பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த லாவா

இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் கிளாஸி பேக் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.
பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த லாவா
Published on

லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்ைதயில் அறிமுகம் செய்யப்பட்டது. லாவா Bold சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் லாவா Bold N2 என அழைக்கப்படுகிறது. முதல் முறை ஸ்மார்ட்போன் வாங்குவோரை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் கிளாஸி பேக் டிசைன் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் SC9863A பிராசஸர், 4 ஜபி ரேம், 4 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட லாவா Bold N2 ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய லாவா Bold N2 ஸ்மார்ட்போன் இன்டஸ்பிளாக் மற்றும் சியாச்சென் வைட் என இரு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்குகிறது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com