என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார்.
    • சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வாங்கியுள்ளார்.

    செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, அதிகரித்து கொண்டு வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா செயல்பட்டு வருகிறார். இதன் நிறுவனர் கங்கா பிரசாத்.

    சென்னை அணியில் விஷ்ணு விஷால், ஜீவா, மிர்ச்சி சிவா, ஷாந்தனு, விக்ராந்த், பரத், பிர்த்வி, அஷோக் செல்வன், கலையரசன், ஆதவ் கண்ணதாசன், என்.ஜே. சத்யா, தாசரதி, ஷரவ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர்.

    இந்நிலையில், சென்னை ரைனோஸ் என இருந்த அணியை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா வாங்கியுள்ளனர். மேலும் சென்னை அணியின் பெயரை VELS CHENNAI KINGS என பெயர் மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கேப்டன் ஆர்யா உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர்.

    2026 ஜனவரியில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    • கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

    இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் அடுத்த 48 மணி நேரங்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார். 

    • அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
    • ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.

    இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள 'அய்யோ காதலே' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

    • சமீபத்தில் அரசன் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
    • கோவில்பட்டியில் அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அரசன்'. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

    வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    கோவில்பட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் புரோமோ வீடியோவின் BTS வீடியோவை சிம்பு வெளியிட்டுள்ளார் .

    • பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்
    • சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், World of Parasakthi கண்காட்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், வருகிற 25ம் தேதி வரை கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணி - இரவு 10 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்
    • சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் 'World of Parasakthi' கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர். 

    • 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • நியோக் திரைக்கதை எழுதுகிறார் .

    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தள்ளுமலா, ஆலப்புழா ஜிம்கானா, அனுராக கரிக்கின் வெள்ளம் போன்ற படங்களை இயக்கிய மலையாளத் திரைத்துறையின் முக்கிய இளம் இயக்குநரான கலித் ரஹ்மான் இப்படத்தை இயக்குகிறார்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'உண்டா' படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவாகும். நடிகர் உன்னி முகுந்தனின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இயக்கும் இந்தப் படத்திற்கு நியோக் திரைக்கதை எழுதுகிறார் .

    நடிகர்கள், மற்ற தகவல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்கியுள்ளார்.
    • கடைசியாக 2014-ல் வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் அப்பாஸ் தோன்றினார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். புரோமோவில் அப்பாஸின் அறிமுகம் வைரலாகி வருகிறது.

    90-களில் தமிழ் சினிமாவின் இளம்பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 'சாக்லேட் பாய்' அப்பாஸ் 'காதல் தேசம்', 'VIP', 'படையப்பா' போன்ற படங்களில் தனது வசீகரமான தோற்றத்தாலும், மயக்கும் புன்னகையாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆவார்.

    கடைசியாக 2014-ல் வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் காணப்பட்ட அப்பாஸ், நீண்ட காலமாக நடிக்காமல் இருந்தார். தற்போது, அந்த ஏக்கத்திற்கு 11 வருட இடைவெளிக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.   

    • அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதினார்.
    • என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன்.

     பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, மும்பையில் நேற்று மதியம் ஒரு கார் விபத்தில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

    மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லிங்க் ரோடில், நோரா தனது காரில் 'சன்பர்ன்' இசை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதினார்.

    இந்த மோதலின் வேகத்தில் நோரா காரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை காரின் ஜன்னலில் பலமாக மோதியது. அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நோரா, "என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன். இது மிகவும் பயங்கரமான அனுபவம். 2025-ஆம் ஆண்டிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது குறித்து நாம் பேசிக்கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விபத்தை ஏற்படுத்திய வினய் சக்பால் (27) என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.  

    • 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
    • தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் ஸ்ரீனிவாசன் கவர்ந்தவர்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். 69 வயதான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

    225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.

    மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஸ்ரீனிவாசன் உயிரிழந்த பிறகு மம்முட்டி குறித்தும் மதம் குறித்தும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் "தனக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கான அடிப்படை செலவுக்குக் கூட என்னிடம் பணம் இல்லை. அப்போது அப்போது இன்னசென்ட் (குணசித்திர நடிகர்) தனது மனைவி ஆலிஸின் வளையல்களை அடகு வைத்து ரூ. 400 கொடுத்து உதவினார்

    தனது தாயார், இந்து முறையில் தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்காக மம்முட்டியிடம் தாலிக்குத் தங்கம் வாங்க ரூ.2000 கேட்டேன். அவரும் தந்து உதவினார். அந்த பணத்தில் தாலி வாங்கி, அடுத்த நாள் நானும் விமலாவும் ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டும்.

    என் திருமணத்திற்கு ரூ.400 கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிம் மம்மூட்டி தாலி வாங்க கொடுத்த பணத்தால் என் இந்து மனைவிக்கு தாலி கட்டினேன். என்ன மதம், யாருடைய மதம், அது எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மதம் முக்கியமில்லை, மனிதனும் மனிதநேயமும் தான் முக்கியம்" என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

    நடிகர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் கூறிய இந்த மனிதநேயக் கதை நமக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

    • டெல்லி பெல்லி படத்தை இயக்கியவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.
    • அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிப்பில் வெளியான 'சேட்டை' படத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இது இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'டெல்லி பெல்லி' படத்தின் ரிமேக் ஆகும்.

    இந்த டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். இந்நிலையில் அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    மேலும் இதில் டெல்லி பெல்லியல் நடித்த நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    எனவே நீண்ட வருடம் கழித்து டெல்லி பெல்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    இதில் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டெல்லி பெல்லியை போல நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளுடன் ஹேப்பி படேல் டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  

    • தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
    • படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார்.

    தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஓய்வு பெறும் முன் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கும் கதையே இப்படத்தின் மையமாகும்.

    இப்படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், சந்தினி தமிழரசன், வீஜி சந்திரசேகர், ஜோவிதா, ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், 'குற்றம் கடிதல் 2 படத்தின்' படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.



    ×