என் மலர்
நீங்கள் தேடியது "boAt"
- குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது.
- சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ. 190-க்கு ஏலம் போனது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆறுகாட்டுதுறையில் 400-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் 58 விசைப்படகுகள் உள்ளன.கடந்த மூன்று நாட்களாக கடலின் உள்பகுதியில் சுழல் காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் குறைந்த தூரத்திற்கு பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் டன் கணக்கில் மத்தி மீன்கள் சிக்கியது. இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் மத்தி மீன்களை கேரளா, சென்னை, திருச்சி ,பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஏற்றுமதி செய்தனர். வழக்கமாக மத்தி மீன்கள் 40 முதல் 120 வரையில் விலை போகும். ஆனால் சுமார் 5 டன் மீன்களும் கிலோ ரூ.190- க்கு ஏலம் போனது. அதிக அளவில் மத்தி மீன்கள் கிடைத்தாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து பெண் பலியானார்.
- ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர்.
கடலூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதல்படுகை பகுதியை சேர்ந்தவர் கணேசன். அவரது மனைவி காந்திமதி. இந்த தம்பதி மகன் ராசுகுட்டி. இவர்கள் கீழகுண்டல பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. உடனே சிறிய நாட்டுப் படகில் ஆற்றை கடக்க முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தோணி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர். ஆனால் காந்திமதி நீரில் மூழ்கினார். உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சையில் இருந்த காந்திமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
- ஆக்டிவ் பிளாக், கூல் கிரே மற்றும் டீப் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிறது.
- 700-க்கும் மேற்பட்ட பிட்னஸ் மோட்களும் இதில் இடம்பெற்று உள்ளன.
போட் நிறுவனம் அதன் ஸ்டார்ம் மாடல் ஸ்மார்ட்வாட்சை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த மாடலான ஸ்டார்ம் ப்ரோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரிய AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி மெட்டல் பினிஷும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதில் 700-க்கும் மேற்பட்ட பிட்னஸ் மோட்களும் இடம்பெற்று உள்ளன. 24 மணிநேரம் இதய துடிப்பை கண்காணிக்க்கூடிய சென்சார், பிட்னஸ் லெவலை கண்காணிக்கும் பீடோமீட்டர் ஆகியவையும் இதில் உள்ளன. 60 சதவீத புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய ஸ்கிரீன் மற்றும் எப்போதும் இயங்கக்கூடிய டிஸ்ப்ளே.

போட் ஸ்டார்ம் ப்ரோ ஆனது 100+ வாட்ச் ஃபேஸ்கள், அழைப்புகள், உரை மற்றும் அறிவிப்புகள், க்யூரேட்டட் கட்டுப்பாடுகள், மாதவிடாய் சுழற்சி எச்சரிக்கைகள், வானிலை அறிவிப்புகள் மற்றும் நேரடி கிரிக்கெட் ஸ்கோர்கள் ஆகியவற்றை பார்க்க உதவுகிறது. 200 எம்.ஏ.ஹெச் பேட்டரி பேக் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு தாங்குமாம்.
ஆக்டிவ் பிளாக், கூல் கிரே மற்றும் டீப் ப்ளூ ஆகிய மூன்று நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் அறிமுக விலை ரூ.2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் ப்ளிப்கார்ட் மற்றும் போட்டின் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
- ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகில் கடத்தல்காரர்கள் வந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு நேற்று மாலை கரை ஒதுங்கியது.
அந்த படகில் கழுகு உருவம் பொறித்த அடையாளம் உள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நோக்கி கடல் மார்க்கமாக வருகின்றனர்.
அதேபோல் இந்த படகிலும் அகதிகள் தப்பி வந்தார்களா? அல்லது தங்க கடத்தல்காரர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படகில் என்ஜின் இல்லாமல் இருப்பதால் படகில் வந்த கடத்தல்காரர்கள் என்ஜினுடன் தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
படகு கரை ஒதுங்கிய பிறகு மரைன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் தாமதமாக வந்து விசாரணை நடத்தியதாக அந்த பகுதி மீனவர்கள் கூறினர்.
இதுகுறித்து மரைன் போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று கடலில் படகு மிதந்து வந்துள்ளது. இதை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பார்த்துள்ளனர். இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.
ஏர்வாடி தர்காவில் தற்போது சந்தனக்கூடு திருவிழா நடந்து வரும் சூழ்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதை சாதகமாக்கிய கடத்தல்காரர்கள் பக்தர்கள் போர்வையில் இந்த பகுதியில் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரை நியமித்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.
- எஷென் கிரீன், கிளாசிக் பிளாக், கூல் புளூ ஆகிய கலர் வேரியண்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கிடைக்கும்.
போட் நிறுவனம் கடந்தாண்டு Xtend மாடல் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த வெர்ஷனான Xtend ஸ்போர்ட் என்கிற மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. 700க்கும் மேற்பட்ட ஆக்டிவ் மோடுகளை கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்வாட்ச் இதுதான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடல் வலிமை மற்றும் இருதய செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட டான்ஸ், கிரிக்கெட், பேலெட், ரன்னிங், பாக்ஸிங் போன்றவற்றை கண்காணிக்கும் பிரத்யேக அம்சமும் இதில் உள்ளது. Xtend Sport ஆனது சமையல், ஸ்கேட்போர்டிங், தியானம் போன்ற குறைந்த மற்றும் மிதமான தீவிரம் கொண்ட செயல்பாடுகளை கண்காணிக்கும் திறன் கொண்டது என்று போட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 24-மணிநேர இதய துடிப்பு சென்சார், SpO2 மானிட்டர் மற்றும் நிகழ்நேரத்தில் உங்கள் உடற்பயிற்சி நிலைகளை கண்காணிக்கும் பெடோமீட்டர் உள்ளது. இது 1.69 இன்ச் எல்சிடி 2.5டி கர்வுடு டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நேரலை கிரிக்கெட் ஸ்கோர்கள், போன் அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் நோட்டிபிகேஷன் உள்ளிட்டவையும் இதில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP67 மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. இது 200mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் தாங்கும் அளவு பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. மேலும் இது 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஷென் கிரீன், கிளாசிக் பிளாக், கூல் புளூ ஆகிய கலர் வேரியண்டில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.2,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இன்று முதல் அமேசான் மற்றும் போட் லைஃப்ஸ்டைல் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- போட் ஏர்டோப்ஸ் 191G க்கு அந்நிறுவனம் 1 வருட வாரண்டியும் வழங்குகிறது.
- வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் சிரி, கூகுள் ஆசிஸ்டண்ட் போன்றவற்றின் வாய்ஸ் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது.
போட் ஏர்டோப்ஸ் 191G TWS என்கிற கேமிங் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட் நிறுவனத்தின் சமீபத்திய கேமிங் TWS இயர்பட்ஸுகள் மலிவு விலையில் வருகின்றன, மேலும் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் போட்-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கிறது. போட் ஏர்டோப்ஸ் 191G இயர்பட்ஸின் முன்பகுதி டிரான்ஸ்பரண்ட்டாக உள்ளது.
அதேபோல் ஆடம்பரமான கேமிங் கேஸும் கொண்டிருக்கிரது. இயர்பட்கள் மற்றும் கேஸ் இரண்டும் எல்இடி ஒளியைக் கொண்டுள்ளது. போட் ஏர்டோப்ஸ் 191G க்கு அந்நிறுவனம் 1 வருட வாரண்டியும் வழங்குகிறது. வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் சிரி, கூகுள் ஆசிஸ்டண்ட் போன்றவற்றின் வாய்ஸ் சப்போர்ட்டையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும், 10மிமீ டிரைவர், ஐபிஎக்ஸ் 5 ரேட்டிங், புளூடூத் வி 5.2 மற்றும் 40 mAh பேட்டரியுடன் கிடைக்கிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ.1,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கிரே, ரெட், புளூ, பிளாக் என நான்கு கலர் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணிநேரம் வரை தாக்குப்பிடிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் முழுமையாக சார்ஜ் ஆக 30 முதல் 45 நிமிடம் வரை ஆகுமாம். சார்ஜ் செய்துகொள்வதற்காக டைப் C யுஎஸ்பி போர்ட்டும் இதன் கேஸில் உள்ளது.

வேதாரண்யம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று இரவு நாகை மாவட்டம வேதாரண்யம், செறுதலைக்காடு, கடினவயல், ஆதனூர் ஆகிய இடங்களுக்கு சென்று கஜா புயலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
செறுதலைக்காடு மீனவ கிராமத்தில் புயலில் சேதமான படகுகளை பார்வையிட்டார். வேதாரண்யம் உப்பள தொழிலாளர்களுக்கு ஐ.என்.டி.சி. சார்பில் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயல் பாதிப்புக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதல்ல. மத்திய, மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கும், விவசாயிகளுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்.
மீனவர்களின் படகுகள் அதிகமாக சேதமடைந்துவிட்டதால் அவைகளை பழுது பார்த்து பயன்படுத்தமுடியாது. எனவே அவர்களுக்கு புதுப்படகுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படகுகளை வழங்கும் வரை மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படுவதுபோல் உதவித்தொகை வழங்கவேண்டும். புயலில் சேதமான வீடுகளுக்கு அதிக நிவாரணம் வழங்க வேண்டும்.
புயல் சேத பகுதிகளில் வெளியாட்களை அழைத்து வந்து நிவாரணப்பணிகளை செய்வதை விட அந்தந்தப் பகுதி இளைஞர்களை கொண்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். இதன் மூலம் நிவாரண பணிகள் விரைவில் முடியும். காங்கிரஸ் நிதிகமிட்டி கூட்டம் டிசம்பர் 8-ந்தேதி நடக்கிறது. இதில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #gajacyclone #fishermen
