என் மலர்

  நீங்கள் தேடியது "U19 Cricket"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் நடைபெற்று வந்த இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. #IND19
  19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் நான்கில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் இருந்தது.

  இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரரான பெர்னாண்டோ 95 ரன்களும், 4-வது வீரராக களம் இறங்கிய நுவாநிது பெர்னாண்டோ 56 ரன்களும் அடிக்க 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் சேர்த்தது.

  பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. யாஷவி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேவ்தத் படிக்கல் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பவன் ஷா 36 ரன்னில் வெளியேறினார்.

  மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 128 பந்தில் 114 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய அணி 42.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய இளையோர் அணி 3-2 வென்றது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது. #IND19vSL19
  இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது. இந்நிலையில் இன்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

  இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை இளைஞர்கள் 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 143 ரன்கள் சுருண்டது.

  பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய இளைஞர அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பவன் ஷா, அனுஜ் ராவத் ஆகியோர் களம் இறங்கினார்கள். பவன் ஷா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்னும், ஆர்யன் ஜூயல் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் அனுஜ் ராவத் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார்.

  ஐந்தாவது வீரராக களம் இறங்கிய சமீர் சவுத்ரி 35 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் தொடரில் இலங்கையை இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. #IND19vSL19
  இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளைஞர் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் இலங்கை கம்பன்டோட்டாவில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

  டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா அதர்வா டைட் (177), பவன் ஷா (282) வதேரா (64) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 128.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 613 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

  பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை இளைஞர்கள் அணி 316 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இலங்கை அணியின் சூரியபந்தாரா 115 ரன்னும், தினுஷா 51 ரன்னும், மெண்டிஸ் 49 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் ஜங்கா அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


  பவன் ஷா

  இந்தியா பாலோ-ஆன் கொடுத்ததால் இலங்கை அணி 297 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது.

  இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 150 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேசாய் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  19 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்தியா முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது.
  19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டம் இன்று ஹம்பன்டோட்டாவில் தொடங்கியது.

  டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அதர்வா டைட், அனுஜ் ராவத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அனுஜ் ராவத் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.  அடுத்து பவன் ஷா களம் இறங்கினார். இவர் அதர்வா டைட் உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். அதர்வா 172 பந்தில் 177 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  அடுத்து வந்த பதிக்கல் 6 ரன்னிலும், ஜுயல் 41 ரன்னிலும் ஆட்டமிழக்க, பவனட ஷா இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 90 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது. பவன் ஷா 177 ரன்னுடனும், வதேரா 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
  ×