என் மலர்
நீங்கள் தேடியது "ராஜஸ்தான் ராயல்ஸ்"
- ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
- ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார்.
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கும்போது தோனியின் காலை தொட்டு வைபவ் சூர்யவன்ஷி வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- நடப்பி ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.
- சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.
இந்நிலையில், 2022ம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு சீசனிலும் அதிகபட்சமாக 10 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது
நடப்பி ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. சி.எஸ்.கே. அணி தனது கடைசி போட்டியில் (மே 25) குஜராத்தை எதிர்கொள்கிறது.
சி.எஸ்.கே. அதிக தோல்விகளை சந்தித்த ஐபிஎல் தொடர்கள்
2022 - 10 தோல்விகள்
2025 - 10* தோல்விகள்
2012 - 8 தோல்விகள்
2020 - 8 தோல்விகள்
- பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம்.
- கூடுதலாக விக்கெட் இழந்ததால் ரிஸ்க் எடுத்து விளையாட முடியவில்லை.
புதுடெல்லி:
டெல்லியில் நேற்று நடந்த 62வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே 187 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது:
நாங்கள் இன்று பேட்டிங்கில் நிர்ணயித்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோர் என நினைக்கின்றேன். ஏனென்றால் விக்கெட்டுகளை நாங்கள் அதிக அளவு இழந்ததால் கீழ் வரிசை வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. விக்கெட்டுகள் அதிகம் இழப்பதன் மூலம் 20 ஓவரும் முழுமையாக விளையாட முடியாத நிலை ஏற்படும். ஆனால் பிரவீஸ் அபாரமாக விளையாடி சரியான வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்த்தார்.
எங்கள் அணியின் ரன்ரேட்டும் நன்றாகத்தான் இருந்தது. பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம். கூடுதலாக விக்கெட் இழந்ததால் எங்களால் ரிஸ்க் எடுத்து விளையாட முடியவில்லை.
பவர்பிளேவில் நாங்கள் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறோம். முதல் ஆறு ஓவரில் இவ்வளவு அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது.
பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கன்சிஸ்டன்டுடன் விளையாட வேண்டும்.
உங்களால் சிக்சர்களை எந்த நிலையிலும் அடிக்க முடியும் .உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை செலுத்திக் கொள்ளாதீர்கள். சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். விளையாட்டை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய அறிவுரையாக இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி 20 பந்தில் 43 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 39 ரன்னில் அவுட் ஆனார்.
ராஜஸ்தான் சார்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 19 பந்தில் 33 ரன் எடுத்து அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 33 பந்தில் 57 ரன்னும், சஞ்சு சாம்சன் 41 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜுரெல் 12 பந்தில் 31 ரன் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.
- ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் - சென்னை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே, கான்வே களமிறங்கினர். இதில் கான்வே 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஊர்வில் படேல் 0 ரன்னில் அவுட் ஆனார்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 20 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அஸ்வின் 13, ஜடேஜா 1 என அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதனையடுத்து பிரேவிஸ் மற்றும் துபே ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரை சதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரேவிஸ் 42 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் தோனியும் துபேவும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். துபே 39 ரன்னில் அவுட் ஆனார். இறுதிவரை போராடிய தோனி 17 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் சென்னை அணி 20 ஓவரில் 190 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுத்வீர் சிங் சரக், மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
- இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.
- இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும்.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன. முதலில் இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க இருந்தது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் ஒரு வாரம் போட்டி நிறுத்தப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்ட போது இந்த ஆட்டம் டெல்லிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டுகின்றன.
12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்த்து விடலாம். அடுத்த சீசனுக்கு அணியை வலுப்படுத்தும் நோக்குடன் வீரர்களை பயன்படுத்துவோம் என கேப்டன் டோனி கூறியுள்ளார். இதனால் இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல், ஆயுஷ் மாத்ரே போன்ற இளம் சூரர்களின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தாயகம் திரும்பிய வீரர்களில் இங்கிலாந்தை சேர்ந்த சாம் கர்ரன், ஜாமி ஓவர்டான் மறுபடியும் இந்தியா வரவில்லை. மற்றபடி சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது, வேகப்பந்து வீச்சாளர் பதிரானா தாக்குதல் தொடுக்க தயாராக உள்ளனர். தனது கடைசி லீக்கில் கொல்கத்தாவை தோற்கடித்த சென்னை அணி 13 நாள் இடைவெளிக்கு பிறகு களம் காண்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி நெருங்கி வந்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த சீசனில் 9-வது ஆட்டங்களில் இலக்கை நோக்கி ஆடியதில் 8-ல் தோல்வியை சந்தித்துள்ளது. அதில் 5 ஆட்டங்களில் 11 ரன்னுக்கும் குறைவான வித்தியாசமாகும். அதாவது ஒன்றிரண்டு பெரிய ஷாட்டுகள் அடித்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். அதை செய்ய முடியாமல் போய் விட்டதாக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேதனையுடன் குறிப்பிட்டார். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (6 அரைசதத்துடன் 523 ரன்), வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரெல் உள்ளிட்டோர் கைகொடுத்தாலும் பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் டாப்-20 இடங்களில் ஒரு ராஜஸ்தான் பவுலர் கூட இல்லை. எனவே பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். ஏற்கனவே லீக்கில் 6 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி, இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்ய ஆர்வம் காட்டுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ஆயுஷ் மாத்ரே, டிவான் கான்வே, உர்வில் பட்டேல், பிரேவிஸ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), நூர் அகமது, அன்ஜூல் கம்போஜ், கலீல் அகமது, பதிரானா.
ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, கிவெனா மபாகா, துஷர் தேஷ் பாண்டே, ஆகாஷ் மத்வால், பசல்ஹக் பரூக்கி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- ராஜஸ்தான் அணியால் இலக்கை நெருங்கி வெற்றி பெற முடியவில்லை.
- வெற்றி பெறக் கூடிய சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
ஐபிஎல் 2025 சீசனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்க, பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து 200 ரன்களுக்கும் மேல் சேஸிங் செய்ய முயற்சித்து சொற்ப ரன் வித்தியசாத்தில் தோல்வியைடந்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்தது.
இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் 8 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்துள்ளது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கெதிராக 10 ரன்னில் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் 219 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 209 ரன்கள் மட்டுமே அடித்தது. தொடக்க ஜோடியான ஜெய்வால் (50)- சூர்யவன்ஷி (40) முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 76 ரன்கள் குவித்தது. ஜெய்வால் ஆட்டமிழக்கும்போது 8.4 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.
இந்த தோல்விக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-
பேட்ஸ்மேன்களை குறை சொல்ல எந்த காரணமும் இல்லை. பந்து வீச்சில்தான் குறை உள்ளதாக நினைக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இது 220 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் என நான் நினைக்கவில்லை. இது 195 முதல் 200 ரன்கள் அடிக்கக்கூடிய விக்கெட். நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்துவிட்டோம்.
நிங்கள் ஸ்கோரை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. விக்கெட் வீழ்த்துவது மற்றும் ரன்னை கட்டுப்படுத்துவது ஆகிய இரண்டிலும்தான். ஒவ்வொரு போட்டியில் நாங்கள் 200 முதல் 220 வரை சேஸிங் செய்ய வேண்டியிருந்தது.
இது மிகவும் கடினமானது. ஸ்கோரை நெருங்கி வந்தோம், ஆனால், எங்களால் போட்டியை முடிக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. இந்த தொடர் முழுவதும் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் கடைநிலை பேட்ஸ்மேன்கள் சற்று கூடுதலாக ரன் சேர்க்க முடியாததால் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை என்பதை உணர்வீர்கள். கடைநிலை வீரர்களுக்கு கிளக் ஆகி எங்களுக்கு தேவையான பெரிய ஷாட்கள் கிடைக்கவில்லை.
இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
- முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
ஜெய்ப்பூர்:
நடப்பு ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில், வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேசியதாவது:
முந்தைய நாள் பயிற்சியின் போது கைவிரலில் பந்து தாக்கியதால் வலி இருந்தது. காயத்தின் தன்மை குறித்து தெளிவாக தெரியவில்லை. அதனை பரிசோதனை செய்யவேண்டும்.
பீல்டிங் செய்ய களம் இறங்காததால் வெளியில் இருந்தபடி வீரர்களுக்கு தகவல்களை பரிமாறினேன். எதிரணி சிறப்பாக ஆடும் போது நமது வீரர்களுக்கு தளர்வு ஏற்படும். அதனை தவிர்க்கவே வீரர்களுடன் தொடர்ந்து பேசினேன். எங்கள் அணி வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது.
ஹர்பிரீத் பிரார் வலைபயிற்சியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பில் அருமையாக செயல்பட்டார். அவரது மனநிலை அபாரமாக இருக்கிறது.
சூழ்நிலை எப்படி இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் என்ற மனநிலையை நாங்கள் ஒருங்கிணைந்து வெளிக்காட்டி இருக்கிறோம். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை அடித்து ஆடுவது கடினமாக இருந்தது. எனவே பெரும்பாலான ரன்களை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக எடுத்தோம். எந்தச் சூழ்நிலையிலும் ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்ற முடியும் என தெரிவித்தார்.
- ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.
இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.
இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்கியது.
ஆனால் ஆட்டத்தின் முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இந்நிலையில், ஐபிஎஸ் தொடர் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.
- ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியுள்ளது.
ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளதால் அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடினமாக போராடும்.
அதே சமயம் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்நிலையில், இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.
இதன்மூலம், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களிமிறங்குகிறது.
இப்போட்டியில் அதிகபட்சமாக நெஹல் வதோரா 70, ஷஷங் சிங் 59, ஸ்ரேயாஸ் ஐயர் 30 என்கள் எடுத்தனர்.
- ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.
ஏற்கனவே பிளே-ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து விட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் ரேஸில் உள்ளதால் அந்த அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற கடினமாக போராடும். அதே சமயம் ராஜஸ்தான் அணி எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி அதிரடியாக ஆடி எதிரணிகளுக்கு அதிர்ச்சி அளிக்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட சஞ்சு சாம்சன் இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.