என் மலர்
நீங்கள் தேடியது "Vaibhav Suryavanshi"
- கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தோடு காணப்படுகிறார்.
- அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார்.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் இணைந்து, அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தயாராகி வருகின்றனர்.
இந்த வரிசையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை அந்த அணி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. அறிமுக வீடியோவில் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் மட்டையுடன் சிரித்த முகத்தில் காணப்படுகிறார். 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
வைபவ் சூர்யவன்ஷி அணியில் இணைந்தது பற்றி பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், "வைபவ் மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அகாடமி மைதானத்தில் அவர் சிக்சர்களை பறக்க விடுகிறார். அவரது பவர்-ஹிட்டிங் குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் எழுந்தன. வேறென்ன கேட்க முடியும்?"
"அவரது பலத்தை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாகவும், அவருடன் ஒரு சகோதரர் போல் இருக்க வேண்டும். அவர் பங்களிப்பை வழங்க தயாராக காணப்படுகிறார். அவரை சிறப்பாக வைத்துக் கொள்வதே முக்கியமானது. டிரெசிங் ரூமில் நல்ல எண்ணோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்த வேண்டும். வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அணியில் விளையாடுவார்."
"தற்போது அவர் ஐ.பி.எல்.-இல் விளையாட தயாராக இருக்கிறார் என்றே நினைக்கிறேன். அவர் அடிக்கும் சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன. எதிர்காலம் அவருக்கு எப்படி இருக்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்," என்று தெரிவித்தார்.
- ரஞ்சி கோப்பையில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
- மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமாகி உள்ள அவருக்கு 12 வயதாகிறது.
இதற்கு முன்பு யுவராஜ் சிங் 15 வயது 57 நாட்களில் விளையாடி இருந்ததே சாதனையாக இருந்தது. பீகார் சிறுவன் சூர்யவன்ஷி அதை முறியடித்துள்ளார்.
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் 15 வயது 230 நாட்களில் ரஞ்சி கோப்பையில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 வயதான வைபவ் சூரியாவான்சி சதம் விளாசினார்.
- அவர் 104 ரன்னில் அவுட் ஆனார்.
சென்னை:
ஆஸ்திரேலிய அண்டர் 19 அணி, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 4 நாட்கள் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா வென்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 71.4 ஓவர்களில் 293 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் சமத் நாகராஜ் மற்றும் முகமது ஈனான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனை அடுத்து இந்திய அண்டர் 19 அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில் 13 வயது வீரரான வைபவ் சூரியன்வாசி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 103 ரன்கள் குவித்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியன்வாசி சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிவேக சதம் அடித்த 2-வது இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வைபவ் சூரியாவான்சி படைத்தார்.
இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி 56 பந்தில் சதம் அடித்திருந்தார்.
வைபவ் கடந்த ஆண்டு ரஞ்சி டிராபி வரலாற்றில் இளம் அறிமுக வீரர் ஆனார், பீகார் அணிக்காக 12 வயதில் விளையாடி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் சாதனையை முறியடித்தார் . அவர் இதுவரை இரண்டு முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வைபவுக்கு 13 வயது 187 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.
- வைபவ் சூரியவன்ஷி-க்கு அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட மிக இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த 13 வயது வீரரான வைபவ் சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. வைபவ் சூரியவன்ஷி-க்கு அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதற்கு பிறகு பிறந்து, அதில் விளையாட தேர்வான முதல் வீரர் என்ற பெருமையை 13 வயதான வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
- U-19 போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 67 ரன்கள் விளாசினர்.
கடந்த மாதம் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர் வைபவ் சூர்யவன்ஷி. இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.1 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. இடது கை பேட்ஸ்மேனான இவருக்கு 13 வயதுதான் ஆகிறது.
சிறு வயதில் தனது அபாரமான பேட்டிங் திறமை காரணமாக ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்டார். நேற்றுடன் முடிவடைந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரில் விளையாடினார்.
இலங்கை அணிக்கு எதிராக 67 ரன்கள் விளாசினர். இதில் ஐந்து பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும். சில சிக்சர்கள் இமாலய சிக்ஸ் ஆகும்.
இந்த நிலையில் 13 வயது சிறுவனால் இவ்வளவு தூரம் சிக்ஸ் அடிக்க முடியுமா? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜுனைத்கான் கேள்வி எழுப்பியுள்ளார். சூர்யவன்ஷி சிக்ஸ் அடிக்கும் வீடியோவை பகிர்ந்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது இருக்கும் என பெரும்பாலானோர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவரது தந்தை வயது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சூர்யவன்ஷிக்கு எட்டரை வயது இருக்கும்போது பிசிசிஐ-யில் எலும்பு சோதனைக்கான சென்றா். அவர் ஏற்கனவே 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியுள்ளார். எதையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவர் வயது தெரிந்து கொள்ளும் டெஸ்டிற்கு மீண்டும் உட்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.