என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    மும்பை:

    டபிள்யூ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான்.

    நான்காவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 தொடர் மும்பை புறநகரான நவி மும்பையில் நடந்து வருகிறது.

    இதில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 192 ரன்களைக் குவித்தது.

    193 ரன் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 37 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று கைகொடுத்தார். தனது 10-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்த அவர் அதன் பிறகு இரண்டு முறை கண்டம் தப்பி அணியை வெற்றிகரமாக கரைசேர்த்தார்.

    இந்நிலையில், பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.

    இந்தப் பட்டியலில் மும்பை அணி வீராங்கனையும், இங்கிலாந்து ஆல் ரவுண்டருமான நாட் ஸ்கீவர்-பிரண்ட் முதலிடத்தில் உள்ளார். அவர் 1,101 ரன்களுடன் உள்ளார். ஹர்மன்ப்ரீத் 1,016 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி அணி 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் டெல்லி-உ.பி. அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

    கேப்டன் மெக் லானிக் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். ஹர்தின் தியோ 47 ரன்னில் ரிடயர்டு அவுட்டில் வெளியேறினார்.

    டெல்லி அணி சார்பில் ஷபாலி வர்மா, மரிஜான்னே காப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா- லீசெல் லீ ஜோடி அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாலி வர்மா 36 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய லீசெல் லீ அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து வென்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.

    கனிகா அஜா 35 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர். ஜார்ஜியா வேரம் 43 ரன்னும், பார்தி புல்மாலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அமன்ஜோத் கவுர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    4வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுருடன் நிகோலா கேரி இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், மும்பை அணி 19.3 ஓவரில் 193 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்னும், நிகோலா கேரி 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆர்.சி.பி. அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    மும்பை:

    பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது.

    முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு154 ரன்கள் எடுத்தது. சஜீவன் சஜனா 45 ரன்கள் எடுத்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடித்தார்.

    ஆர்.சி.பி. அணி சார்பில் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் நடின் டி கிளார்க் தனி ஆளாக போராடி அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடின் டி கிளார்க் 63 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மும்பையில் நாளை தொடங்குகிறது.
    • இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    புதுடெல்லி:

    பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி 17-ம் தேதி வரை நவி மும்பையிலும், ஜனவரி 19-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை வதோதராவிலும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான ஜுலான் கோஸ்வாமி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஹர்மன்பிரீத் கவுர், இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கும், டபிள்யூ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் செய்துள்ள சாதனைகள் மகத்தானது.

    முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.

    அவரது தலைமையில் மும்பை அணி 2 முறை மகுடம் சூடியுள்ளது.

    ஒரு கேப்டனாக அவரது சாதனையை யாராலும் நெருங்க முடியாது. மேலும் பல பட்டங்களை அவர் வென்று தருவார்.

    ஹர்மன்பிரீத் கவுரால் இன்னும் 4-5 ஆண்டுகள் விளையாட முடியுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்துக்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
    • முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து தனியார் ஊடகத்தில் பேசிய முஸ்தபிசுர் ரகுமான், "என்னை அணியில் இருந்து விடுவித்துவிட்டால், என்னால் வேறு என்ன செய்ய முடியும்?" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.

    முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

    • முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
    • ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப் பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, " சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து வரும் சம்பவங்கள் காரணமாக, வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு கேகேஆர் அணிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரையாவது கேட்டால், அதை அனுமதிக்கும்" என்று தெரிவித்தார்.

    முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.

    • பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவை தலா 14.20 கோடி கொடுத்து சி.எஸ்.கே. அணி ஏலத்தில் எடுத்தது
    • 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வீரர்களை எடுத்துள்ளது.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா ஆகிய அன்கேப்ட் வீரர்களை தலா 14.20 கோடி கொடுத்து சி.எஸ்.கே. அணி ஏலத்தில் எடுத்து பெரும் பேசுபொருளானது.

    2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான வீரர்களை எடுத்துள்ளது.

    இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ரெட்ரோ லுக்கில் சி.எஸ்.கே. வீரர்கள் இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்துள்ளது. 

    • ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீனை ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்துள்ளது.
    • இலங்கையின் மதீஷா பதிரனாவை ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எடுத்தது.

    அபுதாபி:

    19-வது இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது.

    ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இலங்கையின் பதிரனா, இந்தியாவின் ரவி பிஷ்னோய், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீரர்கள் விவரம் வருமாறு:

    கேமரூன் கிரீன்: ரூ.25.20 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    மதிஷா பதிரனா: ரூ.18 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    லியாம் லிவிங்ஸ்டன்: ரூ.13 கோடி- சன் ரைசர்ஸ் ஐதராபாத்

    பிரசாந்த் விர்: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்

    கார்த்திக் சர்மா: ரூ.12.40 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.9.20 கோடிக்கு வாங்கியது.

    அபுதாபி:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், இங்கிலாந்தைச் லியம் லிவிங்ஸ்டன் முதல் சுற்றில் விலைபோகவில்லை. அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் அவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.13 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • அன்கேப்டு பிளேயர்கள் 2 பேரை 14.20 கோடிக்கு சி.எஸ்.கே. அணி வாங்கியது.

    அபுதாபி:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    • 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.
    • ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்க்கிறது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், பிரசாந்த் வீர் என்ற UNCAPPED ஆல் ரவுண்டர் வீரரை சி.எஸ்.கே. அணி 14.20 கோடிக்கு ஏலம் போனார், இவரின் ஆரம்ப விலை ரூ.30 லட்சம் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன UNCAPPED வீரர் என்ற சாதனையை பிரசாந்த் வீர் படைத்தார். ஜடேஜாவிற்கு மாற்றாக பிரசாந்த் வீர் இருப்பர் என்று சி.எஸ்.கே அணி எதிர்பார்த்து இந்த விலையை கொடுத்துள்ளது. 

    அடுத்ததாக ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரையும் சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன 2 UNCAPPED வீரர்களையும் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது. 

    ×