search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Women Health Care"

  ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.
  மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.

  தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

  இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும்.

  இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது.

  இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும். இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.

  இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.

  கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட்கொண்டால் பிரசவ வலி குறையும். ஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம். ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.
  40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
  பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.


  ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும்.

  இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம். சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது.

  இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும்.

  சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வருபவர்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50 வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும்.

  பால், தயிர் உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.
  ஒருவரது குடும்ப பரம்பரையில் யாரேனும் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் இருந்திருக்குமானால், அவருக்கும் மார்பக புற்றுநோய் உருவாவதற்குரிய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
  மார்பக புற்றுநோய் உடைய ஒரு குடும்ப வரலாறு இருக்கும் பெண்கள், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக இடர் வாய்ப்பு பிரிவில் இருக்கின்றனர் என்றாலும், மார்பக புற்றுநோய் உள்ள அநேக பெண்களுக்கு அவர்களது குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு இல்லை.

  புள்ளிவிவர ரீதியாக மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்ட நபர்களில் ஏறக்குறைய 5 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே குடும்பத்தில் புற்றுநோய் இருந்த வரலாறு உள்ளது. மார்பக புற்றுநோய் இருந்த ஒரு முதல் டிகிரி உறவினர், இரண்டாம் டிகிரி உறவினர் அல்லது குடும்பத்தின் ஒரே தரப்பில் பல தலைமுறைகள் உங்களுக்கு இருப்பார்களானால், உங்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான இடர்வாய்ப்பு அதிகமாக இருக்கக்கூடும்.  * மார்பக புற்றுநோய் தொற்றக்கூடியது அல்ல.

  * மரபணு மாற்றம் BRCA1 அல்லது BRCA2 ஒருவரது DNAவில் கண்டறியப்படுமானால், அவருக்கு நிச்சயமாக மார்பக புற்றுநோய் உருவாகக்கூடும்.

  * BRCA1 அல்லது BRCA2-ஐ கொண்டிருப்பதாக அறியப்படும் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு பெண்ணும் தீங்கு விளைவிக்கக்கூடிய BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வை தனது உடலில் கொண்டிருப்பதில்லை மற்றும் அந்த குடும்பங்களிலுள்ள ஒவ்வொரு புற்றுநோய் நேர்வும் இந்த மரபணுக்களில் ஒன்றில் உள்ள தீங்குவிளைவிக்கக்கூடிய மரபணு பிறழ்வுடன் தொடர்புடையதல்ல. மேலும், BRCA 1 அல்லது BRCA 2 மரபணு பிறழ்வுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பக மற்றும்  கருப்பைப்புற்றுநோய் உருவாவதில்லை. ஆனால், BRCA 1 அல்லது BRCA 2-ல் மரபு வழியில் மரபணு பிறழ்வுள்ள ஒரு பெண்ணுக்கு, அதுபோன்ற மரபணு பிறழ்வில்லாத ஒரு பெண்ணைவிட மார்பக புற்றுநோய் உருவாவதற்கு ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

  * வியர்வை அடக்கிகள் (Antiperspirants) மற்றும் துர்நாற்றம் போக்கிகள் (Deodorants) மார்பக புற்றுநோயை விளைவிப்பதில்லை. 
  பலமுறை சிசேரியன் செய்ய நேர்ந்தால் அது வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை அவர் தம் உடலில் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
  பெண்கள் பிரசவ பயத்தால், குழந்தை பெற்றுக் கொள்வதை வெறுத்துவிட கூடாது, அவர்களின் அந்த வலியை எளிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டது தான் சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை பிரசவ முறை. இந்த பிரசவ முறை பெண்கள் பிரசவத்தின் பொழுது அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் குறைக்க கொண்டு வரப்பட்டது.

  இந்த காரணத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசவ முறை பெண்களுக்கு பிரசவம் நிகழும் நொடியில் நன்மை செய்வது போல் செய்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் பெண்களை துன்புறுத்தும் தீவிர குறைபாடுகளை அவர்தம் உடலில் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பிரசவத்தால் நிகழும் குறைபாடுகள் என்னென்ன என்று இங்கு படித்து அறியலாம்.

  ஒருமுறை சிசேரியன் பிரசவம் மேற்கொண்டாலே, அதனால் ஏற்பட்ட காயம் குணமாக பல காலம் ஆகும். அதாவது சிசேரியன் பிரசவத்தை பெண்கள் மேற்கொண்டால், அதனால் ஏற்பட்ட அறுவை சிகிச்சை காயங்கள் குணமாக 3 முதல் 6 மாத காலம் வரை ஆகும்; ஒரு சில பெண்களுக்கு அதற்கு மேலும் கூட ஆகலாம். மேலும் காயங்கள் ஆறவே இத்தனை மாதங்கள் ஆனால், அறுவை சிகிச்சையால் இழந்த உடலின் பலத்தை மீண்டும் பெற எத்தனை காலமாகும் என்று யோசித்து பாருங்கள்!

  சிசேரியன் அறுவை சிகிச்சையின் பொழுது பெண்களின் வயிறு கிழிக்கப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்படுகிறது. வயிற்றை சுற்றிய பகுதிகளில் தான் சிறுநீரக உறுப்புகள், மலவாய் உறுப்புகள் மற்றும் பிற ஜீரண உறுப்புகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் திரும்ப திரும்ப பலமுறை சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது, அது சிறுநீரை சேமிக்கும் சிறுநீர் பையை கிழிக்கவோ அல்லது அதில் பாதிப்பு ஏற்படுத்தவோ அதிக வாய்ப்புகள் உள்ளன.

  ஒவ்வொரு முறை சிசேரியன் பிரசவம் நிகழும் பொழுதும் பெண்ணின் உடலில் உள்ள இரத்தம் சிறு சிறு கட்டிகளாக மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கட்டிகள் ஏற்படும் நிலை அறியாமல் மீண்டும் மீண்டும் சிசேரியன் செய்து கொண்டே இருந்தால், இந்த பிரசவத்தால் உருவாகும் இரத்தக்கட்டிகள் பெரிதாகி இரத்த பிரவாகத்தில் பயணித்து நுரையீரலில் பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது; இதனை பால்மனரி இன்பெக்ஷன் என்று கூறுகின்றனர்.  ஒவ்வொரு முறை சிசேரியன் பிரசவம் நிகழும் பொழுது நஞ்சுக்கொடி கீழே செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், நஞ்சுக்கொடி கருப்பையின் உள்ளாக - கருப்பையின் உட்சுவருடன் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. நஞ்சுக்கொடியின் இந்த மாற்றம் பெண்களின் உடலில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

  சிசேரியன் பிரசவத்தின் பொழுது பெண்ணின் வயிற்றினை அறுத்து தான் உள்ளே வளர்ந்து வந்த குழந்தையை வெளி உலகிற்கு கொண்டு வருகின்றனர் மருத்துவர்கள்; அந்த சமயத்தில் பெண்ணின் வயிறு அறுக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படும் பொழுது, அது அதிகமான இரத்தப்போக்கை ஏற்படுத்தி விடும் வாய்ப்பு உள்ளது; இந்த பிரச்சனை, எந்த ஒரு பெண் தொடர்ந்து சிசேரியன் பிரசவம் செய்து கொள்வாரானால் கண்டிப்பாக அவருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

  தொடர்ந்த சிசேரியன் பிரசவங்களை ஒரு பெண் மேற்கொள்ளும் பொழுது பெண்ணிற்கு உடல் பாதிப்புகள் ஏற்படுவதோடு, அவர்களின் உள் வளரும் குழந்தைகளுக்கும் உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சிசேரியன் நடந்து முடிந்த பின் பெண்ணின் உடலில் பலவித உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன; இந்த பாதிப்புகள் அடுத்து அவர்தம் உள்ளே உருவாகப்போகும் குழந்தையை, குழந்தையின் வளர்ச்சியை ஏன் குழந்தை உருவாவதையே கூட தடுத்துவிட வாய்ப்பு உண்டு.

  மேலும் தொடர்ந்த சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்வதால், குழந்தை பிறப்பு நிகழும் பொழுது குழந்தைக்கு மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

  பெண்ணின் வயிறு அறுக்கப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்படுவதால், பெண்ணின் உடல் பலவீனம் அடைந்து இருக்கும். பலவீனம் கொண்ட உடல் தான் நோய்கிருமிகள் வாழும். எனவே, சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்த பெண்களின் உடலில் நோய்த்தொற்றுகளின் தாக்குதல் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிசேரியன் அறுவை சிகிச்சை கண்டிப்பாக பெண்ணின் உடலை நோய்கிருமிகள் அடங்கிய நோயாளி உடலாக மாற்றும் வாய்ப்பு உண்டு.!
  கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
  கர்ப்பிணி பெண்கள் வாரம் மூன்று முறை மீன் சாப்பிடுவது குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கொழுப்பு கலந்த மீன் வகைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பார்வை திறனும், மூளையின் செயல்பாடுகளும் மேம்படும். இதனை பின்லாந்தில் உள்ள துர்க்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

  ‘‘கர்ப்பிணி பெண்களின் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு மீன் பயன் தருவதாக எங்கள் ஆய்வு முடிவு அமைந்துள்ளது’’ என்கிறார், பல்கலைக்கழக அதிகாரியான, ஹிர்சி லெய்டீனன். இந்த ஆய்வுக்காக கர்ப்பிணி பெண்களின் உணவு பழக்கமும், உணவு ஆரோக்கியமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. குழந்தையின் வளர்ச்சியும் கருத்தில் கொள்ளப்பட்டது.

  மீனில் இருக்கும் புரதம் குழந்தையின் சருமம், தசை, முடி, எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமானது. அதனால் கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் கூடுதலாக 25 சதவீதம் புரதம் சாப்பிடுவது அவசியம். குழந்தைகளின் பற்கள், இதயம், நரம்புகள், தசைகளை வலுப்படுத்துவதில் வைட்டமின் டி-யின் பங்களிப்பும் இருக்கிறது.

  குழந்தைகளின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களின் எலும்புகள், பற்களை வலுப்படுத்தவும் மீன் உதவும். கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆக்சிஜனை ரத்தத்தின் வழியாக எடுத்து செல்வதில் இரும்புச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. கர்ப்பிணி பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். அதனால் கர்ப்ப காலத்திற்கு முன்பும், பின்பும் உணவில் தவறாமல் மீனை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.
  எல்லா கர்ப்பத்தையும் உறுதி செய்கிற முதல் அறிகுறியான மாதவிலக்கு தள்ளிப் போவதுதான் முத்துப்பிள்ளை கர்ப்பத்திலும் இருக்கும். அதைத் தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருக்கும். முத்துப்பிள்ளை கர்ப்பமாக இருந்தால் இந்த வாந்தியும், மயக்கமும் அதிகமாவதுடன், 90 முதல் 95 சதவிகிதப் பெண்களுக்கு ரத்தப் போக்கும் ஏற்படும். அதனால் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவார்கள்.

  சில பெண்களுக்கு ரத்தப்போக்குடன் திராட்சை மாதிரியான குட்டித் திசுக்களும் வெளியேறும். அரிதாக சில பெண்களுக்கு ரத்த அழுத்தம் அதிமாகும். சிறுநீரில் புரதத்தின் அளவு கூடும். ஹைப்பர் தைராய்டு ஏற்பட்டு, அதன் அறிகுறிகளான அதிக களைப்பு, அதிக வியர்வை போன்றவையும் இருக்கலாம். முத்துப்பிள்ளை கர்ப்பம் உள்ள பெண்களின் கர்ப்பப்பை, சாதாரண கர்ப்பம் தரித்ததை விட அளவில் மிகப் பெரியதாக இருக்கும்.

  அதாவது மாதவிலக்கு தள்ளிப் போனதில் இருந்து கணக்கிட்டால் கர்ப்பப் பை இருக்க வேண்டிய அளவைவிட, அதிகப் பெரிதாக இருப்பதை மருத்துவர் கண்டுபிடிப்பார். ரத்தப் பரிசோதனையின் மூலம் கர்ப்பம் தரித்த பின் வருகிற ஹெச்.சி.ஜி ஹார்மோன் அதிகரித்திருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து ஸ்கேன் செய்து அதை உறுதிப்படுத்தலாம். சினைப்பையின் இரண்டு பக்கங்களிலும் கட்டிகள் இருக்கலாம்.

  தீர்வுகள்...

  ஹெச்.சி.ஜி ஹார் மோன் அளவுகளை சரி பார்த்ததும், ரத்தசோகை இருக்கிறதா எனப் பார்க்க சிபிசி (complete blood count test) சோதனையும், நெஞ்சுப் பகுதிக்கு ஒரு எக்ஸ் ரேவும் எடுக்க வேண்டியிருக்கும். முத்துப் பிள்ளை கர்ப்பத் திசுக்கள் அங்கே பரவியிருக்கிறதா என்பதை அறியவே இந்தச் சோதனை. அந்தத் திசுக்கள் நுரையீரல் உள்பட உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். அடுத்து வாக்குவம் ஆஸ்பிரேஷன் என்கிற முறையில் அந்தக் கருவை வெளியே எடுப்பதுதான் தீர்வு. இந்த அறுவை சிகிச்சையின் போது ரத்த இழப்பு அதிகமிருக்கும் என்பதால் தேவையான ரத்தத்தைத் தயாராக வைத்துக்கொண்டே செய்யப்படும். கர்ப்பப் பை சுருங்கவும் மருந்துகள் கொடுக்கப்படும்.

  கர்ப்பம் அசாதாரணமாக வளர்ந்துவிட்டது.... கர்ப்பிணியின் வயதும் அதிகம் என்கிற நிலையில், எதிர்காலத்தில் கருத்தரிக்கிற எண்ணம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, கர்ப்பப் பையையும் சேர்த்தே அகற்ற வேண்டி வரும் முத்துப்பிள்ளை கர்ப்பத்தை அறுவையின் மூலம் அகற்றி விடுவதோடு முடிந்து போகிற பிரச்னை அல்ல இது. அதன் பிறகான தொடர் கண்காணிப்பு மிக முக்கியம். முத்துப்பிள்ளை கர்ப்பம் என்றால் அது கர்ப்பப் பையில் மட்டும் தான் இருக்கும். அதுவே புற்றுநோயாக மாறினால் நுரையீரல், கல்லீரல், மூளை என எங்கே வேண்டுமானாலும் பரவி பாதிக்கலாம்.

  ஆனால் அதைப் பற்றியும் பயப்படத் தேவையில்லை. கீமோதெரபி சிகிச்சையின் மூலம் இந்தப் புற்றுநோயை 100 சதவிகிதம் குணப்படுத்திவிட முடியும். முத்துப்பிள்ளை கர்ப்பக் கட்டியானது புற்று நோயாக மாறுமா என்பதை தொடர் கண்காணிப்பு மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். புற்றுநோயாக மாறுகிற வாய்ப்பானது முழுமையான முத்துப்பிள்ளை 15 முதல் 20 சதவிகிதமும், பகுதி முத்துப்பிள்ளைக் கர்ப்பத்தில் 5 சதவிகிதமும் இருக்கிறது. அறுவைசிகிச்சை முடிந்தாலும் 2 வாரங்கள் கழித்து மறுபடி ஹெச்.சி.ஜி சோதனை செய்து அதன் அளவைப் பார்க்க வேண்டும். பிறகு வாராவாரம் அதை சரி பார்க்க வேண்டும். ஹெச்.சி.ஜி அளவானது 100க்கும் கீழே வரும்.

  அதையடுத்து 2 வாரங்களுக்கு ஒருமுறை அந்தச் சோதனையை அது 5க்கும் கீழே வரும் வரை செய்ய வேண்டும். 5க்கும் கீழே வந்துவிட்டால் பிறகு மாதம் ஒரு முறை சோதனை செய்தால் போதுமானது. 8 முதல் 10 வாரங்களில் ஹெச்.சி.ஜி அளவானது சகஜ நிலைக்கு வந்து விடும். 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை இந்தத் தொடர் கண்காணிப்பு அவசியம்.

  ஹெச்.சி.ஜியின் அளவானது குறையாமல் அப்படியே இருந்தாலோ அல்லது திடீரென அதிகரித்தாலோ எச்சரிக்கையாக வேண்டும். அந்தக் குறிப்பிட்ட அளவை எட்டும்வரை சம்பந்தப்பட்ட பெண் கருத்தரிக்கக் கூடாது. அப்படிக் கருத்தரித்தால் ஹெச்.சி.ஜி அளவானது அதிகரித்து, அனாவசியக் குழப்பத்தைத் தரும். எல்லாம் குணமாகி, ஹெச்.சி.ஜி மற்றும் ஸ்கேன் மூலம் மருத்துவர் அதை உறுதி செய்த பிறகே கர்ப்பம் தரிக்கலாம். 
  கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
  20% பெண்களுக்கு உண்டாகும் நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

  கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

  இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.

  கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது.

  வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்புபடுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு எதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.  கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும். இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும்.

  சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது என்று டாக்டர்.சாப்மன் டேவிஸ் கூறுகிறார்.

  தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவதாகும். உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும் என்று அவர் கூறுகிறார். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

  கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்னைக்கு தீர்வு பெறலாம்.

  உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். 
  பப்பாளி நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்சனையும் வருவதில்லை.
  பப்பாளி நம் ஊரில் எளிதில் கிடைக்கும் சத்துமிக்கப் பழம். இதில் உள்ள ஏ.பி. வைட்டமின்கள், மினரல்கள், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், போலிக் ஆசிட் போன்ற ரிச்சான சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. இயல்பிலேயே இந்தப் பழம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாகிறது.

  கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஜீரண பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கலுக்கும் பப்பாளி பழம் சாப்பிடுவது கைகொடுக்கும். பப்பாளிக் காயில் உள்ள பெப்சின் லாக்டெக்ஸ் போன்ற பொருட்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்பதை வெளிநாட்டில் செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

  கிராமப்புறங்களில் வறுமையான நிலையில் கருவுறும் பல பெண்கள் போதிய சத்துணவு எடுத்துக் கொள்ள வாய்ப்பின்றி உள்ளனர். இவர்களுக்கு பப்பாளிப் பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லாம். நம் ஊரில் இந்தப் பழத்தை சாப்பிடாமல் தவிர்ப்பது அறிவுப்பூர்வமானது அல்ல.

  நன்றாக பழுத்த பின்னர் தினமும் 20 கிராம் அளவில் கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளலாம். இதனால் கருவுக்கோ, தாய்க்கோ எந்தப் பிரச்னையும் வருவதில்லை. ஒரு சிலருக்கு ஏதாவது ஒரு காய் அல்லது பழம் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருக்கலாம். ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் பப்பாளியைக் காயாக எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பால் ஒவ்வாமையாக மாற வாய்ப்புள்ளது.

  ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களும் காயாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். காயாக சாப்பிடத்தான் யோசிக்க வேண்டும். பழமாக சாப்பிட யோசிக்க வேண்டியதே இல்லை. எளிதாக கிடைக்கும் சத்து மிக்க பப்பாளிப்பழத்தை தவறான நம்பிக்கைகளுக்காக தவிர்க்க வேண்டாம். 
  கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
  கர்ப்பகாலத்தில் உங்கள் உடலில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். பிரசவத்தின் பின் சரியாகி விடும் என்று நினைத்தால், பிரசவத்தின் பின்னும் கூட சில மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பகாலம் என்பது மாதவிடாய்க்கு விடுமுறை காலம் போன்றது. கர்ப்பகாலம் முழுவதும் மாதவிடாய் ஏற்படாது. ஆனால் பிரசவத்தின் பின் ஏற்பட தொடங்கி விடும். இங்கு பிரசவத்திற்கு பின்னான மாதவிடாய் சுழற்சி எப்போது துவங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

  மாதவிடாய் என்பது கர்ப்பப்பையில் குழந்தை இல்லை என்பதற்கான அறிகுறியாகும். அதனால் கர்ப்பப்பையில் உள்ள திசுக்கள் உதிர்ந்து ரத்தமாக வெளியேறுகிறது. ஆனால் நீங்கள் கர்ப்பமான பின் மாதவிடாய் நின்று விடும். சில நேரங்களில் லேசான ரத்த போக்கு இருக்கும். ஆனால் இந்த நிலை தொடந்தாலோ அல்லது அதிக ரத்த போக்கு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

  தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின் ஐந்து முதல் ஆறு வாரங்களில் மாதவிடாய் ஏற்படும். முழுக்க முழுக்க தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு மாதவிடாய் ஏற்படும். எனினும் இது ஒவ்வொரு பெண்ணிற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடும் என்பதால், இது தான் சரி என்று இதில் வரையறுக்க முடியாது.

  பிரசவத்திற்கு பின் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அது பழைய மாதிரி இருக்காது. இரத்த போக்கு லேசாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். மாதவிடாய் சுழற்சி பழைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். ஆனால் நீண்ட நாட்களுக்கு லேசான அல்லது அதிகமான ரத்த போக்கு நீடித்தால் நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

  உங்கள் கருப்பையில் இருந்து முட்டை வெளியான பிறகு உடனே மாதவிடாய் சுழற்சி ஏற்படாது. அதுவும் குறிப்பாக பிரசவத்திற்கு பிறகு. இதனால் உடல் உறவு கொள்ளும் போது கவனமாக இருங்கள்.

  உங்களையும் உங்கள் சுற்றத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துங்கள். மேலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பெண்களை வளர்க்கும் போக்கின் காரணமாக, பெண் குழந்தைகளிடம் ஆண் தன்மை அதிகம் காணப்படுகிறது. ஹார்மோன்கள் மாற்றம் நோய்களைத் தருகிறது.
  முன்பு, லட்சத்தில் ஒருவருக்கு என்னும் அளவுக்கு, மிகவும் அரிதாக இருந்த நோய்கள் எல்லாம், இன்று, மிகவும் பரவலாக, பத்தில் ஒருவருக்கு என்று சொல்லும் அளவுக்கு, வாழ்க்கையோடு ஒன்றிப் போய் விட்டன. புற்று நோய், கருப்பை கட்டிகள் இவையெல்லாம் தலைவலி, காய்ச்சல் போல, மிகவும் சாதாரணமாக ஆகி விட்டது! அரிதாக இருந்த போது நோய் பற்றிய அச்சம் வெகுவாக இருந்தது! இன்று?! இதற்கெல்லாம் காரணம் என்ன?

  ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் பெண்களை வளர்க்கும் போக்கின் காரணமாக, பெண் குழந்தைகளிடம் ஆண் தன்மை அதிகம் காணப்படுகிறது. ஹார்மோன்கள் மாற்றம் நோய்களைத் தருகிறது.

  உணவு முறை:


  உணவில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் காரணமாகவும், ஹார்மோன் மாற்றம் அதிகம் நேருகிறது. இறைச்சி உண்போர், இறைச்சியைத்தரும் விலங்குகளின் எடையைக் கூட்டத் தரப்படும் செயற்கை பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வகை உணவுகளை அதிகம் உண்ணும் சிறுமியர் சுலபமாக உடல் எடை கூடி விடுகின்றனர். மிகச்சிறு வயதிலேயே கருப்பைக் கட்டிகள் வந்து விடுகின்றன.

  குழந்தைகள் ஆரோக்கியமாக, செழிப்பாக வளர வேண்டும் என்ற எண்ணமும், அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் தவிர தாங்கள் குழந்தைகளுக்கு இதைவிடச் சிறந்தது இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்ற எல்லைவரை போய் எதிலும் முதல், எல்லாவற்றிலும் சிறப்பிடம் வேண்டும் என்று பெற்றோர் மிகுந்த கவனம் எடுப்பதும் இன்று ஆபத்தாகியிருக்கிறது. அதிகக் கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகள், இனிப்புகள், துரித உணவு என்று உணவு முறை மாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விட்டது. நோயும் தவிர்க்க முடியாததாகி விட்டது.

  மனச்சிதைவு:

  அன்று மிக எளிதான வாழ்க்கை வாழ்ந்தனர். வெளிப்படையான பேச்சும், உண்மையான அன்பும், நல்லொழுக்கமும், எதிலும் ஒரு முறையும் இருந்தன. இன்று சுயநலமும், ஆடம்பரமும், போலிவேடம் போட வைக்கின்றன. வாழ்வு எந்திரமாகிவிட்ட நிலையில் மனிதன் மனச்சிதைவுக்கு ஆளாகிறான். ஆண்களைவிட, பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

  குடும்பம், குழந்தைகள், கணவன், பெற்றோர், உற்றார், சமூகம் எனப் பலமுகம் கொள்ள வேண்டிய மகளிர் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதும், எண்ணப்பகிர்வும் அரிதாகி விட்டதால், மாத விலக்கு நிற்கும் சமயத்தில் (மெனோபாஸ்) உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தங்களைத் தேவையற்ற அங்கம் போல உணருகின்றனர். தன்னை யாரும் கவனிப்பதில்லை என்ற தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. இந்த எதிர்மறை எண்ணங்கள் கருப்பைக் கட்டிகள் வளரக் காரணமாகின்றன.

  ஹார்மோன் நிலைப்பாடு:

  குழந்தை பெற்ற பின்பு மகளிர், இவ்வகை கட்டிகள் வந்துவிட்டால், அவை புற்றுநோய்க் கட்டியாக மாறிவிடும் என்ற பயத்தில், கருப்பை நீக்கம் செய்துவிடுகின்றனர். அப்பாடா! புற்றுநோயிலிருந்து தப்பித்துவிட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ஆனால் “எண்ணைய்ச்சட்டியிலிருந்து தப்பித்து, நெருப்பில் விழுவது” என்று சொல்வது போல, கருப்பை நீக்கத்தால், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்பட்டு, உடற்பருமன் ஆஸ்டியோ போராஸிஸ் என்னும் எலும்புத் தேய்மானம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். கால்கள் வளைந்து போகின்றன.

  மாதவிலக்கு சுழற்சி சரிவர இயங்கும் வரையில், ஈஸ்ட் ரோஜென் என்னும் ஹார்மோன் சுரக்கிறது. மாதவிலக்கு நின்றபின் இச்சுரப்பு சுரக்காததால் நிறைய பாதிப்புகள் வரும். ஈஸ்ட்ரோஜென் சுரக்காத நிலையில் உடன் “கால்சியம்” சத்தை உறிஞ்சுவது மிகமிகக் குறைவாகி விடும். அதனால்தான் எலும்புகள் பாதிக்கப்படுகின்றன.

  இயற்கையாக எலும்புகளைக்காக்க உடலில் சதை அதிகமாகிறது, பருமன் கூடுகிறது. அத்தனை கால்சியத்தையும் உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டால் மட்டுமே, பருமனைத் தவிர்க்க முடியு