search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திட்டமிட்டு செயலாற்றி வெற்றி காணும் கும்ப ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சுக ஸ்தானாதிபதி சுக்ரனும் சஞ்சரிப்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திடீர் யோகங்களும் உண்டு. இரண்டில் இருக்கும் ராகுவால் திரண்ட செல்வங்களும் வரலாம். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் பகை பாராட்டாமல் நடந்துகொள்வது நல்லது.

    மிதுன - செவ்வாய்

    தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், வக்ரம் பெறும்போது உடன்பிறப்புகளின் ஆதரவு கொஞ்சம் குறையலாம். பாகப்பிரிவினை சம்பந்தமாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் போகலாம். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு குறையும். வேலையாட்களாலும் சில பிரச்சினைகள் வரலாம். இருப்பினும் தைரியமும், தன்னம்பிக்கையும் மிக்கவர்கள் நீங்கள். தொழில் ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், புதிய யுக்திகளைக் கையாண்டு வளர்ச்சி காண்பீர்கள்.

    மகர - புதன்

    உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அஷ்டமாதிபதியான புதன் விரய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். அதே நேரம் பஞ்சமாதிபதியாகவும் புதன் விளங்குவதால், பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி வலிமை இழக்கிறார். எனவே மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம். உற்றார்- உறவினர்களால் உருவாகும் பிரச்சினைகள் உள்ளத்தை நெருடும். பத்திரப் பதிவுகளில் தாமதம் ஏற்படலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி உண்டு.

    கும்ப - புதன்

    தை 23-ந் தேதி உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். இது ஒரு உன்னதமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை படிப்படியாகக் குறையும். கவலைக்குரிய தகவல்கள் உங்களை விட்டு விலகும். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விடுபடுவீர்கள்.

    குரு வக்ர நிவர்த்தி

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு தேடி வரும். தன -லாபாதிபதி பலம் பெறுவதால் பொருளாதாரப் பிரச்சினை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றம், நாடு மாற்றம் விருப்பம் போல் அமையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு குவியும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர். கலைஞர்களுக்கு கனவுகள் நனவாகும். மாணவ - மாணவிகள் பாராட்டுக்களைப் பெறுவர். பெண்களுக்கு மனநிறைவான வாழ்க்கை அமையும். வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 14, 15, 21, 22, 27, 28, பிப்ரவரி: 2, 3, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் மகர ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தொழில் ஸ்தானாதிபதி சுக்ரனும் இருப்பதால் குடும்ப வருமானம் உயரும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் கல்யாண காரியங்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி சூரியன் உங்கள் ராசியில் இருப்பதால் இடையிடையே எதிர்பாராத வண்ணம் திடீர் செலவுகளும் ஏற்படலாம். 'சந்திர மங்கள யோக'த்தோடு மாதம் தொடங்குவதால், சென்ற மாதத்தில் நடைபெறாமல் இருந்த பல நல்ல காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறும்.

    மிதுன - செவ்வாய்

    தை 5-ந் தேதி மிதுன ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் வக்ரம் பெறுவதால், வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்சினைகள் வரலாம். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மனவருத்தம் தரும் செயல்கள் நடைபெறலாம். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அது தாமதப்படும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையின் காரணமாக நீண்ட நேரம் வேலை பார்க்கும் சூழல் உருவாகும். சொத்து விற்பனையால் சில பிரச்சினைகள் வரலாம்.

    மகர - புதன்

    உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தை 6-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் புதனால், பூர்வீக சொத்துத் தகராறு அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் வல்லமை பிறக்கும். எதிரிகள் சரணடைவர். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் அதிக விலைக்கு விற்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களிடம் உயர் அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

    கும்ப - புதன்

    தை 23-ந் தேதி கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அவர் தன ஸ்தானத்திற்கு செல்லும்போது, தனவரவு தாராளமாக வந்துசேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். கட்டிய வீட்டைப் புதுப்பிக்கும் திட்டம் நிறைவேறும். கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர்.

    குரு வக்ர நிவர்த்தி

    ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், தை 29-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இதன் விளைவாக எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தூரதேசப் பயணங்கள் ஆதாயம் தருவதாக அமையும். வியாபாரத்தில் வி.ஐ.பி.க்கள் வாடிக்கையாளர்களாக மாறுவர். உத்தியோகத்தில் இதுவரை தற்காலிகப் பணியில் இருந்தவர்கள், இப்பொழுது நிரந்தரப் பணியாளர்களாக மாற்றப்படுவர். பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் பாராட்டு உண்டு. மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். எதிர்பார்ப்புகள் கைகூடிவரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 20, 21, 23, 24, 25, பிப்ரவரி: 1, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    நிதிநிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் புகழ் சேர்ப்பீர்கள். மங்கல ஓசை மனையில் கேட்க வழி பிறக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.இன்றைய ராசிபலன் - 12 டிசம்பர் 2024

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். காரியங்களைத் திறம்படச் செய்வதன் மூலம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர்மட்ட அதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

    மதிநுட்பத்துடன் செயல்படும் நாள். கசந்த காலங்கள் வசந்த காலங்களாக மாறும். வியாபார விரோதம் விலகும். குடும்ப செலவு களில் தாராளம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கிடைக்கும்.

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடைசி நாளான அக்டோபர் 25-ம் தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல் முறையீடு செய்துள்ளனர். மேல் முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 25-ம் தேதி முதல் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.

    பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க. அரசுக்கு எதிராக எந்தக் கருத்துக்களைச் சொன்னாலும் அச்சுறுத்துகின்றனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் வரிசையில் போன் ஒட்டுக்கேட்பில் ஈடுபடுகின்றனர். வரும் 5 மாநில தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் தோல்வி அடையும் என தெரிவித்தார்.

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாக உள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் 5,715 ரூபாய்க்கும், ஒரு பவுன் 45,720 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இன்று ஒரே நாளில் கிராம் ரூ.29-ம், பவுன் ரூ. 232-ம் குறைந்துள்ளது. இன்று கிராம் ரூ. 5,686-க்கும், பவுன் ரூ. 45,488-க்கும் விற்பனை ஆகிறது.

    சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 101 ரூபாய் 50 காசு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 203 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது, 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இந்த மாதத்தின் இறுதியில் அபெக் தலைவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இஸ்ரேல் தாக்குதலால் தரைமட்டமாகியுள்ள கட்டட இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் கிடக்கின்றன. அந்த இடங்களை இதுவரை நெருங்க முடியவில்லை என பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. காசா மீதான தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது வங்காளதேசம். அந்த அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ×