search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI series"

    • நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
    • உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.

    அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

    இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    டர்பன்:

    பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 204 ரன் இலக்கை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 80 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது.

    பெலக்வாயோ- வான்டெர் துஸ்சென் ஜோடி அபாரமாக விளையாடி வெற்றி பெற வைத்தது. இந்த ஆட்டத்தின் போது பெலக் வாயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது இன வெறியுடன் பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



    இதற்கிடையே சர்பிராஸ் அகமது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டு உள்ளார். அதில் எனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் யாரையும் குறிப்பிட்டும் நேரடியாகவும் எனது வார்த்தைகளை கூறவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் சர்பிராஸ் அகமதுவின் இனவெறியுடனான பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விசாரணை நடத்துகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சர்பிராஸ் அகமதுவுக்கு 4 முதல் 8 வரை சஸ்பெண்டு புள்ளிகள் வழங்கப்படும்.

    2 சஸ்பெண்டு புள்ளி பெறும் வீரருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது ஒரு நாள் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில் விதி உள்ளது. இதனால் சர்பிராஸ் அகமதுவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #SarfrazAhmed #SAvPAK
    இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு எனவும் வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை எனவும் ஆரோன் பிஞ்ச் கூறியுள்ளார். #AaronFinch #AUSvIND
    மெலபோர்ன்:

    இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித்தொடரை ஆஸ்திரேலியா 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:-

    இந்தியாவுடன் ஏற்பட்ட தோல்விக்கு நானே முழு பொறுப்பு. வேறு எவரையும் குறைகூற விரும்பவில்லை. டெஸ்ட், ஒருநாள் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக ஆடிய எனது செயல்பாடே தோல்விக்கு காரணம். எனது ஆடும் உத்தியில் தவறுகளை களைய வேண்டும். எனது ஆட்டத் திறமையை மேம்படுத்த வேண்டும். கேப்டனாக நான் சரியாக விளையாடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் டெஸ்ட் தொடரில் 96 ரன்களும், ஒரு நாள் தொடரில் 26 ரன்களும் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவர் 3 முறையும், புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில்தான் ஆட்டம் இழந்தார். #AaronFinch #AUSvIND
    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் புதிய சாதனையை படைத்துள்ளனர். #INDvWI #ViratKohli #rohitsharma
    வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக நேற்றைய ஒருநாள் போட்டியில் ரோகித்சர்மாவும், விராட்கோலியும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 246 ரன் எடுத்தனர். சேசிங்கில் இந்திய ஜோடி எடுத்த அதிக ரன் இதுவாகும். இதன் முலம் இருவரும் புதிய சாதனை படைத்தனர்.

    இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு கோலி- காம்பீர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு சேசிங்கில் 224 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. காம்பீருடன் படைத்த சாதனையை கோலி தற்போது ரோகித்துடன் இணைந்து முறியடித்துள்ளார்.

    ஒட்டு மொத்த அணிகளில் சேசிங்கில் 5-வது சிறந்த ரன் இதுவாகும். ஜெயசூர்யாவும், உபுல் தரங்கவும் 2006-ம் ஆண்டு 2-வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து எதிராக (2006) 286 ரன் எடுத்ததே சேசிங்கில் எடுக்கப்பட்ட அதிக ரன் ஆகும். #INDvWI #ViratKohli #rohitsharma
    இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரோகித் சர்மாவுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். #INDvWI #ViratKohli #rohitsharma
    கவுகாத்தி:

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன் குவித்தது. ஹெட்மயர் (106 ரன்) சதம் அடித்தார். சாஹல் 3 விக்கெட்டும், ஜடேஜா, முகமது சமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் விராட்கோலி- ரோகித் சர்மா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 246 ரன் குவித்து வெற்றியை எளிதாக்கியது.

    இந்தியா 42.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 152 ரன்னும், விராட்கோலி 140 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து கேப்டன் விராட்கோலி பேசும்போது, ரோகித்சர்மாவை பாராட்டினார். அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வெற்றியாகும். வெஸ்ட்இண்டீஸ் சவாலான இலக்கை நிர்ணயித்தது.

    323 ரன் இலக்கை ஜாக்கிரதையாக அணுக வேண்டியது அவசியமாகும். இதற்கு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் தேவை என்பதை அறிவோம்.

    ரோகித் சர்மா மறுமுனையில் இருக்கும்போது பெரிய ரன் இலக்கை எடுப்பது என்பது எளிதானது. டாப் 3 வீரர்களில் நான் நிலைத்து நின்று கடைசி வரை விளையாட விரும்புவேன்.

    ஏனென்றால் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அதிரடியாக விளையாட கூடியவர்கள். ஆனால் இந்த போட்டியில் நான் அடித்து ஆட முடிவு செய்து ரோகித்சர்மாவை உறுதுணையாக நின்று விளையாடு என்று கூறினேன்.

    நான் அவுட் ஆன பிறகு ரோகித்சர்மா அதிரடியாக விளையாடினார். ரோகித் சர்மாவுடன் இது 5 அல்லது 6-வது இரட்டை சதம் பார்டனர்ஷிப் ஆகும்.

    ரோகித்துடன் இணைந்து விளையாடுவதை எப்போதும் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன். இதனால் அணிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதை அறிவோம்.

    பந்து வீச்சாளர்களை குறை கூற முடியாது. இந்த பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட்இண்டீஸ் அடித்து ஆடும்போது கட்டுப்படுத்துவது கடினம். அதனால் பந்து வீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.

    இந்த கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட இன்னும் சில ஆண்டுகள் என் கணக்கில் உள்ளன. நாட்டுக்காக விளையாடுவது என்பது அரிதானது. அப்படியுள்ள சூழ்நிலையில் எந்த ஒரு போட்டியையும் சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #INDvWI #WIvIND #RohitSharma #Viratkholi
    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை ஒயிட்-வாஷ் செய்தது. #AUSvENG #ENGvAUS

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 34.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 205 ரன்னில் சுருண்டது. டிராவிஸ் ஹெட் 56 ரன்களும், அலெக்ஸ் கேரி 44 ரன்களும், ஆர்கி ஷார்ட் அவுட்டாகாமல் 47 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மோயீன் அலி 4 விக்கெட்களும், சாம் குர்ரன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.


    நான்கு விக்கெட் வீழ்த்திய மோயீன் அலி 

    இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். ராய் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அகார் பந்தில் போல்டாகி வெளியேறினார். அதன்பின் அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினார். 

    பேர்ஸ்டோவ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த ஜோ ரூட் 1 ரன்னிலும், இயான் மார்கன் டக்-அவுட்டும் ஆகினர். ஹேல்ஸ் 20 ரன்னில் ஆட்டமிந்தார். இதனால் 50 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்தது. அதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்முனையில் களமிறங்கியவர்கள் சொதப்பினர்.

    மோயின் அலி 16 ரன்களிலும், சாம் குர்ரன் 15 ரன்களிலும், லியாம் பிளங்கீட் கோல்டன் டக்-அவுட்டும் ஆகினர். அப்போது 29.4 ஓவரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிதானமாக விளையாடிய பட்லர் அரைசதம் அடித்தார். மற்றொரு முனையில் அடில் ரஷித் விக்கெட் விழாமல் பார்த்துகொண்டார்.


    சதம் அடித்த மகிழ்ச்சியில் ஜோஸ் பட்லர்

    சிறப்பாக பேட்டிங் செய்துவந்த ரஷித் 47 பந்தில் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு முனையில் சிறப்பாக விளையாடிய பட்லர் சதம் அடித்து அசத்தினார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகள் அவரது ஆறாவது சதமாகும். இறுதியில் இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பட்லர் 110 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் பில்லி ஸ்டான்லேக், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா முன்று விக்கெட்களும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றிபெற செய்த பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்திலும் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை ஒயிட்-வாஷ் செய்தது. #AUSvENG #ENGvAUS
    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. #ENGvAUS #AUSvENG

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.



    ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் பிஞ்ச் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக விளையாடிவந்த மார்ஷ் 24 ரன்களில் மோயின் அலி பந்தில் போல்டானார். ஸ்டாய்னிஸ் 22 ரன்னிலும், தொடர்ந்து வந்த கேப்டன் டிம் பெய்ன் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 90 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.

    அதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல், அஷ்டன் அகார் ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்தனர். மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். அவர் 64 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அகார் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுதவிர ஆண்ட்ரூ டை 19 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ரன் எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் மொயின் அலி, லியாம் பிளங்கீட் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், அடில் ரஷித் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.



    இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். ராய் 2-வது பந்திலேயே டக்-அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். 

    அதன்பின் ஜோ ரூட், இயான் மார்கன் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்தனர். மார்கன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். அதன்பின் வந்த பட்லர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். ரூட் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். மோயின் அலி 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் டேவிட் வில்லே 35 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தார். இங்கிலாந்து அணி 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் பில்லி ஸ்டான்லேக், மைக்கெல் நிசர், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



    இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 16-ம் தேதி கார்டிப் மைதானத்தில் நடைபெற உள்ளது. #ENGvAUS #AUSvENG
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.
    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி லண்டன் ஓவலில் இன்று நடக்கிறது.

    தென்ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் ராஜினாமா செய்தார்.

    ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக டிம் பெய்னும், பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரும் நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது தான். புதிய தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. காயத்தால் முன்னணி பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. அந்த அணி துணை கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் பேட்டிங்கைத் தான் மலை போல் நம்பி இருக்கிறது.

    இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி சில தினங்களுக்கு முன்பு குட்டி அணியான ஸ்காட்லாந்திடம் 6 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த தொடரில் விளையாடுவார்கள். ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணி, இந்த தொடரை பறிகொடுத்தால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழக்க வேண்டி இருக்கும் என்பதால் அதை தக்க வைக்க கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. காயத்தால் அவதிப்படும் ஆல்-ரவுண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். ஆனாலும் பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 142 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 81-ல் ஆஸ்திரேலியாவும், 56-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. 3 ஆட்டங்களில் முடிவு இல்லை.

    இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 
    ×