என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director"

    • விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.
    • மகுடம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலி நடித்து வருகிறார்.

    விஷாலின் 35ஆவது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கி வந்தார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும்.

    விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.

    இந்நிலையில், ரவி அரசு உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகுடம் படத்திலிருந்து ரவி அரசு விலகிய நிலையில், இப்படத்தை நடிகர் விஷால் இயக்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக வெளியான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

    • அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார்.
    • என் மகன் என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார்.

    தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ராக்கி பார்த்திபன் ! என் மகன், என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.

    அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிடமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!" என்று பதிவிட்டுள்ளார்.

    • டூரிஸ்ட் ஃபேமிலி 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.
    • டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. திரைப்படம் 4 வாரங்கள் கடந்தும் தமிழ் நாட்டில் அதிக ஷோ எண்ணிக்கையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் சூர்யா, இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்தை நேரில் பாராட்டியுள்ளார்.

    இதுதொர்பாக இயக்குனர் அபிஷன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகர் சூர்யாவுடனான சந்திப்பு மற்றும் அவரது வாழ்த்து குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியான அதே நாளில் டூரிஸ்ட் பேமிலி படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
    • பறந்து போ வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.

    இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

    இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், பறந்து போ படத்தில் இடம்பெற்றுள்ள சன் ஃபிளவர் என்கிற பாடல் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் மே 23ம் தேதி சன் பிளவர் என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

    கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.

    இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.

    • அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை மகா கும்பமேளா நடைபெற்றது. இந்துக்களின் மிகப்பெரிய ஒன்றுகூடலான இதில் 60 கோடி பக்தர்கள் பங்கேற்றதாக அம்மாநில அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

    இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற மோனாலிசா போஷ்லே என்ற 17 வயது பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் டிரண்ட் ஆகின. ஒரே இரவில் இந்தியா முழுவதிலும் மோனாலிசா பிரபலம் அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து மோனலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். டைரீஸ் ஆஃப் மணிப்பூர் என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடந்தது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சிறிய ஊர் ஒன்றில் வசிக்கும் 28 வயது பெண்ணுக்கு காதாநாயகி ஆக்குகிறேன் என ஆசைகாட்டி இயக்குநர் சனோஜ் மிஸ்ரா (45 வயது) பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு.

    திருமணமான சனோஜ் மிஸ்ரா தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் மும்பையில் வசிப்பவர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணை 2020 ஆம் ஆண்டு டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் சனோஜ் மிஸ்ரா சந்தித்தார். படத்தில் வாய்ப்புகள் தருவதாக அவருக்கு ஆசை காட்டியுள்ளார். 2021 ஜூன் மாதம் அப்பெண்ணை ஜான்சி ரெயில் நிலையத்துக்கு இயக்குநர் அழைத்துள்ளார்.

    சமூக அழுத்தத்தை காரணம் காட்டி அப்பெண் வர மறுக்கவே தான் தற்கொலை செய்துகொள்வேன் என பெண்ணிடம் இயக்குநர் கூறியிருக்கிறார். இதனால் அப்பெண் ரெயில் நிலையம் சென்றார். அங்கிருந்து அப்பெண்ணை ரிஸார்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  

    அதை படம் பிடித்து வைத்து அப்பெண்ணை மிரட்டி, அதன் பின்னும் தான் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மும்பைக்கு அழைத்துச் சென்று லிவ் இன் உறவில் வாழ நிர்ப்பந்தித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மூன்று முறை அப்பெண்ணை கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தி உள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் (மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர்) அப்பெண்ணை கைவிட்டுள்ளார். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் அந்தரங்க படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா அளித்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

    • ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.
    • இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனராக கடந்த 2029-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.

    ஜிப்மர் இயக்குனராக ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டப் பிறகு இந்தி கட்டாயம், இலவச மருந்து மாத்திரை விநியோகம் நிறுத்தம், மாத்திரை தட்டுப்பாடு, உயர்சிகிச்சைக்கு ஏழைகளை தவிர்த்து கட்டணம் என அறிவித்து பல சர்ச்சைக்கு உள்ளானார்.

    இதனால் ஜிப்மருக்கு எதிராக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடந்தது. மத்திய அரசு கூடுதல் நிதி அளித்தும் அந்த நிதியை முறையாக பயன்படுத்தி செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

    ஜிப்மர் இயக்குனருக்கு எதிராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் சென்றது.

    இதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிகளை அழைத்து விளக்கம் பெறப்பட்டது. கவர்னர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வும் செய்தார்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் மாற்றம் உறுதியாகி உள்ளது. தற்போதைய இயக்குனர் ராகேஷ் அகர்வால் நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரை பதவியில் இருக்கலாம். தற்போது அவர் பொறுப்பேற்று 4½ ஆண்டுகள் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் ஜிப்மர் இணையத்தளத்தில் இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஜிப்மர் இயக்குனர் பதவிக்கு தகுதியானோர் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். 10 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் துறையில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை அல்லது பொது சுகாதாரத்தில் உயர் முதுகலைத்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம் ரூ.2 ½ லட்சத்துக்குள் தரப்படும். ஜிப்மர் வளாகத்தில் குடியிருப்பு விடுதி தரப்படும். வயது 60-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஜிப்மர் இயக்குனராக 65 வயது வரையிலோ, நியமனத்தில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலோ பதவியில் இருக்கலாம். நிர்வாக துணை இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும், நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • நடராஜ் தியேட்டர் அருகில் அமைய உள்ள புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும், நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் ரூ.54.36கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கம், ரூ.31.18 கோடி மதிப்பீட்டில் புதியபேருந்து நிலையம் மேம்பாடு மற்றும் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடராஜ் தியேட்டர் அருகில் அமைய உள்ள புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தலைமை பொறியாளர் வெங்கடேஷ், துணை ஆணையாளர்கள் பாலசுப்ரமணியன், சுல்தானா, துணை மாநகர பொறியாளர்கள் கண்ணன், வாசுகுமார், செல்வநாயகம், உதவி ஆணையாளர்கள் முருகேசன் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானாராம். எப்படியாவது நடிகையுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவம் கிடந்தார்களாம். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே நடிகை திருமணம் செய்து கொண்டாராம்.

    அதன்பின்னர், வரும் படங்களை தட்டிக்கழிக்காமல் நடித்து வருகிறாராம். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை மீது ஆசைப்பட்ட முன்னணி நடிகர் எதாவது சொல்லி நடிகையின் சுண்டுவிரலையாவது தொட்டுவிட வேண்டும் என இயக்குனருடன் சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து வந்தாராம். இதை தெரிந்து கொண்ட நடிகை முடியவே முடியாது என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாரம்.

    வாரிசு நடிகை தன் கவர்ச்சியினால் சினிமாவில் கலக்கி வருகிறாராம். நடிகையின் மீது ஆசைப்பட்ட நடிகர் தன் படத்தில் அந்த நடிகைதான் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம். இதனை அறிந்த வாரிசு நடிகையின் அப்பா அந்த நடிகருடன் மட்டும் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

    இதனை அறிந்த நடிகர் எப்படியாவது அந்த நடிகையை தனது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கங்கனம் கட்டிக் கொண்டு அலைகிறாராம். இதன் முதல் படியாக நடிகர் அந்த கவர்ச்சி நடிகையின் அப்பாவிடம் பேசியுள்ளார். ஆனால் இந்த பிளான் எடுபடாமல் போகவே இயக்குனருடன் சேர்ந்து நடிகையிடம் பேசி வருகிறாராம். இதுதான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

    இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி இயக்குனர் ஒருவர் பிரபலமடைந்தாராம். இவர் இயக்கிய படம் ஒன்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து முன்னனி இயக்குனராக திரையுலகையே ஒரு கலக்கு கலக்கினாராம். ஆனால் சமீபகாலமாக இவர் ஆபாச இயக்குனராக மாறிவிட்டாராம். சமீபத்தில் நடிகை ஒருவரின் காலை ஆபாசமாக தொட்டப்படி வீடியோவை பகிர்ந்து அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினாராம்.

    தற்போது அந்த இயக்குனர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறாராம். அங்கு நிர்வாண நடிகைகளின் போஸ்டர் ஒட்டப்பட்ட இடத்தில் அமர்ந்து கொண்டு இவர் எடுத்த புகைப்படங்களை பலரும் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்களாம். பலரும் நல்ல இயக்குனர் எதற்காக இப்படி மாறிவிட்டார் என்று யோசித்து வருகின்றார்களாம்.

    • நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
    • வேளாண் இயக்குநர் தலைமை தாங்கினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கான ஒருநாள் முன்பருவ பயிற்சி நடந்தது. வேளாண்மை இயக்குநர் சரசுவதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கி ணைப்பாளர் வள்ளல் கண்ணன் பயிற்சி அளித்தார். விதைநேர்த்தி முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    நெற்பயிரில் இளம் பருவத்தில் தாக்கக்கூடிய பூச்சிகள், வளரும் பருவம், இனப்பெருக்க பருவம் மற்றும் முதிர்ச்சிப் பருவங்களில் பாதிக்கக்கூ டிய பூச்சிகளை வகைப்படுத்தி இவற்றால் ஏற்படக்கூடிய தாக்குதல் அறிகுறிகளும் இவற்றிற்கான ஒருங்கி ணைந்த பூச்சி மேலாண்மை தொழில் நுட்பங்கள், பல்வேறு பருவங்களில் தாக்கக்கூடிய நோய்களையும் வகைப் படுத்தப்பட்டு தாக்குதல் அறிகுறி மேலாண்மையில் முக்கியமாக நோய் எதிர்ப்புத்தன்மை உள்ள இரகங்களில் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மையும், இவற்றின் காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய நோய் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

    பயிற்சியில், 42 வேளாண் விரிவாக்கப்பணியாளர்கள் பங்கேற்றனர். வேளாண் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி சம்பந்தமாக விரிவாக்க பணி ஒருங்கிணைப்பாளர் சிவக்குமாரை 88259 86445 என்ற எண்ணில் தொடர் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    ×