என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sachin"
- ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள்.
- இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.
மும்பை:
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களின் சராசரி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சரிந்துள்ளது. குறிப்பாக கடந்து இரண்டு ஆண்டுகளில் விராட் கோலி சராசரி 32.13 என்ற அளவில் இருக்கிறது.
புஜாராவின் சராசரி 32 என்ற அளவில் இருக்கிறது. இந்த பேட்டிங் சராசரியை முன்னேற்ற இந்திய அணி நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.
இந்நிலையில் ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள் எனவும் இப்போதைய வீரர்கள் இகோ பார்க்கிறார்கள் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருந்தால் அவர்களை அழைத்து இந்திய அணி நிர்வாகம் பேச வேண்டும். உன்னுடைய பேட்டிங் யுக்தி என்ன ஆனது? அதை முன்னேற்ற நீ என்ன செய்து வருகிறாய் என்று பேச வேண்டும்.
சிறு சிறு மாற்றங்களை அவர்களுக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டும். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரேந்திர சேவாக்கை அழைத்து நீ தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வருகிறாய். இதனால் பேட்டிங் போசிஷனை நீ ஆப் ஸ்டம்புக்கு மாற்று என்று நான் அறிவுரை கூறினேன்.இந்த அறிவுரையை அவர் பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த பணியை பயிற்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.

ஒரு காலத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் டிராவிட், சச்சின், லக்ஷ்மன் ஆகியோர் தொடர்ந்து என்னிடம் வந்து அறிவுரை கேட்பார்கள். பேட்டிங்கில் எனக்கு இந்த குறை இருக்கிறது, அதனை நிவர்த்தி செய்ய நான் என்ன செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்பார்கள். அவர்களுக்கு எடுத்து சொல்வதில் எங்களுக்கும் ஈகோ கிடையாது. வந்து கேட்ட அவர்களுக்கும் ஈகோ கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் எந்த பேட்ஸ்மேன்களும் வந்து எங்களிடம் பேசுவதில்லை.
இரண்டு பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக நானும் இளைஞர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்று அவர்களை குழப்ப விரும்பவில்லை. இந்த கிரிக்கெட் தலைமுறையில் மயங் அகர்வால் மட்டும்தான் ஒரு முறை தன்னிடம் வந்து அறிவுரை கேட்டுள்ளார்.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
- எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர் ரியாக் செய்துள்ளார்.
- ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர்.
மாத சந்தா தொகை செலுத்தி ட்விட்டர் ப்ளூ கணக்கு வாங்காத அனைவரின் டுவிட்டர் கணக்குகளில் இருந்தும் ப்ளூ டிக் மார்க் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிலம்பரசன், கிரிக்கெட் வீரர் கோலி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களின் அதிகாரப்பூர்வ டிக் மார்க் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சச்சின் டெண்டுல்கரின் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், ப்ளூ டிக் மார்க் எடுத்துவிட்டால் இது சச்சினின் நிஜ கணக்குதான் என்று நாங்கள் எப்படி தெரிந்துக் கொள்வது என கேட்டிருந்தார்.
இந்நிலையில், டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர் ரியாக் செய்துள்ளார்.
சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ப்ளூ டிக் சரிபார்க்கப்பட்ட சின்னத்தை தனது சைகையால் காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு, இப்போதைக்கு இதுதான் என்னுடைய ப்ளூ டிக் சரிபார்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த டுவீட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.
- இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா, தற்போது 'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 'கங்குவா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சச்சின் டெண்டுல்கர் -சூர்யா
சமீபத்தில் சூர்யா மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் கேள்விக்கு தனது இணையப் பக்கத்தில் பதிலளித்து வருகிறார்.
அதில், ரசிகர் ஒருவர் சூர்யா, சச்சினை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து இது குறித்து சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, "நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தோம், ஒருவரையொருவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் இறுதியில் இருவரும் நன்றாக பேசிக்கொண்டோம்"என்று சச்சின் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
We both were very shy initially and didn't want to disturb each other but ended up having a good chat. #MutualAdmiration @Suriya_offl https://t.co/Q7tNqoahNe
— Sachin Tendulkar (@sachin_rt) April 21, 2023
- வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலி அடுத்தடுத்து சதமடித்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை கோலி முறியடித்தார்.
மும்பை:
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 100 சதங்கள் பதிவு செய்துள்ளார். சச்சினுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 74 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.
விராட் கோலி வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் கபில்தேவ் கூறியதாவது:
அனைத்து தலைமுறையுமே ஒன்றுக்கு ஒன்று வளர்ந்து வருகிறது. தமது காலத்தில் கவாஸ்கர் சிறந்த வீரராக விளங்கி வந்தார். அதன்பிறகு டிராவிட் ,சச்சின், ஷேவாக் போன்ற தலைமுறையினர் வந்து சாதித்தனர். தற்போது ரோகித், விராட் கோலி என சிறந்து விளங்குகின்றனர்.
இனி வரும் காலங்களில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவிக்க வாய்ப்பு இருக்கிறது.
தமக்கு சில வீரர்களிடமிருந்து சில பிடிக்கும், சில பிடிக்காது என்பதால் 11 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் ஒருவர் மற்றும் இருவரை சிறந்த வீரர் என்று தேர்வு செய்ய தாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
- சச்சின், சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற 1-வது ஒருநாள் போட்டியில் அரை சதமும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.
அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை இவர் படைத்துள்ளார்.
அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 495 ரன்களை குவித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது.
- நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள்.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒவ்வொரு இந்தியரும் காத்திருந்த போட்டிக்கான அந்த நாள் வந்துவிட்டது. ஆசிய கோப்பையில் இன்று நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் அனைவரும் மிகவும் ஆர்வமாக உள்ளோம். நாட்டு மக்கள் மற்றும் என் தரப்பில் இருந்து இந்திய அணிக்கு நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் வீரர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.




நேற்றுடன் முடிந்த 2-வது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இளம் வீரரான பிரித்வி ஷா டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 154 பந்தில் 19 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 53 பந்தில் 70 ரன்களும், 2-வது இன்னிங்சில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காலும் இருந்தார். மூன்று இன்னிங்சில் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
அறிமுக தொடரிலேயே ஆட்ட நாயகன் (முதல் டெஸ்ட்) மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்ற பிரித்வி ஷாவை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார்.

பிரித்வி ஷா குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘பிரித்வி ஷா கிரிக்கெட் விளையாடுவதற்காகவே பிறந்தவர். அவர் மும்பை அணிக்காக 8 வயதில் இருந்தே விளையாடி கொண்டிருக்கிறார்.

அவர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அவர் சில நேரம் சச்சினைப் போன்றும், சில நேரம் சேவாக் போன்று, ஆடுகளத்தில் விளையாடும்போது சில நேரத்தில் பிரையன் லாரா போன்றும் விளையாடுகிறார்.
தொழில் தர்மத்தை உணர்ந்து தலைநிமிர்ந்து நின்றால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது.’’ என்றார்.
பிரித்வி ஷா (134), விராட் கோலி (139), ஜடேஜா (100 அவுட் இல்லை) ஆகியோர் சதம் அடித்தனர். விராட் கோலி 184 பந்தில் 7 பவுண்டரியுடன் சதம் அடித்தார். இது விராட் கோலிக்கு 24-வது சதமாகும்.
இதன்மூலம் விரைவாக 24 சதம் அடித்து 2-வது இடத்தில் இருந்த சச்சின் தெண்டுல்கரை விராட் போலி பின்னுக்குத் தள்ளியுள்ளார். விராட் கோலிக்கு இது 72-வது டெஸ்ட் பேட்டியாகும். இதில் 123 இன்னிங்சில் பேட்டிங் செய்து 8 நாட்அவுட் உடன் 24 சதம் விளாசியுள்ளார்.

டான் பிராட்மேன் 66 இன்னிங்சில் 24 சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 125 இன்னிங்சில் அடித்து 3-வது இடத்திலும், கவாஸ்கர் 128 இன்னிங்சில் அடித்து 4-வது இடத்திலும், மேத்யூ ஹெய்டன் 132 இன்னிங்சில் அடித்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.