என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: லோ பட்ஜெட்டில் தயாராகி பல மடங்கு லாபம் கொடுத்த டாப் 5 தமிழ் படங்கள்!
- லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன.
- இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.
பெரும் நட்சத்திரங்கள், நூறு கோடி பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் அசெய்தால் தான் படம் வெற்றி பெறும் என்ற பார்முலாவை மாற்றி நல்ல கதை, சுவாரசியமான திரைக்கதை ஆகியவற்றால் 2025-ல் சில தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தன.
"சிறிய பட்ஜெட் = சிறிய வசூல்" என்ற பழைய கணக்கை முறியடித்து, லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன. இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.
OTT, சிங்கிள் ஸ்க்ரீன், மல்டிப்ளெக்ஸ் என எல்லா தளங்களிலும் பொதுமக்களின் பாராட்டும், குடும்ப ஆதரவும் கிடைத்த படங்கள் தான் 2025-ன் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள். அவ்வகையில் இந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பல மடங்கு லாபம் கொடுத்த டாப் 5 வெற்றி படங்களை இந்த தொகுப்பில் காணலாம்
1. டூரிஸ்ட் பேமிலி:
பட்ஜெட்: ரூ.7 - 8 கோடி
வசூல்: ரூ.90 கோடி
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.
இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் சுமார் ரூ.90 கோடி வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு 10 மடங்கு லாபம் கொடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்துது.
2. தலைவன் தலைவி:
பட்ஜெட்: ரூ.25 கோடி
வசூல்: ரூ.100 கோடி
விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்தது.
3. டிராகன்:
பட்ஜெட்: ரூ.35 கோடி
வசூல்: ரூ.150 கோடி
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.
லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
பட்ஜெட் அளவில் இப்படம் இந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது
4. மாமன்:
பட்ஜெட்: ரூ.10 கோடி
வசூல்: ரூ.50 கோடி
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக தயாரான இப்படம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.
ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கோலிவுட் சினிமா வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
5. குடும்பஸ்தன்:
பட்ஜெட்: ரூ.8 கோடி
வசூல்: ரூ.28 கோடி
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.
வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது.






