search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beauty care"

    • முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும்.
    • வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும்.

    முகத்தில் சுருக்கங்கள் தோன்றும் என்பதுடன், முகத்தில் உள்ள குறுத்தெலும்புகள் தேய்ந்து வடிவமும் மாறும். இப்படியாகத்தான் வயதாகும் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளும். இத்துடன், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், மாசு போன்ற காரணங்களும் சேரும்போது, 'ஏஜிங்' விரைவுபடுத்தப்படுகிறது. வயதாகும் தோற்றத்தை தள்ளிப்போடுவதற்கான இயற்கையான அழகுப் பராமரிப்பு வழிகளை பார்க்கலாம்.

     1. விளக்கெண்ணெய், சருமப் பிரச்சினைக்கான சிறப்பான தீர்வைக் கொடுக்கவல்லது. தினமும் இதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்துவர, சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

     2. வாரம் ஒருமுறை, சில அன்னாசிப் பழத்துண்டுகளை அரைத்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ, அதில் உள்ள புரொமிலைன் என்சைம் இறந்த செல்களை நீக்கி இளமைக்கான பளபளப்பை சருமத்துக்குத் தரும்.

     3. உருளைக்கிழங்கு, இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட். வயதாவதால் முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறப்புள்ளிகள் தென்படலாம். அதை நீக்கி சரும நிறத்தை சீராக்க உருளைக்கிழங்கு ஜூஸ் அல்லது பேஸ்ட் முகத்தில் பேக் போட்டுக் கழுவலாம்.

    4. கரும்புச்சாறுடன் மஞ்சளைக் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்துக்கு பேக் மாதிரி போட்டு வர, முதுமைத்தோற்றம் எளிதில் அண்டாது. கண்களின் கீழ் தோன்றும் கருவளையத்தை நீக்கவும், அந்த இடத்தில் சருமம் தளர்வதைத் தடுக்கவும் அங்கு தேனை தடவி வரலாம்.

    5. காய்ச்சி ஆறிய பாலுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து இரவு உறங்கச்செல்லும் முன் நெற்றி, கண்களின் ஓரம் என முகத்தில் சுருக்கங்கள் உள்ள இடங்களில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவிவர, சுருக்கங்கள் மறையும்.

     6. கடலை மாவு, தேன் மற்றும் பால் கலந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாக்கி இளமைத் தோற்றம் தரும்.

    7. நல்லெண்ணய் மற்றும் பாதாம் எண்ணெயை சம அளவு எடுத்து, இரவு முகத்தில் தேய்த்து ஊறவைத்து, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர சருமத்தின் ஈரப்பதம் மீட்கப்படும், வறட்சியும் தொய்வும் தவிர்க்கப்படும். இதேபோல ஆலிவ் ஆயிலையும் இரவில் முகத்தில் தடவி காலையில் கழுவலாம்.

    8. உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சரும பளபளப்புக்கான சுலபமான வழி. அது இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும்.

     9. கேரட், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ள, அது வயதானாலும் முதுமையைத் தள்ளிவைக்கும்.

    10. தக்காளியில் அதிகளவு ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது. தக்காளிச் சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகம், கழுத்து, கை, கால் என அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதைத்தொடர்ந்து செய்துவர, உங்கள் வயதை எப்போதும் 5, 10 வருடங்கள் குறைத்தே மதிப்பிட வைக்கலாம்.

    • தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
    • இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

    * தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.

    * வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை அதிகம் குடித்து வந்தால், சருமம் பொலிவடையும்.

    * ஊறவைத்த பாதாமை தினமும் 5 என்ற எண்ணிக்கையில் உட்கொள்வது சரும வறட்சியை தடுக்கும்.

    * தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.

    * வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் தோலை முழுவதும் மசாஜ் செய்து குளித்து வந்தாலும் உடல் சூடு குறைந்து சருமம் பொலிவு பெறும்.

    * கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவி குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.

    * எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.

    * வைட்டமின் சி உள்ள எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்வது சருமத்தைப் பாதுகாக்கும்.

    கோடை என்றால் சரும பாதிப்பு என்பது மிக அதிகம். கோடையில் சருமம் பாதிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகளை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    வெயில் காலத்தில் நாம் நமது வழக்கமான பாதுகாப்பு முறைகளை மீண்டும் கவனத்தில் கொள்வோம். கோடை என்றாலே உடலில் நீர்சத்து குறைய ஆரம்பிப்பது வெயிலில் அலையும் அனைவருக்கும் சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்று. இதுவே கூடும் பொழுது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனும் அதிக நீர்வற்றி ஏற்படும் பாதிப்பு ஏற்படுகின்றது.

    கோடை என்றால் சரும பாதிப்பு என்பது மிக அதிகம். ஊறல், நமைச்சல், அதிக அரிப்பு, குத்துவது போன்ற உணர்வு, எரிச்சல்,வலி, கட்டி, வெடிப்பு, வீக்கம், கசிவு என பல பிரச்சினைகள் ஏற்படும்.

    * வேர்குரு: குளிர்ந்த ஒத்தடங்கள் வேர்குருவிற்கு நன்கு உதவும். முட்டானி மட்டி, கடலை மாவு இவை உடலில் தடவி குளிப்பது உதவும். ஆப்பிள் சிடார் வினிகருடன் நீர் கலந்து பாதிப்பு ஏற்பட்ட  இடத்தில் தடவி 10 நிமிடங்கள் சென்று கழுவி விட வேர்குரு அடங்கும். லவாண்டர் எண்ணெயினை வெது வெதுப்பான நீரில் கலந்து குளிக்க உஷ்ண கட்டிகள் அடங்கும்.

    * மெல்லிய, பருத்தியினால் ஆன இறுகாத ஆடைகளை அணியுங்கள்.

    * நடைபயிற்சி, ஓடுதல் இவற்றினை காலை, மாலை அதிக வெய்யில்  இல்லாத நேரத்தில் செய்யுங்கள்.
    * குளிர்ந்த அதாவது சாதாரண நீரில் குளியுங்கள்.
    * உடல் மடிப்புகளில் வேர்வையின் ஈரம்  படியாது உலர்ந்து இருக்கச் செய்யுங்கள்.

    * கனமான கிரீம்களை இக்காலத்தில் பயன்படுத்தாதீர்கள். சருமத்தில் சிறுசிறு முடிகள் இருக்கும். இவற்றின் வேர்களில் கிருமி பாதிப்புகள் ஏற்படலாம். இவை முகம், தலை, கை மடிப்பு, முதுகு, நெஞ்சு, கழுத்து, தொடை என பல இடங்களில் ஏற்படலாம்.



    நீரில் வேப்ப இலையினை முதல் நாள் இரவே நனைத்து உடல் முழுவதும் படும்படி குளிக்க இயற்கை வைத்தியத்தில் அறிவுறுத்தி பலனும் அடைந்துள்ளனர்.
    மருத்துவம் எந்த முறை என்பதனை விட ஆய்வு பூர்வமாக நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டால் அதனை மனித சமுதாயம் பயன்படுத்தி பலன் பெறலாமே.

    வெள்ளை வினிகர் (அ) ஆப்பிள் சிடார் வினிகர் இதனை சிறிதளவு நீரில் கலந்து பாதிப்புள்ள இடத்தில் தடவுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது. இத்தகு பாதிப்பு ஏற்படாது இருக்க கோடையில்

    * வேர்வை உடைகளை அடிக்கடி மாற்றுங்கள்.
    * நீச்சல் செய்பவர்கள் மிக அதிக க்ளோரின் இல்லாது பார்த்துக் கொள்ளுங்கள்.
    * சருமத்திற்கு எரிச்சல் அளிக்காத ஆடைகளை அணியுங்கள்.

    * பெண்கள் வாக்கிங் செய்யும் பொழுதும் ஆண்கள் ஷேவ் செய்யும் பொழுதும் உங்களது சுகாதார டவல்களை உபயோகியுங்கள்.

    பரு பாதிப்பு: வியர்வையும், கிருமியும் சேர்ந்தால் கட்டி, பருபாதிப்புகள் ஏற்படும். இதனை தவிர்க்க சுகாதாரமே முதல் அவசியம். துண்டு, தொப்பி, தலை பேண்டுகள் இவற்றினை அன்றாடம் சுத்தம் செய்யுங்கள். எண்ணை பசை மிகுந்த க்ரீம், மாஸ்ட்ரைஸர் இவற்றினை அடியோடு தவிருங்கள். கடல் உப்பினை நீரில் கலந்து குளிக்க முதுகில் ஏற்படும் பருக்களும் நீங்கும்.

    * சருமம் வறட்சி அடைவதை தவிர்க்க மிதமான காரம் கொண்ட சோப்பினை பயன்படுத்தவும். மென்மையான, மெலிதான சன் ஸ்க்ரீன் உபயோகிக்கவும், உடலில் வியர்வை துர்நாற்றம் ஏற்படாதிருக்க இயற்கையான மஞ்சள், சந்தனம் உபயோகிக்கவும்.
    கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். சரும பிரச்சனைகளை தீர்க்க கெய்யா இலைகளை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
    கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

    * சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

    * இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

    * கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பளிச்சிட வைக்கும்.



    * கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் நீங்கும். சரும சுருக்கங்களை போக்கி இளமையை பாதுகாக்கவும் கொய்யா இலை உதவும்.

    * அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

    * பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    * எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.
    ×