என் மலர்
நீங்கள் தேடியது "Virat Kohli"
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
- உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்த வெற்றி பல தலைமுறைகளுக்கு உத்வேகத்தை கொடுக்கப் போகிறது. பயமறியா கிரிக்கெட்டின் மூலம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடையச் செய்துள்ளீர்கள். அனைத்து பாராட்டுகளுக்கும் நீங்கள் முழுமையாக தகுதி வாய்ந்தவர்கள். வெற்றியை சிறப்பாக கொண்டாடுங்கள். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
- உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார்.
- இந்த உணவகத்தின் பெயரான ‘ஒன்8 கம்யூன்’ என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். கிரிக்கெட் தவிர விளம்பரங்கள் மூலம் அவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். விராட் கோலியும், அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் விராட் கோலியின் மும்பை உணவகம் பற்றியும், ரெஸ்டாரண்டில் இருக்கும் உணவுகளின் விலை விவரம் பற்றிய தகவலும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
மும்பையில் பிரபலமான ஜூகு பகுதியில் 'ஒன் 8 கம்யூன்' என்ற பெயரில் அவர் 2022-ம் ஆண்டில் உணவகத்தை தொடங்கினார். பிரபல பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவை விராட் கோலி வாங்கி புதுப்பித்து உணவகம் அமைத்துள்ளார்.
இந்த ரெஸ்டாரண்டின் மெனுவில் அசைவம், கடல் உணவுகள் மட்டுமின்றி தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு பிரியாணி விலை ரூ.978 ஆகும்.
வெறும் சாதம் ரூ.318, பிரெஞ்ச் பிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748, தந்தூரி ரொட்டி ரூ.118 போன்ற விலைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.2,318 -ல் மிகவும் விலை உயர்ந்த அசைவ உணவு கிடைக்கிறது.
விராட் கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில், 'விராட் பேவ ரைட்ஸ்' என்ற சிறப்புப் பிரிவும் இடம் பெற்றுள்ளது. இதில் டோபு ஸ்டீக், ட்ர பிள் ஆயில் சேர்த்த மஸ்ரூம் டம்ப்ளிங்ஸ், சூப்பர் புட் சாலட் போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன. எல்லா வகையான உணவுகளும் இந்த ரெஸ்டாரண்டில் கிடைக்கிறது.
இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் சற்று அதிகமாகவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதேபோல் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளும் ரூ.518 முதல் ரூ.818 வரை இங்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகத்தின் பெயரான 'ஒன்8 கம்யூன்' என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது. அவரது ஜெர்சி எண் 18-ஐ குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உணவகத்தின் சுவரில் இந்த எண் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இங்கு பகல் நேரத்தில் வெளிச்சம் நன்றாக வர வசதியாக கண்ணாடி கூரை அமைக்கப்பட்டு, அழகான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார். இந்த ரெஸ்டாரண்ட் மூலம், விருந்தினர்கள் திருப்தி அடைந்து மீண்டும் வர வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது. மும்பையில் மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களிலும் 'ஒன்8 கம்யூன்' கிளைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
- ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என சச்சின் கூறினார்.
- ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது என கோலி கூறினார்.
மும்பை:
இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை அடித்தார். அட்டகாசமாக ஆடிய அவர் அணியை வெற்றிகரமாக கரைசேர்க்க வித்திட்டார்.
இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அற்புதமான வெற்றி. முன்னணியில் இருந்து வழிநடத்தியதற்காக ஜெமிமா மற்றும் ஹாமன்பிரீத் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா , நீங்கள் பந்தைக் கொண்டு ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியை உயரே பறக்க விடுங்கள். என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விராட் கோலி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம், உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. சபாஷ் இந்தியா. என தெரிவித்துள்ளார்.
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்
- விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர்.
இந்த ஒருநாள் தொடர் தான் ரோகித் - கோலியின் கடைசி தொடராக இருக்கும் என்று அவர்கள் மீது விமர்சனம் எழுந்த நிலையில், கடைசி போட்டியில் அந்த விமர்சனங்களை இருவரும் அடித்து துக்குநூறாக உடைத்துவிட்டனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகரும் கே.எல்.ராகுலின் மாமனாருமான் சுனில் ஷெட்டி, விராட் கோழி - ரோகித் சர்மாவை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், சாதனைகள், போராட்டங்கள், பெருமை, கண்ணீர், தியாகம் என அனைத்தையும் நாம் எவ்வளவு விரைவாக மறந்துவிடுகிறோம் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
இரண்டே போட்டிகள் , திடீரென்று எல்லோரும் விமர்சகர்களாகி விடுகிறார்கள்.
அவர்கள் கூச்சலை கேட்டார்கள். சந்தேகங்களைப் படித்தார்கள். ஆனாலும் அவர்கள் அமைதியாக இருந்தார்கள்... ஆனால் அவர்களது பேட்டை பேச வைத்தார்கள்.
ஏனென்றால் ரோஹித் & விராட் போன்ற ஜாம்பவான்கள் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
- அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார்.
- விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும் நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 38.3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரைசதம் அடித்து தன் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ரோகித் 121 ரன்களும் விராட் கோலி 74 ரன்களும் அடித்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் ஒருநாள் தொடரை 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடதக்கது.
- சங்கக்கரா 14234 ரன்களுடன் 2ஆவது இடத்தில் இருந்தார்.
- விராட் கோலி 54 ரன்கள் அடித்தபோது, சங்ககரா ரன்களை கடந்தார்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் ஆன விராட் கோலி, முதல் பந்திலேயே ரன் அடித்து, அப்பாடா., டக்அவுட்டை கடந்து விட்டேன் என கையை காட்டினார்.
ரோகித் சர்மா 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் டக்அவுட்டை தாண்டிய விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 பார்ட்னர்ஷிப்பை கடந்தது.
விராட் கோலி 54 ரன்களை எட்டியபோது, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்திருந்த சங்ககராவை பின்னுக்கு தள்ளினார். சங்ககரா 14,234 ரன்கள் எடுத்து 2ஆவது இடத்தில் இருந்தார். சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
- பெர்த் மற்றும் அடிலெய்டு போட்டிகளில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
- ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடுத்தடுத்து டக்அவுட் ஆகி விமர்சனத்திற்கு உள்ளானார்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும், அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆவார்.
இதனால் விராட் கோலி விமர்சனத்திற்கு உள்ளானார். இந்த நிலையில்தான் 3ஆவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 26 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். அவரை மைதானத்தில் இருந்து ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்றனர்.
ஹசில்வுட் வீசிய ஓவரை விராட் கோலி எதிர்கொண்டார். முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்தார். வேகமாக ஒரு ரன் எடுத்த நிலையில், கையை தூக்கி அப்பாடா ஒரு ரன் அடித்துவிட்டேன் என்பதுபோல், காண்பித்தார். ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம் எழுப்பி விராட் கோலிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
- டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
- நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவில் ஹெட் 29 ரன்னிலும் மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் 30 ரன்னிலும் நிதானமாக விளையாடிய ரென்சா அரைசதம் அடித்து 56 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் , ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளும் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன விராட் கோலி 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இன்றைய போட்டியில் மேத்யூ ஷார்ட் வேகமாக அடித்த பந்தை விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த பின்பு அந்த பந்தை அம்பயரிடம் தூக்கி வீசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது வரை ஆஸ்திரலியா அணி 44 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் அடித்துள்ளது.
- ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மிட்சல் மார்ஷ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் டக் அவுட் ஆன விராட் கோலி 2 ஆவது போட்டியிலும் டக் அவுட் ஆனதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், இன்றைய போட்டியில் விராட் கோலி ரன்களை குவிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், விராட் கோலி முதலில் ரன்கள் ஓடி ஸ்கோர் போர்டில் கணக்கை தொடங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "விராட் கோலியின் ஃபார்ம் முக்கியமானது. அவர் முதலில் ரன்கள் ஓடி ஸ்கோர் போர்டில் கணக்கை தொடங்க வேண்டும் . ஏனென்றால் அவர் அதை செய்துவிட்டால் போதும், அவரை தடுத்து நிறுத்த முடியாமல் எதிரணி திணறும்" என்று தெரிவித்தார்.
- முதல் போட்டியிலும் விராட் கோலி டக் அவுட் ஆனார்.
- இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 7 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 9 ரன்னிலும் கோலி டக் அவுட் ஆகியும் வெளியேறினர்.
முதல் போட்டியிலும் டக் அவுட் ஆன விராட் கோலி இந்த போட்டியிலும் டக் அவுட் ஆனதால் சோகத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதனை பார்த்த ரசிகர்கள் எத்தனையோ போட்டி எங்களை ரசிக்க வைத்திருக்கிறாய் இது பரவாயில்லை என்பது போல அவருக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதனால் நெகிழ்ந்து போன கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கையை மேலே தூக்கி காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கோலி, ரோகித் பற்றி நமக்கு தெரிந்தது எல்லாம் அவர்கள் சிறந்த வீரர்கள் என்பது தான்.
- விராட் கோலி எப்போதும் அதிக ஊக்கம் கொண்டவராக இருந்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா 8 ரன்னிலும், விராட் கோலி ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடியுமா? என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் 'இந்த விளையாட்டில் அனைத்தையும் சாதித்து விட்டேன் என்று யாரும் சொல்வதை கேட்க எனக்கு பிடிக்காது. இப்போதே நீங்கள் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பையை அடைய முயற்சி செய்யாமல் சில குறுகிய கால இலக்குகளை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
விராட் கோலி எப்போதும் அதிக ஊக்கம் கொண்டவராக இருந்து வருகிறார். அவர் அடுத்த உலகக் கோப்பைக்காக காத்திருந்து நேரத்தை பாழாக்குவதற்கு பதிலாக தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் சில இலக்குகளையும் அதனை அடையக்கூடிய விஷயங்களையும் தனக்கு தானே அமைத்துக் கொண்டு இருப்பார் என்று நம்புகிறேன்.
கோலி, ரோகித் பற்றி நமக்கு தெரிந்தது எல்லாம் அவர்கள் சிறந்த வீரர்கள் என்பது தான். நிச்சயமாக அவர்கள் சிறந்த வீரர்களே. அவர்கள் சிறந்த இந்திய அணியில் உள்ளனர். ஆனால் இப்போது முதல் உலகக் கோப்பை வரை அவர்களால் தங்களது சிறந்த திறனை கண்டிபிடிக்க முடியுமா? என்பதற்கான பதில் குறுகிய காலத்தில் நடைபெறும் இந்த ஆஸ்திரேலிய தொடர் தான்' என்றார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நாளை நடக்கிறது.






