search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்: இளம் வீரர்களுக்கு நெருக்கடி இல்லை- லோகேஷ் ராகுல்
    X

    தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்: இளம் வீரர்களுக்கு நெருக்கடி இல்லை- லோகேஷ் ராகுல்

    • நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
    • உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.

    அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

    இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    Next Story
    ×