என் மலர்
நீங்கள் தேடியது "RCB"
இன்றைய போட்டிக்கு முன் ஆர்சிபி 11 ஆட்டத்தில் 8 முறை டாஸ் தோற்றுள்ளது. பெங்களூர், வான்கடே, சென்னை போன்ற மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகித்தது. அதில் டாஸ் தோற்றது அணியில் தோல்விக்கு முக்கிய பங்கு வகித்தது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் நான்கு போட்டிகளில் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லிக்கு எதிராக இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி மோதும் பெரோஸ் ஷா கோட்லா மைதானம் 2-வது பேட்டிங் செய்யும்போது ‘ஸ்லோ’ ஆகிவிடும். இதனால் டாஸ் வெல்லும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும் என கணிக்கப்பட்டது.
இன்றைய போட்டியில் டாஸ் சுண்டப்பட்டபோது டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்றார். உடனே, விராட் கோலி ஆர்சிபி வீரர்களை நோக்கி 9-வது முறையாக டாஸ் தோற்றுள்ளோம் என்பதை சைகை மூலம் காண்பித்தார்.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதை நீங்களும் காணுங்கள்....
Lost 9 out of 11 tosses. Toss lo neeku chaladaridram vundi virat annnaaa. .... King kohli daaaa pic.twitter.com/JQVHZMpy75
— Manikanta Swami (@Manikan77884196) April 28, 2019
அதன்படி டெல்லி அணியின் தவான், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 3.3 ஓவரில் 35 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து தவான் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 37 பந்தில் 50 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிஷப் பந்த் 7 ரன்னிலும், கொலின் இங்க்ராம் 11 ரன்னிலும் ஏமாற்றம் அளித்தனர்.

6-வது வீரராக களம் இறங்கிய ருதர்போர்டு அதிரடியாக விளையாடினார். கடைசி இரண்டு ஓவர்களில் டெல்லி 36 ரன்கள் விளாச 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது. ருதர்போர்டு 13 பந்தில் 3 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆர்சிபி அணியில் சாஹல் 41 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
1. பிரித்வி ஷா, 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பந்த், 5. ரூதர்போர்டு, 6. கொலின் இங்க்ராம், 7. அக்சார் பட்டேல், 8. ரபாடா, 9. சந்தீப் லாமிச்சேனே, 10. அமித் மிஸ்ரா, 11. இசாந்த் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-
1. பார்தீவ் பட்டேல், 2. விராட் கோலி, 3. ஏபி டி வில்லியர்ஸ், 4. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 5. கிளாசன், 6. ஷிவன் டுபே, 7. குர்கீரத் சிங் மான், 8. வாஷிங்டன் சுந்தர், 9. சைனி, 10. உமேஷ் யாதவ், 11. சாஹல்.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தோள்பட்டை வலியால் அவதிப்படும் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.
‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய கோலி 13 ரன்களில், முகமது ஷமி வீசிய ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களிலும் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த மொயீன் அலி 4 ரன்னிலும், அக்ஷ்தீப் நாத் 3 ரன்னிலும் வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் திண்டாடியது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும், முருகன் அஸ்வினும் ரன்வேகத்துக்கு அணை போட்டனர்.

இதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அவசரமின்றி விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்த அதிரடி வேட்டை நடத்தினர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் வாண வேடிக்கையால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தனது 33-வது அரைசதத்தை எட்டிய டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர். தனது பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் எதுவும் அடிக்க விடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17-வது ஓவர் வரை (3 விக்கெட்டுக்கு 167 ரன்) பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது.
ஆனால் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ரன்னிலும், பூரன் 46 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வியாகும்.
ஐ.பி.எல். போட்டியின் 35-வது ‘லீக்’ ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் தினேஷ்கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி ஐதராபாத் (6 விக்கெட்), பஞ்சாப் (28 ரன்), பெங்களூர் (5 விக்கெட்), ராஜஸ்தான் (8 விக்கெட்) ஆகிய அணிகளை வென்று இருந்தது. டெல்லி (சூப்பர் ஓவர், 7 விக்கெட்), சென்னை (7 விக்கெட், 5விக்கெட்) ஆகிய அணிகளிடம் தலா 2 முறை தோற்று இருந்தது.
ஏற்கனவே பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் மீண்டும் தோற்கடித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.
கொல்கத்தா அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோற்றது. அந்த தோல்வியில் இருந்து மீளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்த்ரே ரஸ்சல், (322 ரன்), கிறிஸ்லின் (212 ரன்), நிதிஷ் ரானா (201 ரன்) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், சுனில் நரீன், பியூஸ் சாவ்லா போன்ற சிறந்த பவுலர்களும் கொல்கத்தாவில் உள்ளனர்.
பெங்களூர் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பை பெற அந்த அணிக்கு மிகவும் கடினமே. எஞ்சிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
அந்த அணி பஞ்சாப்பை மட்டும் 8 விக்கெட்டில் வென்றது. மும்பையிடம் 2 முறையும் (6 ரன், 5 விக்கெட்), சென்னை (7 விக்கெட்), ஐதராபாத் (118 ரன்), ராஜஸ்தான் (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்), டெல்லி (4 விக்கெட்) ஆகியவற்றிடம் ஒருமுறையும் தோற்றது.
விராட்கோலி (278 ரன்), டிவில்லியர்ஸ் (307 ரன்), யசுவேந்திர சாஹல் (13 விக்கெட்) போன்ற சிறந்த வீரர்கள் இருந்தும் பெங்களூர் அணி முன்னேற்றம் அடையாமல் இருப்பது பரிதாபமே. #IPL2019 #KKRvRCB
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோல்வியைச் சந்தித்துள்ளன. அந்த அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கவுல்டர்-நைல்-ஐ ஏலத்தில் எடுத்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடியதால் ஐபிஎல் தொடக்கத்தில் அவர் விளையாடவில்லை.
பின்னர் அணியில் இணைய இருந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினை தேர்வு செய்துள்ளது.

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கோப்பை முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டி வந்தது. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.
தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று கோதாவில் இறங்குகின்றன.
பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு (602 ரன்), ஷேன் வாட்சன் (555 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), சுரேஷ் ரெய்னா (445 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் அளித்த கணிசமான பங்களிப்பு கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த முறையும் இவர்களை தான் சென்னை அணி அதிகமாக நம்பி இருக்கிறது. சென்னை அணியில் 12 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு 39 வயது ஆகிறது. ஆனாலும் அவர்களின் அனுபவம் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.
உள்ளூரில் ரசிகர்களின் ஆரவாரம் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் உத்வேகம் அளிக்கும். காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை இங்கு 7 லீக்கிலும் சென்னை அணி விளையாட இருப்பது சாதகமான அம்சமாகும்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் வலுவாகவே இருக்கிறது. ஆனால் சென்னைக்கு எதிராக மோதுவது என்றாலே பெங்களூரு அணி வதங்கி போய் விடுகிறது. சென்னைக்கு எதிராக இதுவரை 22 ஆட்டங்களில் மோதியுள்ள பெங்களூரு அணி அதில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 14-ல் தோல்வி கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. அதுவும் சென்னை அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களிலும் பெங்களூரு அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த தோல்விப்பயணத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் பெங்களூரு அணியினர் ஆயத்தமாகியுள்ளனர்.
சென்னை வீரர் சுரேஷ் ரெய்னாவும், பெங்களூரு கேப்டன் விராட் கோலியும் சாதனையின் விளிம்பில் உள்ளனர். ஐ.பி.எல்.-ல் 5 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு ரெய்னாவுக்கு 15 ரன் தேவைப்படுகிறது. 52 ரன்கள் எடுத்தால் கோலி இந்த இலக்கை அடைவார்.
பொதுவாக சேப்பாக்கம் ஆடுகளம் வேகம் குறைவாக இருக்கும். அதனால் சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா அல்லது ஹர்பஜன்சிங்.
பெங்களூரு: பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஹெட்மயர், ஹென்ரிச் கிளாசென், வாஷிங்டன் சுந்தர், பவான் நெகி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் துபே அல்லது மொயீன் அலி.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #IPL2019 #CSK #RCB
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்கள் 4 அடுக்கு பாதுகாப்பை கடந்த பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
நுழைவு வாயில் இருந்து ஸ்டேடியத்தில் உள்ள இருக்கை வரை இந்த 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கமாண்டோ உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல போலீசாருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.
ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். போட்டி முடிந்து ரசிகர்கள் செல்வதற்கு வசதிக்காக இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. #IPL2019 #CSK #RCB
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையில் சுமார் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் வீரர்களின் வேலைப்பளு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்திய வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா? என்பது சந்தேகமே.
இந்நிலையில் பரபரப்பு, நெருக்கடி சூழ்நிலையிலேயே செல்லும் ஐபிஎல் தொடர், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த தயார்படுத்துதல் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார். நேராக ஐபிஎல் தொடருக்கு புத்துணர்வுடன் செல்வார் என யாராவது கூறினால், அது சரியென்று நான் கூறமாட்டேன். அதிக போட்டிகளில் விளையாடினால், சிறப்பான ஆட்டத்தை பெறலாம். விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பட்டுமே விளையாடினால், அது மாறுபட்டது.
சர்வதேச கிரிக்கெட் போன்று ஐபிஎல் நெருக்கடியான சூழ்நிலையை கொண்ட தொடர். அதனால்தான் ஒவ்வொருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார்கள். ஆகவே, ஐபிஎல் தொடரில் பரபரப்பான, நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய பிறகு, உலகக்கோப்பை தொடருக்குச் செல்லலாம்’’ என்றார்.