என் மலர்
நீங்கள் தேடியது "Rohit sharma"
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
- இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.
துபாய்:
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நேற்று தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.
விராட் கோலி, ரோகித் சர்மா, புஜாரா, ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுப்பட்ட வீடியோவை ஐசிசி வெளியிட்டது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ரெட் ரிடெம்ப்ஷன் என்ற ஆக்ஷன் படத்தின் போஸ்டரில் ரோகித் சர்மா இடம் பெற்றிருக்கிறார். போஸ்டருக்கு 2021 உலக டெஸ்ட் இறுதிப் போட்டியை விட இந்தியா சிறப்பாகச் செயல்படுமா? என்றும் ரெட் பால் ரிடெம்ப்ஷன் என்ற வார்த்தையுடன் கொளுந்துவிட்டு எரியும் தீ-யின் எமொஜியை தலைப்பாக வைத்திருக்கிறது.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர்.
- இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று.
16-வது ஐபிஎல் சீசனின் குவாலிஃபையர் 2-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 18.2 ஓவரில் 171 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறியது. குஜராத் அணி வீரர் மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பவர் பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்தது பெரிய இழப்பாக இருந்தது என மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் செய்தார். அடித்து ஆடுவதற்கு ஏற்ற ஆடுகளம். குஜராத் வீரர்கள் 25 ரன்கள் அதிகமாக அடித்து விட்டனர். கிரீன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார்கள். பவர் பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்ததால் மொமண்டம் கிடைக்கவில்லை.
சுப்மன் கில் மாதிரி யாராவது ஒரு பேட்டர் கடைசிவரை விளையாடி இருந்தால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஏனெனில் இது விளையாடுவதற்கு நல்ல மைதானம். இஷான் கிஷனுக்கு இப்படி ஆனது எதிர்பாராத ஒன்று. கடந்த போட்டியில் சிறப்பாக பந்து விசிய பவுலர்கள் இந்தப் போட்டியில் சரியாக பந்து வீசவில்லை. இன்று விளையாடியதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது. குஜராத் அணி நன்றாக விளையாடியது. சுப்மன் கில் இனிவரும் போட்டிகளிலும், அவரது இந்த ஃபார்ம் தொடரும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரோகித் தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
- டோனியைப் போல் ரோகித் சர்மாவுக்கு கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை.
மும்பை:
ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில், வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டியில் சென்னையுடன் மோதும்.
இந்நிலையில் டோனியை போல் ரோகித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-
ஒரு கேப்டனாக ரோகித் சர்மா குறைவாக மதிப்பிடப்படுகிறார். ரோகித் தலைமையில் மும்பை அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. டோனியைப் போல் ரோகித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒன்றைக் கூறுகிறேன்.
ரோகித் சர்மா லக்னோவுடனான போட்டியில் ஆகாஷ் மத்வாலை பயன்படுத்தியதன் மூலம் பதோனி- பூரான் இருவரும் ஓரே ஓவரில் தங்கள் விக்கெட்டை இழந்தனர். ஆனால் ரோகித்தின் இந்த முடிவுக்காக அவர் பரவலாக பாராட்டப்படவில்லை. இதையே டோனி சிஎஸ்கே அணிக்காக செய்திருந்தால் டோனி சிறப்பாக திட்டம் போட்டார் என பலரும் பாராட்டி இருப்பார்கள்.
என்று அவர் கூறினார்.
- கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- மத்வால் போன்ற இளைஞர்கள் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
சென்னை:
ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணி லக்னோவை வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. இதனால் லக்னோவுக்கு 183 ரன் இலக்காக இருந்தது.
கேமரூன் கிரீன் 23 பந்தில் 41 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 20 பந்தில் 33 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நேகல் வதேரா 12 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நவீன்-உல்-ஹக் 4 விக்கெட்டும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டும், மோஷிகான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 16.3 ஓவர்களில் 101 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்டோனிஸ் அதிகபட்சமாக 27 பந்தில் 40 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். ஆகாஷ் மத்வால் 5 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். கிறிஸ் ஜோர்டான், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.
5 Wickets of #AkashMadhwal ✨against #LSGvMI match......
— Akanksha 45? (@ImAks_86) May 25, 2023
New Bumrah of MI #YorkerKing
Really he is outstanding ?,M to is bnde ki fan? ho chuki hu what a guy what a performance ??@MIPaltanFamily #MumbaiIndians pic.twitter.com/IcV9LyqHfQ
இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
ஆகாஷ் மத்வால் கடந்த ஆண்டு மும்பை அணியுடன் துணை பந்துவீச்சாளராக இணைந்தார். ஜோப்ரா ஆர்ச்சர் சென்றதால் அவரை பயன்படுத்திக் கொண்டோம். அவர் திறமையான பந்துவீச்சாளர் என்று எனக்கு தெரியும். தனது திறமையை அபாரமாக வெளிப்படுத்தி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடும் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்த்து இருக்கிறோம். மத்வால் போன்ற இளைஞர்கள் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.
எங்களது பீல்டிங் செயல்பாடு மகிழ்ச்சியை அளித்தது.ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள்.
- இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் குர்ணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது.
டாஸ் வென்று மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இம்பெக்ட் பிளேயராக களமிறங்கிய நெகல் வதேரா 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் இவர் அடித்த ரன் மும்பை அணிக்கு கூடுதல் பலமாக இருந்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணி 16.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் மத்வால் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த ஐபில் சீசனில் சில அனுபவம் வாய்ந்த வீரர்களை மட்டுமே மும்பை அணியில் உள்ளனர். பும்ரா, ஆர்ச்சர் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலே மும்பை அணி இளம் வீரர்கள் உதவியுடன் பிளே ஆப் சுற்று வரை வந்துள்ளது மிக பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களான திலக் வர்மா, வதேரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் ரோகித் சர்மா பேசும்போது பும்ரா, பாண்ட்யா சென்ற உயரம் திலக் மற்றும் வதேரா செல்வார்கள் என கூறினார்.
இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, ஹர்திக் மற்றும் குர்ணால் பாண்ட்யா போன்ற வீரர்களுடைய முன்னேற்றம் எப்படி இருந்ததோ, அதே போன்ற கதைதான் திலக் வர்மா மற்றும் நேகல் வதேரா இருவருக்கும் இருக்கப்போகிறது.
இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் பெரிய நட்சத்திரங்களாக மாறுவார்கள். ஒருநாள் எங்களுடைய இந்த மும்பை அணியையும் சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த அணி என்று கூறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நாங்கள் உதவி செய்தோம்.
- பிளே ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியாவிட்டால் அதனால் நாங்கள் விமர்சிக்கப்படுவோம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுக்கான போட்டிகள் முடிவுக்கு வந்தது. நாளை முதல் பிளே ஆப் சுற்று தொடங்கவுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் ரோகித் சர்மா பிளேஆப் சுற்று தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது-
உங்களால் எதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியுமோ அதை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். மற்றபடி, நமக்கு சிறந்தது கிடைக்கும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். பிளே ஆப் சுற்றுக்கு எங்களால் செல்ல முடியாவிட்டால் அதனால் நாங்கள் விமர்சிக்கப்படுவோம். சென்றால் அதற்கு எங்கள் அணி வீரர்களே முக்கிய காரணம்.
கடந்த ஆண்டு ஆர்.சி.பி. அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நாங்கள் உதவி செய்தோம். அதற்கான பலன் இப்போது கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது, 69-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
- இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஐபிஎல் என்றாலே விறுவிறுப்பு தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் இருக்கும் வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி மூன்று அணிகள் எவை என்பதில் விறுவிறுப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு ரெண்டாவது அணியாக முன்னேறியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின.
இந்த ஆட்டம் லக்னோவிற்கு மட்டுமல்ல மும்பை, ஆர் சி பி அணிகளுக்கும் முக்கிய போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஆர் சி பி மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதாக மூன்றாவது நான்காவது இடங்களை பிடிக்கும் என்ற நிலை இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரிங் சிங் அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு சென்றார்.
ஆனால் கடைசி மூன்று பந்துகளில் 3 சிக்ஸ் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்னும் ஒரு இடம் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு ஆர் சி பி, மும்பை ராஜஸ்தான் 3 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் இருந்தாலும் அந்த அணிக்கு 14 போட்டிகள் முடிந்து விட்டன.
இன்று மதியம் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் அணிகள் வான்கடே மைதானத்தில் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனென்றால் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் ஆர்சிபி குஜராத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருக்கும் ஆர்சிபி நாலாவது இடத்திற்கு முன்னேறி விடும்.
ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை முன்னேறிவிடும். இதனால் மும்பை அணி வான்கடேயில் வெற்றி பெற்றாலும் ஆர்சிபி குஜராத் அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதனால் இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை சொந்த மண்ணில் ஆர்சிபி யும், மும்பையும் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணியும் இந்த இரண்டு அணிகளும் தலா ஏழு வெற்றிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.
ஒருவேளை மும்பை தோற்று ஆர் சி பி-யும் தோல்வி அடையும் நிலையில் இருந்தால் கூட கடைசி போட்டி என்பதால் குஜராத்தை இத்தனை ரன்னுக்கு சுருட்ட வேண்டும் அல்லாத பட்சத்தில் இத்தனை ரன்கள் அடிக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த ஒரு நிலையில் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இன்றைய சண்டே ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு அமையும் என்ற சந்தேகம் இல்லை. அதிரடி பரபரப்பு திரில் மோதலை இன்றைய போட்டியில் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.
- நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை.
- ஸ்டோனிஸ் மிகவும் அபாரமாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி கொண்டு விளையாடினார்.
லக்னோ:
ஐ.பிஎல் போட்டியில் லக்னோ அணி மும்பையை வீழ்த்தி 7-வது வெற்றியை பெற்றது.
லக்னோ மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்சுக்கு 178 ரன் இலக்காக இருந்தது.
மார்க்ஸ் ஸ்டோனிஸ் 47 பந்தில் 89 ரன்னும் (4 பவுண்டரி, 8 சிக்சர்), கேப்டன் குணால் பாண்ட்யா 42 பந்தில் 49 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பெகரன்டார்ப் 2 விக்கெட்டும், பியூஸ் சாவ்லா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்னோ 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் 39 பந்தில் 59 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ரோகித் சர்மா 25 பந்தில் 37 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) டிம் டேவிட் 19 பந்தில் 32 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பிஷ்னோய் , யாஷ் தாக்குர் தலா 2 விக்கெட்டும் , மோஷின்கான் 1 விக் கெட்டும் வீழ்த்தினார்கள்.
மும்பை இந்தியன்ஸ் 6-வது தோல்வியை தழுவியது.
இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக ஆடவில்லை. துரதிர்ஷ்டவசமாக நாங்கள் வெற்றி பெறுவதற்காக இருந்த சிறந்த முயற்சிகளையும் தவறவிட்டோம். ஆடுகளத்தை நன்றாக அறிந்துதான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தேன்.
178 ரன்கள் இலக்கை எடுக்ககூடிய பிட்ச் ஆகும். எங்களின் தொடக்கம் நன்றாக இருந்தது. ஆனால் முடிவு சரியாக அமையவில்லை.
எங்களது பந்து வீச்சில் கடைசி கட்டத்தில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். ஸ்டோனிஸ் மிகவும் அபாரமாக பேட்டிங் செய்தார். ஆடுகளத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி கொண்டு விளையாடினார்.
இதுவே எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவரது ஆட்டம் பாராட்டுக்குறியது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
4-வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை 21-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அந் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
லக்னோ 15 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை 20-ந் தேதி எதிர்கொள்கிறது.
- ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார்.
- இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. 3 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 59 ரன்னில் சுருண்டது.
முன்னதாக முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியின் கீப்பர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுடன் தினேஷ் கார்த்திக் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 16 முறை டக் அவுட்டில் வெளியேறி உள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தப்படியாக மந்தீப் சிங், சுனில் நரேன் (15 முறை) உள்ளனர்.
- அவருடைய இந்த தன்னம்பிக்கை கூட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது.
- சிலர் நாம் தான் சிறப்பாக விளையாடி விட்டோமே என்ற பெருமையில் இருந்து விடுவார்கள். ஆனால் சூர்யகுமார் அப்படி அல்ல.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை குவித்தது. பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி ஒரு இன்ட்ரஸ்டிங்கான போட்டியாக அமைந்தது என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் நிச்சயம் அவர்களை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என்று நினைத்தோம். அந்த வகையில் நாங்கள் இரண்டாவதாக பந்துவீசும் போது பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தோம். ஏனென்றால் போகப் போக பந்துவீச்சுக்கு கடினமான சூழல் ஏற்பட்டது. பணிப் பொழிவு அதிகமாக இருந்ததால் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்தனர். இருப்பினும் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது.
சூர்யகுமார் யாதவுக்கு இருக்கின்ற தன்னம்பிக்கை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. நாங்கள் தொடரின் தொடக்கத்தில் இடது கை வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினோம். ஆனால் இன்று சூர்ய குமார் அடம்பிடித்து தான் களத்துக்கு செல்வேன் என்று உறுதியாக கூறினார். இது போன்ற தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தேவை.
அவருடைய இந்த தன்னம்பிக்கை கூட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது. இது நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிய ஆட்டமாக அவர் தொடங்குகிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இப்படித்தான் யோசிக்க வேண்டும். சிலர் நாம் தான் சிறப்பாக விளையாடி விட்டோமே என்ற பெருமையில் இருந்து விடுவார்கள். ஆனால் சூர்யகுமார் அப்படி அல்ல.
என ரோகித் சர்மா கூறினார்.