என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Cinema"
- சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘இந்தியன்-3’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கான அதிரடி சண்டை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும், அரசியல் வசனங்களும் அதிகம் இடம்பெறும் என்கின்றனர்.
கடந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சுமார் 250 படங்களுக்கு மேல் வெளியான நிலையிலும் அதில் முக்கிய நடிகர்களின் படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இருந்தன. சிறுபட்ஜெட் படங்களே அதிக எண்ணிக்கையில் வந்தன.
ஆனால் இந்த 2025 புதிய ஆண்டில் முக்கிய நடிகர்கள், முக்கிய இயக்குனர்களின் பல படங்கள் திரைக்கு வருவதற்காக வரிசை கட்டி நிற்கின்றன. இது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
2025-ல் வெளியாக உள்ள சில முக்கிய படங்களின் விவரங்கள்:-
இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருக்கிறது. இயக்குநர் பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் 'வணங்கான்' ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கும் படமாக இருக்கிறது.
இந்திய சினிமா ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக பார்த்து புளகாங்கிதம் அடைந்து வருகிறது. 'ஜெயிலர்' வெற்றிக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் 'கூலி'. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த வருடம் 'கூலி' திரைக்கு வருகிறது.
இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞரான கமல்ஹாசன், ஆகச்சிறந்த இயக்குனர் மணிரத்னம் இணைந்துள்ள 'தக்லைப்', இந்திய சினிமா மட்டுமல்லாமல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. 37 வருடங்களுக்குப் பிறகு கமல்- மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாகி உள்ளது. இதுபோல் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் 'இந்தியன்-3' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களையும் இந்த வருடம் திரையில் பார்க்கலாம்.
அரசியலுக்கு வந்துள்ள விஜய் நடிக்கும் 69-வது படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கான அதிரடி சண்டை உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும், அரசியல் வசனங்களும் அதிகம் இடம்பெறும் என்கின்றனர். இது இந்த வருடம் இறுதியில் திரைக்கு வரும்.
அஜித்குமார் கார் ரேஸ், பயணங்கள் என ஒரு பக்கம் தனிப்பட்ட வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும், அதே முக்கியத்துவத்தை சினிமாவுக்கும் தருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துள்ள 'விடாமுயற்சி'யும் வெளி வருகிறது. இதுபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படமும் 2025 வருட ரிலீஸ் பட்டியலில் உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'ரெட்ரோ', அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்', தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை', `அமரன்' வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், இந்த வருடம் ரிலீசாக இருக்கின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது
- இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பார்க்கலாம் என இந்த செய்தில் பார்க்கலாம்.
ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் என்ன பாக்கலாம்-ன்னு இந்த செய்தில பார்க்கலாம்.
'ஸ்குவிட் கேம் சீசன் 2'
கடந்த 2021-ம் ஆண்டு நெட்பிளிகஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இத்தொடரின் இரண்டாம் சீசனுக்கு மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது இந்தத் தொடரின் 2-வது சீசன் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'சொர்க்கவாசல்'
பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் சொர்க்கவாசல். இந்த படத்தை ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடந்த உண்மையான கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'கிளாடியேட்டர் II'
ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் ரசல் குரோவ் நடிப்பில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கிளாடியேட்டர்'. இப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சுமார் 400 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு 'கிளாடியேட்டர் 2' படத்தினை ரிட்லி ஸ்காட் தற்போது உருவாக்கியுள்ளார். இப்படத்தில், பால் மெஸ்கல், டென்சல் வாஷிங்டன், பெட்ரோ பாஸ்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பகீரா'
கே.ஜி.எப், காந்தாரா, சலார் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான படம் 'பஹீரா'. இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுதிய இப்படத்தை இயக்குனர் சூரி இயக்கினார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில் இப்படம் கடந்த 24-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பைரதி ரணகல்'
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் இயக்குனர் நர்த்தன் இயக்கத்தில் வெளியான படம் 'பைரதி ரணகல்'. 2017 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மஃப்டி' படத்தின் தொடர்ச்சியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ராகுல் போஸ், தேவராஜ், அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் கடந்த 25-ந் தேதி வெளியானது.
'ரூபன்'
இயக்குனர் அய்யப்பன் சுப்ரமணி இயக்கத்தில் விஜய் பிரசாத், காயத்ரி ரேமா, சார்லீ என பல பிரபலங்கள் நடித்திருக்கும் திரைப்படம் 'ரூபன்'. இப்படத்தினை தயாரிப்பாளர் ஆறுமுகம் கலியப்பன் தயாரிக்க, அரவிந்த் பாபு இசையமைத்துள்ளார். இப்படம் மர்மம் நிறைந்த வரலாற்று கதையாகும். இப்படம் கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'வட்டார வழக்கு'
இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கத்தில் சந்தோஷ், ரவீனா ரவி என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை மதுரா டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இப்படம், கடந்த 25-ந் தேதி டென்ட்கொட்டா ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஆர்.ஆர்.ஆர்: பிஹைண்ட் அண்ட் பியோன்ட்'
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்நிலையில் இத்திரைப்படம் உருவான விதத்தை படக்குழு ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த ஆவணப்படம் தற்பொழுது நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'பூல் புலையா 3'
அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், திரிப்தி டிம்ரி, வித்யா பாலன் மற்றும் மாதுரி தீட்சித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'பூல் புலையா 3'. நகைச்சுவை திகில் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
'ஒயிட் ரோஸ்'
அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடித்துள்ள திரில்லர் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஶ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
- ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
மலையாள திரை உலகில் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரை உலகம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரை உலகில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்திய பாலியல் புகாரால் மலையாள நடிகர், நடிகைகளின் அமைப்பான 'அம்மா' அமைப்பு நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஏராளமான நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
மலையாள திரை உலகத்தை போன்று தமிழ் திரை உலகத்திலும் பாலியல் சம்பவங்கள் நடந்ததாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சில நடிகைகள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழ் திரை உலகில் நடக்கும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. குழுவின் தலைவராக நடிகை ரோகிணி நியமனம் செய்யப்பட்டார்.
ஏற்கனவே 2019-ல் இது தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் பாலியல் சம்பவங்களில் யாரேனும் பாதிக்கப்பட்டால் இந்த குழுவில் தாராளமாக புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பதற்கான தனி மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
புகார்கள் விசாரிக்கப் பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் 5 ஆண்டுகள் சினிமா தொழிலில் இருந்து தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் புகார் பற்றி வெளியில் பேசாமல் குழுவில் புகார் அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி விசாரணை குழுவின் தலைவரான ரோகிணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பலர் குழுவில் புகார் அளித்து வருகிறார்கள். இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.
புகார் கொடுத்தவர்களின் விவரங்களை வெளியே சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. பாலியலால் பாதிக்கப்பட்டோர் தாராளமாக புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
- தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும்.
சென்னை:
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சினிமாவில் நடிக்க வரும் பெண்கள், மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும். தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் நடிகைகள் செருப்பால் அடிக்க வேண்டும். கேரளாவில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதை போன்று தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டலை அறிய கமிட்டி அமைக்கப்படும்.
தமிழ் சினிமாவில் 10 பேர் கொண்ட குழுவுடன் ஒரு கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் நடைபெறுகிறது. தமிழ் திரையுலகில் பாலியல் சீண்டல் நடக்கிறதா இல்லையா என்று என்னால் செல்ல முடியாது.
சினிமாவில் நடிக்க வரும் பெண்களில் 20% பேருக்கு தான் வாய்ப்பு கிடைக்கிறது. 80% பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றுவோரை, செருப்பால் அடிக்க வேண்டும். எந்த பிரபலமாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
- இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
- இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
அண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. .
இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை. இப்படத்தை ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் திரிஷாவை வைத்து மாசாணியம்மன் என்ற படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.
இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
- ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
- ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க ஷங்கர் அணுகியதாகவும் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகியதால் ரஜினிக்கு கைமாறியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனை கமல்ஹாசனே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, ''எந்திரன் படத்தை எடுக்க நானும் ஷங்கரும் 1990-களில் முயற்சி செய்தோம். இந்த படத்துக்காக எனக்கு மேக்கப் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது.
ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பளம் போன்ற சில பிரச்சினைகள் காரணமாக அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக அந்த படத்தை எடுப்பது பாதுகாப்பு அல்ல என்று தோன்றியது. அதனால் நான் நடிக்கவில்லை.
ஆனால் ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார். அது பெரிய வெற்றி பெற்றது'' என்றார்.
அதன் பின் எந்திரன் 2.0 படத்தில் முதலில் கமல்ஹாசன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியது எனவும், அப்போது கமல் மற்ற படங்களில் கமிட் ஆயிருந்ததால் அவரால் நடிக்க இயலவில்லை. என்று சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
- 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
தமிழ் திரையுலகில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் - க்கு அடுத்து சினிமாவின் ஜாம்பவான்களாக இருப்பது கமல்ஹாசன் மற்றும் ரஜினி மட்டும் தான். இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பலப் பேர் இந்த சினிமாத்துறையில் நாயகர்களாக வரவேண்டும் என்று வந்து சிலப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன எத்தனையோ நடிகர்களை பார்த்து இருக்கிறோம். 1975 ஆரம்பித்த திரைப்பயணத்தை இன்றும் 50 வருடங்களாக தன்னுடைய நிலையை தக்கவைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டு சென்ற ஒரு உலகநாயகன், தான் நடிக்கும் படங்களாக இருக்கட்டும், இல்லை இயக்கும் படங்களாக இருக்கட்டும் எது செய்தாலும் அதனை உலக தரத்தில் செய்வது அவரது வழக்கம். 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார்.
இந்த இருஜாம்பாவன்களும் அவர்களின் இளம் பருவத்தில் இணைந்து 16 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த அபூர்வ ராகங்கள்,அவள் அப்படித்தான், 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் ஹிட் ஆனது.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா துறையில் இருவருக்கும் ஒரு பெரிய மார்க்கெட் உருவாகியதும் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர். படத்தின் ஒன்றாக நடிக்காவிட்டாலும் கலை நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொள்வர். சமீபத்தில் கமல்ஹாசன் , அவர் ஏன் ரஜினிகாந்துடன் இணைந்து இத்தனை வருடங்கள் நடிக்கவில்லை, எதிர்காலத்தில் நீங்கள் ஒன்றாக நடிப்பதற்கோ இல்லை கவுரவ தோற்றத்தில் நடிப்பதற்கு எதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு அவர் " நாங்கள் இணைந்து நடிப்பது என்பது புதிதில்லை, நாங்கள் பலப் படங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். ஆனால் ஒருக்கட்டத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தோம். நாங்கள் போட்டியிடும் போட்டியாளர்கள் கிடையாது. துறையில் எப்பொழுதும் போட்டிகள் நிலவுவது சகஜம் தான், அவருடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு. இதை நாங்கள் இப்பொழுதல்ல எங்களுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட முடிவு" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.
- மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியாவர் கார்த்தி.
இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கார்த்தி அறிமுகமாகினார். நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.
அதைத்தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு எச்,வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிகவும் திரில்லராக எடுத்து இருப்பார் எச் வினோத்.
பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கைதி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கார்த்தி திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
கார்த்தி ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு கார்த்தி சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டு லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கடுத்து எச். வினோத் இயக்கத்தில் தீரன் பாகம் 2ல் நடிக்கவுள்ளார்.
எச்.வினோத் தளபதி 69 படத்தை இயக்கி முடித்தப்பின் தீரன் பாகம் இரண்டை இயக்கவுள்ளார். இவ்வாறு கார்த்தி பல சுவாரசியமான லைன் அப்ஸில் உள்ளார். அடுத்து வெளிவரும் கார்த்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார்
- விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்ட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இது விஜய் நடிக்கும் 68-வது படமாகும். கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்தில், சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் மிகவும் வைரலாகியது அதைத்தொடர்ந்து விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாம் பாடலான சின்ன சின்ன கண்கள் பாடலும் வெளியாகியது. படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சமீபத்தில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்று 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கினார்.
இதனிடையே அரசியலில் குதித்த விஜய் இறுதியாக 69-வது படத்தில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுக்குறித்த அதிகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்திற்கு பல நடிகர்கள் முன் வந்து நிதியுதவி செய்து வருகின்றனர்
- அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
கடந்த சில மாதங்களாகவே நடிகர் சங்கத்திற்கு பல நடிகர்கள் முன் வந்து நிதியுதவி செய்து வருகின்றனர், நடகர் சூர்யா, கார்த்தி, கமல், தனுஹ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் இதுவரை நிதியுதவி செய்துள்ளனர். இதனால் நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் நிதி திரட்ட நட்சத்திர கலை விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொருளாளர் திரு.கார்த்தி, துணைத் தலைவர்கள் திரு.பூச்சி எஸ்.முருகன், திரு.கருணாஸ் ஆகியோர் இன்று (01.07.2024) போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான திரு.ரஜினிகாந்த் அவர்களிடமும் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களிடமும் ஆலோசனை பெறுவது வழக்கம். அந்த வகையில் அடுத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
வேகமாக நடைபெற்று வரும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் குறித்து ஆர்வமாக கேட்டறிந்த திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நேரில் வந்து கட்டிடப் பணிகளைப் பார்வையிட உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர்.
- ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாள நட்சத்திர நடிகர்களான விஜய் மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்து ஜில்லா படத்தில் நடித்தனர். இப்படத்தை ஆர்.பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. காஜல் அகர்வால், மஹத், சூரி, நிவேதா தாமஸ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.
ஜோ மல்லூரி ஜில்லா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவர் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் ஜில்லா படத்தின் போது நடந்த சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது ஜில்லா படப்பிடிப்பில் போது நடிகர் விஜய், மோகன்லால் மற்றும் மோகன்லாலின் குடும்பம் மற்றும் ஜோ மல்லூரியை அவர் வீட்டில் விருந்து சாப்பிட அழைத்துள்ளார். இரவு 7 மணி அளவில் இவர்கள் விஜய் வீட்டிற்கு சென்றடைந்தனர்.
விஜய், விஜயின் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் இவர்களை அன்பாக வரவேற்த பின் விஜய் அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார். மோகன்லால் எத்தனை முறை கூறியும் விஜய் அவருடன் உட்கார்ந்து சாப்பிட மறுத்துவிட்டார். அவர் வந்த விருந்தாளிகளை கவனிப்பதே முக்கியம் என்ற மனநிலையில் இருந்தார். விஜய் அவரின் விருந்தாளியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணமுடையவர். என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.