என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- ஹாமர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.
- புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.
ஹாமர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச் உறுதியான மெட்டாலிக் பாடி மற்றும் சிலிகான் ஸ்டிராப் கொண்டுள்ளது.
இத்துடன் 1.85 இன்ச் அளவில் பெரிய ஸ்கிரீன், 100-க்கும் அதிக கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்படுகின்றன. புதிய ஹாமர் ஃபிட் பிளஸ் மாடலில் ஏராளமான உடல்நலம் டிராக் செய்யும் வசதிகள்- இதய துடிப்பு, இரத்த அழுத்தம், மாதவிடாய், SpO2 போன்ற வசதிகள் உள்ளன. மேலும், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹாமர் ஃபிட் பிளஸ் அம்சங்கள்:
1.85 இன்ச் 240x286 பிக்சல் டிஸ்ப்ளே
100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
ப்ளூடூத் காலிங்
பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்
ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்கள், இன்பில்ட் கேம்ஸ்
பாஸ்வேர்டு ப்ரோடெக்ஷன், DND
ஸ்டாப்வாட்ச், ரெய்ஸ்-டு-வேக்
இரத்த அழுத்தம், SpO2, மாதவிடாய் மற்றும் இதய துடிப்பு மாணிட்டரிங் வசதி
ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் சப்போர்ட்
IP67 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
அதிகபட்சம் 2 நாட்களுக்கு பேட்டரி பேக்கப்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹாமர் ஃபிட் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 399 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜூன் 11 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது.
- ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ளூடூத் டிராகிங் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோடேக் என்று அழைக்கப்படும் புதிய சாதனம் பெயருக்கு ஏற்றார்போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஜியோடேக் கொண்டு தொலைந்து போகும் பொபருட்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
அனைவரும் அறிந்ததை போன்றே ஜியோடேக் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும். இனி டேக்-ஐ பொருளில் கீழே விழாத அளவுக்கு பத்திரமாக வைத்துவிட வேண்டும். ஜியோடேக் ஒட்டுமொத்த எடை 9.5 கிராம்கள் தான்.

ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது ஜியோடேக் தொலைந்து போனதை ஜியோதிங்ஸ் செயலி மூலம் குறிப்பிட முடியும். இவ்வாறு செய்தபின் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் ஜியோ டிராக்கரை காணாமல் போன கடைசி லொகேஷனில் தேடிக் கொண்டே இருக்கும். ஜியேடேக் கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பிளாக் செய்யப்பட்டு விடும்.
ஜியோடேக் அம்சங்கள்:
ஜியோடேக்-இல் CR2032 மாற்றக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கான பேக்கப் வழங்கும்.
ஜியோடேக் ரேன்ஜ் கட்டிடங்களுக்குள் 20 மீட்டர்களும், வெளியில் 50 மீட்டர்கள் ஆகும். ஜியோடேக் ப்ளூடூத் 5.1 மூலம் இணைப்பை வழங்குகிறது.
ஜியோடேக் கொண்டு காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.
ஜியோடேக்-ஐ இரண்டு முறை தட்டினாலே மொபைல் போனை கண்டறிய முடியும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும்.
விலை விவரங்கள்:
ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஜியோடேக் விலை ரூ. 749 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரத்து 490 ஆகும்.
ஜியோடேக் வாங்குவோருக்கு கூடுதலாக பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஜியோடேக்-ஐ தங்களது பொருட்களில் இணைத்துக் கொள்ளலாம்.
- போட் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் இயர்போன் 30 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
- இந்த இயர்போனில் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ ஆப்ஷன்கள் உள்ளது.
போட் ராக்கர்ஸ் 255 டச் நெக்பேண்ட் மாடலை தொடர்ந்து போட் நிர்வானா 525ANC மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிர்வானா 525ANC மாடலில் டால்பி ஆடியோ சப்போர்ட், ஹைப்ரிட் ANC, 11mm ஹை-ஃபிடிலிட்டி டிரைவர் போன்ற அம்சங்கள் உள்ளன.
மெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் போட் நிர்வானா 525ANC மாடலில் 42db+ வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, நான்கு மைக்ரோபோன்கள், Enx தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் டால்பி ஆடியோ மற்றும் போட் அடாப்டிவ் EQ வசதி உள்ளது.

புதிய போட் நிர்வானா 525ANC மாடலுக்கான செயலி கொண்டு பயனர்கள் டால்பி மூவி, டால்பி நேச்சுரல் போன்ற மோட்களை மாற்றிக் கொள்ள முடியும். இத்துடன் ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நெக்பேண்ட் இயர்போன் 11mm டிரைவர்கள், ப்ளூடூத் 5.2 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
இதன் மூலம் அதிகபட்சம் இரண்டு சாதனங்களுடன் ஒரே சமயத்தில் கனெக்ட் ஆகும். இதில் உள்ள 180 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கு பிளேபேக் டைம் கிடைக்கிறது. இத்துடன் ASAP சார்ஜிங் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கு பிளேபேக் கிடைக்கும். இதில் உள்ள குயிக் ஸ்விட்ச் பட்டன் மற்றும் பீஸ்ட் மோட் கொண்டு கேமிங் அனுபவம் மேம்படும். இத்துடன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.
புதிய போட் நிர்வானா 525ANC மாடலின் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெறுகிறது. புதிய போட் நிர்வானா 525ANC மாடல் செலஸ்டியல் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
- ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஸ்டூடியோ மாடல் புதிய சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- புதிய மேம்பட்ட மேக் ஸ்டூடியோ மாடலுக்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை 2023 WWDC நிகழ்வில் அறிமுகம் செய்தது. மேம்பட்ட புதிய வெர்ஷன் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் அல்லது M2 அல்ட்ரா சிப்செட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

புதிய மேக் ஸ்டூடியோ M2 மேக்ஸ் வெர்ஷன் முதல் தலைமுறை மேக் ஸ்டூடியோ மாடலை விட 50 சதவீதமும், 27 இன்ச் ஐமேக் மாடலை விட நான்கு மடங்கு அதிவேகமானது ஆகும். M2 மேக்ஸ்-ஐ விட அதீத செயல்திறன் வழங்கும் வகையில் தான் M2 அல்ட்ரா மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட M1 அல்ட்ரா மாடலை விட அதிகபட்சம் மூன்று மடங்கு வேகமானது ஆகும். இது டாப் எண்ட் 27 இன்ச் இண்டெல் ஐமேக் மாடலை விட ஆறு மடங்கு வேகமாக இயங்குகிறது. புதிய மேக் ஸ்டூடியோ விலை 1999 டாலர்கள் என்று துவங்குகிறது.
- ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் இயர்பட்ஸ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த இயர்பட்ஸ்-இல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் 12mm டிரைவர்ள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, டிரான்ஸ்பேரண்ட் மோட்கள் உள்ளன. முந்தைய பட்ஸ் 4 மாடலில் 10mm டிரைவர்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் நாய்ஸ் கேன்சலேஷன் ஆப்ஷன் வழங்கப்படாமல் இருந்தது. ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலில் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

டிசைனை பொருத்தவரை புதிய பட்ஸ் 4 ஆக்டிவ் மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இதில் அளவில் பெரிய இயர்பட்ஸ், வட்ட வடிவிலான சார்ஜிங் கேஸ் உள்ளது. இந்த இயர்பட்ஸ்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 28 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இயர்பட்ஸ் மட்டும் ஐந்து மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும். இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஏராளமான டச் கண்ட்ரோல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் மொத்த எடை 42 கிராம் ஆகும். இதன் சார்ஜிங் கேசில் 440 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் எஸ்.பி.சி. கோடெக் மட்டுமே சப்போர்ட் செய்கிறது. மேலும் இது பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. புதிய ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலின் விலை விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
- புதிய கையடக்க சாதனம் “பிராஜக்ட் கியூ” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
- பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் ஸ்கிரீன் உள்ளது.
சோனி நிறுவனம் கையடக்க பிளே ஸ்டேஷன் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பிளே ஸ்டேஷன் 5 கேம்களின் அக்சஸபிலிட்டியை மேம்படுத்த முடியும். பிளே ஸ்டேஷன் ஷோகேஸ் நிகழ்வில் புதிய சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புதிய கையடக்க சாதனம் "பிராஜக்ட் கியூ" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்த சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. பிராஜக்ட் கியூ சாதனத்தில் 1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 60fps-இல் கேம்களை வைபை மூலம் இயக்கும் திறன் கொண்ட எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இத்துடன் அடாப்டிவ் ட்ரிகர்கள், ஹேப்டிக் ஃபீட்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

பிளே ஸ்டேஷன் 5 கன்சோலில் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்களை மட்டுமே புதிய கியூ சாதனத்தில் விளையாட முடியும். தனித்துவம் மிக்க கேமிங் சாதனமாக இல்லாமல், இது பிளே ஸ்டேஷன் 5 உடன் வழங்கப்படும் சாதனமாக இருக்கும் என்றே தெரிகிறது. முதற்கட்டமாக இந்த சாதனம் கேம் ஸ்டிரீமிங் மற்றும் கிளவுட் கேமிங் சேவைகளை சப்போர்ட் செய்யாது.
எனினும், கிளவுட் கேமிங் சேவையை வழங்குவதில் சோனி பெயர் பெற்ற நிறுவனம் ஆகும். இதே வசதி பிராஜக்ட் கியூ சாதனத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது சோனி நிறுவனத்திற்கு கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்கும். கையடக்க கேமிங் சாதனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து சோனி, பிராஜக்ட் கியூ திட்டத்தை துவங்கி இருக்கலாம் என்று தெரிகிறது.
- பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.
- சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.
கூகுள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் ஒட்டுமொத்த டிசைன் அதன் முந்தைய வெர்ஷனான பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும். எனினும், பிக்சல் 8 ப்ரோ மாடலின் கேமரா பாரில் அனைத்து கேமரா லென்ஸ் மற்றும் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படுகிறது.
இதில் உள்ள தெர்மோமீட்டர் சென்சார் மனிதர்கள் மட்டுமின்றி பொருட்களில் உள்ள வெப்பநிலையையும் துல்லியமாக கண்டறியும். இது பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படும். அந்த வகையில், பிக்சல் 8 மாடலில் தெர்மோமீட்டர் சென்சார் வழங்கப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த அம்சம் எப்படி இயங்கும் என்பதை விளக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Photo Courtesy: 91Mobiles
91மொபைல்ஸ் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் பிக்சல் 8 ப்ரோ மாடலின் தெர்மோமீட்டர் சென்சாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தங்களது உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ள பிக்சல் 8 ப்ரோ மாடலினை நெற்றியின் அருகில் வைக்க வேண்டும். ஆனால், மொபைலினை நெற்றியில் வைக்கக் கூடாது.
நெற்றியின் நடுவில் இருந்து, இடதுபுறமாக மொபைலை மெல்ல நகர்த்த வேண்டும். சுமார் ஐந்து நொடிகள் மொபைலை நெற்றியின் அருகில் வைத்தால், உடலின் வெப்பநிலை மொபைல் போன் திரையில் தெரியும்.
கூகுள் I/O 2023 நிகழ்வில் அந்நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக பிக்சல் 7a, பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் டேப்லட் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. இதுதவிர ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.
- நோக்கியா 106 மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- நோக்கியா 106 மாடலில் இன்பில்ட் MP3 பிளேயர், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி உள்ளது.
இந்திய சந்தையில் நோக்கியா 105 (2023) மற்றும் நோக்கியா 106 4ஜி மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா போன்களில் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷனின் 123PAY சப்போர்ட் உள்ளது. இதை கொண்டு யுபிஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இதில் வயர்லெஸ் எஃப்எம் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.
நோக்கியா 105 மற்றும் நோக்கியா 106 4ஜி மாடல்களில் 1.8 இன்ச் QQVGA டிஸ்ப்ளே மற்றும் பாலிகார்போனேட் நானோ பில்டு கொண்டிருக்கிறது. இத்துடன் IP52 தரச் சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. நோக்கியா 105 மாடலில் 1000 எம்ஏஹெச் பேட்டரியும், நோக்கியா 106 மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் வயர்டு மற்றும் வயர்லெஸ் முறையில் இயங்கும் எஃப்எம் ரேடியோ, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்பில்ட் யுபிஐ 123PAY சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் இணைய வசதி இல்லாமல், யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும்.
நோக்கியா 106 மாடலில் இன்பில்ட் MP3 பிளேயர், ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, வாய்ஸ் ரெக்கார்டர், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியா 105 மாடலில் உள்ள 1000 எம்ஏஹெச் பேட்டரி, 12 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது. நோக்கியா 106 4ஜி மாடலில் உள்ள 1450 எம்ஏஹெச் பேட்டரி, 8 மணி நேரத்திற்கு டாக்டைம் வழங்குகிறது.
நோக்கியா 105 மாடல் சார்கோல், சியான் மற்றும் ரெட் டெரகோட்டா என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 106 4ஜி மாடல் சார்கோல் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
- இந்த இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
பிடிரான் பேஸ்பட்ஸ் என்கோர் மாடலை தொடர்ந்து பிடிரான் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ்- பேஸ்பட்ஸ் நியோ என்ற பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் பயனர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அதிக சவுகரியமானதாகவும், அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்கும் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் அதன் சார்ஜிங் கேஸ் உடன் எளிதில் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த இயர்பட்ஸ் அன்றாட பயன்பாடுகளுக்கும் சவுகிரயமானதாக இருக்கும். இதில் 13 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள் உள்ளன. இது தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

இத்துடன் ட்ரூ டாக் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பம், அழைப்புகளின் போது பின்னணியில் ஏற்படும் சத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 தொழில்நுட்பம் உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் இதர ப்ளூடூத் மோடம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தலாம்.
பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ்-ஐ 150 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம். இத்துடன் போர்டபில் சார்ஜிங் கேஸ், டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ்-ஐ மேலும் 35 மணி நேரத்திற்கு பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. டச் கண்ட்ரோல் வசதி மூலம் அழைப்புகள், மியூசிக் உள்ளிட்ட அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.
பிடிரான் பாஸ்பட்ஸ் நியோ இயர்பட்ஸ் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 899 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் பிளாக், புளூ மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணைத்தில் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி மாடல் உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான நார்டு 2 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக நார்டு 3 ஸ்மார்ட்போன் உருவாகி இருக்கிறது. புதிய நார்டு 3 மாடல் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்டு 3 வெளியீடு, விலை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இந்த வரிசையில், டிப்ஸ்டர் யோகேஷ் ரார் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நார்டு 3 அம்சங்கள், இந்திய வெளியீடு மற்றும் விலை விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர நார்டு 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஏஸ் 2V போன்றே காட்சியளிக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.74 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட பன்ச் ஹோல் டிஸ்ப்ளே
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர்
12 ஜிபி, 16 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ்
50MP பிரைமரி கேமரா
8MP இரண்டாவது லென்ஸ்
2MP மூன்றாவது கேமரா
16MP செல்ஃபி கேமரா
5000 எம்ஏஹெச் பேட்டரி
80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 3 மாடலின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதன் வெளியீடு ஜூன் மாத வாக்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.