள்ளையாக மாறும்.
- புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
- புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.
பொதுவாக நம்மில் பலர் நல்ல அடர்த்தியான புருவத்தை பெற ஆசைப்படுவார்கள். ஆனால் அவ்வளவு அடர்த்தியான புருவத்தை எல்லோராலும் பெற முடியாது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர். இருப்பினும் பெண்கள் தங்கள் புருவத்தை தங்களுக்கு ஏற்ற வடிவத்தில் அடர்த்தியாக பெற சில குறிப்புகள்.
* தேங்காய் எண்ணெய்யை தினமும் புருவங்களின் மீது தடவி வர, அந்த பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மயிர்கால்கள் வலுபெற்று புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
* விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து வந்தால் புருவங்களில் உள்ள முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி வந்தால், உங்கள் புருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காண முடியும். உடலும் குளிர்ச்சி அடையும்.
* தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் மென்மையாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் புருவ வளர்ச்சி தூண்டப்படும்.
* கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதை கண்கூடாக காணலாம்.
* முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு காலத்திற்கு செய்து வந்தால், புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதை காண முடியும்.
* வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் போல அரைத்து, புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளர்வதை காணலாம்.
- முக அழகை மேம்படுத்த உதவுகின்றன.
- பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி, கிரான்பெர்ரி என பல்வேறு வகைகளில் இருக்கும் பெர்ரி பழங்கள், உடல் ஆரோக்கியயத்தை பாதுகாப்பதோடு, முக அழகையும் மேம்படுத்த உதவுகின்றன. இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளை போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
வீட்டிலேயே பெர்ரி பழங்கள் கொண்டு ஃபேஸ்பேக் மற்றும் ஃபேஸ் ஸ்கிரப் தயாரிக்கலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இதோ..
ஃபேஸ்பேக், தேன் பேஸ்பேக்:
முதலில் பெர்ரி பழங்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும், அந்த கூழுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இது சருமத்தை சுத்தம் செய்து, சருமம் பளபளப்பாக இருக்க உதவும்.
பெர்ரி, ரோஸ் வாட்டர் பேஸ்பேக்:
பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைகழுவவும். இந்த ஃபேஸ்பேக், திறந்திருக்கும் சருமத் துளைகளை இறுகச்செய்து, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும்.
பெர்ரி, எலுமிச்சை பேஸ்பேக்:
பெர்ரி பழக்கூழுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கெட்டியாக பசைபோல தயாரிக்கவும். இதை முகத் தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தினால், முகத்தில் இயற்கையான பொலிவு மற்றும் பளபளப்பு உண்டாகும்.
பெர்ரி அரிசி மாவு பேஸ்பேக்:
பெர்ரி பழக்கூழுடன் சிறிதளவு தயிர், அரிசி மாவு மற்றும் சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக் வறட்சியை நீக்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்.
பெர்ரி, ஓட்ஸ் ஃபேஸ்பேக்:
பழக்கூழுடன், 2 டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து அரைக்கவும். அதனுடன் மண்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசைபோல தயாரிக்கவும். பின்பு அதை முகத்தில் தடவி 10 முதல் 12 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
பெர்ரி, தேங்காய் எண்ணெய் ஸ்கிரப்:
பெர்ரி பழங்களுடன், அரை டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதை முகம் மற்றும் கழுத்தில் தடவவும், இந்த ஸ்கிரப் முகப்பரு, வடுக்கள் மற்றும் கறைகளை விரைவாக அகற்ற உதயும்.
- முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு காரணம்.
முகத்தில் முடி தோன்றும் பிரச்சனை ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களும் இருக்கும். சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடி இருக்கும், அதனால்தான் அவர்கள் பார்லருக்கு சென்று ஷேவிங், வாக்சிங் அல்லது மெழுகு போன்றவற்றை செய்கிறார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் செலவழிக்க விரும்பினால், லேசர் சிகிச்சையையும் முயற்சி செய்யலாம்.
பெண்களுக்கு முகத்தில் முடி வருவதற்கு என்ன காரணம்?
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற மருத்துவ நிலைகளால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மையே பெண்களின் முகத்தில் முடி வருவதற்கு மிகவும் பொதுவான காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். இது முகத்தில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஒரு நபரின் உடல் மற்றும் முகத்தில் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதில் மரபியல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டெராய்டுகள் போன்ற சில வகையான மருந்துகள் பெண்களுக்கு முக முடி பிரச்சனைகளை ஏற்படுத்தும் மற்றொரு காரணியாக இருக்கலாம். இதற்கு நீங்கள் வீட்டிலேயே சிகிச்சை மேற்கொள்ளலாம். நல்ல விஷயம் என்னவென்றால், உங்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற நீங்கள் சமையலறை பொருட்களையே பயன்படுத்தலாம்.
சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு
நீங்கள் 35 மில்லி தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலக்க வேண்டும். கலவையை கொதிக்க ஆரம்பிக்கும் வரை சூடாக்கவும். பிறகு ஆறவிடவும். ஆறிய கலவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை அப்படியே வைக்கவும். அதை தண்ணீரில் கழுவி, வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். எலுமிச்சை மற்றும் தேன் ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தொடங்குங்கள். கலவையை சுமார் மூன்று நிமிடங்கள் சூடாக்கி, அது மிகவும் தடிமனாக இருந்தால் அதை மெல்லியதாக மாற்ற மெதுவாக தண்ணீரை கிளறவும். பேஸ்ட் குளிர்ந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இது இயற்கையான மெழுகு போன்றது, எனவே மெழுகு பட்டையைப் பயன்படுத்தி, வளர்ச்சியின் எதிர் திசையில் முடியை வெளியே இழுக்கவும்.
முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் அரிசி மாவு
ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, அரை டீஸ்பூன் அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கெட்டியான பேஸ்ட்டை உருவாக்க அவற்றை நன்கு கலந்து, தேவையற்ற முக முடி உள்ள பகுதிகளில் தடவி, சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உலர வைக்கவும். முடி வளர்ச்சியின் எதிர் திசையில் உலர்ந்த ஃபேஸ் மாஸ்க்கை மெதுவாக உரிக்கவும், பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம்
ஒரு பழுத்த வாழைப்பழத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்மீலைக் கலக்க வேண்டும். இது ஒரு பயனுள்ள இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். மேலும் இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வட்ட இயக்கத்தில் தடவவும். தொடர்ந்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, முகத்தை தண்ணீரில் மெதுவாக கழுவ வேண்டும்.
பப்பாளி மற்றும் மஞ்சள்
பப்பாளியில் பப்பெய்ன் என்ற நொதி உள்ளது, இது மயிர்க்கால்களை உடைத்து முடி வளர்ச்சியைத் தடுக்க உதவும். பப்பாளி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்ய, பப்பாளி கூழ் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
இந்த இயற்கையான முக முடி அகற்றும் யோசனைகளை பயன்படுத்துவதற்கு முன், தேவையற்ற தோல் எதிர்வினைகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். மேலும், தோல் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய மறக்காதீர்கள். உங்கள் முகத்தில் உள்ள தோல் பொதுவாக மற்ற உடல் பாகங்களை விட அதிக உணர்திறன் கொண்டது, எனவே முடி அகற்றும் முறைகள் வரும்போது அதற்கு கவனிப்பு தேவை. இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள முடியை அகற்ற முயற்சி செய்கிறீர்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும்.
- அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.
ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
எலுமிச்சை ஸ்க்ரப்
நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.
பால்
பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.
அன்னாசி கூழ்
வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.
ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.
வாழைப்பழம்
மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.
- சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
- அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
அந்த காலம் முதல் பெண்கள் தங்கள் சருமத்தை பராமரித்துக்கொள்ள பல இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அது அவர்களின் சருமத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்கை அகற்றி, சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும். ஆனால் தற்போதைய அவசர உலகத்தில் தாங்களே தயாரித்து சருமப்பொலிவை பாதுக்காக்க பெண்களுக்கு நேரம் இல்லாததால், கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது சருமத்திற்கு மட்டும் கெடுதல் செய்வது மட்டுமல்லாமல், உடலிற்கும் தீங்கு விளைவிக்க கூடும். அதனை தடுக்க, வெறும் மூன்றே பொருட்களை வைத்து வீட்டில் சருமப்பொலிவை அதிகரிக்க அற்புதமான ஸ்கிரப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
ஸ்ட்ராபெர்ரி பிரவுன் சுகர் ஸ்கிரப்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சருமத்தையும் பாதுகாக்க உதவுகிறது ஸ்ட்ராபெர்ரி பழம். இதில் இருக்கும் வைட்டமின் சி சரும பாதிப்பை குறைகிறது. மேலும் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்சை எதிர்த்துப் போராடி சருமப்பொலிவை தக்க வைக்க பயன்படுகிறது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதோடு மட்டும் இல்லாமல் சரும சுருக்கத்தை குறைத்து இளமையாக இருக்க உதவி செய்கிறது.
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி - 3 அல்லது 4
பிரவுன் சுகர் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு கழுவி அதில் இருக்கும் கம்பு மற்றும் நடுவில் இருக்கும் தண்டை அகற்ற வேண்டும். அதன்பிறகு துண்டு துண்டாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் பிரௌன் சுகர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். அவ்ளோ தான் சருமத்தை அழகாக பராமரிக்கும் ஸ்கிரப் தயார். இந்த ஸ்கிரப்பை சுத்தமான சருமத்தில் பயன்படுத்தினால் தான் வித்தியாசம் நன்றாக இருக்கும். எனவே, முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பின்னர் தயார் செய்த ஸ்கிரப்பை முகத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்து 10 நிமிடம் கழித்து பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்து கொள்ளவும். இப்போது உங்களின் முகத்தை பார்த்தால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். முகம் அவ்ளோ பொலிவுடன் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.
- கடுகு எண்ணெய்யை பலரும் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
- கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது.
கடுகு எண்ணெய்யை பலரும் சமைய லுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை மேற்பூச்சாகவும் யோகிக்க முடியும் இந்த எண்ணெய்யில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக் அலிக் பாவமிடிக் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன.
சரும நிறம்:
கடுகு எண்ணெய்யில் வைட்டமி ஈ நிறைந்துள்ளது. இது பிரி-ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும். இதில், சிறந்த ஆக்சிஜனேற்றங்கள் உள்ளதால் சரும செல்களை மேம்படுத்தும். இளமையிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் ஆற்றலும் இந்த எண்ணெய்க்கு உண்டு. இதைத்தொடர்ந்து முகத்தில் தடவும்போது மெல்லிய கோடுகள். சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளை குறைக்க உதவும். தோல் அமைப்பு மற்றும் நிறத்தை மேம்படுத்தும். முகத்தில் உள்ள கருந்திட்டுகள், கரும்புள்ளிகளை குறைக்க உதவுவதுடன், முகத்திற்கு இயற்கையான பளபளப்பையும் தரும்.
சன்ஸ்கிரீன்:
கடுகு எண்ணெய்யில் மாய்ஸ்சுரைசர் பண்புகள் உள்ளன. அவை உலர்ந்த மற்றும் வெடிப்பு ஏற்பட்ட உதடுகளை குணப்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும். இந்த எண்ணெய்யில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆல்பா ஹைட்ராக்சி அமிலங்கள். இறந்த சரும செல்களை அகற்றவும். வெயிலினால் முகம் கறுத்துப்போவதை தடுக்கவும் உதவிபுரியும். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து, இயற்கையான சன்ஸ்கிரின்போல் செயல்பட்டு, சூரியனின் புறஜாதா கதிர்களால் உண்டாகும் சரும பாதிப்பை தடுக்கும்.
முடி வளர்ச்சி
தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் போலிவில்லாத கூந்தலுக்கு சுடுகு எண்ணொய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும். இதில் உள்ள ஆஸ்டி-பாக்டீரியல் பண்புகள் ' வழுக்கை விழவது மற்றும் ஸ்கால்ப் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும். கடுகு எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி வரும்போது பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
பாத வெடிப்பு:
பலருக்கும் வறட்சி காரணமாக கால்களில் வெடிப்பு. நகங்கள் வெடிப்பு, தோல் உரிதல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். மழை மற்றும் குளிர்காலங்களில் இதுமேலும் அதிகரிக்கும். இதை தவிர்க்க கடுகு எண்ணெய்யை பாதங்களில் பூசி வரலாம்.
கொழுப்பைக் குறைக்கும்:
கடுகு எண்ணெய் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்றுப்பகுதியில் கொழுப்பு தேங்கி உள்ளவர்கள். அப்பகுதியில் இந்த எண்ணெய்யை, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தினமும் தடவி வரலாம். இதுபோன்று மசாஜ் செய்யும்போது, உடலில் இருந்து ஒருவித சூடு வெளியேறும். இது உடலில் பல நாட்களாக தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
- இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது.
- வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம்.
முதுமை பருவத்தை எட்டினாலும் கூட இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. அதற்காக அழகு சாதன பொருட்களை சார்ந்திருப்பது மட்டும் பயனில்லை. உணவுப்பழக்கமும், வாழ்க்கை முறையுமே இளமை தோற்றத்தை தக்க வைக்க துணைபுரியும்.
சருமத்தின் வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம். உணவு, தூக்கம், மனஅழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
சர்க்கரை:
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது கிளைகேஷன் எனப்படும் செயல்முறைக்கு வழிவகுக்கும். அதில் உள்ளடங்கி இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளும், சருமத்தில் உள்ள கொலாஜன்களும் பிணைக்கப்படும். அவை சருமத்தை கடினமாக்கும். அதனால் தோல் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும்.
பதப்படுத்தப்பட்ட- பொரித்த உணவுகள்:
இந்த உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும், அதிக அளவு சோடியமும் கலந்திருக்கும். அவை உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். அதே பழக்கத்தை தொடரும்போது நாள்பட்ட அழற்சிக்கு வித்திடும். கொலாஜன் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி தோல் வயதாவதை துரிதப்படுத்தும்.
மதுப்பழக்கம்:
மது அருந்துவது சருமத்தை நீரிழப்பு செய்து சரும வறட்சிக்கும், சுருக்கங்களை ஏற்படுத்தும் கோடுகளுக்கும் வழி வகுத்துவிடும். காபி அதிகம் பருகுவதும் நீரிழப்புக்கு வித்திடும். மந்தமான, வறண்ட மற்றும் வயதான தோற்றமுடைய சருமத்தை ஏற்படுத்தும். இந்த பழக்கங்களை தவிர்த்தாலே முதுமையை தாமதப்படுத்திவிடலாம்.
முதுமைக்கான காரணங்கள்:
* செலரி, சிட்ரஸ் பழங்கள் போன்ற சில உணவு பொருட்கள் சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும் சோராலென்ஸ் எனப்படும் சேர்மங்களை கொண்டிருக்கின்றன. அவற்றை சாப்பிட்டு கடுமையான சூரிய ஒளி படும் பகுதியில் நேரத்தை செலவழித்தால் விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க தொடங்கும்.
* சர்க்கரை அதிகம் கலந்த உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் தோலின் வயதை விரைவுபடுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
* சில உணவுகள், அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது ப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இவை சரும செல்களுக்கு தீங்கு விளைவித்து, வேகமாக சருமம் முதிர்ச்சி நிலையை அடைய வைக்கின்றன.
- ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை.
- பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது.
ரோஜாக்களை விரும்பாத நபர்கள் எவருமில்லை. பெண்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் அழகு உருவம் கொண்டது. உலகெங்கும் பல்வேறு நிறங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கூந்தலை அலங்கரிப்பதோடு அன்பு, பாராட்டு மற்றும் நன்றியை வெளிப்படுத்துவதற்கு ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தனித்துவ குணம் கொண்ட சில ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு..
பீச் வண்ண ரோஸ்:
மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறங்களின் கலவையை பிரதிபலிக்கும் பீச் வண்ண ரோஜாக்கள் நன்றியுணர்வை குறிக்கின்றன. அடக்கம், அனுதாபம் போன்றவற்றை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
மஞ்சள்:
மஞ்சள் நிற ரோஜாக்கள் நட்பு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான அன்பையும், பாராட்டுகளையும் வெளிப்படுத்த இவை சிறந்த தேர்வாக அமைகின்றன.
ஆரஞ்சு:
ஆரஞ்சு நிற ரோஜாக்கள் உற்சாகம், ஆசை மற்றும் கவர்ச்சியை குறிக்கின்றன. ஈர்ப்பை வெளிப்படுத்துவதற்கு அவை பகிரப்படுகின்றன.
வெள்ளை:
வெள்ளை நிற ரோஜாக்கள் தூய்மை, அப்பாவித்தனம் மற்றும் வாழ்வின் புதிய தொடக்கங்களை குறிக்கின்றன. தம்பதியினரிடையே நிலவும் தூய அன்பை குறிக்க திருமண நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
இளஞ்சிவப்பு:
இளஞ்சிவப்பு நிற ரோஜாக்கள் வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு உணர்ச்சிகளை குறிப்பிடுகின்றன. வெளிர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் போற்றுதலையும், அனுதாபத்தையும் தெரிவிக்கின்றன. அதே சமயம் அடர் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் நன்றியையும், பாராட்டையும் குறிப்பிடுகின்றன.
நீலம்:
நீல நிற ரோஜாக்கள் மர்மம், சாத்தியமில்லாதது போன்ற உணர்வை குறிக்கின்றன.
சிவப்பு:
இது காதலின் அடையாள சின்னமாக விளங்குகிறது. இரு மனங்களுக்கு இடையே புதைந்திருக்கும் ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், காதல், அன்பு, ஆசையின் வெளிப்பாட்டை பகிரவும் உதவும் தூதுவனாக பயன்படுகிறது, சிவப்பு ரோஜா.
- சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
- தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.
முடி உதிர்வது என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் ஒரு சில சின்ன வெங்காயம் இருந்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கட்டிவிடலாம் என்று கூறப்படுகிறது.
சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதில் தண்ணீர் சேர்க்காமல் பசை போல் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள சாறை பிழிந்து அதனை தலைமுடியில் உள்ள வேர்களில் படுமாறு நன்றாக தேய்க்க வேண்டும்.
பத்து நிமிடம் மசாஜ் செய்த பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு அதன் பிறகு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். கண் எரிச்சல் சிறிது இருந்தாலும் எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது.
இதனுடன் எலுமிச்சை சாறு அல்லது புதினா சேர்த்தும் தலையில் தடவலாம். தொடர்ந்து ஆறு மாதத்திற்கு இதை பயன்படுத்தி வருபவர்கள் முடி உதிர்வு குறைத்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் எழுதி பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நவநாகரிக உலகில் கூந்தலுக்கு ஷாம்புகள் போடுவதால் தான் முடி கொட்டும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்றும் சிகைக்காய் உபயோகித்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஷாம்புகள் அனைத்துமே ரசாயன கலப்புகள் இருக்கும் என்பதால் நமது பாரம்பரிய சிகைக்காய் தூளை பயன்படுத்தினால் உச்சந்தலை குளிர வைத்து உடல் சூட்டை குறைப்பது மட்டுமின்றி கூந்தலுக்கும் பளபளப்பை தரும் என்றும் முடி கொட்டும் பிரச்சனை இருக்காது என்றும் கூறப்படுகிறது.
ஷாம்புகளை பயன்படுத்தினால் பக்க விளைவுகளை ஏற்படும் ஆனால் சிகைக்காய் பயன்படுத்தினால் எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.