என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது.
    • பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் போக்கோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் "போக்கோ C85" அறிமுகத்தை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 15C 5ஜி-யின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ C85 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 SoC வழங்கப்படுகிறது. இது மலிவு விலையில் நம்பகமான 5G இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




    புகைப்படம் எடுப்பதற்கு, 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. இது நீண்ட கால பேட்ரி பேக்கப் வழங்குவதை உறுதி செய்கிறது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு போக்கோ C85 5ஜி ஸ்மர்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.

    • இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.
    • சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முதல் trifold ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z trifold-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ஒரு நிலையான ஸ்மார்ட்போனில் இருந்து 10 இன்ச் டேப்லெட் அளவிலான டிஸ்ப்ளே வரை விரிவடையும் பல-மடிப்பு டிசைன் கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z trifold அதன் இரண்டு தனித்துவமான டிஸ்ப்ளேக்களால் வரையறுக்கப்படுகிறது. கவர் ஸ்கிரீன் 6.5-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X பேனல் ஆகும், இது நிலையான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பரிமாணங்களை பிரதிபலிக்கிறது. இது 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

    விரிக்கும்போது, சாதனம் 2160 x 1584 தெளிவுத்திறன் கொண்ட 10.0-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X பிரதான திரையை வெளிப்படுத்துகிறது. இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.



    சாம்சங் நிறுவனம் Z TriFold மாடலை புகைப்படங்கள் எடுக்க தலைசிறந்த சாதனமாக நிலைநிறுத்துகிறது. இதில் OIS, F1.7 200MP வைடு-ஆங்கிள் கேமரா உள்ளது. இத்துடன் 12MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 30x வரை டிஜிட்டல் "ஸ்பேஸ் ஜூம்" வழங்கும். செல்ஃபி எடுக்க இரண்டு தனித்தனி 10MP சென்சார்களை கொண்டுள்ளது.

    இந்த சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. இது 16 ஜிபி ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் 5,600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    புதிய கேலக்ஸி Z TriFold 512 ஜிபி மாடலின் விலை 2,445 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,19,235 ஆகும். இது டிசம்பர் 12ஆம் தேதி முதல் கொரியாவில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து சீனா, தைவான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற சந்தைகளில் வெளியிடப்படும்.

    • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
    • பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனம் C சீரிசில் முற்றிலும் புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி C85 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ 144Hz LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 5300+ mm² VC கூலிங், 8 ஜிபி ரேம், 10 ஜிபி வரை டைனமிக் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6 கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, AI எடிட் ஜீனி, 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் இதில் IP69 Pro வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி கொண்டுள்ளது, இது 2 நாட்கள் வரை பயன்பாட்டை உறுதியளிக்கிறது, இத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, கலிலியோ, QZSS, USB டைப்-C உள்ளது.

    ரியல்மி C85 5ஜி ஸ்மார்ட்போன், பரோட் பர்பிள் மற்றும் பீகாக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடலின் விலை ரூ. 15,499 ஆகும். 6GB + 128GB மாடலின் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கிறது.

    • புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும்.
    • இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 15 சிரீசின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15R அடுத்த மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும். இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடுகளுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாழ்நாள் முழுக்க உத்தரவாதத்துடன் கிரீன் லைன் (பச்சை கோடு) பிரச்சினை ஏற்படாது என ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த வார இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6T-ஐ போலவே இருக்கும் என தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மற்றும் 8000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

     


    இதன் இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் 50MP + 8MP கேமரா சென்சார்கள் இடம்பெறுகின்றன.

    இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது. வழக்கம் போல், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.

    • இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 27ஆம் தேதி நத்திங் போன் (3a) லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தில் டெம்பர்டு கிளாஸ், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்கள், கிளிஃப் லைட், 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் டூயல் 5G உடன் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிகிறது.



    இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது, இது 3000 nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது போன் (3a)-ஐ போன்றது. இது சிஎம்எஃப் போன் 2 ப்ரோ மாடலை போன்றே மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ பிராசஸரால் இயக்கப்படுகிறது.

    இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நத்திங் நிறுவனம் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும். மற்ற மாடல்களை போன்றே, இந்த ஸ்மார்ட்போனும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

    • இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
    • விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும்.

    விவோ நிறுவனத்தின் X300 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விவோX300 மற்றும் X300 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் இன்னும் இரு வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், விவோ X300 ஸ்மார்ட்போனின் விலை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தகவலின் அடிப்படையில், இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுடன் போட்டியிடக்கூடும். கூடுதலாக, ப்ரோ வேரியண்ட் உடன் தனித்தனியாக வாங்கக்கூடிய டெலி-கன்வெர்ட்டர் கிட் இந்திய விலையையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.

    விவோX300 இந்தியாவில் விலை விவரம்:

    டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி தனது எக்ஸ் தள பதிவில் விவோ X300 பேஸ் மாடலின் விலையை பகிர்ந்துள்ளார். அதன்படி விவோX300 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89,999 என்று அவர் கூறியுள்ளார். இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74,999 ஆகவும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 80,999 ஆகவும் இருக்கலாம்.

    இது தவிர, இந்தத் சீரிசுக்கான டெலி-கன்வெர்ட்டர் கிட் அல்லது டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் விலை இந்திய சந்தையில் ரூ. 20,999 என கூறப்படுகிறது. இந்த கிட், கிளிக் செய்யப்படும் எந்தப் படத்தின் ஆப்டிகல் ஜூமையும் நீட்டிக்கும் Zeiss 2.35x டெலி-கன்வெர்ட்டர் லென்ஸ்களை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.

    புதிய விவோX300 ஸ்மார்ட்போன் சம்மிட் ரெட் நிறத்தில் வெளியாகும் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மிஸ்ட் ப்ளூ மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரீமியம் X300 ப்ரோ மாடல் டூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    இது தவிர, விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும் என்றும், இது VS1 ப்ரோ இமேஜிங் சிப் மற்றும் V3+ இமேஜிங் சிப் உடன் இணைக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 இல் இயங்கும்.

    • இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.
    • ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பாக்கெட் என்கிற மொபைல் ஆக்சரி ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபை ஆக்ஸசரி வேறு ஒன்றும் இல்லை.. துணியால் பின்னப்பட்ட மொபைல் வைப்பதற்கான ஒரு தோள் பை.

    இது, ஆப்பிள் நிறுவனம், ஜப்பானிய ஆடை வடிவமைப்பாளரான இஸ்ஸி மியாகேவுடன் இணைந்து அறிமுகப்படுத்திய லிமிடெட் எடிஷன் அக்சஸரி ஆகும்.

    3D பின்னப்பட்ட துணியால் (3D-knit fabric) தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய பாக்கெட் வடிவிலான தோள் பை, ஐபோன், ஏர்பாட்ஸ் மற்றும் பிற சிறிய அத்தியாவசிய பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுகிறது.

    இந்த மொபைல் பாக்கெட் இன்று முதல், ஆப்பிள் ஸ்டோர்களிலும், பிரான்ஸ், கிரேட்டர் சீனா, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் இணையதளத்திலும் கிடைக்கிறது.

    இதன் வடிவமைப்பு திறந்தவெளி அமைப்புடன் (open structure) கூடிய பாக்கெட், ஸ்டைலிஷாக கையில் அல்லது தோளில் அணிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

    மொபைல் பாக்கெட் வகைகள் மற்றும் விலை: கையில் மட்டும் மாட்டக்கூடிய ஷார்ட் ஸ்ட்ராப் வெர்ஷன் ரூ.13,300,லாங் ஸ்ட்ராப் வெர்ஷன் (தோளில் அணியும்): ரூ.20,379 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     

    ஆப்பிள் நிறுவனத்தால் ஹை-பேஷன் ஆக்ஸசரி என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐபோன் பாக்கெட்-ஐ கண்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    கடந்த 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐபோன் பாக்கெட் ஸ்டைலாக அணிந்து செல்ல உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறினாலும், வர்த் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுகிறது.

    இது ஒரு சாதாரண துணி பை போன்று இருப்பதாகவும், இதற்காக விலை ரூ.20,000 ? எனவும் நெட்டிசன்கள் வாயை பிளக்கின்றனர்.

    • 3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது.
    • இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும்.

    மனிதனின் 6-வது விரல் ஸ்மார்ட்போன் என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடும் சேவையும் அதிகரித்துள்ளது. தகவல் தொடர்பு, இணைய அணுகல், புகைப்படம் எடுக்கும் வசதி, பண பரிவர்த்தனை, ஏ.ஐ., என பல அம்சங்களை ஒருங்கே பெற்ற தொழில்நுட்ப சாதனமாக ஸ்மார்ட்போன் விளங்குகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இயங்காது என்பதால் ஸ்மார்ட்போன் யுகம் என்ற சொல்பதத்துக்கு பொருத்தமாக அதன் செயல்பாடு உள்ளது. மேலும் செல்போன் ஒரு ஆடம்பர குறியீடாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு அம்சமாகவும் மாறியுள்ளது.

    இத்தகைய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச டேட்டா கார்ப்ரேஷன் (ஐ.டி.சி.) என்னும் பிரபல தரவு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான 2-ம் காலாண்டில் (ஜூலை-செப்) நாட்டின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும். ஜி.எஸ்.டி. வரிசீர்திருத்தம், பண்டிகை காலம், வசதியான தவணை வசதி மற்றும் பழைய சாதனங்களை மாற்றும் திட்டங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

    அந்த ஆய்வின்படி அடிப்படை நிலை ஸ்மார்ட்போன்களைவிட பிரிமியம் ரகம் என்னும் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படும் போன்களே அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் விவோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அது 18.3 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. விவோ நிறுவனம் இந்த பட்டியலில் 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதனை தொடர்ந்து ஒபோ நிறுவனம் 13.9 சதவீதம் சந்தை மதிப்பை பெற்றுள்ளது. சாம்சங் 12.6 சதவீதம் அளவில் சந்தை மதிப்பை பெற்றது. செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தநிலையில் அந்த நிறுவனம் 50 லட்சம் செல்போன்களை விற்று இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக மோட்டோரோலா நிறுவனம் 52.4 சதவீதம் வருடாந்திர உயர்வை கண்டு பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை சராசரி ரூ.26,079 (294 டாலர்கள்) ஆக இருந்துள்ளது.

    • நத்திங் நிறுவனம் புதிய போன் 3a லைட் இந்திய வெளியீட்டை எக்ஸ் தள பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறது.
    • "லைட்-னிங் எப்போதும் இன்னும் ஏதாவது ஒன்றோடு சேர்ந்தே இருக்கும்" என்று நிறுவனம் பதிவிட்டுள்ளது.

    நத்திங் நிறுவனம் கடந்த மாதம் நத்திங் போன் 3a லைட் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இது நத்திங் நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு தற்போது சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய நத்திங் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய நத்திங் ஸ்மார்ட்போன் எச்சரிக்கைகளுக்கான புதிய ஜிஎல்பி லைட்டுடன் வருகிறது, இது அந்நிறுவனத்தின் பாரம்பிரய கிளிஃப் இன்டர்ஃபேஸை மாற்றுகிறது.

    நத்திங் நிறுவனம் புதிய போன் 3a லைட் இந்திய வெளியீட்டை எக்ஸ் தள பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறது. "லைட்-னிங் எப்போதும் இன்னும் ஏதாவது ஒன்றோடு சேர்ந்தே இருக்கும்" என்று நிறுவனம் பதிவிட்டுள்ளது. இது புதிய ஸ்மார்ட்போன் கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், குறைந்த விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் "விரைவில் வருகிறது" என நத்திங் தெரிவித்துள்ளது.



    நத்திங் போன் 3a லைட் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு விதமான நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நத்திங் வெளியிட்டுள்ள டீஸர் படம் தெரிவிக்கிறது.

    நத்திங் போன் 3a லைட் அம்சங்கள்:

    6.77-இன்ச் ஃபுல் ஹெச்டி + 1080×2392 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே

    மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ பிராசஸர்

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    50MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ராவைடு கேமரா, மூன்றாவது சென்சார்

    16MP செல்ஃபி கேமரா

    டூயல் சிம் (நானோ + நானோ)

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5

    வைபை 6, ப்ளூடூத் 5.3

    IP54 சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    5,000mAh பேட்டரி

    33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்

    • ஸ்மார்ட்போன் ஆழமாக ரேசிங் தீம் யுஐ மற்றும் பிரத்யேக கேமரா வாட்டர்மார்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 16GB ரேம், 1TB மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்டின் F1 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்டின் F1 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன், சேகரிப்பாளர்களின் டிசைன்- இரண்டு ஆஸ்டன் மார்டின் F1 லிமிடெட் எடிஷன் டெக்கோ டிசைன்களுடன் (சதுரம் மற்றும் வட்டம்) வருகிறது. இதனுடன் வரும் சிம் கார்டு எஜெக்டர் சாதனம் கூட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆழமாக ரேசிங் தீம் யுஐ மற்றும் பிரத்யேக கேமரா வாட்டர்மார்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், இதில் மெக்கானிக்கல் அசெம்ப்ளி டிசைன் கொண்ட பிரத்யேக லென்ஸ் மாட்யூல் கொண்டிருக்கிறது. மேலும், அணியின் நிறத்துடன் ஒற்றுப்போகும் வகையில் லெமன் கலர் தீமில் கிடைக்கிறது. இத்துடன் F1 அணியின் அதே சில்வர் விங் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.



    6.79-இன்ச் 1440x3136 பிக்சல் 2K+ OLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3nm பிராசஸர்

    அட்ரினோ 840 GPU, R1 கிராபிக்ஸ் சிப்

    16 ஜிபி LPDDR5X ரேம், 1TB UFS 4.1 மெமரி

    ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ரியல்மி UI 7.0

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS, f/1.8

    50MP 116° அல்ட்ரா-வைடு கேமரா, f/2.0

    200MP 1/1.4″ 3x பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா,

    32MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

    IP66+IP68+IP69 சான்றுடன் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட்

    யூஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வை-பை 7 802.11 be, ப்ளூடூத் 6.0

    7000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங்,

    விலை விவரங்கள்:

    ரியல்மி GT 8 ப்ரோ ஆஸ்டன் மார்ட்டின் F1 லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை 5499 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 67,910 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16GB ரேம், 1TB மெமரி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    • ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் 144Hz ரிப்ரெஷ் ரேட், 1,200 nits பீக் பிரைட்னஸ் உடன் 6.8-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
    • 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்தடுத்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. வருகிற நவம்பர் 20ஆம் தேதி ரியல்மி GT 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்த ரியல்மி தயாராகி வருகிறது. இந்த நிலையில், ரியல்மி நிறுவனம் பட்ஜெட் பிரிவில் புதிய ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி C85 என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரூ.12,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C75 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும். ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் அசத்தலான கேமரா சென்சார்களை தவிர்த்து, சற்றே குறைந்த திறன் கொண்ட சென்சார்களுடன் வரலாம் என்று டிப்ஸ்டர் கூறுகிறார்.

    ரியல்மி நிறுவனம் C85 ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. ஆனால் அது வியட்நாமில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில், இந்த பட்ஜெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், வியட்நாமில் ரியல்மி 15x மற்றும் ரியல்மி C85 ஆகியவை முன்பக்க கேமராவை தவிர ஒரே மாதிரியான அம்சங்களை பகிர்ந்து கொள்கின்றன.



    ரியல்மி C85 அம்சங்கள்:

    ரியல்மி C85 ஸ்மார்ட்போனில் 144Hz ரிப்ரெஷ் ரேட், 1,200 nits பீக் பிரைட்னஸ் உடன் 6.8-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இது பட்ஜெட் பிரிவில் அரிதான ஒன்றாகும். இது சாதாரணமாகவும், கேமிங்கின் போதும் மென்மையான ஸ்கிராலிங் அனுபவத்தை வழங்கும். ரியல்மி C85 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் அதன் 7,000mAh பேட்டரி ஆகும். இது இந்தப் பிரிவில் மிகப்பெரிய ஒன்றாகும்.

    இந்த ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், 7,000mAh பேட்டரியுடன் கூடிய மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போனாக ரியல்மி C85 இருக்கும். இதனுடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6.5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    வியட்நாமில் ரியல்மி C85 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டிருக்கிறது. புகைப்படங்கள் எடுப்பதற்கு, பின்புறத்தில் 50MP பிரைமரி கேமராவும், முன்பக்கத்தில் 8MP கேமராவும் வழங்கப்படுகிறது.

    • தினசரி மல்டி-டாஸ்கிங் முதல் கேமிங் வரை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒப்பிடமுடியாத வேகத்தை உறுதி செய்கிறது.
    • ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இதுவரை எந்த ஒன்பிளஸ் மாடலிலும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வருகிற 13-ந்தேதி உலகளவில் மற்றும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வேகமான மற்றும் மென்மையான அனுபவத்தை உறுதியளிக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஒரு புரட்சிகரமான டிரிபிள்-சிப் கட்டமைப்பு, மிகவும் மென்மையான 1.5K 165 Hz டிஸ்ப்ளே மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் 7300mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும். இது தினசரி மல்டி-டாஸ்கிங் முதல் கேமிங் வரை ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒப்பிடமுடியாத வேகத்தை உறுதி செய்கிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 மொபைல் பிராசஸர் வழங்கப்படுகிறது. இது முதன்மை நிலை செயல்திறனுக்கான அடித்தளத்தை வழங்குகிறது. ஒவ்வொரு தொடர்புக்கும் உடனடி பதிலுக்காக 3200Hz டச் சாம்ப்ளிங் கொண்டுவரும் ஒரு பிரத்யேக டச் ரெஸ்பான்ஸ் சிப் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு தனித்த வைஃபை சிப் நெரிசலான நெட்வொர்க் சூழல்களிலும் கூட வலுவான, நிலையான இணைப்பைப் பராமரிக்கிறது.



    ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் இதுவரை எந்த ஒன்பிளஸ் மாடலிலும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 7300mAh சிலிக்கான் நானோஸ்டாக் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அதிவேக சார்ஜிங்கை உறுதிப்படுத்துவதற்காக 120W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் வருகிற நவம்பர் 13ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியீட்டின் போது தெரியவரும். அறிமுகத்திற்குப் பிறகு, உலகளாவிய வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, நவம்பர் 13 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது. வழக்கம் போல், இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

    ×